என் மலர்

  சினிமா

  வெப் சீரியஸில் வைரலான நடிகை மனிஷா ஸ்ரீ
  X

  வெப் சீரியஸில் வைரலான நடிகை மனிஷா ஸ்ரீ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வீர சிவாஜி மற்றும் போங்கு படத்தில் நடித்த மனிஷா ஸ்ரீ நடிப்பில் உருவாகி வரும் வெப் சீரியஸ் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. #ManishaaShree
  விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ மற்றும் நட்டி நட்ராஜ் நடித்த ‘போங்கு’ படத்தில் நடித்தவர் நடிகை மனிஷா ஸ்ரீ. இவ்விரு படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மனிஷா ஸ்ரீ, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 

  இந்நிலையில், வெர்ஜின் பசங்க என்ற வெப் சீரியஸில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் ஒரு பகுதியின் வீடியோ சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் இவர் பேசும் வசனம் இளைஞர்களிடையே பயங்கர வரவேற்பு பெற்று வருகிறது. இந்த வெப் சீரியஸை கோபி என்பவர் இயக்கியுள்ளார்.  நடிகை மனிஷா ஸ்ரீ, தமிழ் மொழியை அடுத்து, இந்தி படத்தில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×