என் மலர்
சினிமா

விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
`சண்டக்கோழி-2' படத்தில் விஷால் பிசியாகி இருக்கும் நிலையில், விஷாலின் அடுத்த படத்தை `ரோமியோ ஜூலியட்', `போகன்' படங்களை இயக்கிய லஷ்மண் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Vishal #Lakshman
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான இரும்புத்திரை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், விஷால் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். ராஜ்கிரண், சூரி, மாரிமுத்து, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற அக்டோபர் 18-ல் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஷால் அடுத்ததாக `ரோமியோ ஜூலியட்', `போகன்' படங்களை இயக்கிய லஷ்மண் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி விஷால் அடுத்ததாக தெலுங்கில் வெளியாகி மெகாஹிட்டான `டெம்பர்' படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Vishal #Lakshman
Next Story






