என் மலர்

  சினிமா

  தனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்
  X

  தனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷின் முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' படத்திற்கு தனுஷின் பிரபல பாடலை வரிகளையே தலைபடபாக்கி உள்ளனர். #Dhanush #Cannes2018
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷின் முதல் ஹாலிவுட் படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட உள்ளது. அதற்காக நடிகர் தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளார். நேற்று ஃபகிர் படத்தின் தமிழ் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார். தமிழில் இந்த படத்திற்கு `வாழ்க்கைய தேடி நானும் போனேன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

  இந்த தலைப்பு தனுஷின் `வேலையில்லா பட்டதாரி' படத்தில் இடம்பெற்ற பாடலையே படத்தின் தலைப்பாக்கியுள்ளனர்.   ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  

  வருகிற மே 30-ஆம் தேதி இந்த படம் பிரான்சில் ரிலீசாக இருக்கிறது. தமிழிலும் அதேநாளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Dhanush #Cannes2018 #FakirAtCannes #VaazhkayaThediNaanumPonen

  Next Story
  ×