என் மலர்
சினிமா

நான் மணக்கும் பெண் எனது ஆத்தா மாதிரி - சவுந்தரராஜன்
விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நடிகர் சவுந்தரராஜன் அவர் மணக்க இருக்கும் பெண் அவரது ஆத்தா மாதிரி என்று கூறியிருக்கிறார்.
திரை உலகில் சிறிய வேடங்களில் நடித்து நாயகனாகி இருப்பவர் சவுந்தரராஜன். திரை உலகில் சவால்களை சந்தித்து முன்னுக்கு வந்துள்ள இவர் தமன்னா என்பவரை திருமணம் செய்கிறார்.
இவர்கள் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில் தமன்னாவை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து சவுந்தர்ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில்...
‘கல்யாணமே வேண்டாம் என்றுதான் இருந்தேன். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு நாள் என் ஆத்தா மாதிரி அன்பு காட்டுற ஒரு பெண்ணை பார்த்தேன். பார்த்த உடனே முடிவு பண்ணிவிட்டேன். உங்கள் அன்போடும், ஆசீர்வாதங்களோடும் நிச்சயம் ஆகி விட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story






