என் மலர்

  சினிமா

  எழுமின் படக்குழுவினரை பாராட்டிய கேரள அமைச்சர்
  X

  எழுமின் படக்குழுவினரை பாராட்டிய கேரள அமைச்சர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவேக் மற்றும் தேவயானி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படக்குழுவினரை கேரள அமைச்சர் அழைத்து பாராட்டி இருக்கிறார். #Ezhumin #Vivek
  வையம் மீடியாஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. இப்படத்தில் விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 

  இந்நிலையில் “எழுமின்” திரைப்படத்தின் டிரைலரை பார்த்த கேரள விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. A.C. மொய்தீன், கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்களின் உள்துறை செயலாளர் திரு. M.V. ஜெயராஜன் ஆகியோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.  மேலும், இதுபோல சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கூறும் படங்களைத் தொடர்ந்து எடுக்க வாழ்த்துகளையும் கூறியுள்ளனர். தற்காப்பு கலையை மையமாக மைத்து உருவாகி இருக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 
  Next Story
  ×