என் மலர்
சினிமா

இயக்குனரை கட்டிப்போட்டு வீடியோ எடுத்த அதர்வா, சதீஷ்
அதர்வாவும், சதீஷும் தற்போது நடித்து வரும் ‘பூமராங்’ படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணனை கட்டிப்போட்டு வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். #Boomerang
அதர்வா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பூமராங்’. இதில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் ஆகியோர் நடிக்கிறார்கள். அதர்வாவுக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் ஹிந்தி நடிகர் உபேன் படேல் நடிக்கிறார்.
இந்தப் படத்தை ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்பு 'ஜெயங்கொண்டான்', 'இவன் தந்திரன்' ஆகிய படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இயக்குனர் ஆர்.கண்ணனை கட்டிப் போட்டுவிட்டு நடிகர் அதர்வாவும் சதீஷும் ரூமை சாத்திவிட்டு வெளியே வருகிறார்கள்.

'சிஎஸ்கே மேட்ச் நடக்குற அன்னிக்கு ஷூட்டிங் வச்சா இது தான் நிலைமை' எனச் சொல்லிவிட்டு அதர்வாவும், சதீஷும் நடந்து வருவது போல அந்த வீடியோவை காமெடியாக எடுத்திருக்கிறார்கள். 'சிஸ்கே ரசிகன் டாவ்வ்.. இருந்தாலும் நைட் ரெண்டு மணி வரைக்கும் நல்லபடியா ஷூட்டிங்கை முடிச்சிட்டோம்ப்பா' எனக் கூறியுள்ளார் சதீஷ்.
Next Story






