என் மலர்
சினிமா

திருமணத்தை முடித்து மும்பை திரும்பிய ரன்வீர் - தீபிகா
இத்தாலியில் திருமணத்தை முடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடி, தற்போது மும்பை திரும்பியுள்ளனர். #DeepikaPadukone #RanveerSingh
இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இத்தாலியில் திருமண ஏற்பாடுகள் நடைபெற தொடங்கியது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர்.
15ம் தேதி லேக் கோமா பகுதியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நடந்து முடிந்தது. திருணத்தை ஒட்டி லேக் கோமா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியினர் இன்று இந்தியா திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில் ரசிகர்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

வருகிற 21ம் தேதி பெங்களூருவிலும், 28ம் தேதி மும்பையிலும் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. #DeepikaPadukone #RanveerSingh
Next Story






