என் மலர்

  சினிமா

  பூமராங் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
  X

  பூமராங் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பூமராங்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Boomerang
  கண்ணன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பூமராங்’. அதர்வா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார்.

  இப்படத்தின் இசையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். குறிப்பாக, சமீபத்திய 'அர்ஜுன் ரெட்டி' ஆல்பத்தின் மிகப்பெரிய வெற்றியால் புகழின் உச்சியில் இருக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் இசையமைத்திருப்பதால், பூமராங் படத்துக்கு இசை வெளியாகும் முன்பே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

  "மிகச்சரியாக, நேர்மையாக சொல்வதென்றால், நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பே ரதனின் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்துவமான இலக்கணத்தை கொண்டு, உணர்வுகளை தூண்டும் இசையை வழங்கி வருகிறார். வெறும் இசையமைப்பதில் மட்டுமல்லாமல், மிக்ஸிங் செய்வதிலும், பாடல்களை முழுமையாக கொடுப்பதிலும் ரதன் செலுத்தும் கவனம் சிறப்பானது. அவருடன் இணைந்து பணிபுரிந்தது மொத்த 'பூமராங்' குழுவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் இயக்குனர் கண்ணன்.  ஆகஸ்ட் 3ஆம் தேதி படத்தின் இசையோடு சேர்த்து படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட இருக்கிறார்கள்.
  Next Story
  ×