என் மலர்tooltip icon

    சினிமா

    யாருடன் முதல் முத்தம்: ராய் லட்சுமி பதில்
    X

    யாருடன் முதல் முத்தம்: ராய் லட்சுமி பதில்

    பெண்களை மதிக்கும் ஆண்களை தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய நடிகை ராய் லட்சுமி முதல் முத்தம் கொடுப்பது அம்மா, அப்பாதான் என்று பத்திரிகையாளர்களுக்கு பதில் கூறினார்.
    நடிகை ராய் லட்சுமி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    கேள்வி:- உங்களை கவரும் ஆண் எப்படி இருக்க வேண்டும்?

    பதில்:- உண்மையாக இருக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற உணர்வோடு பார்க்க வேண்டும். பெண்ணை மதிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆண்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    கேள்வி:- முதல் முத்தம் அனுபவம்?

    பதில்:- முதல் முத்தம் கொடுப்பது அம்மா, அப்பாதான். அதுதான் எப்போதும் இனிய நினைவுகளாக இருக்கும்.

    கேள்வி:- எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

    பதில்:- கதாபாத்திரங்களுக்கு எல்லையே கிடையாது. என் குடும்பத்தினரும், ரசிகர்களும் என்னை சந்தோஷமாக பார்க்க முடிந்தால் போதும். நடிப்புத்தொழிலை நான் விரும்பி செய்கிறேன். எப்போதும் திறமைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

    கேள்வி:- எப்போதாவது அவமானங்களை எதிர்கொண்டு இருக்கிறீர்களா?

    பதில்:- அவமானப்படுவது, வஞ்சிக்கப்படுவது போன்ற நிகழ்வுகளை நான் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதே இல்லை.



    கேள்வி:- வருங்கால கணவர் பற்றி?

    பதில்:- என் வாழ்க்கை துணைவரோடு சேர்ந்து பயணம் செய்ய விரும்புகிறேன். நல்ல உணவுகளை சமைத்து அவருக்கு கொடுப்பேன். அவரது தேவைகள் என்ன என்பதை முன்னதாகவே தெரிந்து வைத்துக்கொண்டு அதை செய்து கொடுக்க இஷ்டப்படுவேன்.

    கேள்வி:- கிசுகிசுக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- சாதாரணமாக எந்த நடிகையாக இருந்தாலும் சக நடிகரோடு தொடர்புபடுத்தி வதந்திகள் பரப்பி விடுவார்கள். இதை மோசமான விஷயமாக நான் சொல்ல மாட்டேன்.

    கேள்வி:- மக்கள் மத்தியில் துணிச்சலாக நீங்கள் கவர்ச்சி காட்டிய அனுபவம் இருக்கிறதா?

    பதில்:-அது சமீபத்தில் நிஜமாகவே நடந்தது. ஜுலி-2 படப்பிடிப்பில் நெருக்கமான ஒரு காட்சியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் முன்னிலையில் நடித்தேன் அது மிகவும் கஷ்டமாக இருந்தது.

    இவ்வாறு ராய் லட்சுமி கூறினார்.
    Next Story
    ×