என் மலர்

  சினிமா

  ஓவியாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஆரவ்
  X

  ஓவியாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஆரவ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ஆரவ் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டுள்ளார். #HBDAarav #Oviyaa #BiggbossTamil
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானவர் ஆரவ். அதில் பரிசு தொகையையும் வென்றார். இந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆரவ் அதை மறுத்தார். இதையடுத்து, ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

  ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இதை பின்னர் மறைமுகமாகவும் ஓவியா தெரிவித்தார். பின்னர் ஓவியா சகஜமானார்.

  பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் தற்போது சகஜமாக பழகி வருகிறார்கள், பேசிக் கொள்கிறார்கள். பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.   இந்த நிலையில் ஆரவ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா மற்றும் ஆரவ்வின் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #HBDAarav #Oviyaa #BiggbossTamil

  Next Story
  ×