என் மலர்
சினிமா

சிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது இவரா?
மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக முன்னணி இயக்குநர் ஒருவருடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STR
மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, விரைவில் அந்த படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் சிம்பு, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி மூன்று பேரும் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு - சிம்பு இணையும் படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சிம்பு, யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பில்லா 3 படத்தில் இணையவிருப்பதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். ஒருவேளை இது பில்லா 3 படத்திற்கான பேச்சுவார்த்தையாக இருக்குமோ என்றும் ஒரு சமூக வலைதளங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது. #STR #Simbu #VenkatPrabhu
Next Story






