என் மலர்

    சினிமா

    நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சராக முடியாது - சத்யராஜ்
    X

    நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சராக முடியாது - சத்யராஜ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சத்யராஜ், நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சராக முடியாது என்று கூறியிருக்கிறார். #Sathyaraj
    தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் தற்போது கேரளாவிலும் திரையிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோ‌ஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் சத்யராஜ் கேரளா சென்றார்.

    கொச்சியில் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    நடிகர்கள் பலரும் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காகவே அரசியலில் குதிப்பதாக கருதுகிறேன். மக்கள் மேல் உள்ள அக்கறையில், அவர்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்ததாக கருத வில்லை.



    இப்போது அரசியலுக்கு வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் பற்றி கேட்கிறீர்கள். யார் அரசியலுக்கு வந்தாலும் தமிழகத்தின் முதல்-அமைச்சராக நடிகர்கள் யாரும் வர முடியாது.

    தமிழகத்திலும் கம்யூனிஸ்டு ஆட்சி மலர வேண்டும் என்பது என் விருப்பம். நான், சினிமா உலகிற்கு வந்து 41 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இதுவரை அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் எனக்கு ஏற்பட்டது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×