என் மலர்
சினிமா

குண்டு படத்தின் படப்பிடிப்பு துவக்கம்
அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் - அனேகா, ரித்விகா நடிப்பில் உருவாகும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. #Irandamulagaporinkadaisi_GUNDU #Gundu #Dinesh
`பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரிக்கும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. கிளாப் அடித்து பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். அப்போது `பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரி செல்வராஜும் உடனிருந்தார்.
மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இந்த படத்தை இயக்குகிறார்.
அட்டத்தி தினேஷ் நாயகனாகவும், அனேகா, ரித்விகா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளராக தென்மா அறிமுகமாகிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். தா.ராமலிங்கம் கலை பணிகளை கவனிக்க, உமாதேவி, அறிவு, தனிக்கொடி, தங்கவேலு ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். #Irandamulagaporinkadaisi_GUNDU #Gundu #Dinesh
Next Story






