என் மலர்

  சினிமா

  வருந்திய சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய ரசிகர்கள்
  X

  வருந்திய சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய ரசிகர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தன் அப்பா பற்றி நினைத்து வருத்தத்தில் இருந்தவரை ரசிகர்கள் ஆறுதல் கூறியுள்ளார்கள். #Sivakarthikeyan #SK
  நடிகர் சிவகார்த்தி கேயன் தனது தந்தை மீது மிகவும் பாசம் கொண்டவர். ஆனால் தனது கல்லூரி நாட்களிலேயே தந்தையை இழந்தவர். இதை அவர் பல மேடைகளில் கூறி வருத்தப்பட்டுள்ளார், சில நேரங்களில் கண் கலங்கி உள்ளார். தான் இப்படி ஒரு நல்ல நிலைமையில் இருப்பதை பார்த்து மகிழ தந்தை உயிருடன் இல்லையே என்று அவர் கவலைப்படுகிறார். 

  சிவகார்த்திகேயனின் தந்தை இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவருடன் சேர்ந்து பணியாற்றிய போலீஸ்காரர் ஒருவர் அவரை பற்றி பெருமையாக சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அவருக்கு கடைசியாக தண்ணீர் கொடுத்தவன் நான் தான் என்று அந்த அதிகாரி தெரிவித்து இருந்தார்.   இது கவனத்துக்கு வந்ததும் சிவகார்த்திகேயனுக்கு கவலையாகிவிட்டது. காவல்துறை அதிகாரியின் பதிவுக்கு சிவா அளித்துள்ள பதிலில், “என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது. அவரின் நினைவுகளுடன் வாழ்கிறேன். என் ரோல்மாடலுடன் சேர்ந்து பல ஆண்டுகள் வாழ நான் கொடுத்து வைக்கவில்லை என்று நினைக்கிறேன். மிஸ் யூ அப்பா’ என்று தெரிவித்துள்ளார். அப்பாவை நினைத்து சிவகார்த்திகேயன் ஃபீல் பண்ணுவதை பார்த்த அவரின் ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம் அண்ணா என்று ஆறுதல் கூறியுள்ளனர்.
  Next Story
  ×