என் மலர்

  சினிமா

  புரோக்கராக மாறிய விமல்
  X

  புரோக்கராக மாறிய விமல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கும் படத்தை தொடர்ந்து விமல், அடுத்ததாக புரோக்கர் படத்தில் நடிக்க இருக்கிறார். #Vimal #Diana #Broker
  சதா நடித்த டார்ச் லைட் படத்தை இயக்கியவர் அப்துல் மஜித். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘தி புரோக்கர்’. இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அண்ணாதுரை படத்தில் நடித்த டயானா சாம்பிகா நடிக்கிறார்.

  அப்துல் மஜித் இயக்கிய டார்ச் லைட் திரைப்படம் பாலியல் தொழிலாளிகளை மையமாகக் கொண்டு உருவாகி இருந்தது. ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை.

  எனவே இந்தப் படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். புரோக்கர் தொழிலை மையமாகக் கொண்டு தயாராகிவரும் இந்தப் படத்தில் விமல் புரோக்கராக நடிக்கிறார். அனைத்துத் தொழில்களிலும் புரோக்கரின் பணி முக்கியமாக இருப்பதை காமெடி கலந்து இந்தப் படத்தில் கூறுகின்றனர்.  தற்போது இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் மேலும் பதினைந்து நாள்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, ஆனந்த்ராஜ் என பெரிய காமெடி பட்டாளமே இணைந்துள்ளது.
  Next Story
  ×