என் மலர்
சினிமா

20 படங்களுக்கு பின்னரே குழந்தை பற்றி யோசிப்பேன் - ஸ்ரேயா அதிரடி
திருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன் என்று ஸ்ரேயா கூறியிருக்கிறார். #ShriyaSaran
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா சமீபத்தில் அவரது காதலரான ரஷ்ய தொழில் அதிபரும், டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா ரஷ்யாவில் குடியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.
தற்போது தொடர்ந்து 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘திருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன். திருமணம் என் சினிமா வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என்று கூறி இருக்கிறார். #ShriyaSaran
Next Story






