என் மலர்

  சினிமா

  செம டிரைலருடன் வரும் சிவகார்த்திகேயன்
  X

  செம டிரைலருடன் வரும் சிவகார்த்திகேயன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - அர்த்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் செம படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிடுகிறார். #Sema #GVPrakashKumar
  தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகர்களுள் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியும் வருகிறார். 

  அவரது நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார் படம் ஜி.வி.பிரகாஷூக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இந்த நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக `செம' படம் வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கிறது. டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

  இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளரான வள்ளிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அர்த்தனா விஜயகுமார் நடித்திருக்கிறார். யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  பசங்க புரொடக்சன்ஸ் சார்பில் பாண்டிராஜ் இந்த இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். #Sema #GVPrakashKumar #Sivakarthikeyan

  Next Story
  ×