என் மலர்

  சினிமா

  நடிகை கடத்தல் வழக்கு: திலீப்புக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது போலீஸ்
  X

  நடிகை கடத்தல் வழக்கு: திலீப்புக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது போலீஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகையை கடத்தி பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய வழக்கில் நடிகர் திலீப் மீதான வழக்கில் 22-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக ஆலுவா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  கேரள மாநிலம் கொச்சியில் பிரபல நடிகையை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது. இது தொடர்பாக ரவுடி பல்சர் சுனில் அவரது கூட்டாளிகள் 6 பேருடன் கைது செய்யப்பட்டார்.

  இந்த வழக்கில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

  ஜாமீனில் வெளிவந்த திலீப், நடிகை கடத்தல் சம்பவம் நடந்தபோது தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறியிருந்தார்.

  இந்த நிலையில் இதுபற்றி கேரள போலீசார் திலீப்பிடம் சமீபத்தில் மீண்டும் விசாரணை நடத்தினர். இதற்காக அவர் ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு வரவழைக்கப்பட்டார். திலீப்பிடமும் அவரது சகோதரர் அனூப்பிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.  இதைதொடர்ந்து தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி ஆலுவா போலீஸ் கிளப்பில் உயர் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் தீவிரமாக நடந்து வருகிறது.

  இந்த பணிகள் சில நாட்களில் முழுவதுமாக முடிவடையும் என்றும், வருகிற 22-ந்தேதி திலீப் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  Next Story
  ×