என் மலர்

  சினிமா

  பூமராங் - மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை
  X

  பூமராங் - மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் பூமராங் படத்தில் நடிகை மேகா ஆகாஷ் முதல்முறையாக சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். #Boomerang #MeghaAkash
  நடிகை மேகா ஆகாஷ் எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்கக் கதை என இரு படங்களில் நடித்து முடித்துவிட்டாலும், இரு படங்களுமே இன்னமும் ரிலீசாகவில்லை. இந்த நிலையில், மூன்றாவதாக அதர்வா ஜோடியாக பூமராங் என்ற படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.

  பூமராங் படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், முதல்முறையாக பூமராங் படத்தில் மேகா ஆகாஷ் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். 

  இது பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, "மேகா ஆகாஷை சொந்த குரலில் டப் செய்ய வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே நடிகை மேகா ஆகாஷ் தான். பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரத்தில் அவருடைய சிறப்பான நடிப்பு அப்படி. மிக சிறப்பாக நடித்திருக்கிறார், படத்தை பார்த்து நாங்கள் வியந்தோம். அவருடைய திறமைகள், டப்பிங் செய்யும் வேறு சில கலைஞர்களால் மறைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில், மேகா ஆகாஷ் தயக்கத்தோடு தான் இருந்தார். ஆனால் அவர் டப்பிங் செய்தபோது, ​​எங்களுக்கு நிறைவாக அமைந்தது" என்றார்.  இந்த படத்தை மசாலா பிக்ஸ் சார்பில் இயக்குநர் கண்ணனே தயாரிக்கிறார். அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் மேயாத மான் இந்துஜா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் உபென் படேல் வில்லனாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி காமெடியில் கலக்க, காமெடி நடிகர் சதீஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #Boomerang #MeghaAkash

  Next Story
  ×