என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    அமலாபால் தற்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    இயக்குனர் விஜய்யுடனான மண முறிவுக்கு பின்னர் அமலாபால் பல படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். அதன்படி, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் நடித்து வரும் அமலாபால், சௌந்தர்யா ரஜினி இயக்கும் ‘விஐபி-2’ மற்றும் சுசிகணேசன் இயக்கத்தில் ‘திருட்டு பயலே-2’ ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

    இந்நிலையில், விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் நாயகியாக அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்ணு விஷால் அடுத்ததாக ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர் ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக அமலாபால் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.

    சைக்கோ திரில்லர் படமாக உருவாக இருக்கும் இதில் விஷ்ணு விஷால் போலீசாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் ஒழிக்க தீர்மானித்த மத்திய அரசின் முடிவுக்கு கிளம்பிவரும் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோரை வைத்து எதிர்பிரசாரத்தில் ஈடுபட மத்தியில் ஆளும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி இரவு வெளியிட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாடு முழுவதும் கடுமையான பண தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளது.

    முதலில் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வந்தனர். படிப்படியாக அது குறைக்கப்பட்டு தற்போது முற்றிலும் பணமாற்றம் நிறுத்தப்பட்டு விட்டது. இனி தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

    அதே சமயம் பணத்தை எடுக்கவும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. காசோலை மூலமாக வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். வங்கிகளில் இதுவரை ரூ.2000 நோட்டுகள் மட்டுமே வினியோகிக்கப்பட்டு வந்தன.

    இதனால் மக்கள் அன்றாட செலவுகளுக்கு அதை மாற்ற முடியாமல் தவித்தனர். வங்கிகளிலும் பணத் தட்டுப்பாடு நிலவுகிறது. போதுமான பணம் கிடைப்பதில்லை.

    இந்த நிலையில் நேற்று முதல் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவும் போதுமான அளவு கிடைப்பதில்லை.

    பணப்பிரச்சினையால் பொதுமக்கள் சிரமப்படுவதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கிளப்பியதால் அமளி ஏற்பட்டு கடந்த 7 நாட்களாக செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.

    பிரதமர் மோடி நேற்று தான் முதல்முறையாக டெல்லி மேல்-சபை வந்து எதிர்க்கட்சிகளின் விவாதத்தை கவனித்தார். ஆனால் பிற்பகலில் சபைக்கு வராததால் எதிர்க்கட்சிகள் சபையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டு முடக்கி விட்டனர்.

    ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாட்டுக்கு பயனுள்ளது என்றாலும் அதனால் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்கள் பாதிக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இதனால் பா.ஜனதாவுக்கு நெருக்கடியான நிலை உருவாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா உள்பட 5 மாநில தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பா.ஜனதா கருதுகிறது.

    எனவே எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்க மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக நடிகர்களை களத்தில் இறக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

    அந்தந்த மாநிலங்களில் பிரபலமான நடிகர்களை வைத்து ஆதரவு பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

    தென்னிந்தியாவில் பிரபலமான நடிகர்களான ரஜினிகாந்த், மோகன்லால், மகேஷ்பாபு, நாகார்ஜூனா ஆகியோர் மூலமும், வட இந்தியாவில் நடிகர் அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோர் மூலம் மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ளார். செல்லாத நோட்டு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட அன்றே அதற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவும் வரவேற்பும் தெரிவித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.

    நடிகர்கள் மோகன்லால், மகேஷ்பாபு, நாகார்ஜூனா, அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்றோரும் இது நல்ல திட்டம் என்று வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இவர்களின் ஆதரவு கருத்தை ஆடியோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து திரையரங்குகளில் காட்ட பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான குரல் பதிவு வீடியோ பதிவுக்காக நடிகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    நடிகர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் நன்கு எடுபடும் என்பதால் விரைவில் நடிகர்களின் ஆதரவு பிரசாரம் திரையங்குகளில் ஒளிபரப்பாக உள்ளது. அவர்கள் எப்படி பேச வேண்டும் என்பது தொடர்பான ‘ஸ்கிரிப்ட்’களும் (கருத்துக்கள்) தயாராகி வருகிறது.

    திரையரங்குகள் தவிர வாட்ஸ்-அப் போன்ற சமூக வளைதளங்களிலும் நடிகர்களின் பிரசாரத்தை ஒளிபரப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.

    இதே போல் கறுப்பு பணம் ஒழிப்பு தொடர்பாக பிரதமர் மோடியின் பேச்சுக்களை ஆடியோ மற்றும் வீடியோக்களாக தயாரித்து திரையரங்குகளில் செய்திப்படமாக (நியூஸ் ரீல்) ஒளிபரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி வெங்கையா நாயுடு தனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விரைவில் நாடு முழுவதும் திரையரங்குகளில் நடிகர்களின் பிரசாரமும், மோடியின் பேச்சும் ஒளிபரப்பாக உள்ளது.
    அபி சரவணன், அதிதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பட்டதாரி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    பட்டதாரியான அபி சரவணன் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இவருக்கு பெண்களை கண்டாலே அலர்ஜி. இதனால் பெண்களுடன் பழகுவதை வெறுத்து வருகிறார். ஆனால், இவர்கள் நண்பர்களோ பல பெண்களிடம் பேசி வருகிறார்கள்.

    நாயகனின் இந்த குணமே அவர்மீது நாயகி அதிதிக்கு காதலை வரவழைக்கிறது. அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் அபி சரவணனோ அதிதியின் காதலை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில், தனது அப்பாவின் அறிவுரையை ஏற்று ஓட்டல் ஒன்றை தொடங்குகிறார் நாயகன். அபி சரவணன் தனது காதலை மறுத்தாலும், அவரை விடாமல் பின்தொடர்ந்து வருகிறார் அதிதி.

    அபி சரவணன் பெண்களை வெறுக்க காரணம் என்ன? அதிதி, அபி சரவணனின் மனதை மாற்றி காதலிக்க வைத்தாரா? ஓட்டல் தொடங்கிய அபி சரவணன் அதை வெற்றிகரமான நடத்தினாரா? என்பதுதான் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அபி சரவணன், முந்தைய படங்களைவிட இதில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் செயற்கையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகிகளாக அதிதி மற்றும் ராஷிகா நடித்திருக்கிறார்கள். இதில் ராஷிகாவிற்கு மட்டுமே அதிக அளவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். அதிதி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

    அபி சரவணன் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடம் சிறந்த நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருந்தாலும், அவரவர் தங்களுடைய பங்கிற்கு ஓரளவு நடித்திருக்கிறார்கள். நண்பர்களில் ஒருவரான அம்பானி சங்கர் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மகாநதி சங்கர், அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    வழக்கமான கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சங்கர் பாண்டி. திரைக்கதை வலுவில்லாமல் இருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. காமெடிகள் பெரியதாக எடுபடவில்லை. சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் ரசித்திருக்கலாம். அடுத்தடுத்து என்ன காட்சிகள் வரும் என்று யூகிக்க முடியும் அளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார்.

    படத்திற்கு ஒரே பலம் எஸ்.எஸ்.குமரனின் இசை. இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். சூரியனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பட்டதாரி’ மதிப்பெண் குறைவு.

    திரைப்பட தொழிலாளர்கள் சென்னையில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
    தென்னிந்திய சினிமா ஒளிப்பதிவாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அதன் தற்போதைய தலைவர் பி.சி.ஸ்ரீராம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன்பு புகார் மனு கொடுத்தார். சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் என்.கே.விஸ்வநாதன், ஜி.சிவா, செல்வராஜ் ஆகியோர் மலேசியாவில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி தொடர்பாக முறையாக கணக்கு காட்டவில்லை என்றும், ரூ.77.50 லட்சத்துக்கு முறைகேடு நடந்துள்ளது என்றும் புகாரில் கூறி இருந்தார்.

    இதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் ஜி.சிவா தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது குற்றம் சாட்டியதை கண்டித்து திரைப்பட தொழிலாளர்கள் நேற்று சென்னையில் நடந்த படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் வேலை நிறுத்தம் செய்தனர்.

    இதனால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. ஸ்டூடியோக்களில் நடந்த படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. பாடல் பதிவு, எடிட்டிங், டப்பிங், உள்பட சினிமா சம்பந்தப்பட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வெளியூர்களில் நடந்த படப்பிடிப்புகள் மட்டும் வழக்கம்போல் நடந்தன.

    இதுகுறித்து திரைப்பட தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் கூறும்போது, “எங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜி.சிவா மீது ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதை கண்டித்து சென்னையில் மட்டும் திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 20 படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

    ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்புக்கு வெளியூர்களில் இருந்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் வந்து இருந்ததால் அதன் படப்பிடிப்பு பாதிக்க வேண்டாம் என்ற நோக்கத்தில் மதியத்துக்கு மேல் படப்பிடிப்பை நடத்த ஒத்துழைப்பு அளித்தோம்” என்றார்.
    1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பை ஆதரித்த நடிகர் மோகன்லாலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
    பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை ஒழிக்க 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை மலையாள நடிகர் மோகன்லால் வரவேற்றார். தேச நலனுக்காக எடுக்கப்பட்ட நல்ல முடிவு என்றும் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் மக்கள் கியூவில் நிற்கிறார்கள் என்று விமர்சிக்கப்படுவதை அவர் கண்டித்தார். மதுபான கடைகள், கோவில்கள் போன்றவற்றில் கியூவில்தானே நிற்கிறார்கள் என்று அவர் கூறினார்.

    மோகன்லால் கருத்துக்கு கேரள அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கேரள கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவரான பன்யன் ரவீந்திரன் திருவனந்தபுரத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    “1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதை மோகன்லால் ஆதரித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. மோகன்லால் நடித்த அனைத்து படங்களையும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் வெற்றி பெற வைக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை உங்கள் படங்களை பார்ப்பதற்கு செலவிடுகிறார்கள். அந்த மக்கள் மோடியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை அவமதிப்பதுபோல் பேச வேண்டாம்.”

    இவ்வாறு அவர் கூறினார்.

    இடுக்கி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள மந்திரி மணி பேசும்போது, “மோகன்லாலுக்கு நரேந்திர மோடி மீது திடீர் காதல் பிறந்து இருக்கிறது. இதற்கு காரணம் அவரிடம் இருக்கும் கருப்பு பணம்தான். கருப்பு பணத்தை பாதுகாக்கவே மோடியை அவர் ஆதரிக்கிறார்” என்று கூறினார்.

    கேரள காங்கிரஸ் துணைத்தலைவர் சதீசன் கூறும்போது, “மோகன்லால் சாதாரண அடித்தட்டு மக்களின் பாதிப்பை உணராமல் பேசுகிறார். மோடி நடவடிக்கையால் நடுத்தர மக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்” என்றார்.
    திருமணமான கதாநாயகிகளால்தான் திறமையாக நடிக்க முடியும் என்று ஜெனிலியா கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் 10 வருடங்களுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜெனிலியா. இவருக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் 2012-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நிறைய வாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை.

    இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெனிலியா தற்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். இந்தியில் ‘போர்ஸ்-2’ என்ற படத்தில் கவுரவ வேடத்தில் தோன்றினார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார். குழந்தை பெற்ற பிறகு முன்பு போல் உங்களுக்கு சினிமாவில் வரவேற்பு இருக்குமா? என்று ஜெனிலியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    “திருமணமான நடிகை, குழந்தை பெற்ற நடிகை என்றெல்லாம் ஒதுக்க கூடாது. அவர்களாலும் மற்றவர்களைப்போல் சிறப்பாக நடிக்க முடியும். என்னப்பொறுத்தவரை வயதான பிறகுதான் நடிகர்களுக்கு திறமை வருகிறது. இளமையான காலத்தில் நடித்ததை விட நன்றாக நடிக்கிறார்கள். நான் திருமணத்துக்கு முன்பு நடித்ததை விட இப்போது சிறப்பாக நடிப்பதாக உணர்கிறேன்.

    காரணம் திருமணத்துக்கு பிறகு நிறைய அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது. திருமணம், குழந்தைகள் என்பது எல்லோரது வாழ்க்கையிலும் அவசியமானது. அது வாழ்க்கையின் ஒரு அங்கம். அந்தந்த காலத்தில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் குழந்தைகள் பெற்றுவிட்டதால் சினிமாவில் பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கவில்லை. திறமையாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை முன்பை விட அதிகமாகி இருக்கிறது.

    திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு நிறைய நடிகைகள் சினிமாவில் சாதித்து இருக்கிறார்கள். ஐஸ்வர்யாராய் குழந்தை பெற்ற பிறகும் நிறைய படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். கொங்கனா சென்னும் திருமணத்துக்கு பிறகு சாதித்தார்.”

    இவ்வாறு ஜெனிலியா கூறினார்.
    இளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க "ஏவி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.
    இளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க "ஏவி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.

    "அன்னக்கிளி'' படத்திற்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளிவந்த சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியைப் பெற+வில்லை. என்றாலும் இசையமைப்புப் பணியில் தீவிரமாகவே இருந்தார் இளையராஜா.

    இந்த நேரத்தில் அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சம்பவம் நடந்தது. அது ஏவி.எம். பட அதிபர் மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து வந்த அழைப்பு.

    அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "இசையமைத்த பாடல்கள் பேசப்பட்டாலும், அந்தப் படங்கள் வெற்றிகரமாக ஓடினால்தானே படைப்பாளிக்கான திருப்தி கிடைக்கும். "அன்னக்கிளி''க்கு அடுத்து பெரிய வெற்றியை எதிர்பார்த்த நேரத்தில்தான் ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஏவி.எம். ஸ்டூடியோவில் அவரை சந்திக்கப் போனேன்.

    என்னைப் பார்த்ததும் "நீங்கள்தான் இளையராஜாவா?'' என்று கேட்டவர், நேரடியாக விஷயத்துக்கு வந்தார். "நீங்கள் ஏவி.எம். சம்பந்தப்படும் மூன்று படங்களுக்கு இசையமைக்க வேண்டும்'' என்றார்.

    ஏவி.எம். அவர்களே கேட்கிறார். என்ன சொல்வது என்று யோசனையில் இருந்தபோது, அவரே "என்ன சம்பளம் வாங்குகிறீர்கள்?'' என்று கேட்டார்.

    இதற்கும் என் பதில் வருவதற்குள் அவரே தொடர்ந்தார். "நாங்கள் எடுக்கும் முதல் படத்துக்கு இவ்வளவு தருகிறோம்'' என்று ஒரு தொகையைச் சொன்னார். இரண்டாவது படத்துக்கு அதைவிட ஐயாயிரமும், மூன்றாவது படத்துக்கு இன்னும் ஐயாயிரமும் சேர்த்துத் தருகிறோம்''

    என்றார்.இப்படிச் சொன்னதோடு, "மூன்று படத்துக்குமாக இதை அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள்'' என்று ஒரு தொகையை என் கையில் வைத்தார். ஐயாயிரம் ரூபாய் இருந்தது.

    சந்தோஷமாக விடைபெற்று வந்தேன்.

    இதற்கிடையே பாரதிராஜா, கிருஷ்ணன் நாயர், சங்கரய்யர், அவினாசி மணி போன்ற பல டைரக்டர்களிடம் உதவியாளராக இருந்து, அந்த அனுபவத்தில் சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்து படம் தயாரிக்கும் ஆர்வத்துடன் வந்திருக்கிறார் ராஜ்கண்ணு.

    வந்த வேகத்தில் பாரதிராஜாவை சந்தித்து தன் விருப்பத்தை சொன்னார்.

    பாரதிராஜா ஏற்கனவே என்.எப்.டி.சி. நிதி உதவியுடன் தயாரிக்க தயார் நிலையில் வைத்திருந்த "மயில்'' படத்தின் கதையைச் சொல்ல, ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. "மயில்'' கதையை படமாக்கும் முடிவுக்கு வந்தார். இந்தப்படம் மூலமாக டைரக்டராகிவிட்ட பாரதிராஜாவுடன், நான் இசையமைப்பாளராக கைகோர்ப்பேன் என்பது நானே எதிர்பார்த்திராத விஷயம்.

    அப்போது நடிகர் திலகம் சிவாஜியை வைத்து, நடிகர் பாலாஜி தொடர்ச்சியாக படங்கள் எடுத்து வந்தார். பாலாஜி ஒரு மலையாளப்படத்தை தமிழில் எடுக்கப்போவதாகவும், நான் இசையமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மலையாளப்படத்தை எனக்கு திரையிட்டுக்

    காட்டினார்.தமிழில் அதற்கு "தீபம்'' என்று பெயர் சூட்டினார்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதினார். இவர் பார்ப்பதற்கு என் அண்ணன் `பாவலர்' போலவே இருப்பார். சிரிப்பது, பேசுவது எல்லாமே எனக்கு அண்ணனை ஞாபகப்படுத்தும். என்னவொரு வித்தியாசம் என்றால் அண்ணன் கறுப்பு.

    இந்த `தீபம்' படம்தான் என் இசை வாழ்வில் எனக்கு இரண்டாவது வெற்றிப்படமாக அமைந்தது.

    அதுவரை அண்ணன் சிவாஜியை பார்த்ததில்லை. வாகினி ஸ்டூடியோவில் `தீபம்' பட பூஜை நடந்தபோது, சிவாஜி வந்திருந்தார். பாலாஜியும், ஏ.எல்.நாராயணனும் என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார்கள்.

    அப்போது எனக்கு டைரக்டர் மகேந்திரன் (அப்போது அவர் டைரக்டர் ஆகியிருக்கவில்லை) சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

    அப்போது, சிவாஜி நடித்து வெற்றிகரமாக ஓடிய "தங்கப்பதக்கம்'' படத்தின் வசனகர்த்தா, மகேந்திரன்.

    அவரும் கதாசிரியர் - டைரக்டர் குகநாதனும் சிவாஜியை பார்த்துவர அவரது வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவர் அவர்களிடம் பேசினாரே தவிர, உட்காரச் சொல்லவில்லை.

    அதே நேரத்தில் வசனகர்த்தா பாலமுருகன் வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் "வாடா பாலமுருகா! உட்கார்!'' என்று உட்காரச் சொல்லியிருக்கிறார்.

    பாலமுருகனோ மகேந்திரன் நிற்பதைப் பார்த்து "உட்காருங்கள்'' என்று சொல்லிய பிறகே சிவாஜி "உட்கார், மகேந்திரா!'' என்று சொன்னார்.

    பாலமுருகன் வசனம் எழுதி சிவாஜி நடித்த "ராஜபார்ட் ரங்கதுரை'' தோல்வி அடைந்திருந்த நேரம் அது.

    சிவாஜியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட மகேந்திரன், "இல்லண்ணே! நான் இப்படியே நிற்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

    சிவாஜியை "தீபம்'' பட செட்டில் பார்க்கப் போகிற நேரத்தில் மகேந்திரன் சொன்ன சம்பவம் நினைவுக்கு வர, இதோ மேக்கப் ரூமில் இருந்த சிவாஜியை நெருங்கி விட்டேன். பாலாஜி என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார். உடனே அவர், பாலாஜியையும், ஏ.எல்.நாராயணனையும் உட்காரச் சொன்னார். அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்களுடன் நானும் `படக்'கென உட்கார்ந்துவிட்டேன். அதிலிருந்து என்னை எங்கே கண்டாலும் உடனே உட்காரச் சொல்லிவிடுவார்.

    பிற்காலத்தில் இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். அவர் முன் நின்றால் என்ன தவறு? உட்கார்ந்தால் மட்டும் சிவாஜியோடு சரி சமம் ஆகிவிடுவேனா! என்று என்னையே நான் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    பெரியவர்களுக்கு மரியாதை அளிக்கும் பண்பு இளைய தலைமுறையிடம் எப்படி மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். அதாவது `அன்றைய' நானே உதாரணம்!

    தீபம் படம் 100 நாள் ஓடி சாந்தி தியேட்டரில் விழா எடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டைரக்டர் ஏ.சி.திரிலோகசந்தரிடம் இருந்து வந்ததே "பத்ரகாளி'' படத்துக்கான அழைப்பு.

    இங்கேதான் முதன்முதலாக கவிஞர் வாலி என் இசையமைப்பில் பாடல் எழுதினார். அப்போது எனக்கும், அவருக்குமான ஒரு பழைய சம்பவத்தை வாலி நினைவுபடுத்தினார்.

    பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் `பிதாயி' என்ற இந்திப்படம் வந்தது. இந்தப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர். படத்துக்கு `பிரியாவிடை' என்று பெயர் வைக்கப்பட்டது.

    இசை ஜி.கே.வெங்கடேஷ். இந்திப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் `ஒரு சீட்டுக்கட்டு ராஜாராணி' போல நாயகன் - நாயகியை மாற்றி, முழுக்க முழுக்க `ஸ்லோமோஷனில்' பாடல் முழுவதையும் உதட்டசைவு மாறாத வகையில் படமாக்கி இருந்தார். இந்த இந்திப்பாடல் `ஹிட்' ஆனதால் அதே மெட்டை தமிழிலும் போட எல்.வி.பிரசாத் விரும்பினார். ஜி.கே.வெங்கடேஷும் "ஓ.கே'' சொன்னார்.

    பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்து விட்டுப் போனார். அந்தப்பாடல் டைரக்டருக்கும், எல்.வி.பிரசாத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் வாலியை பாட்டெழுத அழைத்தார்கள். அவரும் வந்தவுடன் டிïனை கேட்டுவிட்டு, "ராஜாவைப் பாருங்க'' என்று பல்லவியை தொடங்கி

    விட்டார்.இது எல்லாருக்கும் பிடிக்க ஓ.கே. சொல்லிவிட்டார்கள்.

    நான் மட்டும் வாலி அண்ணனிடம், "அண்ணா! வரிகள் டிïனுக்கு சற்று மாறி வந்திருக்கிறது'' என்றேன்.

    "எப்படி?'' என்று திருப்பிக் கேட்டார் வாலி.

    "டிïனின் சத்தம் `தானா தானானா', `தானானத் தானானா' என்று வருகிறது. இதில் முதல் `சந்தம்' தானா என்று தான் வருகிறது. நீங்கள் `ராஜாவை' என்று தொடங்கியதால் சந்தம் `தானானா' என்று மாறி வருகிறது'' என்றேன்.

    "இன்னொரு தடவை சொல்லு'' என்றார் வாலி.

    "தானா தானானா தானானத் தானானா'' என்று பாடினேன்.

    உடனே அவர், "ராஜா பாருங்க! ராஜாவைப் பாருங்க என்று வைச்சுக்கோ'' என்றார்.

    "இது சரியாக இருக்கிறது'' என்றேன்.

    அன்றிரவு எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்த நாள் பார்ட்டியில் ஜி.கே.வெங்கடேஷை பார்த்த வாலி, "யோவ்! சாதாரண கிட்டார்காரனைவுட்டு சந்தத்துக்கு சரியா பாட்டெழுதலைன்னு சொல்லவெச்சு என்னை அவமானப்படுத்திட்டேயில்ல?'' என்று சத்தம் போட்டிருக்கிறார்.

    ஜி.கே.வி.யும் விட்டுக் கொடுக்காமல், "அதெல்லாம் இல்ல வாலி! சரியா வர்றதுக்குத்தானே எல்லாரும் சொல்வாங்க. அதிலென்ன தப்பு?'' என்று சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார்.

    இந்த சம்பவத்தை இப்போது என்னிடம் நினைவு கூர்ந்த வாலி, "இப்போ, பத்ரகாளி படத்துக்கான பாட்டு என்ன சிச்சுவேஷன்?'' என்று கேட்டார்.

    சிச்சுவேஷனை வசனகர்த்தா ஆரூர்தாஸ் சொல்ல, நான் டிïனை பாடிக்காட்டினேன். தம்பி கங்கை அமரன் எழுதி, பக்திப்பாடலாக்க முயற்சி செய்த டிïன் அது.

    அதை வாசித்தேன். கேட்டு விட்டு "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' என்று ஆரம்பித்து முழுப்பாடலையும் முடித்தார்.

    அடுத்த பாடல்தான் "வாங்கோன்னா, அட வாங்கோன்னா.''

    இந்தப் படத்தில் நாயகியாக நடித்த ராணி சந்திரா விமான விபத்தில் மரணமடைந்து விட்டார். திரிலோகசந்தர் ஒருவழியாக சமாளித்து படத்தை முடித்தார். படம் பெரிய வெற்றி.

    இந்தப்படத்தின் பின்னணி இசையமைப்பின்போதுதான் இரண்டாவது தடவையாக மூகாம்பிகை போகமுடிந்தது.

    இது என் மூன்றாவது வெற்றிப்படம்.''

    வாரிசு நடிகை ஒருவர் திமிரு நடிகரை கழட்டிவிட்டு வம்பு நடிகருடன் ஒட்டிக்கொண்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்..
    வம்பு நடிகரைப் பற்றி கோலிவுட்டில் ஏதாவது ஒரு கிசுகிசு கசிந்துகொண்டுதான் இருக்கிறது. இவர் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் எனறு ஒரு பக்கம் கிசுகிசு கிளப்பிவிட்டாலும், உடன் நடிக்கும் நடிகைகளை வைத்தும் சிலர் கிசுகிசுக்களை கிளப்பி விடுவது வாடிக்கையாடி விட்டது.

    அதன்படிதான் தற்போது அவரைப் பற்றிய ஒரு கிசுகிசு தற்போது கோலிவுட்டில் தீயாக பரவி வருகிறது. அதாவது, இவருடைய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வாரிசு நடிகையும் வம்பு நடிகரும் தற்போது நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    வாரிசு நடிகையோ ஏற்கெனவே திமிரு நடிகருடன் நெருக்கம் காட்டி வந்தார். சமீபத்தில் அவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவரை பிரிந்து வம்பு நடிகருடன் சேர்ந்து சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. வம்பு நடிகரும், வாரிசு நடிகையும் எந்த விழாக்களுக்கும் சேர்ந்தே போகிறார்களாம். தினமும் ஒருமுறையாவது நேரில் சந்தித்துக் கொள்கிறார்களாம்.

    இவர்களுக்கு ஆதரவாக சில முன்னணி நடிகைகளும் களம் இறங்கியிருக்கிறார்களாம். இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணையலாம் என்றும் பேச்சு அடிபடுகிறதாம். இதையெல்லாம் கேள்விப்பட்ட திமிரு நடிகர் தற்போது மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். ஏற்கெனவே, வம்பு நடிகர் மீது கோபத்தில் இருக்கும் திமிரு நடிகருக்கு இந்த செய்தி மேலும் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளதாம். 
    ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘கவலை வேண்டாம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணம் செய்த நாளிலேயே இருவரும் கருத்து வேறுபட்டு பிரிந்து போகிறார்கள். பின்னர், சில காலம் கழிந்த நிலையில், ஜீவா சொந்தமாக ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிக்கிறார்.

    அதேசமயம் காஜல் அகர்வாலுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. மறுமுனையில் ஜீவாவை சுனைனா ஒருதலையாக காதலித்து வருகிறார். ஜீவாவுக்கோ காஜல் அகர்வாலுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதுதான் விருப்பம்.

    இந்த நிலையில், பாபி சிம்ஹாவை திருமணம் செய்துகொள்வதற்காக ஜீவாவை முறைப்படி விவாகரத்து செய்ய காஜல் அகர்வால் முடிவெடுக்கிறார். இதற்காக ஜீவாவிடம் விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க செல்கிறார். அப்போது, ஜீவா தன்னுடன் ஒருவார காலம் தங்கியிருந்து, தன்னுடைய சொல்படி நடந்தால் அவள் கேட்டபடி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு தருவதாக சொல்கிறார்.

    இதையடுத்து, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ஜீவா, சுனைனா மற்றும் அவரவர்களுடைய நண்பர்கள், தோழிகள் பெரிய பட்டாளமே ஒரே வீட்டில் தங்குகிறது. இந்த கலகலப்பான காலகட்டத்தின் இறுதியில் ஜீவாவுக்கும் காஜலுக்கும் விவாகரத்து நடந்ததா? இல்லையா? யார், யாரை திருமணம் செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

    எந்தவித லாஜிக்கும் இல்லாமல் படம் முழுக்க நகைச்சுவையை மட்டுமே நம்பி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டீகே. ஆனால் அந்த நகைச்சுவை ரசிக்கும்படி இல்லாதது படத்திற்கு பெரிய தொய்வு. தனது முந்தைய படத்தைப்போலவே இந்த படத்தையும் ஊட்டியிலேயே படமாக்கியிருக்கிறார். என்றாலும், வித்தியாசமான இடங்களை வித்தியாசமாக காட்டியவிதம் அருமை.

    நகைச்சுவை படங்களில் நடிப்பது ஜீவாவுக்கு ஒன்றும் புதிதல்ல. அவருக்கு ஏற்கெனவே அனுபவம் இருந்தாலும், அவருக்குண்டான நடிப்புக்கு இந்த படத்தில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருப்பது சற்று ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாகவும், அவருடைய உடையலங்காரமும் ரசிக்கும்படி இருக்கிறது.

    காஜல் அகர்வால் படம் முழுக்க கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாக வைத்து நடித்திருக்கிறார். காமெடி, சென்டிமென்ட் ஆகியவற்றில் இன்னும் கொஞ்சம் இவரிடம் வேலை வாங்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. சுனைனா, பாபி சிம்ஹா படம் முழுக்க வந்தாலும், அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. இருப்பினும், தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    பால சரவணன், ஆர்.ஜே.பாலாஜி படத்தின் காமெடிக்கு கொஞ்சம் துணை நின்றிருக்கிறார்கள். ஜீவாவின் அப்பாவாக வரும் மயில்சாமி காமெடி, சென்டிமென்ட் ஆகியவற்றில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். மயில்சாமிக்கு ஜோடியாக வரும் மதுமிதா சில காட்சிகளே வந்தாலும் கலகலப்பூட்டியிருக்கிறார்.

    படத்திற்கு மிகப்பெரிய பலமே அபினந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவுதான். ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக தனது கேமராவில் படம்பிடித்திருக்கிறார். லியோன் ஜேம்ஸ்-ன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘கவலை வேண்டாம்’ கவலைக்கிடம்.
    ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க தெலுங்கு நடிகர் ரவிபாபு பன்றிக்குட்டியுடன் சென்ற சம்பவம் ஐதராபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஐதராபாத்:

    ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம், வங்கிகள் முன்பு கூட்டம் அலைமோதி வருகிறது.

    இந்நிலையில் தெலுங்கு நடிகர் ரவிபாபு தனது வளர்ப்பு பன்றிக்குட்டியுடன் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்ற சம்பவம் ஐதராபாத் பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகரும், இயக்குனருமான ரவிபாபு இதுகுறித்து கூறுகையில் "நான் வளர்த்து வரும் பன்றிக்குட்டியை வீட்டில் யாரும் ஒழுங்காக பார்த்துக் கொள்வதில்லை. அதனால் எங்கு சென்றாலும் அதனை உடன் அழைத்து செல்கிறேன். எனக்கு ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க வேண்டி இருந்தது.

    அதனால் என்னுடன் பன்றிக்குட்டியையும் உடன் அழைத்து சென்றேன். தற்போது நான் எடுத்து வரும் படத்தில் (அதுகோ) முக்கிய வேடத்தில் பன்றி நடித்து வருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக என்னுடைய படத்தில் தான் பன்றியை நடிக்க வைத்து வருகிறேன்" என்றார்.
    அஜித் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
    அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் அஜித் மற்றும் அக்‌ஷரா ஹாசன் பங்கேற்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், விவேக் ஓபராய் தற்போது அஜித் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

    நேற்று நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய விவேக் ஓபராய், ‘ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பில் இம்மாத இறுதியில் கலந்து கொள்ள உள்ளேன். அஜித் அண்ணா அவர்களுடன் இணைந்து நடிப்பதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

    ரஜினியின் ‘2.0’ படத்தில் வில்லனாக அக்‌ஷய்குமார் நடித்து வருவதை அடுத்து இன்னொரு பிரபல பாலிவுட் ஹீரோ விவேக் ஓபராய், தற்போது அஜித்தின் ‘தல 57’ படத்தில் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
     
    அஜித் 57 படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.
    மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் தயாரிப்பாளர்களிடம், சம்பளத்துக்கு வரி கட்டி பணத்தை வெள்ளையாக தரும்படி நயன்தாரா, அனுஷ்கா வற்புறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரையுலகில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி கதாநாயகிகள் உள்ளனர். ஒன்றிரண்டு படங்களில் நடித்து மார்க்கெட் இழந்த கதாநாயகிகள் பட்டியலில் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். வளர்ந்த கதாநாயகிகள் பலரின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடும். படம் வெற்றி பெற்றால் சம்பள தொகை ஏறுவதும், தோல்வி அடைந்தால் இறங்குவதும் வழக்கம்.

    ஆனால் நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவரின் சம்பளம் மட்டும் ஏறுமுகமாகவே இருக்கிறது. நயன்தாரா 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கதாநாயகியாக அறிமுகமான புதிதில் இவரது சம்பளம் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வசூல் குவித்ததால் சம்பளம் மளமளவென உயர்ந்தது.

    தற்போது ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘கைதி எண்.150’ படத்தில் நடிக்க அவரை அணுகி ரூ.3½ கோடி சம்பளம் தருவதாக பேசினார்கள். ஆனால் அவருடன் நடிக்க மறுத்து விட்டார்.

    பழைய மாதிரி காதல் கதையம்சம் உள்ள படங்களை தவிர்த்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கிறார். அவர் நடித்துக் கொண்டு இருக்கும் டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம் ஆகிய மூன்றுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்கள்.

    இந்த படங்களில் பெரிய கதாநாயகர்கள் இல்லாததால் நயன்தாராவுக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்களும் தயங்கவில்லை.

    அதிக சம்பளம் வாங்குவதில் நயன்தாராவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார் அனுஷ்கா. ஒரு படத்துக்கு ரூ.2 கோடி வாங்கி வந்த இவருக்கு தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘பாக்மதி’ தெலுங்கு படத்துக்கு ரூ.2¼ கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளது.

    அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி படங்களில் வித்தியாசமாக நடித்து ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்துள்ள அனுஷ்கா சம்பளத்தில் நயன்தாராவை பின்னுக்கு தள்ள தீவிர முயற்சி எடுக்கிறார். ஆனாலும் இளம் ரசிகர்கள் நயன்தாராவுக்கு பெருமளவு இருப்பதால் அவரை முந்த முடியவில்லை.

    1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதால் நயன்தாராவும், அனுஷ்காவும் தயாரிப்பாளர்களிடம் சம்பளத்துக்கு வரி கட்டி வெள்ளையாக தரும்படி நிபந்தனை விதித்து இருப்பதாகவும் இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    ×