என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.
    ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை  தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.

    இதன் காரணமாக "அன்லக்கி'' (ராசி இல்லாதவர்) என்று பெயர் பெற்றார்!

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஜி.கே.வி.க்கு நிறைய படங்கள் வந்தன. இரவு இரண்டு மணி வரை கம்போசிங் நடக்கும். காலை 7 மணிக்கு பாடல் பதிவு! இப்படி எத்தனையோ மாதங்கள் நடந்துள்ளன.

    சென்னையில், இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடைக்கு, வெளிநாட்டுக் கிட்டார் வந்திருந்தது. விலை 150 ரூபாய். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அதை வாங்கி விட்டேன்.

    பாடல்களுக்கு நானும், பிலிப்சும் கிட்டார் வாசிப்போம். பாட்டின் இடையே சில சமயம் பிலிப்ஸ் வாசிப்பார்.

    அவர் கைக்கு நல்ல நாதம் அமைந்திருந்தது. அதே கிட்டாரை வேறு யாராவது வாசித்தால் அந்த நாதம் வராது. சில பேருடைய கைவாகு அப்படி. அதேபோல் வாத்தியமும் அவர்களுக்கு படிய வேண்டும். குதிரைகளில் எல்லோரும் சவாரி செய்து விட முடியாது. அது சிலருக்குத்தான் கட்டுப்படும்.

    அதே போலத்தான் வாத்தியங்களும், இசையும், பாட்டும், கலைகளும், பண்பும், ஒழுக்கமும், தவமும்!

    நாம் தவமிருப்பதல்ல; தவம் நமக்கு அமைய வேண்டும்.

    ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைக்கும் படங்களின் டைரக்டர்கள் வந்து, கதையைச் சொல்லி, பாடல்கள் இடம் பெற வேண்டிய இடங்களையும் சொல்லி விட்டுச் செல்வார்கள். அந்த வேலை முடியும் வரை என் பணியைச் செய்து விட்டு, வீட்டுக்கு வருவேன். பாடலின் அந்த கட்டத்திற்கு நான் இசை அமைக்க வேண்டியிருந்தால் என்ன செய்வேன் என்று யோசிப்பேன். இசை அமைத்துப் பார்ப்பேன். பாடலை கம்போஸ் செய்து பார்ப்பேன். இப்படியே, நிறைய டிïன்கள் சேர்ந்து விட்டன!

    பாஸ்கர், பகல் நேரத்தில் சும்மா இருக்க முடியாது. வழக்கமாக சினிமா கம்பெனிகளுக்குப் போய் வருவார். அதில், டைரக்டர் டி.என்.பாலுவுக்கு உதவியாளராக இருந்த முருகானந்தம், பாஸ்கருக்கு பழக்கமாகி நண்பர் ஆனார். அவர் சொந்தமாகப் படம் தயாரிக்க போவதாகவும், அதற்கு நாம்தான் இசை அமைக்க வேண்டும் என்றும் பாஸ்கர் சொன்னார்.

    படக்கம்பெனிக்கு "வலம்புரி மூவீஸ்'' என்று பெயர் சூட்டப்பட்டது. ராயப்பேட்டையில் ஆபீசும் திறக்கப்பட்டது.

    இசை அமைப்புக்கு அட்வான்சாக ஐந்தாயிரம் ரூபாய் செக்கை, முருகானந்தம் கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. அந்தக் காலத்தில் பெரிய இசை அமைப்பாளர்களுக்கு முழு இசை அமைப்புக்கும் ஐந்தாயிரம் ரூபாய்தான் சம்பளம் கொடுத்தார்கள். இவர், அட்வான்சாகவே ஐந்தாயிரம் கொடுக்கிறாரே, பெரிய புரொடிïசர்தான் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

    இந்த செக்கை பாங்கியில் போடாமல் நானே வைத்திருந்தேன். ரெக்கார்டிங்கில் வாசிக்கும்போது, வலம்புரி மூவிஸ் கொடுத்த செக்கை நண்பர்களிடம் அவ்வப்போது பெருமையுடன் காட்டுவேன். அவர்களும் ஆச்சரியப்படுவார்கள்.

    ஆனால், வலம்புரி மூவிஸ் படம் எடுக்கவில்லை; எடுக்கவும் முடியவில்லை.

    இதன் பிறகு, இன்னொரு பட அதிபரிடம் பழகி விட்டு பாஸ்கர் வந்தார். அந்தப் படத்திற்கு அடுத்த நாள் ஆழ்வார்பேட்டை ஆனந்த் ஓட்டலில் கம்போசிங் என்று சொன்னார்.

    எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அடுத்த நாள் ஆனந்த் ஓட்டலுக்குப் போனோம். தயாரிப்பாளர், டைரக்டர், பாடலாசிரியர் சேதுராமன் ஆகியோர் ஓர் அறையில் இருந்தார்கள். டைரக்டர் படத்தின் கதையைச் சொல்லி, "பூஜைக்கு ஒரு காதல் பாட்டை பதிவு செய்யலாம்'' என்றார்.

    டிïன் கம்போஸ் செய்தேன். டைரக்டருக்கும் பிடித்திருந்தது.

    பூஜைக்கு நாள் குறிப்பிடப்பட்டது. பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடுவதாக முடிவு செய்யப்பட்டது. "பாடல் பதிவுக்கு ஸ்டூடியோ வாடகை, பாடகர்கள் இசைக் குழுவினர் சம்பளம் ஆகியவற்றுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?'' என்று பட அதிபர் கேட்க, அவருக்கு பட்ஜெட் கொடுக்கப்பட்டது.

    பாடல் பதிவு நாள். இசைக் குழுவினருடன் ஒத்திகை பார்த்தோம்.

    இடையிடையே இசைக் குழுவினர், "பணம் வந்து விட்டதா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், காலையில் இருந்தே புரொடக்ஷன் மானேஜர், புரொடிïசர் எவரையுமே காணோம்!

    நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பணம் வந்த பாடில்லை. பட அதிபர் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஆனந்த் ஓட்டலில் அவர் தங்கியிருந்த ரூம் காலி செய்யப்பட்டிருந்தது!

    இதற்கிடையே பாடுவதற்கு பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வந்து விட்டார்கள். அவர் களுக்கு பாடல் சொல்லிக் கொடுக்கப்பட்டு ஒத்திகை நடந்தது.

    பணம் வந்து சேர வில்லை. என்ன செய்வ தென்று ஆலோசித்தோம்.

    "இவ்வளவு நேரம் சிரமப்பட்டு, பாடலை உருவாக்கியிருக்கிறோம். பாடலை பதிவு செய்வோம். பணம் கொடுத்த பிறகு அவரிடம் பாடலை கொடுப்போம்'' என்று முடிவு செய்து, அதை ஸ்டூடியோவுக்கு தெரிவித்தோம். ஒலிப்பதிவு என்ஜீனியரும் ஒப்புக் கொள்ளவே, பாடல்

    பதிவாகியது.ஆனால் இன்று வரை பணமும் வரவில்லை; பட அதிபரும் வரவில்லை.

    அதிலிருந்து, இசைக் கலைஞர்கள் மத்தியில் என்னை "அன்லக்கி மிïசிக் டைரக்டர்'' (ராசியில்லாத இசை அமைப்பாளர்) என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள்!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.
    இசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசய மாக உயிர் தப்பினார்கள்.
    இசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசய மாக உயிர் தப்பினார்கள்.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இசைக் குழுவில் இளையராஜா பணியாற்றிய அதே கால கட்டத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பின்னணி பாடகராக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.

    இளையராஜாவும், பாலசுப்பிரமணியமும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

    அந்த "மலரும் நினைவுகள்'' பற்றி இளையராஜா

    கூறியதாவது:-

    நாராயணன் என்னும் டைரக்டர் இயக்கிய "ஸ்ரீதேவி'' என்ற படத்துக்கு ஜி.கே.வி. இசை அமைத்தார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனக்கு நல்ல நண்பன் ஆகியிருந்த நேரம் அது. அவனுக்கு எப்படியாவது ஒரு பாடல் வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இது, எஸ்.பி.பி.க்குத் தெரியாது.

    ஸ்ரீதேவி படத்தில் ஒரு "டூயட்'' பாடல் வந்தது. பழைய கதாநாயகர்களுக்கு என்று இல்லாமல், ஒரு இளம் ஜோடி பாடுவது போல்

    அமைந்தது.நாராயண் ரெட்டி இதை எழுதினார். "ராசானு ப்ரேம லேக்க லென்னு'' (எத்தனை எத்தனை காதல் கடிதம் எழுதினேன்) என்று தொடங்கியது அந்தப்பாடல்.

    ட்ïன் கம்போசிங் முடிந்தது. யாரைப் பாட வைக்கலாம் என்று டைரக்டருடன் பேசிக் கொண்டிருந்தபோது, நான் ஜி.கே.வி.யிடம், "அண்ணே! இந்த பாட்டை நம்ம பாலுவுக்கு கொடுக்கலாம்ண்ணே!'' என்றேன்.

    "ஏன்டா! அவன் நன்றாகப் பாடுவானா? இந்த பாட்டுக்கு சரியாக இருக்குமா!'' என்று கேட்டார், ஜி.கே.வி.

    "அண்ணே! இது இளம் ஜோடி பாடும் பாட்டு! இதற்கு ஏன் பழைய பாடகர்? பாலு, தெலுங்கில் கோதண்டபாணியிடம் பாடியிருக்கிறான். தமிழில் எம்.ஜி.ஆருக்குப் பாடிய `ஆயிரம் நிலவே வா' பாடல் பெரிய ஹிட்!''

    "எம்.ஜி.ஆருக்கு யார் பாடினாலும் ஹிட்டாகும்!''

    "அப்போ சீர்காழி போன்றவர்களுக்கு ஏன் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை? பாலு புதுசு. இந்த பாடலுக்கு ரொம்பப் பொருத்தமாக இருப்பான். `எத்தனை காதல் கடிதம் எழுதினேன்' என்று, வயதாகி விட்ட கண்டசாலவோ, பி.பி.சீனிவாசோ பாடினால் பொருத்தமாக இருக்குமா?'' என்றேன்.

    "சரி. அவனை ரிகர்சலுக்கு வரச் சொல்!'' என்றார், ஜி.கே.வி.

    பாலு ரிகர்சலுக்கு வந்து, சொல்லிக் கொடுத்ததை உடனே நன்றாகப் பாடி விட்டான். அவனுக்கு இருந்த திறமையைக் கண்டு கொண்டார், ஜி.கே.வி.

    "ஓ.கே.! பாலுவே பாடட்டும்'' என்று அவர் சொல்ல, பாடல் பதிவாகி, படம் வெற்றி பெற்று பாடலும் ஹிட் ஆனது.

    சினிமாவில் பாட எஸ்.பி.பி.க்கு நிறைய வாய்ப்புகள் வந்ததுடன், கச்சேரிகளும் நிறைய வந்தன. ஆந்திராவில் நிறைய கச்சேரிகளுக்கு போக வேண்டியிருக்கும். அப்போது எனக்கு ஜி.கே.வி.யின் இசை அமைப்பில் பின்னணி இசை சேர்ப்பு வேலை இருக்கும்.

    எஸ்.பி.பி.யுடன் ஒரு கச்சேரிக்கு போனால் எனக்கு சம்பளமாக 75 ரூபாய் கிடைக்கும். ஜி.கே.வி.யின் இசை அமைப்புக்கு போனால், ஒரு நாளைக்கு 150 ரூபாய் வீதம் நான்கு நாளைக்கு 600 ரூபாய் கிடைக்கும்.

    இதை மனதில் வைத்து, "நான் வர முடியாது'' என்று பாலுவிடம் சொன்னால், "நீ இல்லாமல் நான் எப்படி கச்சேரி செய்வேன்? யாரை வைத்து என்ன செய்ய முடியும்?'' என்றெல்லாம் பேசி, எப்படியாவது என்னை அழைத்துச் சென்று விடுவான்.

    எழுபத்தைந்து ரூபாய்க்காக, அறுநூறு ரூபாய்களை இழந்தது எத்தனை முறை என்று கணக்கு இல்லை. இது பாலுவுக்கு இப்போது ஞாபகம் இருக்குமோ என்னமோ! பாலுவை எந்த அளவுக்கு நேசித்தேன் என்பதற்காக இதைச் சொல்ல வந்தேனே தவிர, வேறொன்றும் இல்லை.

    ஒரு முறை எஸ்.பி.பி.க்கு பொள்ளாச்சியில் கச்சேரி. அடுத்த நாள் எனக்கு இசைக் கல்லூரியின் தேர்வு இருந்தது. அதனால் நான் வரவில்லை என்று கூறிவிட்டேன்.

    ஆனால், நான் கட்டாயம் வரவேண்டும் என்று எஸ்.பி.பி. வற்புறுத்தினான். `கச்சேரி முடிந்ததும், நான் காரில் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்' என்றான்.

    `சரி' என்று கச்சேரிக்குப் புறப்பட்டேன்.

    இரவு கச்சேரி முடிந்ததும், பாலுவின் காரில், ஏறிக் கொண்டேன். `கிளாரினட்' பல்லாராவ், `தபேலா' மது ஆகியோரும் எங்களுடன் புறப்பட்டார்கள். பாலுவே காரை ஓட்டினான். சேலம், உளுந்தூர்பேட்டை வழியாக வருவதற்கு பதிலாக, சேலம், அரூர், தர்மபுரி என்று தவறான பாதையில் காரை ஓட்டியதால், வேலூர் வந்து சேருவதற்கே காலை ஐந்து மணி ஆகி விட்டது. விடியப் போகும் நேரம்.

    `அப்பாடா! வேலூர் வந்து விட்டோம். ஏழு மணிக்குள் சென்னையை அடைந்து விடலாம்' எண்ணினேன்.

    காரை ஓட்டி வந்த பாலு, டிரைவரை ஓட்டச் சொல்லி விட்டு பின் சீட்டுக்கு வந்து, என் மடியில் தலை வைத்துத் தூங்க ஆரம்பித்தான்.

    டிரைவர் சீட்டுக்குப் பின்புறம் நான் இருந்தேன். வேலூர் அவுட்டருக்கு கார் வந்தபோது, ஒரு குழந்தை திடீரென்று காரின் குறுக்கே ஓடிவந்தது. டிரைவர் காரை ஒடிக்க, கார் மணலில் சறுக்கி, 40 அடி பள்ளத்தில் உருண்டது.

    தூங்கிக் கொண்டு வந்த நான் விழித்துப் பார்த்தால், கார் உருண்டு கொண்டிருக்கிறது!

    நான் தயாராகி விட்டேன். `இதோ இப்போது அடி விடும்', `இதோ இப்போது!' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், முன்னால் `ஐயோ, அம்மா!' என்று இருவர் கூச்சலிடும் சப்தம் கேட்டது. `சரி; முன்னால் இரண்டு பேர் காலி' என்று நினைத்தேன்.

    கார், தலை கீழாக பள்ளத்தில் போய் விழுந்தது. சக்கரங்கள் நாலும் மேலே பார்த்தபடி நின்றன! சீட் மட்டும் மாறாமல், நாங்கள் உட்கார்ந்த நிலையில், அப்படியே இருந்தது! முன்புறக் கண்ணாடி வழியாக ரத்தம் வழிவது தெரிந்தது.

    டிரைவர் பக்கத்து கண்ணாடி கதவு திறந்திருந்தது. அதன் வழியாக ஒவ்வொருவராக வெளியே வந்தோம். பார்த்தால், ஒரு பாலத்துக்குக் கீழே இருக்கிறோம் என்பது தெரிந்தது. மேலே, பாலத்தில் பெரிய கூட்டம்! அவர்கள், "என்ன ஆச்சு, என்ன ஆச்சு?'' என்று கத்தினார்கள். என்ன ஆச்சு என்று எங்களுக்கே தெரியவில்லை!

    கார் கண்ணாடியில் வழிந்தது ரத்தம் அல்ல, என்ஜின் ஆயில். ரோடு புழுதி காரணமாக, ரத்தக் கலரில் வழிந்திருக்கிறது.

    "செத்துப் பிழைத்தவன்டா!''

    எப்படியோ தப்பிப் பிழைத்தோம். மேலே வந்ததும், "நான் செத்துப் பிழைச்சவன்டா!'' என்று சத்தம் போட்டுப் பாடினேன்!

    உண்மையில், நானும், மற்றவர்களும் அந்த விபத்தில் உயிர் தப்பியது ஆச்சரியம்தான். நான், கார் கண்ணாடியில் தலையை சாய்த்து வைத்து தூங்கிக் கொண்டுதான் பயணம் செய்தேன். அந்தக் கண்ணாடி முழுவதும் நொறுங்கிப் போயிருந்தது. எனக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை.

    பின்னர், வேலூர் பஸ் அதிபர் ஒருவர் எங்களை தனது வண்டியில் சென்னையில் கொண்டு வந்து விட்டார்.

    இந்த விபத்து காரணமாக, அப்போது இசை தேர்வு எழுத முடியாமல் போயிற்று. பிறகுதான் எழுதினேன்''

    இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டார்.
    லண்டன் இசைக் கல்லூரி நடத்திய இசை பற்றிய தேர்வில் இளையராஜா வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
    லண்டன் இசைக் கல்லூரி நடத்திய இசை பற்றிய தேர்வில் இளையராஜா வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாள ராக இளையராஜா பணியாற்றிக் கொண்டிருந்த போது, இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். நாடகங்களுக்கும் இசை அமைத்தார்.

    இப்படி, இரவு - பகலாக வேலை பார்த்து வந்ததால், தன்ராஜ் மாஸ்டரை பார்க்க முடியாமல் போய் விட்டது.

    ஏற்கனவே அவர் கூறிய படி, இசையில் பட்டம் பெற லண்டன் `டிரினிட்டி காலேஜ் ஆப் மிïசிக்'' நடத்தும்  பரீட்சையில் பங்கு கொள்ள இளையராஜா பணம் கட்டியிருந்தார்.

    ஒருநாள் சற்று ஓய்வு கிடைத்த போது, தன்ராஜ் மாஸ்டரை பார்க்கச் சென்றார். தன்னை விட்டு விட்டு கோடம்பாக்கத்துக்குச் சென்றதாலும், இடையில் தன்னைப் பார்க்க வராததாலும் இளையராஜா மீது மாஸ்டர் கோபம் கொண்டிருந்தார்.

    இளையராஜாவை பார்த்ததுமே, அவர் கண்களில் அனல் வீசியது. ``நான் அப்போதே சொன்னேன், கோடம்பாக்கம் போனால் உருப்பட மாட்டாய் என்று! அப்படியே ஆயிடுச்சு பார்!'' என்றார்.

    ``இல்லை சார். கொஞ்சம் ரெக்கார்டிங் வேலை இருந்தது. இனிமேல் கரெக்டா வந்துடறேன், சார்'' என்று இளையராஜா கூறினார்.

    ``இனிமே என்ன வர்றது? உனக்கு இனிமேல் நான் பாடம் எடுக்கப் போறதில்லே. நீ போ! ரெக்கார்ட்டிங்குக்கே போ!'' என்று கோபத்துடன் கூறினார், மாஸ்டர்.

    இளையராஜா எவ்வளவோ சமாதானப் படுத்திப் பார்த்தார், ஆனால் மாஸ்டரின் கோபம் தணியவில்லை. ``நான் சொன்னா சொன்னதுதான்'' என்றார், கண்டிப்புடன்.

    ``சார்! நீங்க சொல்லித்தான் லண்டன் டிரினிட்டி காலேஜ் பரீட்சைக்கு பணம் கட்டினேன், எட்டாவது கிரேட் பிராக்டிக்கல், நான்காவது கிரேட் தியரி இரண்டுக்கும் நான் தயாராக வேண்டும்...''

    ``ஆமாம்...பணம் கட்டச் சொன்னேன். இனிமேல் என்னால் முடியாது. இனி நீ இங்கு வரவும் வேண்டாம்''

    - கண்டிப்புடன் கூறினார், மாஸ்டர்.

    இளையராஜா ஓர் முடிவுக்கு வந்தார்.

    ``சார்! நான் இங்கே மீண்டும் ஒருநாள் வருவேன். பரீட்சைகளில் நல்ல முறையில் தேறி, ஹானர்ஸ் சர்டிபிகேட்டுடன் வந்து உங்களைப் பார்ப்பேன்'' என்று சபதம் செய்வது போல் கூறி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

    நன்றாக உழைப்பவர்கள் சபதம் செய்தால் என்ன நடக்குமோ அதுதான் இளையராஜாவுக்கும் நடந்தது. சதாசர்வ காலமும் இசை பற்றிய படிப்பு... பயிற்சி!

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``பாரதிராஜாவிடம் ஒரு சபதம், மாஸ்டரிடம் ஒரு சபதம்.

    திரையில் என் பெயரை பாரதிக்கு முன்னால் கொண்டு வந்து விட வேண்டும் என்று நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் இசை தேர்வுக்கு பணம் கட்டியதற்காகவாவது எப்படியும் தேறி விட வேண்டும் என்று வைராக்கியம் கொண்டேன்.

    பிராக்டிக்கல் பரீட்சை பற்றி நான் கவலைப்படவில்லை. கிட்டாருக்கு என்னென்ன பாடங்கள் உண்டோ அதையெல்லாம் பிராக்டிஸ் செய்து

    விடலாம்.ஆனால் இந்த `தியரி'க்கு (எழுத்துப் பரீட்சை) என்ன செய்வது முக்கியப் பிரச்சினை- ஆங்கிலம்!

    தேர்வு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி, நானாகப் படிக்க ஆரம்பித்தேன்.

    புத்தகத்தை திறப்பேன். முதல் வாக்கியத்தை வாசிப்பேன். புரியாது. மீண்டும் வாசிப்பேன். ஓரிரு வார்த்தைகள் - ஏற்கனவே தெரிந்த வார்த்தைகள் மட்டும் புரியும். அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை மட்டும் மனதில் கொண்டு, `இந்த வாக்கியம் எதைச் சொல்ல எழுதப்பட்டிருக்கிறது' என்று யோசிப்பேன்.

    மூன்றாவது முறை வாசிப்பேன். யாரும் விளக்காமலேயே, நன்றாக அர்த்தம் மனதில் வந்து விடும்.

    `சரியாக இருக்கிறதா?' என்று அடுத்தவரிடம் கேட்டு சரிபார்த்தால், 100க்கு 100 சரியாக இருக்கும்!

    தெரியாத புது வார்த்தைகளுக்கு அர்த்தத்தை யாரிடமா வது கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

    ரெக்கார்டிங் இல்லாத நேரங்களில், பரீட்சைக்கு உரிய இசையை, மனப்பாடமாக பிராக்டிஸ் செய்வேன். எப்போதும் பேப்பரும் கையுமாக இருக்கும் நான், ஓய்வு நேரத்தில் எழுதிக் கொண்டே இருப்பேன். இசைக் குழுவினர் எல்லோரும் என்னை வியப்புடன் வேடிக்கை

    பார்ப்பார்கள்.பரீட்சை வந்தது. பிராக்டிக்கல் 8வது கிரேடு, தியரி 4வது கிரேடு ஆகிய இரண்டிலும் 85 மார்க் எடுத்து ``ஹானர்ஸ்'' தகுதியுடன் தேறினேன்.

    இந்த சான்றிதழுடன் தன்ராஜ் மாஸ்டரை போய்ப் பார்த்தேன். சான்றிதழைக் காட்டினேன்.

    அதைப் பார்த்த மாஸ்டர், வியப்புடன் என்னை நோக்கினார். ``ராஜா! ரியலி ï ஆர் கிரேட்!'' என்றார்.

    அதுமட்டுமல்ல ``இசையில் இன்னும் எவ்வளவோ இருக்கு. நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம்'' என்று திறந்த மனதோடு அழைப்பு

    விடுத்தார்.ஆயினும் மறுபடியும் மாஸ்டரிடம் போக எனக்கு மனம் வரவில்லை.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.
    ``வெள்ளித்திரையில் யாருடைய பெயர் முதலில் வருகிறது, பார்ப்போமா?'' என்று இளையராஜாவிடம் பாரதிராஜா பந்தயம் போட்டார். பந்தயத்தில் அவர் ஜெயித்தார்.
    ``வெள்ளித்திரையில் யாருடைய பெயர் முதலில் வருகிறது, பார்ப்போமா?'' என்று இளையராஜாவிடம் பாரதிராஜா பந்தயம் போட்டார். பந்தயத்தில் அவர் ஜெயித்தார்.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் இளையராஜா அசிஸ்டென்டாக இருந்தபோது, புட்டண்ணாவிடம் பாரதிராஜா உதவி இயக்குனராகச் சேர்ந்தார்.

    ஒருநாள் இளையராஜா வும், பாரதிராஜாவும் பேசிக் கொண்டிருந்த போது, ``சினிமாவில் டைட்டில் கார்டில் யார் பெயர் முதலில் வருகிறது என்று பார்ப் போமா?'' என்று பாரதிராஜா சிரித்துக் கொண்டே கேட்டார். இளையராஜாவும் சிரித்தபடி, ``பார்த்து விடுவோம்'' என்றார்.

    புட்டண்ணா இயக்கிய `இருளும் ஒளியும்'' படத்தில், உதவி டைரக்டராக பாரதிராஜா பணியாற்றினார். வாணிஸ்ரீ கதாநாயகியாக இரட்டை வேடத்தில் நடித்த படம் இது.

    இந்தப் படத்தில்தான் ``உதவி டைரக்டர்- பாரதிராஜா' என்று டைட்டில் கார்டு போடப்பட்டது.

    படம் வெளிவந்ததும், ``பார்த்தியா! பந்தயத்தில் நான்தான் ஜெயித்து விட்டேன்'' என்று இளையராஜாவிடம் கூறினார், பாரதிராஜா.

    ``ஓகே பாரதி'' என்றார், இளையராஜா.

    காரணம், அவர் கவனம் எல்லாம் இசையை முழுவதுமாக கற்றறிய வேண்டும் என்?தில் இருந்ததே தவிர,தன் Ù?யர் திரையில் வரவேண்டும் என்?தில் இல்லை!

    ``இருளும் ஒளியும்'' ஒரு சிறந்த படமாக இருந்தும், புட்டண்ணா தமிழ்நாட்டில் புகழ் பெறவில்லை. ஆனால், கன்னடப் படஉலகில் ஈடு இணையற்ற டைரக்டராக விளங்கினார். எனவே அவர் கவனம் கன்னடப்பட உலகத்தை நோக்கித் திரும்பியது.

    தமிழ்ப்பட உலகில் புகழ் பெற விரும்பிய பாரதிராஜா, டைரக்டர் கிருஷ்ணன் நாயரிடம் சிலகாலம் உதவி டைரக்டராக பணியாற்றினார். ஏ.ஜெகநாதன் டைரக்ட் செய்த ``அதிர்ஷ்டம் அழைக்கிறது'' படத்துக்கும் அவர்தான் துணை டைரக்டர். தேங்காய் சீனிவாசனும், சவுகார் ஜானகியும் நடித்த படம் இது.

    இந்த சமயத்தில், கே.ஆர்.ஜி. ``சொந்த வீடு'' என்ற படத்தை தயாரிக்க தீர்மானித்தார். டைரக்ஷன் பொறுப்பை பாரதிராஜாவுக்கு வழங்கினார்.

    கதை ஆர்.செல்வராஜ்; இசை: வி.குமார் என்று முடிவாயிற்று.

    ஜி.கே.வெங்கடேசிடம் `பிசி'யாக இருந்தாலும், இசையை கற்றுக் கொள்வதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும், இளையராஜா இதுபற்றி கவலைப்படவில்லை.

    ``பாரதியைப் பார்த்தாயா! படம் கிடைத்ததும், உன்னை மறந்திட்டான்'' என்று இளையராஜாவிடம் செல்வராஜ் சொன்னார். அதை இளையராஜா காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

    என்ன காரணத்தினாலோ, ``சொந்த வீடு'' படம் நின்று விட்டது.

    ``16 வயதினிலே'' என்ற திரைக் காவியம் பாரதிராஜாவின் முதல் படமாக அமைய வேண்டும் என்றும், அதன் இசை அமைப்பாளராக இளையராஜா பணியாற்ற வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயம் என்பது, அன்று யாருக்கும் தெரியாது!

    இந்த சமயத்தில், ஊரில் இருந்த இளையராஜாவின் அம்மா, பிள்ளைகளைப் பார்க்க வேண்டும், அவர்களுக்கு தன் கையால் சமைத்துப்போட வேண்டும் என்று விரும்பி சென்னைக்கு வந்து விட்டார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``எங்களைப் பிரிந்திருப்பது பொறுக்க மாட்டாமல், அம்மா சென்னைக்குக் கிளம்பி வந்து விட்டார்கள். ``எம் புள்ளைங்க இங்கே கஷ்டப்படும்போது, நான் எதுக்கு அங்கே இருக்கணும்? உங்களுக்கு சமைத்தாவது போட வேண்டும் என்றுதான் வந்து விட்டேன்''

    என்றார்கள்.``இந்த வயதில் நீங்க ஏன் கஷ்டப்படணும்?'' என்று கேட்டால், ``அடப் போங்கப்பா! சமைக்கிறது ஒரு கஷ்டமா?'' என்று அடித்துப் பேசி விடுவார்கள்.

    1969-ல் இருந்து நான்கு வருடம் அம்மா சமையல்தான்.

    பாரதியின் தாய் எனக்கும் அம்மா போல. என் அம்மாவும் பாரதிக்குத் தாய்தான். கிடைக்கிற காசை அவர்களிடம் கொடுத்து விடுவோம். எல்லாவற்றையும் அம்மாதான் பார்த்துக் கொள்வார்கள்.

    ஒருமுறை அம்மாவிடம் 200 ரூபாய் கொடுத்தோம். அவர்கள் சென்னை வந்த பிறகு நாங்கள் கொடுத்த பெரிய தொகை. அம்மா மிகவும் மகிழ்ந்து, வெற்றிலைப் பையில் அந்தப் பணத்தை வைத்து, இடுப்பில் செருகிக் கொண்டார்கள். எல்டாம்ஸ் ரோடு மார்க்கெட்டிங் காய்கறி வாங்கப் புறப்பட்டார்கள்.

    ஒரு கடையில் ஏதோ காய்கறி வாங்கியிருக்கிறார்கள். அதை கவனித்த எவனோ பணப்பையை திருடி விட்டான்.

    பை களவு போனது தெரியாமல், அம்மா அடுத்த கடையில் சாமான்களை வாங்கி விட்டு இடுப்பைத் தொட்டுப் பார்த்தால், பையை காணவில்லை. சாமான்களை அங்கேயே வைத்து விட்டு, வந்த வழியில் பை எங்காவது கிடக்கிறதா என்று நடந்தபடி தேடிப் பார்த்திருக்கிறார்கள். அது கிடைக்காமல், வாங்கிய சாமான்களைத் திருப்பிக் கொடுத்து விட்டு, வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்பி னார்கள்.

    ``எம் புள்ளைங்க பாடுபட்டு சேர்த்த பணத்தை, இந்த படுபாவி தொலைச்சுட்டேனே!'' என்று வாய் விட்டு புலம்பினார்கள்.

    ``சரிம்மா... போகட்டும், விடுங்க! இதுக்கு ஏன் வருத்தப்படறீங்க?'' என்று தேற்றினோம்.

    வருத்தத்தை மாற்றிக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ அவர்களால் முடியவில்லை. வெந்து போன மனதுடன், வீட்டிலிருந்த அரிசி, வெங்காயம், புளி, மிளகாயை வைத்து, சாதம் வடித்தார்கள்.

    வெங்காயத்தை தண்ணீரில் நறுக்கி, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு போட்டு, சாதத்தில் ஊற்றிச் சாப்பிடக்

    கொடுத்தார்கள்.உண்மையில் சொல்கிறேன், இன்று வரை அது போன்ற ருசியான சாப்பாட்டை நாங்கள் சாப்பிட்டதில்லை.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    நடிகராக விரும்பிய பாரதி ராஜாவுக்கு, திடீரென்று டைரக்ஷன் மீது நாட்டம் ஏற்பட்டது. பிரபல கன்னட டைரக்டர் புட்டண்ணாவிடம் உதவி டைரக்டர் ஆனார்.
    நடிகராக விரும்பிய பாரதி ராஜாவுக்கு, திடீரென்று டைரக்ஷன் மீது நாட்டம் ஏற்பட்டது. பிரபல கன்னட டைரக்டர் புட்டண்ணாவிடம் உதவி டைரக்டர் ஆனார்.

    அல்லி நகரத்தைச் சேர்ந்தவரான பாரதிராஜா, இளையராஜாவின் ஊரான பண்ணைபுரத்துக்கு மலேரியா தடுப்பு அதிகாரியாக வந்தபோது, நண்பர்கள் ஆனார்கள்.

    பாரதிராஜாவுக்கும் சினிமா கனவு உண்டு. டைரக்டர் ஆக வேண்டும்  என்றல்ல; நடிகர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை!

    சிவாஜி கணேசனின் நடிப்பை அணு அணுவாக ரசித்த பாரதிராஜா, சிவாஜி போலவே பெரிய நடிகராக வேண்டும் என்று விரும்பினார்.

    இதன் காரணமாக வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்தார்.

    சென்னையில், பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்தார். பின்னர் மவுண்ட் ரோட்டில் (இன்றைய அண்ணா சாலை) உள்ள `பயோனியர் மெட்ராஸ்' என்ற மோட்டார் கம்பெனியில் நண்பர் ஒருவர் முயற்சியால் வேலைக்கு சேர்ந்தார். பாரதிராஜா, இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் மூவரும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தனர்.

    பாரதிராஜாவுக்கு அப்போது சம்பளம் 120 ரூபாய். அதில் 30 ரூபாய் ரூம் வாடகை. மீதி இருந்த 90 ரூபாயில் சாப்பாடு, பஸ், சினிமா, சிகரெட் செலவுகள்!

    இந்த சமயத்தில், பாரதிராஜாவுக்கு நடிப்பின் மீதான மோகம் குறைந்து, டைரக்ஷன் மீது நாட்டம் ஏற்பட்டது.

    ஒரு நாள், ஜெய்சங்கர் படத்தை போஸ்டரில் பார்த்து விட்டு, அறைக்கு திரும்பிய பாரதிராஜா, கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டார். பிறகு, பாஸ்கரைப் பார்த்து, "டேய்! இந்த ஜெய்க்கு கண்ணே சரி இல்லையே! அவர் எல்லாம் நடிக்கும்போது நான் ஏன் நடிக்கக்கூடாது?'' என்று கேட்டார்.

    "நடிக்கக்கூடாது என்று யார் சொன்னது? உனக்கு மூக்கு கொஞ்சம் பெரிசு! நடிப்பிலே பேர் வந்துட்டா ஜனங்கள் ஒத்துக்குவாங்க! ஜெய்யை ஒத்துக்கிட்டவங்க, உன்னை ஒத்துக்க மாட் டாங்களா!'' என்று ஐஸ் வைத்துப் பேசினார், பாஸ்கர்.

    இதற்குப் பிறகு, புட்டண்ணா கனகல் எடுத்த "சரபஞ்சரா'' என்ற கன்னடப் படத்தை ராஜகுமாரி தியேட்டரில் (இப்போது ஷாப்பிங் சென்டர்) பார்த்த பாரதிராஜா, அப்படியே பிரமித்துப் போய்விட்டார். டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசைக்கு வித்தூன்றிய படம் இதுதான்.

    "ஆகா! புட்டண்ணா, எப்படி படம் எடுத்திருக்கிறார்! உதவி டைரக்டரா சேர்ந்தா இவரிடம்தான் சேர வேண்டும்'' என்று கூறியபடி

    இருந்தார்.இதற்குப் பின் என்ன நடந்தது என்பது பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "டைரக்டராக வேண்டும் என்ற நோக்கத்திற்கு பாரதிராஜா மாறிவிட்டார் என்று தெரிந்தது. யாராவது பாரதிராஜாவை புட்டண்ணாவிடம் சேர்த்து விட மாட்டார்களா என்று நினைத்தேன்.

    ஒரு நாள் ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்துக் கொண்டிருந்தபோது, `சரபஞ்சரா' படம் பற்றி பேச்சு வந்தது. புட்டண்ணாவை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

    "அவன் யாரு தெரியுமா? நம்ம பையன்!'' என்றார், ஜி.கே.வி.

    ஜி.கே.வி.யுடன் பாஸ்கருக்கு அறிமுகம் உண்டு. அவர் மூலமாக ஜி.கே.வி.யிடம் சொல்லிப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

    விஷயத்தை பாஸ்கரிடம் சொன்னேன். அவரும், "சரி; முயற்சிப்போம்'' என்றார்.

    ஒரு நாள் நானும், பாஸ்கரும் ஜி.கே.வி.யிடம் போனோம். "என்ன விஷயம் பாஸ்கர்?'' என்று ஜி.கே.வி. கேட்டார்.

    "எங்க பாரதிராஜாவுக்கு புட்டண்ணா கிட்டே அசிஸ்டென்டாக வேலை பார்க்க ஆசை. நீங்க அவரிடம் கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்ண்ணே!'' என்றார், பாஸ்கர்.

    "அது யாருடா பாரதி?'' என்று ஜி.கே.வி. கேட்க, "எங்க சித்தப்பா பையன்! அண்ணன் முறை வேண்டும்! என்று கூறி சமாளித்தோம்.

    "சரி. நாளை காலை அவனை கூட்டிக் கொண்டு வா!'' என்று பாஸ்கரைப் பார்த்துச் சொன்னார், ஜி.கே.வி.

    மறுநாள் பாஸ்கரும், பாரதிராஜாவும் ஜி.கே.வி.யிடம் போனார்கள். "ஒரு டாக்சி பிடித்து வா!'' என்று ஜி.கே.வி. சொல்ல, பாஸ்கர் ஒரு டாக்சியை கொண்டு வந்தார். மூவரும் டாக்சியில் புறப்பட்டனர்.

    மந்தைவெளி பஸ் ஸ்டாண்டு அருகே, டாக்சியை ஜி.கே.வி. நிறுத்த சொன்னார். "ஒரு மாலை வாங்கிக் கொண்டு வா!''

    என்றார்.பாரதிராஜாவும், பாஸ்கரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். "என்ன, காசில்லையா?'' என்று கேட்ட ஜி.கே.வி. அவரே பணம் கொடுத்து மாலை வாங்கினார். ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி. காலனிக்கு சென்ற டாக்சி, புட்டண்ணா வீட்டு முன் போய் நின்றது.

    பாஸ்கர், பாரதிராஜா இருவரையும் அழைத்துக் கொண்டு, ஜி.கே.வெங்கடேஷ் உள்ளே சென்றார்.

    ஹாலில் புட்டண்ணா உட்கார்ந்திருந்தார். ஜி.கே.வி.யை பார்த்ததும், "இது ஏனு குருக்களே! நீவே ஏளி இருபருதல்லா, நானே நிம்மள்ள காணு பேக்கு எந்தித்தேனு'' (`இது என்ன குருவே! நீங்களே சொல்லியிருந்தா, நானே வந்திருப்பேனே! நானே உங்களைப் பார்க்க வேண்டும் என்று இருந்தேன்') என்றார்.

    உடனே ஜி.கே.வி, "டேய் பாரதி! மாலையைப் போட்டு நமஸ்காரம் பண்ணிக்கோ'' என்றார்.

    பாரதிராஜா, புட்டண்ணாவுக்கு மாலை அணிவித்து விட்டு, காலைத் தொட்டு வணங்கினார். "அடடா! இதெல்லாம் எதுக்கு?'' என்றார், புட்டண்ணா.

    "இருக்கட்டும், இருக்கட்டும்! இவன் நமக்குத் தெரிந்த பையன். ரொம்ப நல்லவன். நீ டைரக்ட் செய்த படத்தைப் பார்த்து விட்டு, உன் மேலே பைத்தியமாகி விட்டான். உன்கிட்டே அசிஸ்டென்டா சேர ஆசைப்படுகிறான்'' என்றார், ஜி.கே.வி.

    "சரி! குருக்களே! நீங்க சொல்லிட்ட பிறகு வேறு என்ன!'' என்று கூறிய புட்டண்ணா, பாரதிராஜாவை நோக்கித் திரும்பி, "நாளைக்கு ஜெமினி ஸ்டூடியோவுக்கு வந்துடு!'' என்றார்.

    நாங்கள் திரும்பி வரும்போது, "புட்டண்ணா உங்களிடம் இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறாரே. என்ன காரணம்?'' என்று ஜி.கே.வி.யிடம் பாரதிராஜா கேட்டார்.

    "ஜுபிடர் ஸ்டூடியோவிலும், சி.ஆர்.சுப்பராமனிடமும், எஸ்.வி.வெங்கட்ராமனிடமும் வீணை வாசித்த பின், எம்.எஸ்.வி.யிடம் நான் இசை கண்டக்ட் செய்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், எம்.எஸ்.வி.யிடம் தபலா வாசிக்கும் கோபால கிருஷ்ணனும், நானும் ஒரு ரூமில் தங்கியிருந்தோம். எங்களுக்கு சமையலுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. கர்நாடகாவில் இருந்து ஒருவர் வந்தார். அவர் நன்றாக கவிதை எழுதக்கூடியவர். எங்களுக்குத் தேவையானதை எல்லாம் சமைத்து வைப்பார். அவர்தான் பிரபாகர் சாஸ்திரி. பிற்காலத்தில், கன்னடப் படவுலகின் தலைசிறந்த பாடல் ஆசிரியர் ஆனார். அவர் தம்பிதான் புட்டண்ணா'' என்று ஒரு பெரிய சரித்திரத்தை நான்கு வாக்கியங்களில் அடக்கிச் சொன்னார், ஜி.கே.வி.

    ஒரு பெரிய ஆலமரத்தில், எங்கிருந்தோ பறவைகள் வந்து, ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விதமாக தங்கி மகிழ்ந்திருந்து, வாழ்ந்திருந்து போவது போல், எங்கெங்கிருந்தோ வருகிற கலைஞர்கள் சினிமாவாம் ஆலமரத்தில் தங்கியிருந்து வாழ்ந்ததும் அல்லாமல் விழுதுகளால் வேரோடி இருக்கிறார்களே! நினைக்கவே அதிசயமாக இருந்தது.

    புட்டண்ணா கூறியபடி, மறுநாள் ஜெமினி ஸ்டூடியோவுக்கு பாரதிராஜா போனார், அசிஸ்டென்ட் டைரக்டராகி விட்டார்.

    நேரம் வந்துவிட்டால், நடக்க வேண்டியது தானாக நடக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம்''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.
    இசை அமைப்பின்போது, இளையராஜாவிடம் இருந்த திறமை, ஞாபகசக்தி ஆகியவற்றைக் கண்டு ஜி.கே.வெங்கடேஷ் வியப்படைந்தார்.
    இசை அமைப்பின்போது, இளையராஜாவிடம் இருந்த திறமை, ஞாபகசக்தி ஆகியவற்றைக் கண்டு ஜி.கே.வெங்கடேஷ் வியப்படைந்தார்.

    பல்வேறு வாத்தியங்களை இசைக்க, தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா பயிற்சி பெற்று வந்த காலக்கட்டம் அது.

    அப்போது நடந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஒருநாள் ஜி.கே.வெங்கடேஷிடம் இருந்து ஒருவர் வந்தார். இசை `கம்போஸ்' செய்ய என்னை அழைத்து வருமாறு ஜி.கே.வி. கூறியிருப்பதாக, அவர் தன்ராஜ் மாஸ்டரிடம் கூறினார்.

    மாஸ்டர் என்னைப் பார்த்து, "கோடம்பாக்கம் போறியா?'' என்று கேட்டார்.

    "நீங்க போகச்சொன்னா போகிறேன் சார்!'' என்றேன்.

    "அங்கே போனா, மிïசிக் போயிடும். உருப்பட மாட்டானுங்க!'' என்று கூறிய மாஸ்டர் "உன்னை அப்படி நினைக்கவில்லை. போய் வா!'' என்றார்.

    அவர் முழு மனதுடன் என்னை வாழ்த்தி அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன். "பாடல் பதிவு நடந்த அன்றைக்கு, என்னை மிïசிக் டைரக்டர் என்று ஜி.கே.வி.க்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். அதனால்தான் என்னை அவர் அழைத்திருக்கிறார்'' என்றேன்.

    "சரி, போயிட்டு வா!'' என்றார், மாஸ்டர்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு படக்கம்பெனிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே ஜி.கே.வெங்கடேஷ், `தபேலா' கன்னையா, தயாரிப்பாளரும் டைரக்டருமான பகவான்துரை ஆகியோர் இருந்தனர்.

    ஆபீஸ் நடுவில், ஒரு ஜமுக்காளத்தில் ஹார்மோனியம், தபேலாவுடன் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். ராஜ்குமார் நடிக்கும் "கோவாவில் சி.ஐ.டி. 999'' என்ற கன்னடப்படத்தில் வரும் பாடலுக்கான காட்சியை டைரக்டர் விவரித்தார்.

    "ட்ïனை கம்போஸ் செய்து வையுங்கள். எங்களுக்கு வேலை இருக்கிறது. மாலையில் வந்து டிïனை கேட்கிறோம்'' என்று கூறிவிட்டு டைரக்டர் போய்விட்டார்.

    பாடலை ஜி.கே.வெங்கடேஷ் கம்போஸ் செய்யத் தொடங்கியபோது, "ஸ்வரத்தை நோட்ஸ் எழுதிக்கோ!'' என்று என்னிடம் கூறினார்.

    "ஸ்வரம் எல்லாம் எனக்குத் தெரியாது சார்!'' என்றேன்.

    "பின்னே எப்படி ஆர்மோனியம் வாசிச்சே?'' என்று கேட்டார், ஜி.கே.வி.

    "அதெல்லாம் மனப்பாடம் செஞ்சது'' என்றேன்.

    "காதடியா?'' என்று கேட்டார், ஜி.கே.வி.

    (ஸ்வரம் தெரியாமல், காதில் கேட்பதை வைத்து வாசித்தால், அதற்குப் பெயர் "காதடி'')

    "இப்படியெல்லாம் வாத்தியம் இல்லாமல் நீ வரவேண்டாம். மாஸ்டர் ரூமில் இருந்து கிட்டார் எடுத்து வா!'' என்று ஜி.கே.வி. கூறினார்.

    கிட்டார் வாசித்து ஏற்கனவே எனக்குக் கொஞ்சம் பழக்கம் இருந்ததால், மதியம் மாஸ்டர் ரூமில் இருந்த கிட்டார்களில் ஒன்றை, மாஸ்டரிடம் கேட்டு வாங்கி வந்தேன். ஜி.கே.வி. முன் போய் நின்றேன்.

    "டேய்! நீ ஸ்வரம் எல்லாம் எழுதவில்லை என்றால், நான் கம்போஸ் பண்ணினதை நீ எப்படி திரும்ப எனக்குச் சொல்ல முடியும்?'' என்று ஜி.கே.வி. கேட்டார்.

    "சார்! எனக்கு ட்ïனை இரண்டு தடவை கேட்டா மனப்பாடம் ஆயிடும். அப்படியே திரும்பச் சொல்லிடுவேன்!'' என்றேன்.

    "அதெல்லாம் சரிப்படாது!'' என்று கூறிய ஜி.கே.வி., பிறகு "சரி. பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, ட்ïன்களை கம்போஸ் செய்யத் தொடங்கினார். கிடுகிடுவென்று, பத்து ட்ïன்களை கம்போஸ் செய்து விட்டார்.

    அதற்குள் டைரக்டர் பகவான்துரை வந்துவிட்டார். "வெங்கடேஷ்! ட்ïன்களைப் போடுங்கள், கேட்போம்!'' என்றார்.

    "முதல் ட்ïன் எது?'' என்று என்னிடம் கேட்டார், ஜி.கே.வி.

    நான் பாடினேன். உடனே அதை ஞாபகப்படுத்திக்கொண்டு ஜி.கே.வி. பாடிக்காட்டினார்.

    "இரண்டாவது ட்ïன்?'' என்று ஜி.கே.வி. கேட்க, அதைப் பாடினேன்.

    இப்படியே மூன்றாவது, நான்காவது என்று, பத்து ட்ïன்களையும் நான் ஞாபகத்தைக்கொண்டே பாடிக்காட்டினேன். ஜி.கே.வி.க்கு ஒரே ஆச்சரியம்! தபேலா கன்னையாவைப் பார்த்து, "என்னடா இவன்!'' என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, "நீ என்ன, டேப் ரிக்கார்டரா?'' என்று கேட்டார்.

    சிறிய டேப் ரிக்கார்டர் வராத காலம் அது.

    ஜி.கே.வி. ஆச்சரியம் தீராதவராக பகவான் துரையைப் பார்த்து, "துரை! இந்தப் பையனைப் பாருங்க!'' என்றார்.

    "ஆமாம், ஆமாம். ஆச்சரியமாகத்தான் இருக்கு!'' என்றார், பகவான் துரை.

    அவர் கன்னடக்காரராக இருந்தாலும் தெளிவாகத் தமிழில் பேசினார்.

    "வெங்கடேஷ்! இது நம் படத்தில் நீச்சல் குளத்தில் ஒரு பெண் நீச்சல் உடையில் பாடுகிற பாட்டு! நீங்கள் மூன்றாவதாக போட்டிருக்கும் ட்ïன் ரொம்ப நல்லா இருக்கு...'' என்று பகவான் துரை கூற, "அப்ப, அதையே வச்சுக்கலாம்'' என்றார், ஜி.கே.வெங்கடேஷ்.

    பிறகு அவர் என்னிடம், "நீ இப்படியே காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைக்காதே. நீதான் இந்தப் பாடலுக்கு உரிய ஸ்வரங்களை வாத்தியம் வாசிப்பவர்களுக்கு சொல்லணும்'' என்றார்.

    அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை. `இங்கேதான் ட்ïன் தொடங்குகிறது. இதுதான் ஸட்ஜமாக இருக்க வேண்டும். இதுதான் ரி...க...ம...ப...த..நி... என்று, ஒவ்வொரு ஸ்வரமாகத் தேடிக் கண்டுபிடித்து, அதை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தேன்.

    எல்லாம் சரியாக இருந்தது.

    பிறகு பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாட, கோல்டன் ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் நடந்தது.''

    இவ் வாறு இளையராஜா கூறினார்.
    எல்லா வாத்தியங்களையும் வாசிக்கத் தெரிந்தவரும், பல இசைக் கலைஞர்களை உருவாக்கியவருமான தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா இசை பயின்றார்.
    எல்லா வாத்தியங்களையும் வாசிக்கத் தெரிந்தவரும், பல இசைக் கலைஞர்களை உருவாக்கியவருமான தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா இசை பயின்றார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "திருச்சியில் நான் இசை அமைத்த நாடகமான ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' அரங்கேறிய பின், சென்னைக்குப்

    புறப்பட்டோம்.அப்போது, திருமதி கமலா அவர்களிடம், "கர்நாடக இசை அல்லது வெஸ்டர்ன் (மேற்கத்திய) இசை கற்றுக் கொடுக்க யாராவது இருந்தால் சொல்லுங்கள். நான் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றேன்.

    "கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கும் யாரையும் எனக்குத் தெரியாது. மேற்கத்திய இசை கற்றுத்தரும் மாஸ்டர் ஒருவர் இருக்கிறார். அவருடைய மாணவர் ஒருவரை எனக்கு தெரியும். அவரிடம் சொல்லி உங்களை அழைத்துப் போகச் சொல்கிறேன்'' என்றார், கமலா.

    அடுத்த நாள், நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மூத்த மகன் சாய்பாபா (எம்.எஸ்.வி.யிடம் கிட்டார் வாசிப்பவர்) என் ரூமிற்கு வந்தார். கமலா அவர்கள் சொன்னதன் பேரில் வந்திருப்பதாகச் சொன்னார். இசையில் புகழ் பெற்ற மாஸ்டர் தன்ராஜிடம் அழைத்துப் போவதாகக் கூறினார்.

    அவசரம் அவசரமாக உடை மாற்றிக்கொண்டு அவருடன் புறப்பட்டேன். மைலாப்பூர் சாயிலாட்ஜ் 13-ம் நெம்பர் அறையில், பியானா மற்றும் பல இசைக் கருவிகள், இசை பற்றிய புத்தகங்களுடன் தன்ராஜ் மாஸ்டர் இருந்தார். இரண்டு மூன்று மாணவர்களுக்கு கிட்டாரில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

    சிறிது நேரத்தில், மாணவர்கள் எல்லோரும் சென்ற பிறகு, என்னை மாஸ்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார், சாய்பாபா.

    "இரண்டு நாள் கழித்து, காலை பத்து மணிக்கு வரச்சொல். பாடத்தை ஆரம்பிக்கலாம். வரும்போது, ஒரு நோட்டுப் புத்தகம், ஊதுபத்தி, தேங்காய், பூ, பழம், வெற்றிலைப்பாக்கு வாங்கிவர வேண்டும்'' என்று சாயிபாபாவிடம் தன்ராஜ் மாஸ்டர் கூறினார்.

    `சரி' என்று கூறிவிட்டு, நானும், சாய்பாபாவும் அங்கிருந்து புறப்பட்டோம்.

    நான் ரூமுக்குச் சென்றதும், பாரதி, பாஸ்கர் இருவரிடமும் நடந்ததைக் கூறி, "இனி இசை கற்பதற்கான பீஸ், நமது பட்ஜெட்டில் சேருகிறது. அதற்கு வேண்டிய நிதி ஒதுக்க வேண்டியது தலைவர்களின் பொறுப்பு'' என்றேன், சிரித்துக்கொண்டே.

    பாடம் தொடங்கும் நாள் வந்தது. நோட்டுப்புத்தகம், பூ, தேங்காய் - பழம், ஊதுபத்தி, கற்பூரம் எல்லாம் வாங்கிக்கொண்டேன். குருதட்சணையாக பணம் வைக்க வேண்டும் என்று சாய்பாபா கூறியிருந்ததால், தட்டில் 25 ரூபாய் வைத்து, மாஸ்டரிடம் கொடுத்தேன்.

    தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டவுடன், "உன் பெயர் என்ன?'' என்று கேட்டார், மாஸ்டர்.

    "ராஜையா'' என்றேன்.

    "அதென்ன ராஜையா! இன்று முதல் உன் பெயர் ராஜா!'' என்றார், தன்ராஜ் மாஸ்டர்.

    பெயர் மாற்றத்தை இவ்வாறு வெகு எளிதாகச் செய்துவிட்டார்.

    பிறகு நோட்டுப் புத்தகத்தை திறந்து, "7'' என்ற எண்ணை, பட்டையடிக்கும் ஒரு பேனாவால் பச்சை மையில் எழுதினார். அதன்பின் ஏழுசுரங்களை எழுதிக் காட்டினார்.

    என் முதல் ஆசானின் கால்களைத் தொட்டு வணங்கினேன். அப்போது, என்னை அறியாது என் சுயமரியாதைக் கொள்கை விலகிவிட்டிருந்தது.

    சரி; மேலே என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தேன். அந்த நேரத்தில் வேறு சில மாணவர்கள் வந்துவிட்டார்கள்.

    மாஸ்டர் என்னைப் பார்த்தார்.

    "இன்றைக்கு என்ன கிழமை?''

    "வியாழன்!''

    சரி; நீ போய்விட்டு, ஞாயிற்றுக்கிழமை வா!'' என்றவர், சற்று யோசித்துவிட்டு, "வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை ரொம்பக் கூட்டமாக இருக்கும். திங்கட்கிழமை வந்துவிடு!'' என்றார்.

    `அடடா! இன்னும் நமக்கு நேரம் வரவில்லை போலிருக்கிறதே!' என்றபடி திரும்பினேன்.

    அவர் கூறியபடி திங்கட்கிழமை போனேன். `இன்றைக்காவது நிறைய பாடம் எடுப்பார்' என்று எதிர்பார்த்தேன்.

    ஆனால் அன்றைக்கும் அரை மணி நேரம்தான். மீண்டும் அடுத்த வாரம் வருமாறு சொன்னார்.

    "சார்! எனக்கு ஒரு வேலையும் இல்லை. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். தினமும் வருகிறேனே!'' என்றேன்.

    "ஊகூம். அது ரொம்ப கஷ்டம். தினமும் ஒவ்வொரு வாத்தியத்திற்கும் நிறைய மாணவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு இடையில், உனக்கு மட்டும் தினமும் பாடம் எடுக்க முடியுமா? .... நான் பிறகு யோசித்துச் சொல்கிறேன்!''

    "சார்! நான் எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லையே!''

    "உன்னால் எவ்வளவு கொடுக்க முடியும்?''

    "மாதம் 25 ரூபாய்?''

    "சரி! சரி!''

    - இவ்வாறு கூறிய மாஸ்டர் பிறகு என்ன நினைத்தாரோ! "சரி நீ வேண்டுமானால் தினமும் வந்து போ! பாடத்திற்காக அல்ல. சும்மா, எனக்கு வேண்டிய வேலைகளைச் செய்யவேண்டும். சம்மதமா?'' என்று கேட்டார்.

    "ஓ! சம்மதம் சார்!'' என்றேன்.

    பொதுவாக, சினிமா உலகில் உள்ள எந்த இசைக் கலைஞரிடமும், "யாரிடம் பாடம் கற்றுக்கொண்டாய்?'' என்று கேட்டால், "தன்ராஜ் மாஸ்டரிடம்!'' என்றுதான் கூறுவார்கள். அவ்வளவு திறமை பெற்றவர். அவர் பெயரைச் சொல்லாதவர்கள் எவரும், எந்த இசை அமைப்பாளர் குழுவிலும் இடம் பெறமுடியாது.

    "மங்கம்மா சபதம்'', "சந்திரலேகா'' முதலான ஜெமினியின் படங்களின் வாத்தியக் குழுவில் முக்கிய இடம் வகித்தவர்.

    தன்ராஜ் மாஸ்டரிடம் வயலின், கிட்டார், பியானோ, ஹார்மோனியம், புல்லாங்குழல், பேஸ் கிட்டார், அக்கார்டின் முதலான வாத்தியங்களை கற்றுக்கொள்ள பல மாணவர்கள் வருவார்கள். எனக்குப்பாடம் இல்லாத நேரத்தில்கூட இவர்கள் பயிற்சி பெறுவதைப் பார்த்து, அந்தந்த வாத்தியங்களின் தனித்தன்மையைத் தெரிந்து கொண்டேன்.

    ஒருநாள், நானும், மாஸ்டரும் மட்டும் இருந்தோம்.

    "நீ ஹார்மோனியம் வாசிப்பேன் என்று சொன்னாய் அல்லவா? எங்கே, இந்த பியானோவில் ஏதாவது வாசி!'' என்று கூறினார், மாஸ்டர்.

    எனக்கு ஒரு நிமிடம் ஷாக். என்றாலும், அவர் இல்லாத நேரங்களில் சில சினிமாப் பாடல்களை பியானோவில் பிராக்டிஸ் செய்து வைத்திருந்தேன். எனவே கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, எம்.எஸ்.வி. அவர்கள் இசை அமைத்திருந்த "என்ன என்ன வார்த்தைகளோ...'' என்ற பாடலை பியானோவில் வாசித்தேன்.

    நான் வாசித்துக்கொண்டிருந்தபோதே சில மாணவர்கள் வந்துவிட்டார்கள். வாயைத் திறந்தபடி, ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள்.

    அவர்கள் முக பாவத்தை கவனித்த மாஸ்டர், அவர்கள் என் வாசிப்பை ரசிக்கிறார்கள் என்பதை கண்டு கொண்டார். அந்த மாணவர்களோ, என்னை மாஸ்டருக்கு வேண்டியவன் என்றும், அதனால்தான் சினிமாப்பாடல்களை எல்லாம் சொல்லித் தந்திருக்கிறார் என்று நினைத்தார்கள்.
    திரைப்பட நடிகர் ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' என்ற நாடகத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இந்த நாடகம் திருச்சியில் அரங்கேறியது.
    திரைப்பட நடிகர் ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' என்ற நாடகத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இந்த நாடகம் திருச்சியில் அரங்கேறியது.

    பொன்மலையில் நடந்த தனது கச்சேரியை எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டு ரசித்தார், பாராட்டினார் என்ற தகவல், இளையராஜாவுக்கு உற்சாகத்தை அளித்தது.

    அவர், எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கடிதம் எழுதினார். "நான் விரைவில் சென்னைக்கு வருகிறேன். அப்போது உங்களை சந்திக்கிறேன். நீங்கள் என்னை உங்கள் பூஜை அறைக்கு அழைத்துச்சென்று, ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

    குறிப்பிட்டபடி ஒருநாள் சென்னை சென்று காலை 8-30 மணிக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் வீட்டுக்குச் சென்றார்.

    வீட்டில் இருந்தவர்கள், "புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் வந்துவிடுவார்கள்'' என்றார்கள்.

    எம்.எஸ்.வி. வருகையை எதிர்பார்த்து இளையராஜா காத்துக் கொண்டிருந்தார்.

    சரியாக 9 மணிக்கு விஸ்வநாதன் வெளியே வந்தார். நெற்றியில் விபூதி - குங்குமம் பளிச்சிட, புன்சிரிப்புடன் வந்தார்.

    அவரை பார்த்த இளையராஜா, கைகூப்பி வணங்கினார். விஸ்வநாதனும் பதிலுக்கு வணங்கினார்.

    அதன்பின், என்ன பேசுவது என்று தெரியாமல் தயக்கத்துடன் நின்றார், இளையராஜா. தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, எம்.எஸ்.வி. தன்னை பூஜை அறைக்கு அழைத்துச்சென்று ஆசீர்வதிப்பார் என்று நினைத்தார்.

    ஆனால், எம்.எஸ்.வி. மிகவும் `பிசி'யாக இருந்த காலக்கட்டம் அது. இளையராஜா எழுதிய கடிதத்தை அவர் பார்த்தாரோ என்னவோ தெரியவில்லை. தயாராக நின்ற காரில் ஏறி புறப்பட்டுப் போய்விட்டார்!

    கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இளையராஜா, இவ்வுலக நினைவுக்குத் திரும்பி வந்தார்.

    வீடு சென்றதும் நடந்ததை எல்லாம் பாரதிராஜாவிடமும், பாஸ்கரிடமும் சொன்னார்.

    "கடிதம் எழுதியதை அவரிடம் சொன்னாயா? பொன்மலை கச்சேரி பற்றிச் சொல்லியிருக்கலாமே, அவருக்கு நினைவு வந்து பேசி இருப்பாரே'' என்றெல்லாம் பாரதிராஜாவும், பாஸ்கரும் கூறினார்கள்.

    "சொல்லியிருக்கலாம்தான். ஆனால் சொல்லவில்லை!'' என்றார், இளையராஜா!

    இதன்பின் கம்ïனிஸ்டு தலைவர் பாலதண்டாயுதம், இளையராஜாவின் திறமையைப் பாராட்டி, "எம்.பி. சீனிவாசனுக்கு ஒரு கடிதம் தருகிறேன். அவரைப் பாருங்கள். சினிமா துறையில் நீங்கள் பணியாற்ற அவர் உதவுவார்'' என்று கூறினார்.

    எம்.பி.சீனிவாசன், யதார்த்தமாக எடுக்கப்படும் படங்களுக்கும், சிறிய பட்ஜெட் படங்களுக்கும் இசை அமைப்பதில் புகழ் பெற்று விளங்கினார். அவரை இளையராஜாவும், பாஸ்கரும் போய்ப் பார்த்தார்கள். பாலதண்டாயுதத்தின் கடிதத்தையும் கொடுத்தார்கள்.

    அதைப் படித்துப் பார்த்த எம்.பி.சீனிவாசன், பின்வருமாறு கூறினார்:-

    "உங்கள் எதிர்பார்ப் பையோ, திறமையையோ குறைவாக மதிக்கவில்லை. உங்கள் கனவுகளையும், கற்பனைகளையும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் நன்றாக ஹார்மோனியம் வாசிப்பவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒவ்வொரு இசை அமைப்பாளருக்கும் ஹார்மோனியம் வாசிக்க மூன்று, நான்கு பேர் இருக்கிறார்கள். தபேலா, டோலக், பாங்கோ போன்ற வாத்தியங்களை வாசிப்பவர்களும் நான்கு - ஐந்து பேர் இருக்கிறார்கள். என்னிடம் சண்முகம் என்ற ஹார்மோனிஸ்ட் இருக்கிறார். அவருக்கே வேலை தர இயலாததால் `தில்ருபா' என்ற வாத்தியத்தை வாசிக்கப் பயன்படுத்திக் கொள்கிறேன்.''

    இவ்வாறு கூறி நிறுத்திய எம்.பி.சீனிவாசன், "இவ்வளவு இடைஞ்சல்களுக்கு மத்தியில் நீங்கள் சினிமாவில் சேரத்தான் வேண்டுமா? அல்லது சேரமுடியுமா!''

    இப்படி எம்.பி.சீனிவாசன் சொன்னது, இளையராஜாவுக்கு ஏமாற்றம் அளித்தபோதிலும், சோர்வடையச் செய்யவில்லை.

    இதன்பின் நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "எம்.பி.சீனிவாசன் கூறியதில் நியாயம் இருந்தது. ஆனால், எங்கள் பக்க நியாயத்தை அவர் பக்க நியாயம் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

    சில நாள் கழித்து, சங்கிலி முருகனிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. போய்ப் பார்த்தோம். "ஓ.ஏ.கே. தேவர் அண்ணன் நாடகத்துக்கு இசை அமைக்க உங்களுக்கு சந்தர்ப்பம் வாங்கிவிட்டேன். ஏற்கனவே வாசித்த சிவாஜி பார்ட்டியை விட்டுட்டு, புதுசா வந்த உங்களை கூப்பிட்டு கொடுத்திருக்கிறோம். நன்றாக இசை அமைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு'' என்றார்.

    நன்றாக செய்வதாய்ச் சொன்னோம்.

    அதன்படி இசை அமைத்தோம். எம்.எஸ்.வி.யிடம் `கோரஸ்' பாடி வந்த கமலா, எங்கள் குழுவில் பாட முன்வந்தார்.

    ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' நாடகம் திருச்சியில் அரங்கேறியது. என் இசை உலக வாழ்வு முதன் முதலாகத் தொடங்கிய அதே திருச்சியில், சென்னை சென்று நான் இசைத்த முதல் நாடகமும் அரங்கேறியது. எங்கள் பாடல்கள் பாராட்டுப் பெற்றன.

    இந்த நாடகத்தில் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்கள். கவுண்டமணியும், செந்திலும் ஒன்றிரண்டு சீன்களில் வந்து போனார்கள். பிற்காலத்தில் மிகவும் பிரபலமாவார்கள் என்று அப்போது யாருக்கும் தெரியாது!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.
    திரைப்பட நடிகர் ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' என்ற நாடகத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இந்த நாடகம் திருச்சியில் அரங்கேறியது
    திரைப்பட நடிகர் ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' என்ற நாடகத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இந்த நாடகம் திருச்சியில் அரங்கேறியது.

    பொன்மலையில் நடந்த தனது கச்சேரியை எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டு ரசித்தார், பாராட்டினார் என்ற தகவல், இளையராஜாவுக்கு உற்சாகத்தை அளித்தது.


    அவர், எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கடிதம் எழுதினார். "நான் விரைவில் சென்னைக்கு வருகிறேன். அப்போது உங்களை சந்திக்கிறேன். நீங்கள் என்னை உங்கள் பூஜை அறைக்கு அழைத்துச்சென்று, ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

    குறிப்பிட்டபடி ஒருநாள் சென்னை சென்று காலை 8-30 மணிக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் வீட்டுக்குச் சென்றார்.

    வீட்டில் இருந்தவர்கள், "புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் வந்துவிடுவார்கள்'' என்றார்கள்.

    எம்.எஸ்.வி. வருகையை எதிர்பார்த்து இளையராஜா காத்துக் கொண்டிருந்தார்.

    சரியாக 9 மணிக்கு விஸ்வநாதன் வெளியே வந்தார். நெற்றியில் விபூதி - குங்குமம் பளிச்சிட, புன்சிரிப்புடன் வந்தார்.

    அவரை பார்த்த இளையராஜா, கைகூப்பி வணங்கினார். விஸ்வநாதனும் பதிலுக்கு வணங்கினார்.

    அதன்பின், என்ன பேசுவது என்று தெரியாமல் தயக்கத்துடன் நின்றார், இளையராஜா. தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, எம்.எஸ்.வி. தன்னை பூஜை அறைக்கு அழைத்துச்சென்று ஆசீர்வதிப்பார் என்று நினைத்தார்.

    ஆனால், எம்.எஸ்.வி. மிகவும் `பிசி'யாக இருந்த காலக்கட்டம் அது. இளையராஜா எழுதிய கடிதத்தை அவர் பார்த்தாரோ என்னவோ தெரியவில்லை. தயாராக நின்ற காரில் ஏறி புறப்பட்டுப் போய்விட்டார்!

    கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இளையராஜா, இவ்வுலக நினைவுக்குத் திரும்பி வந்தார்.

    வீடு சென்றதும் நடந்ததை எல்லாம் பாரதிராஜாவிடமும், பாஸ்கரிடமும் சொன்னார்.

    "கடிதம் எழுதியதை அவரிடம் சொன்னாயா? பொன்மலை கச்சேரி பற்றிச் சொல்லியிருக்கலாமே, அவருக்கு நினைவு வந்து பேசி இருப்பாரே'' என்றெல்லாம் பாரதிராஜாவும், பாஸ்கரும் கூறினார்கள்.

    "சொல்லியிருக்கலாம்தான். ஆனால் சொல்லவில்லை!'' என்றார், இளையராஜா!


    இதன்பின் கம்ïனிஸ்டு தலைவர் பாலதண்டாயுதம், இளையராஜாவின் திறமையைப் பாராட்டி, "எம்.பி. சீனிவாசனுக்கு ஒரு கடிதம் தருகிறேன். அவரைப் பாருங்கள். சினிமா துறையில் நீங்கள் பணியாற்ற அவர் உதவுவார்'' என்று கூறினார்.

    எம்.பி.சீனிவாசன், யதார்த்தமாக எடுக்கப்படும் படங்களுக்கும், சிறிய பட்ஜெட் படங்களுக்கும் இசை அமைப்பதில் புகழ் பெற்று விளங்கினார். அவரை இளையராஜாவும், பாஸ்கரும் போய்ப் பார்த்தார்கள். பாலதண்டாயுதத்தின் கடிதத்தையும் கொடுத்தார்கள்.

    அதைப் படித்துப் பார்த்த எம்.பி.சீனிவாசன், பின்வருமாறு கூறினார்:-

    "உங்கள் எதிர்பார்ப் பையோ, திறமையையோ குறைவாக மதிக்கவில்லை. உங்கள் கனவுகளையும், கற்பனைகளையும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் நன்றாக ஹார்மோனியம் வாசிப்பவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒவ்வொரு இசை அமைப்பாளருக்கும் ஹார்மோனியம் வாசிக்க மூன்று, நான்கு பேர் இருக்கிறார்கள். தபேலா, டோலக், பாங்கோ போன்ற வாத்தியங்களை வாசிப்பவர்களும் நான்கு - ஐந்து பேர் இருக்கிறார்கள். என்னிடம் சண்முகம் என்ற ஹார்மோனிஸ்ட் இருக்கிறார். அவருக்கே வேலை தர இயலாததால் `தில்ருபா' என்ற வாத்தியத்தை வாசிக்கப் பயன்படுத்திக் கொள்கிறேன்.''

    இவ்வாறு கூறி நிறுத்திய எம்.பி.சீனிவாசன், "இவ்வளவு இடைஞ்சல்களுக்கு மத்தியில் நீங்கள் சினிமாவில் சேரத்தான் வேண்டுமா? அல்லது சேரமுடியுமா!''

    இப்படி எம்.பி.சீனிவாசன் சொன்னது, இளையராஜாவுக்கு ஏமாற்றம் அளித்தபோதிலும், சோர்வடையச் செய்யவில்லை.

    இதன்பின் நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "எம்.பி.சீனிவாசன் கூறியதில் நியாயம் இருந்தது. ஆனால், எங்கள் பக்க நியாயத்தை அவர் பக்க நியாயம் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

    சில நாள் கழித்து, சங்கிலி முருகனிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. போய்ப் பார்த்தோம். "ஓ.ஏ.கே. தேவர் அண்ணன் நாடகத்துக்கு இசை அமைக்க உங்களுக்கு சந்தர்ப்பம் வாங்கிவிட்டேன். ஏற்கனவே வாசித்த சிவாஜி பார்ட்டியை விட்டுட்டு, புதுசா வந்த உங்களை கூப்பிட்டு கொடுத்திருக்கிறோம். நன்றாக இசை அமைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு'' என்றார்.

    நன்றாக செய்வதாய்ச் சொன் னோம்.

    அதன்படி இசை அமைத்தோம். எம்.எஸ்.வி.யிடம் `கோரஸ்' பாடி வந்த கமலா, எங்கள் குழுவில் பாட முன்வந்தார்.

    ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' நாடகம் திருச்சியில் அரங்கேறியது. என் இசை உலக வாழ்வு முதன் முதலாகத் தொடங்கிய அதே திருச்சியில், சென்னை சென்று நான் இசைத்த முதல் நாடகமும் அரங்கேறியது. எங்கள் பாடல்கள் பாராட்டுப் பெற்றன.

    இந்த நாடகத்தில் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்கள். கவுண்டமணியும், செந்திலும் ஒன்றிரண்டு சீன்களில் வந்து போனார்கள். பிற்காலத்தில் மிகவும் பிரபலமாவார்கள் என்று அப்போது யாருக்கும் தெரியாது!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    திருச்சியை அடுத்த பொன்மலையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை "மெல்லிசை மன்னர்'' எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டு ரசித்துப் பாராட்டினார்.
    திருச்சியை அடுத்த பொன்மலையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை "மெல்லிசை மன்னர்'' எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டு ரசித்துப் பாராட்டினார்.

    கம்ïனிஸ்டு கட்சிக்காக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து, இளையராஜா இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த காலக்கட்டம் அது.

    அப்போது நடந்த நிகழ்ச்சிகளை இளையராஜா நினைவு கூர்ந்தார்:

    "இளம் வயதில், என் நண்பர்களில் எனக்கு முதன்மையானவர்கள் இருவர். ஒருவர் கரியணம்பட்டி எம்.சுப்பிரமணி. என் வகுப்புத் தோழன். இரண்டாவது பாரதிராஜா.

    பாரதி இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலாது. இன்று வரை அந்த நட்பில் குறைவில்லை.

    படிக்கும் நேரத்தில் மணியுடன் அதிகமாகப் பழகவில்லை என்றாலும், பி.யு.சி.யில் இருந்து என்ஜினீயரிங் படித்து முடிக்கும் வரை இருந்த நட்பு, அதன் பின்னும் - சினிமாவில் வாய்ப்பு கிடைத்த பிறகும் தொடர்ந்தது.

    மதுரையில் தங்க நேரும்போதெல்லாம் மணியுடன்தான் அதிகமாக இருப்பேன். சினிமா, வைகை மணல்வெளி, திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஏரிக்கரை, மீனாட்சி கோவில் என்று நாட்கள் கழியும்.

    விடுமுறை காலங்களில், ஒன்று நான் கரியணம்பட்டியில் மணியுடன் தங்குவேன். அல்லது மணி என் வீட்டில் தங்குவார்.

    மாலை நேரங்களில் புல்லாங்குழலை எடுத்துக்கொண்டு கரியணம்பட்டி ஏரிக்கரை நந்தவனம் அல்லது மேற்கே வீராந்தோப்புக்கு சென்று நான் வாசிக்க - அல்லது பாஸ்கர் இருந்தால் பாஸ்கர் வாசிக்க, இதமாகப் பொழுதுபோகும்.

    போதாதற்கு "கல்கி''யின் வந்தியத்தேவனும், குந்தவையும், வானதியும், சிவகாமியும், பார்த்திபனும் எங்கள் கற்பனைகளைத் தூண்டி, அந்த சரித்திர காலத்திற்கே இழுத்துச் சென்று விடுவார்கள்.

    அவ்வப்போது வீட்டில் இசை பிராக்டிஸ் செய்து கொண்டிருப்போம். நண்பர்கள் கூடிவிடுவார்கள். ஆளுக்கொரு பாடலாகச் சொல்ல, வாசித்துக் கொண்டிருப்போம்.

    இடையில், திடீரென்று தம்பி அமர் எழுதிய பாடலுக்கு, நான் இசை அமைத்த பாடலை வாசிப்பேன்.

    "இது எந்தப் படத்தில் வரும் பாடல்?'' என்று பலர் கேட்பார்கள். `நம் பாடல், சினிமாப் பாடலின் தரத்துக்கு உயர்ந்து விட்டதே' என்று மனதுக்குள் சந்தோஷமாக இருக்கும்.

    "படம் இன்னும் வரவில்லை. எம்.எஸ்.வி. இசை அமைத்த பாடல்'' என்போம்.

    நண்பர்கள் குழுவில் இரண்டொருவர் தவிர எல்லோரும் எம்.எஸ்.வி.யின் ரசிகர்கள். அடிக்கடி நாங்கள் அவர் பாடலையே வாசிப்பதால், அத்தனை ஈர்ப்பு.

    அப்படியே சீட்டாட்டம் தொடங்குவோம். "நாக் அவுட்'' - 25 காசு!

    யார் கடைசியில் ஜெயிக்கிறாரோ, அவர் பண்ணைபுரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள சுப்புசாமி நாயக்கர் கடையில் இட்லி - டிபன் வாங்கித்தர வேண்டும்.தி.மு.க. வெற்றி

    1967 தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

    1957 தேர்தலில் 50 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருந்த கம்ïனிஸ்டு கட்சி, 1962-ல் 11 ஆகக் குறைந்து, 1967-ல் 2 எம்.எல்.ஏக்களை மட்டுமே பெற்றது. பாலதண்டாயுதமும், சி.ஏ.பாலனும் தூக்கு மேடையிலிருந்து திரும்பி, தி.மு.க.வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தும் பலன் இல்லை.

    தி.மு.கழகம் மந்திரிசபை அமைத்தது. அண்ணா முதல்-அமைச்சர் ஆனார்.

    1967 கடைசியிலோ, 1968 ஆரம்பத்திலோ, பொன்மலை ரெயில்வே காலனியில் எங்கள் கச்சேரி இருந்தது. நல்ல கூட்டம். கச்சேரி முடிந்து, பொன்மலை தோழர்களுடன் சாப்பிடப்போனோம்.

    அப்போது, எங்கள் கச்சேரியை எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டிருந்தார் என்று தோழர்கள் சொன்னார்கள். எங்களுக்கு `ஷாக்'

    அடித்தது."எம்.எஸ்.வி. அண்ணன் எங்கள் கச்சேரியை கேட்டாரா!'' என்று நாங்கள் ஆச்சரியத்துடன் கேட்க, நண்பர்கள் `ஆமாம்' என்று மீண்டும் சொன்னார்கள்.

    எம்.எஸ்.வி.யின் மாமா வீடு பொன்மலையில் இருந்தது. சென்னை போகும் வழியில் அங்கு தங்கியிருக்கிறார். அப்போது எங்கள் கச்சேரியைக் கேட்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டோம்.

    இரவு வெகு நேரமாகி விட்டதால், எம்.எஸ்.வி. தூங்கச் சென்றிருக்கலாம் என்று நினைத்தோம். மறுநாள் காலை அவரைச் சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.

    அன்றிரவு திருச்சி உறைïரில், கட்சி ஆபீசில் தங்கினோம். தூக்கம் வரவில்லை. மறுநாள் எம்.எஸ்.வி.யைப் பார்ப்பது பற்றியே சிந்தனை.

    மறுநாள் காலையில் முதல் வேலையாக, எம்.எஸ்.வி. அவர்களைப் பார்த்துவிட்டு வருமாறு தம்பி அமரை அனுப்பினோம். `எப்போது வருவான், எப்போது வருவான்' என்று காத்திருந்தோம். அமர் திரும்பி வந்தான். `என்ன ஆச்சு, என்ன ஆச்சு?' என்று கேட்டோம்.

    `எம்.எஸ்.வி. இரவே சென்னைக்கு புறப்பட்டுவிட்டார்' என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனோம். என்றாலும், அமர் சொன்ன விவரங்கள் எங்களுக்கு ஆறுதல் அளித்தன.

    "எம்.எஸ்.வி.யின் மாமாவுடன் அரை மணி நேரம் பேசிவிட்டு வருகிறேன். நாம் கச்சேரி செய்தபோது, எம்.எஸ்.வி. அண்ணன் வீட்டுக்கு வெளியே ஈசிசேரைப் போட்டு உட்கார்ந்து, கச்சேரியை ரசித்துக் கேட்டிருக்கிறார். `இந்தப்பசங்க, நல்லா வாசிக்கிறாங்க' என்று பாராட்டியிருக்கிறார்...''

    இவ்வாறு அமர் சொன்னதும் ஆனந்தத்தில் மிதந்தோம். அதே சமயம், `ஆகா! எப்பேர்ப்பட்ட மேதை நம் பாட்டைக் கேட்டிருக்கிறார்! அவரை சந்திக்க முடியாமல் மிஸ் பண்ணிவிட்டோமே' என்ற வருத்தமும் மேலிட்டது.''

    இவ்வாறு கூறினார், இளையராஜா.

    சிறு வயதில், `மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களைக்கேட்டு பிரமித்துப்போன இளையராஜா, இவரைப்போல் உயர முடியுமா என்று எண்ணினார்.
    சிறு வயதில், `மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களைக்கேட்டு பிரமித்துப்போன இளையராஜா, இவரைப்போல் உயர முடியுமா என்று எண்ணினார்.

    தனது இளமைப் பருவம் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "1963-ம் ஆண்டில், பம்பாயிலும் (தற்போதைய மும்பை) ஆமதாபாத்திலும் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்து, இசை நிகழ்ச்சிகள்

    நடத்தினோம்.அப்போது, பம்பாய் நகரில் எங்கள் காலடி படாத இடமே கிடையாது. சிட்டி பஸ், டிராம், மாடி பஸ், அதிவேக ரெயில் - இவற்றில் எல்லாம் பயணம் செய்திருக்கிறோம். இப்போதுள்ள நெரிசல் அப்போது கிடையாது.

    மலபார் ஹில்ஸ் போகும் வழியில், லதா மங்கேஷ்கர் இருந்த வீட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவோம்.

    மெரின் டிரைவ், மெயின் டவுன் ஏரியா, தாதர், மாதுங்கா என்று எந்த இடம் போனாலும், ஒரே ஒரு பாடல் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. அது, "தாஜ்மகால்'' படத்தில், மதன் மோகன் இசை அமைத்த "ஜொவாதாக்கியாவோ நிபானா படேகா'' என்ற பாடல்தான். மகமத் ரபியும், லதா மங்கேஷ்கரும் பாடிய இந்தப்பாடல் எங்களை கிறங்க வைத்தது.

    தாராவியில் ஒரு தமிழ் நாடகத்திற்கும் இசை அமைத்தோம்.

    தாராவிக்குள் நுழையும்போதே கருவாடு வாடையும், மீன் நாற்றமும், வாந்தி வருகிற அளவுக்கு இருந்தன.

    இந்தப் பகுதியிலா தமிழர்கள் வாழ்கிறார்கள்! நìனைக்கும்போதே நெஞ்சம் பதைத்தது.

    "விதியே, விதியே!

    தமிழ்ச் சாதியை

    என் செய்ய நினைத்தாய்

    எனக் குரையாயோ?''

    - என்ற பாரதியின் பாடல் இதயத்தில் எதிரொலித்தது.

    தாராவியில் ஒருநாள் இருந்தோம். அவர்களோடுதான் உண்டோம்; உறங்கினோம்.

    பிறகு, ஆமதாபாத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒரு வாரம் தங்கினோம். மீண்டும் பம்பாய் வந்து, சென்னை மதுரை வழியாக பண்ணைபுரம் வந்தோம்.

    1964-ல் பிரதமர் நேரு மறைந்தபோது, "சீரிய நெற்றி எங்கே?'' என்று தொடங்கும் இரங்கல் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுத, அதை சீரணி அரங்கில் சீர்காழி கோவிந்தராஜன் பாடினார்.

    இந்தச் செய்தியுடன், அந்த முழுப்பாடலையும் "தினத்தந்தி'' வெளியிட்டிருந்தது.

    இந்த சமயத்தில் நாங்கள் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காகச் சென்றிருந்தோம். நேரு மறைவு காரணமாக, திருத்துறைப்பூண்டி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

    அடுத்த நாள் வேதாரண்யத்தில் நிகழ்ச்சி. அதை நடத்துவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, கண்ணதாசன் எழுதியிருந்த பாடலை இசை அமைத்துப் பார்ப்போம் என்று எண்ணினேன். சீர்காழி கோவிந்தராஜன் அதை எப்படி பாடியிருப்பார் என்று எனக்குத் தெரியாது. நான் என் பாணியில் இசை அமைத்துப் பாடினேன்.

    இதைக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணன், பிரதமர் நேருவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேதாரண்யம் நிகழ்ச்சியை நடத்தி விடலாம் என்று கூறினார்கள்.

    அதுமட்டுமல்ல, நிகழ்ச்சியில் என்னை பாடவும் வைத்துவிட்டார்கள்.

    கச்சேரிகளில், பாடல் முடிந்தவுடன் அடுத்த பாடலுக்கு இடையே ஒரு சினிமா பாடல்களை வாசிப்பது வழக்கம். அதற்கெல்லாம் சில சமயம் கைதட்டல் கிடைக்கும். ஆரம்ப காலத்தில் இதற்காகப் பெருமைப்பட்டுக்கொண்ட நான், பிறகு, "இந்தக் கைதட்டல்கள் எல்லாம், பாட்டை யார் கம்போஸ் செய்தார்களோ அவர்களுக்கு அல்லவா போய்ச்சேர வேண்டும்'' என்று எண்ணத் தொடங்கினேன்.

    நாங்கள் இப்படிப் பாடுவதில் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாடல்கள்தான் அதிகமாக இருக்கும். என்னுடைய பாடல்களுக்கு மக்களிடம் என்றைக்கு அதிகம் கைதட்டல் கிடைக்கிறதோ அன்றைக்குத்தான் நான் பெருமையோ, கர்வமோ கொள்ள முடியும் என்ற திட்டவட்டமான முடிவுக்கு என் மனம் வந்துவிட்டது. எனவே, சினிமா பாடல்களுக்கு கைதட்டல் ஒலி எழும்போது, அதோடு சொந்தம் கொண்டாடாமல்,

    தனித்திருந்தேன்.அண்ணன் எம்.எஸ்.வி. பாடல்களுக்கு கைதட்டல்கள் விழும்போதெல்லாம் அவருடைய பாடல்களை மனம் ஆராயத் தொடங்கியது. அவருடைய ஆற்றல் என்னை வியக்க வைத்தது.

    அடேயப்பா! எவ்வளவு வித்தியாசமான - ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத ட்ïன்கள்? அதோடு இணைந்து வரும் அருமையான மிïசிக்!

    நாளுக்கு நாள் அண்ணன் எம்.எஸ்.வி. மீது மதிப்பும், மரியாதையும் கூடின.

    சிறு வயதிலேயே எங்கள் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்ட சி.ஆர்.சுப்பராமனிடம் எம்.எஸ்.வி. உதவியாளராக இருந்தார் என்றும், உடுமலை நாராயணகவி, பாபநாசம் சிவன் முதலிய மேதைகளிடம் பாடல் எழுதி வாங்கும் பணியில் இருந்தார் என்றும், எம்.எஸ்.வி. அவர்கள் பத்திரிகைகளுக்கு அளித்திருந்த பேட்டிகளின் வாயிலாக அறிந்திருந்தேன்.

    `இதுபோன்ற சந்தர்ப்பங்கள் எதிர்காலத்தில் நமக்கு அமையுமா? இவர்களை நேரில் காணும் வாய்ப்பாவது கிட்டுமா?'' என்று என் உள்ளம் அலைமோதும்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன், சினிமாத்துறையில் அடியெடுத்து வைக்க ஒரு படக்கம்பெனியைத் தொடங்கினார்
    இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன், சினிமாத்துறையில் அடியெடுத்து வைக்க ஒரு படக்கம்பெனியைத் தொடங்கினார்

    ஆனால், அவருடைய முயற்சி வெற்றி பெறவில்லை.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "வில்லுப்பாட்டுக்கு ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான். அந்தக் கலையின் சிறு வடிவத்திற்குள் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் ஒளிவிடும். இது அவருடைய தனிச்சிறப்பு.

    அண்ணன் பாவலரும் அப்படித்தான். கலைவாணருக்கு சமமாக அவர் கருத்துக்கள் சிறப்பானவையாக இருக்கும். அவர் சினிமாவுக்குள் வராமல் போனது, சினிமாவின் துரதிர்ஷ்டமே தவிர, அவருடைய தகுதி இன்மை அன்று.

    சினிமா உலகில் நுழைய அவர் முயற்சியும் செய்தார். நண்பர்களுடன் சேலத்தில் ஒரு ரூம் எடுத்து, "ஜே.ஏ.கே.எஸ். புரொடக்ஷன்ஸ்'' என்ற பெயரில் சினிமா கம்பெனியும் தொடங்கி விட்டார்! சென்னையில் படக்கம்பெனி தொடங்கினால் நிறைய செலவாகும் என்று கருதி, சேலத்தில் படக்கம்பெனியை தொடங்கினார்.

    தபால் கார்டுகளில் விலாசம் எழுதும் பகுதிக்குப் பக்கத்தில் காலி இடம் இருக்கிறது அல்லவா? அங்கு "ஜே.ஏ.கே.எஸ். புரொடக்ஷன்ஸ்'' என்று அச்சடித்திருந்தார் - "ஏவி.எம். புரொடக்ஷன்ஸ்'' என்பது மாதிரி! அந்தக் கார்டில்தான் வீட்டுக்குக் கடிதம் எழுதுவார்.

    `அண்ணன் சினிமாவில் பெரிய ஆளாக வரப்போகிறார்' என்று நான் நினைத்தேன். அம்மா, பாஸ்கர், அமர் அனைவரும் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள்.

    ஆனால், அப்படி நடக்கவில்லை. அண்ணன் மறுபடியும் ஊருக்குத் திரும்பிவிட்டார்.

    இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டார்.

    பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் ஏற்பட்ட நட்பு, இரண்டு குடும்பத்தினர் இடையேயும் பாசத்தை வளர்த்தது.

    இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "வேலை பார்ப்பதற்காக, பண்ணைபுரத்துக்கு பாரதி வந்தது 1961-ம் வருடம். அவருக்கு சனி, ஞாயிறு விடுமுறை. அதனால், அந்த நாட்களில் சொந்த ஊரான அல்லிநகரத்துக்குப் போய் விடுவார். ஒரு முறை, என்னையும், பாஸ்கரையும் கூட அழைத்துப்போனார்.

    பாரதியின் அம்மா, சகோதரிகள் பாலாமணி, பாரதி, சகோதரர் செல்லக்கண்ணு, ஜெயராஜ், இன்னும் மூத்த சகோதரர், அப்பா பெரிய மாயத்தேவர் எல்லோரும் நன்றாகப் பழக்கமாகிவிட்டார்கள்.

    முதல் சந்திப்பிலேயே, பாரதியின் அம்மா, "வாங்கப்பா! நீங்கதானா அது?'' என்று மிகவும் அன்புடன் பேசினார்கள்.

    என் அம்மாவும் இப்படித்தான். யாரையாவது அழைத்துப்போய், அம்மாவிடம் அறிமுகப்படுத்தினால், "வாப்பா! சவுக்கியமா? ஏம்பா இவ்வளவு நாள் இந்தப் பக்கம் வரலே?'' என்று கேட்பார்கள்!

    இரண்டு தாய்களும், எங்களுக்கு ஒரே தாய்தான்.

    ஒருமுறை தீபாவளிக்கு நானும், பாரதியும் அல்லிநகரம் போய்விட்டோம். இரவெல்லாம் பட்டாசு வெடித்து, மத்தாப்பு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினோம்.

    பிறகு தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்தால், வெந்நீரும், சோப்பும், சீயக்காயும், துண்டும் தயாராக இருந்தன.

    "வாங்கப்பா! சீக்கிரம் எண்ணை தெய்த்து குளிச்சிட்டு ரெடியாகுங்க'' என்றார், பாரதியின் அம்மா.

    "எதுக்கு?'' என்று நாங்கள் கேட்க, "சாப்பிட வேணாமா? பின்னே என்ன தீபாவளி?'' என்று கூறிவிட்டு, பாரதிக்கு எண்ணை தேய்த்து விட்டார்கள்.

    நானும் எண்ணை எடுத்து தேய்த்துக்கொண்டேன். "நல்லா இருக்கு நீ எண்ணை தேய்க்கிற லட்சணம்!'' என்று கூறிவிட்டு, எண்ணை கிண்ணத்தை வாங்கிக் கொண்டார்கள். என் முதுகில், எண்ணை படாமலிருந்த இடங்களில் எல்லாம் எண்ணை தேய்த்துவிட்டார்கள்.

    பிறகு, பாரதியின் தலையில் நன்றாக சீயக்காய் போட்டுத் தேய்த்ததுடன், சோப்பு போட்டு தேய்த்து, தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினார்கள்.

    நான் குளிப்பதற்கு சொம்பில் தண்ணீர் எடுத்தேன். "போதும். இங்கே கொண்டா!'' என்று வலுக்கட்டாயமாக சொம்பை வாங்கி, எனக்கும் சீயக்காய் தேய்த்து, குளிப்பாட்டினார்கள்!

    வீட்டுக்கு வந்த மகனின் நண்பனுக்கு, எந்த ஊரில் எந்தத்தாய் இப்படி செய்திருப்பார்கள்!

    பிறகு சாப்பாடு. சாதாரணமாக மூன்று நாலு இட்லி, ஒரு தோசை, காபியுடன் கதை முடிந்து விடும். ஆனால் எங்களுக்கு 6 இட்லி, 6 பனியாரம், 6 தோசை இவற்றுடன், சட்னி, சாம்பார், மிளகாய் சட்னி ஆறாக ஓடியது!

    ஒரே ஒரு தீபாவளிக்கு இப்படி நடந்தது என்றால் பரவாயில்லை. எத்தனை தீபாவளிகளுக்கு நான் அல்லிநகரத்துக்கு போனேனோ, அப்போதெல்லாம் இப்படி நடந்தது.

    பெரிய மாயத்தேவர், காந்தீயத்தில் பற்று மிக்கவர் என்பதை அவருடைய கதர் வேட்டியும், சட்டையும் எடுத்துக்காட்டின. சகோதரி பாலா, பள்ளிக்கூட ஆசிரியையாக இருந்தார். பாரதி - இந்தத் தங்கையின் பெயரைத்தான் தன் பெயராக மாற்றிக்கொண்டார், பாரதிராஜா. (இயற்பெயர் சின்னச்சாமி)

    பின்னால் நான் இசையமைப்பாளனாக ஆன பிறகு, பண்ணைப்புரம் போகும்போதோ, அம்மாவின் சமாதிக்கு போகும்போதோ, அல்லிநகரத்திலும், தேனியிலும் காரை நிறுத்தி, அம்மாவைப் பார்க்காமல் போனதே இல்லை. வெறும் கையுடன் போகமாட்டேன். ஒவ்வொரு முறையும், 4 புடவையும், பணமும் கொடுத்து அந்தத் தாயை வணங்குவேன்.

    என்னைப் பெறாமல் பெற்ற தாய் அவர்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.
    ×