என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா

X
திருமணத்துக்கு இளையராஜா சம்மதம்
By
மாலை மலர்9 Aug 2018 4:37 PM GMT (Updated: 9 Aug 2018 4:37 PM GMT)

பாஸ்கர் திருமணத்தைத் தொடர்ந்து, இளையராஜாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தாயார் வற்புறுத்தினார்.
பாஸ்கர் திருமணத்தைத் தொடர்ந்து, இளையராஜாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தாயார் வற்புறுத்தினார். இடைவிடாத முயற்சிக்குப்பின் திருமணத்துக்கு இளையராஜா சம்மதித்தார். மணமகள் ஜீவா, இளையராஜாவின் முறைப்பெண். (அக்காள் மகள்)
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"எனக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் அம்மா மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். அமர் - கலா காதல் தீவிரமாகி வந்ததும், இதற்கு ஒரு காரணம்.
என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க, அம்மா ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். "எனக்கும் வயசாச்சு. இப்படியே தினமும் உங்களுக்கு சமைச்சுப் போட எத்தனை நாள் முடியுமோ! அதனால் காலா காலத்திலே...'' என்று அம்மா கூறிக்கொண்டிருக்கும்போதே நான் எழுந்து விடுவேன்.
என் அக்காவுக்கு முதல் குழந்தையாக பெண் குழந்தை (ஜீவா) பிறந்தபோது, அதன் ஜாதகத்தை என் தந்தையார் பார்த்திருக்கிறார்கள். "இந்தக் குழந்தையைத்தான் ராஜையாவுக்கு கட்டி வைக்கவேண்டும்'' என்று உத்தரவு போட்டுவிட்டு போய்விட்டார்கள். அதை அம்மா என்னிடம் சொல்லி பயமுறுத்துவார்கள்.
ஜீவா பிறந்து, சிறு குழந்தையாக இருந்தபோதே, அதைப் பார்த்துக் கொள்ளும்படி அக்கா என்னிடம்தான் சொல்வார்கள். நான்தான் பார்த்துக் கொண்டேன். நான்தான் வளர்த்தேன். ஒரு தாய், சிறு குழந்தைக்கு செய்யும் அத்தனையும் நான்தான் ஜீவாவுக்கு செய்தேன்.
அம்மாவிடம் மேற்கொண்டு மறுத்துப் பேசமுடியாத கட்டம் வந்தது. திருமணம் செய்து கொள்ள நான் சில நிபந்தனைகளை அம்மாவிடம்
சொன்னேன்."அதைப் பார்க்கவேண்டும், இதைப் பார்க்க வேண்டும், சினிமாவுக்குப் போகவேண்டும், அங்கே போகவேண்டும், இங்கே போகவேண்டும் என்றெல்லாம் எல்லா பெண்களும் கணவன்மாரிடம் வற்புறுத்துவார்கள். அதுமாதிரி என்னிடம் கூறக்கூடாது. எனக்கு முதலும், இரண்டாவதும், மூன்றாவதும் இசைதான். அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம்'' என்று கூறினேன்.
இது என் அக்காவுக்கும் தெரிந்தது. அவர்களும் மகளை பயமுறுத்தியிருப்பார்கள் போலிருக்கிறது!
எல்லாம் ஈசன் செயலே. கல்யாணம் நிச்சயம் ஆயிற்று, என்னைக் கேட்காமலேயே! அண்ணன் பாவலரும், அத்தானும், அம்மாவும் கலந்து பேசி, 1972 மே 22-ந்தேதி எனக்கும், ஜீவாவுக்கும் திருமணம் என்று நிச்சயித்து விட்டார்கள்.
திருமண அழைப்பிதழ் அச்சடிக்க வேண்டும் என்று, பாஸ்கர் கட்டாயப்படுத்தினார்.
அதன்படி அழைப்பிதழும் அடித்துவிட்டோம். ஆனால் இன்று நினைத்தாலும், நெஞ்சை மிகவும் உறுத்துகிற விஷயம் - அழைப்பிதழில் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் பெயரை போடாமல் விட்டு விட்டோம்.
"விட்டுவிட்டோம்'' என்ன, "விட்டு விட்டேன்.''
அண்ணன் பெயரைப் போட்டால், கட்சிக்காரர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பவேண்டும். கூட்டம் வந்தால் செலவு தாங்காது என்ற முன் எச்சரிக்கைதான் காரணம் என்று சமாதானம் சொன்னால் அதை நம்பி விடுவீர்களா என்ன!
அண்ணனும் இதுபற்றி என்னிடம் கேட்கவில்லை. அதுதான் மிகவும் வருத்தம்.
திருமணத்துக்கு புதுத்துணிகள் எடுக்க வேண்டியிருந்தது.
பாலு ஒரு டெய்லரைக் காட்டி, "ஒரு சூட் தைத்துக்கொள்'' என்றான். பணம் அவனா கொடுப்பான்? நான்தானே கொடுக்கவேண்டும்!
கல்யாணம் நிச்சயமான நாளில் இருந்து எத்தனை கச்சேரிகள் இருந்ததோ, அத்தனை கச்சேரிகளில் என் சம்பளத்தை மொத்தமாக பாலுவையே வைத்திருக்கச்சொல்லி கல்யாணத்துக்கு முன் என்னிடம் கொடுக்கும்படியும், இல்லையென்றால் செலவாகிவிடும் என்றும் கூறியிருந்தேன்.
ஜி.கே.வி.யிடம் `ஆர்க்கெஸ்ட்ரா' இன்சார்ஜ் ஆக இருந்த சீனிவாசன்தான் பாலுவிடமும் இன்சார்ஜ் ஆக இருந்தான். கடைசியில் பணம் பட்டுவாடா செய்தபோது, பெரிய தொகையை நான் எதிர்பார்க்க, ஏதோ ஒரு தொகையை "இவ்வளவுதான்'' என்று சொல்லி என் கையில்
வைத்துவிட்டான்!சீனு விளையாடி விட்டானோ என்று எனக்கு சந்தேகம். பாலுவிடம் கேட்டதில், நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்தபடிதான் இருக்கிறது என்று கூறிவிட்டான்.
சரி; இப்போது என்ன செய்ய முடியும்!
கல்யாணத்திற்கு பட்டுச்சட்டை தைத்துக்கொண்டேன். கல்யாண வேட்டியின் விலை என்ன தெரியுமா? 37 ரூபாய்! இன்றும் அந்த வேட்டி (என் மனைவியால் காப்பாற்றப்பட்டு) என்னிடம் இருக்கிறது!
கல்யாணத்துக்கு ஒவ்வொரு காசையும் இழுத்துப்பிடித்து, எண்ணிப் பார்த்து செலவு செய்தேன்.
என் திருமணத்துக்கு முக்கியமாக இரண்டு பேர் வரவேண்டும் என்று விரும்பினேன் - எதிர்பார்த்தேன்.
அந்த இரண்டு பேர் பாரதிராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும்.
தனக்குப் படப்பிடிப்பு இருக்கிறது என்றும், திருமணத்திற்கு வர இயலாது என்றும் பாரதி சொல்லிவிட்டார்.
எஸ்.பி.பி.யிடம், "நீ கட்டாயம் வரவேண்டும்'' என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல், "நீ வராவிட்டால், நம் நட்பு பொய் என்றாகிவிடும். அவசியம் வா. உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்'' என்றும் சொல்லிவிட்டேன்.

Next Story
×