என் மலர்

  சினிமா

  வைரலாகும் யோகிபாபுவின் புகைப்படம்
  X

  வைரலாகும் யோகிபாபுவின் புகைப்படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மில்கா.எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் நட்ராஜ் - யோகிபாபு - மனிஷா யாதவ் நடிப்பில் உருவாகும் `சண்டி முனி' படத்தில் இடம்பெற்றுள்ள யோகிபாபுவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. #SandiMuni #YogiBabu
  சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு `சண்டி முனி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

  நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயனும், மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர், அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

  ரிஷால் சாய் இசையமைக்கும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா.எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் முனி 3, காஞ்சனா 2 படத்தில் உதவியாளராக பணியாற்றியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 27-ஆம் தேதி பழனியில் துவங்குகிறது. தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற இருக்கிறது.  படம் பற்றி இயக்குனர் மில்கா எஸ் செல்வகுமார் கூறியதாவது,

  இது ஒரு ஹாரர் படம். நட்ராஜ்  சண்டி என்கிற சிவில் இஞ்சினீயர் வேடத்தில் நடிக்கிறார். மனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஹாரர் காமெடியுடன் குடும்ப படமாக சண்டிமுனி உருவாகுகிறது.

  ஒரு பெண்ணுக்கும், பேய்க்கும் இடையே நடக்கும் போர்க்களமும் இவர்கள் இருவருக்கிடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் சண்டி என்கிற நட்ராஜ் கதாபாத்திரமும் படத்தின் கதையாக உருவாகிறது. #SandiMuni #YogiBabu #ManishaYadav

  Next Story
  ×