என் மலர்
சினிமா

அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்பு நடிப்பில் அடுத்ததாக `செக்கச் சிவந்த வானம்' படம் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் சிம்பு 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STR #Simbu
மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக 3 வருடங்களுக்கு பிசியாகவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிம்பு அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. `செக்கச் சிவந்த வானம்' சிம்புவின் 33-வது படமாக உருவாகி இருக்கிறது. சிம்புவின் 34-வது படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்திற்கு பிறகு, அடுத்த படத்தை சிம்புவே எழுதி இயக்கவிருக்கிறாராம். திரில்லர் படமாக உருவாகும் இந்த படம் ஆங்கில மொழியில் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு கவுதம் மேனன் வசனங்களை எழுத இருக்கிறாராம். அதனைத் தொடர்ந்து சிம்புவின் 36-வது படமாக உருவாகும் படத்தை கவுதம்மேனன் இயக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் 3 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும், அதில் சிம்புவும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் ஒரு படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறாராம். இது ரத்தின சிவா இயக்கும் படம் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிம்பு பிசியாகிவிட்டாராம். #STR #Simbu
Next Story