என் மலர்

  சினிமா

  குண்டு - கயல் ஆனந்தியின் அடுத்த படம்
  X

  குண்டு - கயல் ஆனந்தியின் அடுத்த படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் - அனேகா, ரித்விகா நடிப்பில் உருவாகும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. #Irandamulagaporinkadaisi_GUNDU #Gundu #Dinesh
  நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இந்த படத்தை இயக்குகிறார்.

  அட்டத்தி தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கயல் ஆனந்தி ஒப்பந்தமாகியிருக்கிறார். அனேகா, ரித்விகா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  படம் பற்றி அதியன் ஆதிரை கூறும்போது,

  ‘‘கதைப்படி, கதாநாயகன் தினேஷ், லாரி டிரைவர். அவர் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. படம், உலக அரசியல் பேசும். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, தென்மா இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.’’ என்றார். #Irandamulagaporinkadaisi_GUNDU #Gundu #Dinesh #KayalAnandhi

  Next Story
  ×