என் மலர்
சினிமா

சேவை வரி பிரச்சினை - நடிகர் விஷால் மீதான விசாரணை தள்ளிவைப்பு
சேவை வரி செலுத்தவில்லை என்று விஷால் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். #Vishal #ServiceTax
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருப்பவர் நடிகர் விஷால்.
2014-ஆம் ஆண்டு முதல் ரூ.1 கோடிக்கு மேல் சேவை வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார். இதுகுறித்து விளக்கம் நோட்டீசை சேவை வரி வாரியம் அனுப்பியது. அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து நடிகர் விஷால் மீது, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், சேவை வரி உதவி கமிஷனர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் இருமுறை கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் வழக்கு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் விஷால் பதில் அளித்தார்.
இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் நேரில் ஆஜராகவில்லை. அவர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கும்படி அவர் சார்பில் வக்கீல் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். #Vishal #ServiceTax
Next Story






