என் மலர்
சினிமா

அம்மா, பாட்டியுடன் இணைய விரும்பும் கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்தடுத்து பெரிய படங்கள் ரிலீசாகவிருக்கும் நிலையில், தனது ஆசை என்பதை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தியுள்ளார். #KeerthySuresh
நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேசின் மார்க்கெட் ஏறிவிட்டது. முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் அவருக்கு தனி கதாநாயகிகளுக்கான வாய்ப்புகளும் கதவை தட்டுகின்றன. அவரது நடிப்பில் அடுத்ததாக சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கின்றன.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது ஆசை என்று ஒன்றை குறிப்பிட்டிருக்கிறார். அக்கா டைரக்டு செய்ய, அப்பா தயாரிக்க, பாட்டி, அம்மாவுடன் தானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

கீர்த்தியின் தந்தை சுரேஷ் தயாரிப்பாளர். தாய் மேனகா ரஜினியுடன் புதுக்கவிதை படத்தில் நடித்தவர். பாட்டி தாதா 87, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் ஆசை நிறைவேற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர். #KeerthySuresh
Next Story






