என் மலர்
சினிமா

பவர் ஸ்டார் படத்தில் சிம்பு
தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான `அட்டரின்டிகி தரேதி' படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #STR #Simbu #AttarintikiDaredi
திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் - சமந்தா - பிரணிதா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் `அட்டரின்டிகி தரேதி'.
இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் கைப்பற்றியிருக்கும் நிலையில், இந்த படத்தில் நாயகனாக நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் படத்தை இயக்குவது பற்றி சுந்தர்.சி உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு ஒப்பந்தமாகும் பட்சத்தில் அவருக்கு இது ஒரு மாஸான படமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருக்கிறார். சிம்பு நடிப்பில் செக்கச்சிவந்த வானம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #STR #Simbu #AttarintikiDaredi
Next Story






