என் மலர்

  சினிமா

  நான் பொன்மாணிக்க வேலின் மனைவி - நிவேதா பெத்துராஜ்
  X

  நான் பொன்மாணிக்க வேலின் மனைவி - நிவேதா பெத்துராஜ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நிதோ பெத்துராஜ் `பொன் மாணிக்கவேல்' படத்தில் தான் பிரபுதேவா மனைவியாக நடித்து வருவதாக கூறியிருக்கிறார். #PonManickavel #NivethaPethuraj
  நிவேதா பெத்துராஜ் கடைசியாக ஜெம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நிவேதா தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்திலும், பிரபுதேவா ஜோடியாக பொன் மாணிக்கவேல் படத்திலும் நடித்து வருகிறார். 

  ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா பொன் மாணிக்கவேல் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த நிலையில், படம் பற்றி பேசிய நிவேதா பெத்துராஜ், 

  ` நான் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில், இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு பிரபுதேவாவின் மனைவி கதாபாத்திரம். பிரபுதேவாவுடன் இணைந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதனை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் ' என்றார். ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் மற்றும் நேமிசந்த் ஜபக் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.   விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடிச்சவன் படத்தில் நடிப்பது குறித்து பேசிய நிவேதா, ` இந்த படத்தில் முதல்முறையாக போலீஸாக நடிக்கிறேன். சில சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளேன். விஜய் ஆண்டனி விரும்பியதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் ' என்றார். #PonManickavel #Prabhudeva #NivethaPethuraj

  Next Story
  ×