என் மலர்
சினிமா

ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே காதலித்து வரும் நிலையில், அவர்களது திருமண ஏற்பாட்டில் இருவீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #DeepikaPadukone
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் - தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், திருமண ஏற்பாடுகளில் இருவீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் திருமண பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் அச்சடித்தல், திருமணத்துக்கு அழைக்க வேண்டியவர்கள் பட்டியல் தயாரித்தல், வரவேற்புகளை கவனித்தல், ஓட்டலில் தங்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட ஒவ்வொரு பணிக்கும் ஆட்களை நியமித்து வருகிறார்கள். இத்தாலியில் இவர்களது திருமணம் நடக்கிறது.
விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்ட அதே ஓட்டலில், ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணமும் நடக்க உள்ளது.

மும்பையில் இருந்து இருவீட்டாரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தனி விமானம் மூலம் இத்தாலிக்கு செல்கிறார்கள். திருமணத்துக்கு முன்பாக இருவரும் கைவசம் இருக்கும் படங்களை விரைவாக முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.
இவர்களது நடிப்பில் கடைசியாக வெளியான பத்மாவத் படம் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியாகி வசூலைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. #DeepikaPadukone #RanveerSingh
Next Story