என் மலர்

  சினிமா

  விமல் படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுக்கும் பிரபல நடிகை
  X

  விமல் படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுக்கும் பிரபல நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி வரும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் மூலம் பிரபல கன்னட நடிகை தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். #IvanukkuEngeyoMachamIrukku #Vemal
  ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி இணைந்து நடிக்கும் படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'.

  இந்த படத்தை சாய் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கன்னட பட உலகின் பிரபல நடிகையான சர்மிளா மாண்ரேவும், ஆர்.சாவண்ட் என்பவரும் இணைந்து தயாரிக்கின்றனர். சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சர்மிளா தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த படத்தில் ஆனந்தராஜ், சிங்கம்புலி, வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கோபி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நட்ராஜ் சங்கரன் இசையமைக்கிறார். தினேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.   படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது,

  இது கிளாமர் கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஜாலியான ஒரு பொழுது போக்கு அரங்குக்குள் நுழைந்த அனுபவத்தை உணர்வார்கள். எல்லா தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய படமாக இருக்கும் என்கிறார். #Vemal #IvanukkuEngeyoMachamIrukku

  Next Story
  ×