என் மலர்
திருமண விழாவில் திலீப்பின் தாயார் மற்றும் அவரது முதல் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியருக்கு பிறந்த மகள் மீனாட்சியும் கலந்து கொண்டனர். காவ்யா மாதவன் குடும்பத்தில் இருந்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் காவ்யாவின் தந்தை மாதவனும் பங்கேற்றார்.
மம்முட்டி, ஜெயராம் உள்பட முக்கிய நடிகர்கள் சிலரும் விழாவுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
திருமணம் குறித்த தகவல் நேற்று பகலில் வெளியானதும் திலீப்-காவ்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் பலரும் பேஸ்புக்கில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.
அதில், குறிப்பாக மஞ்சுவாரியர் ஏற்கனவே சந்தேகப்பட்டு வெளியிட்ட கருத்துக்கள் உண்மையாகி விட்டதாகவும், ரசிகர்கள் இப்போது மஞ்சுவாரியர் பக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
திருமணம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காத மஞ்சு வாரியரை பாராட்டியும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். அவரது மவுனம் பல உண்மைகளை உலகுக்கு காட்டுகிறது எனவும் பதிவிட்டிருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய பல்வேறு கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் திருமணம் முடிந்ததும் திலீப் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் திருமண முறிவுக்கு காவ்யா மாதவனை பலர் குறை கூறினர். அது உண்மை இல்லையென எனக்கு தெரியும். விவாகரத்திற்கான காரணத்தை தெரிவித்தால் பலருக்கு இன்னல் ஏற்படும். எனக்காக காவ்யா பல்வேறு அவமானங்களை ஏற்றுக் கொண்டார்.
எனக்கு மறுமணம் செய்து வைக்க குடும்பத்தார் விரும்பினர். அவர்களிடம் எனது மகள் விரும்பினால் மட்டுமே நான், மறுமணம் செய்வேன் என்று கூறினேன். இதுபற்றி மகளிடமும் விவாதித்தேன். அவர், என்னை இன்னொரு திருமணம் செய்து கொள்ள கூறினார். அவரது அனுமதி கிடைத்த பின்பே மறுமணத்திற்கு ஒப்புக்கொண்டேன்.
அதற்காக பெண் தேடிய போது, என்னால் அவமானங்களை சந்தித்த காவ்யாவை திருமணம் செய்து கொள்வது நன்றாக இருக்குமென்று உணர்ந்தேன். இதுபற்றி அவரின் குடும்பத்தாரிடம் பேசப்பட்டது. அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர். நேற்று முன்தினம் இரவில் எங்களுக்கு நெருக்கமான நண்பர்களுக்கு டெலிபோன் செய்து நானும், காவ்யாவும் திருமணம் செய்ய இருப்பதை தெரிவித்தேன்.
நிகழ்ச்சிக்கு நேரில் வரும் படியும் அழைத்தேன். அப்படி வந்தவர்கள்தான் இன்று விழாவுக்கு வந்த நடிகர்கள். அவர்களின் ஆசியுடன் எங்கள் வாழ்க்கை தொடங்குகிறது. இதனை சர்ச்சையாக்காமல் எங்களை வாழ்த்த வேண்டுமென்று பிறரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திலீப்-காவ்யா திருமணம் மலையாள ஐதீகப்படி நடந்தது. பின்னர் பகல் விருந்துடன் வந்தவர்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு காவ்யா மாதவனுடன் திலீப் அவரது பூர்வீக வீட்டிற்கு சென்றார். அங்கு திலீப்பின் மகள் நிலவிளக்கு ஏந்தி செல்ல காவ்யா வீட்டிற்குள் சென்று குத்து விளக்கு ஏற்றினார். அதன் பிறகு சிறிது நேரம் வீட்டில் தங்கியிருந்த அவர்கள் இருவரும் பின்னர் துபாய்க்கு புறப்பட்டனர்.
“ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு ஒதுக்கி அவர்களுக்கு உதவ வேண்டும். சமூக சேவைகளில் நிறைய பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள் அந்த பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூகத்தில் எல்லோருமே சம்பாதிக்கிறார்கள். சிலருக்கு லட்சங்களிலும், இன்னும் சிலருக்கு கோடிகளிலும் வருமானம் வருகிறது.
சம்பாதிக்கும் தொகை அனைத்தும் தனக்கே சொந்தம் என்று நினைப்பது சுயநலம். அந்த பணத்துக்கு மதிப்போ மரியாதையோ கிடையாது. அதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பதில்தான் பொது நலமும் சந்தோஷமும் இருக்கிறது. சமூகத்தில் நிறைய மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை தூக்கி விட வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
1 கோடி ரூபாய் சம்பாதித்தால் அனைத்தையும் தானே சாப்பிட வேண்டும் என்று சுயநலமாக சிந்திக்காமல் ஏழைகளுக்கும் கொடுத்து உதவ வேண்டும். அப்படி உதவினால்தான் தன்னிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு உயரும். சமூக சேவைகள் செய்யும் போது கிடைக்கும் திருப்தியே தனி. மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதில் கிடைக்கும் சந்தோஷத்தை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.
ஏழைகள் பசியை தீர்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. சமூக சேவைகளில்தான் எனக்கு மன அமைதி கிடைக்கிறது. உதவிகள் செய்யும் போது தான் நம் மீதே நமக்கு அளவு கடந்த மரியாதை ஏற்படுகிறது. இந்த விஷயத்தை நான் தெரிந்து வைத்து இருப்பதால் தான் சமூக சேவைகளில் ஆர்வமாக ஈடுபடுகிறேன்.”
இவ்வாறு சமந்தா கூறினார்.
அதில், ‘லயோலா கல்லூரியில் நடிகர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுகிழமை) நடைபெறவுள்ளது. சங்கத்தின் விதிகளின் படி இந்த கூட்டம் கூட்டப்படவில்லை. நடிகர் சங்க பொதுச் செயலாளரும், பொருளாளரும் படித்த அந்த கல்லூரியில் இந்த பொதுக்குழு கூடுவதால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு 11-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி டேனியல் ஹரிதாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நடிகர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘பொதுக்குழு கூட்டம் சங்க விதிகளை முறையாக கடைபிடித்து தான் நடத்தப்படுகிறது. அனைத்து உறுப்பினர்களுக்கும் முறையாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆயிரத்து 700 உறுப்பினர்கள் அமரும் வகையில் கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடம், ரெயில், சாலை போக்குவரத்து என அனைத்து வசதிகளும் இருக்கும் பொதுவான இடத்தில் தான் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த வழக்கு விளம்பர நோக்கில் தொடரப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். போலீஸ் காவலில் உள்ள மதனுக்கு நேற்று ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர். மோசடி செய்த பணத்தை மதன் எங்கெங்கு? முதலீடு செய்துள்ளார் என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாரதிராஜா டைரக்ட் செய்த முதல் படம் "16 வயதினிலே.'' ஏற்கனவே பாரதிராஜாவிடம் செய்திருந்த சபதம் காரணமாக, இந்தப் படத்துக்கு இசை அமைக்க இளையராஜா மறுத்தார். கடைசியில், குரு ஜி.கே.வெங்கடேஷ் தலையிட்டு, இளையராஜாவை சம்மதிக்க வைத்தார்.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"16 வயதினிலே கதையைக் கேட்டு ராஜ்கண்ணு `ஓ.கே' சொன்னதும், கதாநாயகனாக யாரைப்போடலாம் என்று கேட்டார். அப்போது சிவகுமார் நடித்த "அன்னக்கிளி'' போன்ற படங்கள் நன்றாகப் போனதால் ராஜ்கண்ணு பாரதிராஜாவிடம், "சிவகுமாரைப் போடலாமே'' என்று கூறியிருக்கிறார்.
பாரதிராஜாவோ திட்டவட்டமாக மறுத்து, "இந்தக் கதைக்கு கமலஹாசன்தான் சரியாக இருப்பார்'' என்று தன்பக்க காரணங்களை எடுத்து வைத்திருக்கிறார். அதனால் "கமலஹாசனே நடிக்கட்டும்'' என்று ராஜ்கண்ணு கூறிவிட்டார்.
பாரதி சொன்னது சரிதான். சிவகுமார் நன்றாகவே செய்திருக்கலாம். கமலஹாசன் இடத்தில் சிவகுமாரை இப்போது நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
அடுத்து இசையமைக்க யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, பாரதி, "இளையராஜாவைப் போடலாம்'' என்று என் பெயரை சொல்லியிருக்கிறார்.
"என்ன பாரதி! விளையாடறீங்களா? இளையராஜாவாவது கிடைக்கிறதாவது? அவர் இருக்கிற பிஸியில இதுமாதிரி படத்துக்கெல்லாம் வருவாரா?'' என்று கேட்டிருக்கிறார், ராஜ்கண்ணு.
"இல்லையில்லை. இளையராஜா என் நண்பன்தான்'' என்று பாரதி சொல்ல, ராஜ்கண்ணு நம்பவே இல்லை.
உடனடியாக நம்ப வைக்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்று எண்ணிய பாரதி, என் அண்ணன் பாஸ்கரை அழைத்துக்கொண்டு ராஜ்கண்ணுவை போய் பார்த்திருக்கிறார்.
"வாங்க பாரதி'' என்றவர், "இவர் யாரு?'' என்று பாஸ்கரை கேட்டிருக்கிறார். "இவர் இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர்'' என்று பாரதி சொல்ல, உடனே பாஸ்கருக்கு ராஜமரியாதை கிடைத்திருக்கிறது. இப்போது `உண்மையிலேயே இளையராஜா பாரதிராஜாவின் நண்பர்தான் போலிருக்கிறது' என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்.
ராஜ்கண்ணு பாஸ்கரிடம், "தம்பியிடம் சொல்லி படத்துக்கு இசையமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார்.
"அதுக்கென்ன சார்! இதில் ஒரு பிரச்சினையும் இல்லே. தம்பிகிட்ட நான் சொல்றேன்'' என்று பாஸ்கரும் தன் பங்குக்கு படுகூலாக சொல்லிவிட்டார்.
அதே வேகத்தில் என்னிடம் வந்து, "டேய்.. பாரதிக்கு படம் வந்திருக்கிறது. நாமதான் மியுசிக்'' என்று சொன்னார்.
நான் அண்ணனிடம், "பாரதியின் இந்தப் படத்திற்கு நான் இசையமைக்கப்போவதில்லை'' என்றேன்.
அண்ணன் அதிர்ந்து போனார். "என்னடா சொல்றே?'' என்று, தன் அதிர்ச்சியை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினார்.
பாரதிக்கும், எனக்கும் ஏற்கனவே இருந்த பந்தயம் பற்றி அண்ணனிடம் விவரித்தேன். "பாரதியின் முதல் படத்துக்கு அண்ணன் ஜி.கே.வெங்கடேஷ்தான் இசையமைக்க வேண்டும். இரண்டாவது படத்துக்குகூட நான் இசையமைக்கும்படி ஜி.கே.வி.தான் சொல்ல வேண்டும்'' என்றேன்.
பாஸ்கருக்கு என் பிடிவாத குணம் தெரியும். ஒரு முடிவெடுத்தால் அதில் இருந்து என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்பதை அறிவார். அதனால் பாரதியை சந்தித்தவர், "விடு! எங்கே போயிடப்போறான்? இரண்டு மூணு நாள் விட்டுப் பிடிச்சா எல்லாம் சரியாப் போயிடும்'' என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்ன மூன்று நாள் மட்டுமல்ல... மூன்று வாரம் போனபோதும் என் நிலை அதுவாகத்தான் இருந்தது.
வாரங்கள் ஓடி மாதங்களான போது, சகோதரர்களுக்குள் பிரச்சினை ஆகிவிட்டது. பாஸ்கரும், அமரும் (கங்கை அமரன்) என்னை பாரதி படத்துக்கு இசையமைக்க வற்புறுத்தினார்கள்.
பாரதியோ, இந்த காலக்கட்டத்தில் என்னைப் பார்க்க வரவேயில்லை. நானும் இறங்கி வருவதாக இல்லை.
ராஜ்கண்ணுவோ, "என்னாச்சு? என்னாச்சு?'' என்று என் விஷயமாய் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.
இனியும் பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த பாஸ்கர், நேராக ஜி.கே.வி.யிடம் போய்விட்டார். அவரிடம் முழு விஷயத்தையும் சொல்லியிருக்கிறார்.
ஜி.கே.வி. என்னை கூப்பிட்டு அனுப்பினார். என்னிடமும் விஷயத்தைக் கேட்டுக்கொண்டவர், "சரிடா! போ! வேலையைச் செய்''
என்றார்."இல்லண்ணா! நான் சொன்னா சொன்னதுதான்'' என்றேன்.
"என்ன, சொன்னா சொன்னதுதான்! நான் இசையமைக்கச் சொன்னாத்தான் பாரதி படத்துக்கு இசையமைப்பேன்னு சொல்லியிருக்கே அதானே?'' ஜி.கே.வி. கேட்க, "ஆமா! அதுமட்டுமில்ல. பாரதிக்கு முதல் படம் நீங்கதான் இசையமைக்கணும். இரண்டாவது படத்தைக்கூட நீங்க சொன்னாத்தான் நான் இசையமைக்கறதா ஐடியா.''
அவருக்கு கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது. "என்னடா இதெல்லாம், சின்னப்பசங்க மாதிரி! நான்தான் சொல்றேனில்லே... போடா, போய்ச் செய்'' என்றார். இதற்குப்பிறகும் மறுக்க முடியவில்லை. ஒத்துக்கொண்டேன்.
பாடல் பதிவுடன் பூஜை என்று முடிவு செய்யப்பட்டது. கம்போசிங்கிற்காக ராஜ்கண்ணுவின் ஆபீசுக்குப் போனேன்.
பூஜைப் பாடலாக, சப்பாணியை வெறுத்து வந்த மயிலுக்கு மனமாற்றம் ஏற்பட்டு, அந்த மனமாற்றம் சப்பாணிக்கும் தெரிய வருகிற ஒரு பாடலை கம்போஸ் செய்யலாம் என்று பாரதி சொன்னார்.
இதற்கிடையில், என்னுடைய ஒரு டியுனை என்னைக் கேட்காமல் பாரதியிடம் பாஸ்கர் பாடிக்காட்டி, "ஓ.கே''யும் செய்து வைத்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது. கம்போசிங் தொடங்கும் முன்பு அதைப் பாடிக்காட்டச் சொன்னார்கள்.
`சும்மா கேட்பதற்காகத்தான் போலிருக்கிறது' என்று எண்ணி நான் அந்த டியுனை பாடிக்காட்டினேன்.
"இதுவே போதும். இது ஓ.கே'' என்றார் பாரதி.
அந்த டியுனை பஞ்சு சார் (பஞ்சு அருணாசலம்) ஏற்கனவே அவரது `கவிக்குயில்' படத்துக்கு "ஓ.கே'' செய்து இருக்கிறார்.
இப்போது இவர்களும் "ஓ.கே'' சொல்லியிருக்கிறார்கள்!
எனக்கு மனசுக்கு கஷ்டமாயிருந்தது. என் இக்கட்டான நிலையை பாரதியிடம் விளக்கினேன்.
பாரதியோ, "பாஸ்கர் இதை பாடிப்பாடி அதற்கேற்ப எப்படி எப்படி `ஷாட்ஸ்' எடுக்கவேண்டும் என்று மனதில் நிறைய கற்பனைகளை செய்து வைத்துவிட்டேன்'' என்றார். அதோடு, "நான் நினைத்திருக்கும் அந்தக் காட்சிக்கு இதுபோல எந்த டியுனுமே அமையாது'' என்றும் உறுதிபடக் கூறிவிட்டார்.
நான் விடவில்லை. "அது எப்படி பாரதி? நான் பஞ்சு சார் செலக்ட் பண்ணின டியுனை `இது பாரதிக்கு வேணுமாம்' என்று எப்படிச் சொல்வேன்? இதைவிட நல்லா டியுனா உனக்குப் போடறேன்'' என்றேன்.
பாரதி வேண்டா வெறுப்பாக, "ம்... ம்... உன் இஷ்டம்'' என்றார்.
டியுன் கம்போஸ் செய்யத் தொடங்கியபோது, உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தார். என்ன பாடினாலும் கவனிக்காமல் சிரத்தையின்றி இருந்தார். கடைசியாக ஒரு டியுனை அடிக்கடி பாடிக்காட்டி "இது நல்லா வரும்'' என்றேன்.
பாரதி அரை மனதுடன்தான் அந்த டியுனுக்கு `ஓ.கே' சொன்னார். பாடலை எழுத கவிஞர் கண்ணதாசனை அழைக்கலாம் என்று
சொன்னேன்."கவிஞருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ? அதற்கு புரொடியுசர் என்ன சொல்வாரோ?'' என்றார், பாரதி. "அதை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றேன்.
கவிஞர் அப்போது ஒரு பாட்டுக்கு ஆயிரமோ ஆயிரத்து ஐநூறோ வாங்கிக் கொண்டிருப்பார். நான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம், "இது சின்னக் கம்பெனி படம். பாட்டுக்கு 750 ரூபாய் வாங்கிக்கச் சொல்லுங்க'' என்றேன்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடும்போது எதிர்பாராத சிக்கல்
அதில், தங்களுக்கு 3-வது மகனாக பிறந்த மகன் தனுஷ் என்றும், பதினொன்றாம் வகுப்பு பயின்ற போது அவர் சென்னைக்கு ஓடி விட்டதாக தெரிவித்து இருந்தனர்.
மேலும் அந்த மனுவில், “பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் திரைப்படத்தில் நடிப்பதாக கேள்விப்பட்டு அவரை பார்க்க முயற்சித்தோம், ஆனால் அவரை பார்க்க முடியவில்லை.
தற்போது உடல்நிலை சரியில்லாமலும் ஏழ்மை நிலையில் இருப்பதால் மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், ஜனவரி மாதம் 12 ஆம் தேதி திரைப்பட நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கு தொடர்ந்துள்ள கதிரேசன் சிவகங்கை அரசு போக்குவரத்து பனிமனையில் பணிபுரிந்து வருகிறார்.
‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டணி ஜோடியாக நடித்திருப் பவர் அருந்ததி நாயர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கிறார். இது வருகின்ற டிசம்பர் 1-ந் தேதி வெளியாக இருக்கிறது.
இது பற்றி கூறிய அருந்ததி நாயர்...
“என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும் ‘சைத்தான்’ படம் எனக்கு தேவதை.
என் மீது நம்பிக்கை வைத்து, என்னை சைத்தான் படத்திற்காக தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஐஸ்வர்யா’ என்னும் கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை இந்த படம் தந்திருக்கிறது. இதை நான் பெருமையாக சொல்லுவேன்.
வளர்ந்து வரும் பிற மொழி பேசும் கதாநாயகிகளுக்கு, சொந்த குரலில் ‘டப்பிங்’ செய்வதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.ஆனால் விஜய் ஆண்டனி சார் என்னை எனது சொந்த குரலிலேயே ‘சைத்தான்’ படத்தில் பேச வைத்திருக்கிறார். இது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.
வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் இந்த ‘சைத்தான்’ உண்மையான அவதாரத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்” என்றார்.
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்பட பலர் நடித்துள்ள படம் ‘கத்திசண்டை’. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ வந்ததால் ‘கத்திசண்டை’ ‘ரிலீஸ்’ தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அடுத்து நவம்பர் 18-ந் தேதி விஷால் படம் திரைக்கு வர தயாரானது. இந்த நிலையில் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால், சில்லரை மாற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், தியேட்டர்களில் கூட்டம் குறைந்தது. எனவே பல படங்களுடன் இந்த படத்தின் ‘ரீலீஸ்’ தேதியும் தள்ளிப்போனது. இப்போது ‘கத்திசண்டை’ பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு விஜய் நடிக்கும் ‘பைரவா’ படம் ‘ரிலீஸ்’ ஆக இருக்கிறது. அதே நாளில் ‘கத்திசண்டை’யும் வெளியாவதால் விஜய்-விஷால் படங்கள் ஒரே நேரத்தில் மோத இருக்கின்றன.
ஏற்கனவே, 2007-ம் ஆண்டு விஜய்யின் ‘போக்கிரி’, விஷாலின் ‘தாமிரபரணி’ படங்கள் மோதின. 2014-ல் தீபாவளியன்று இவர்களின் ‘கத்தி’, ‘பூஜை’ படங்கள் மோதின. இப்போது 3-வது முறையாக வரும் பொங்கல் அன்று விஜய்-விஷால் படங்கள் நேரடியாக மோதுகின்றன.
இந்திபட உலகில் அடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘தங்கல்’. அமீர்கான் நடித்துள்ள இந்த படத்தை நிதீஷ்திவாரி இயக்கி இருக்கிறார். டிஷ்னிவோல்டு சினிமாவுடன் அமீர்கானும் சேர்ந்து இதை தயாரிக்கிறார்.
இது பிரபல குத்துச்சண்டை வீரர் மகாவீர்சிங் போகத் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடித்த ‘பிகே’ படம் தமிழில் வெளியாகி நன்றாக ஓடியது. ‘தோனி’ படமும் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வசூலை குவித்தது.
இதையடுத்து ‘தங்கல்’ படத்தையும் தமிழில் ‘டப்’ செய்து வெளியிட ஏற்பாடு நடக்கிறது. டிசம்பர் 23-ந்தேதி இது திரைக்கு வருகிறது.
பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றனர். இவர்களின் மகள் திலீப்புடன் உள்ளார்.
திலீப் - மஞ்சு வாரியர் பிரிவுக்கு நடிகை காவ்யா மாதவனே காரணம் என கூறப்பட்டது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர்.
காவ்யா மாதவன் கடந்த 2010-ல் தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து வெளிநாடு சென்ற காவ்யா மாதவன் சில நாட்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து கேரளா வந்தார்.
தனித்தனியாக வாழ்ந்து வந்த திலீப் - காவ்யா மாதவன் இருவரும் நெருங்கி பழகினர். தற்போது அவர்கள் 2 பேரும் புதிய படம் ஒன்றில் சேர்ந்து நடித்து வருகிறார்கள். இதில் அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்தது. இதனால் விரைவில் அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதுபற்றி திலீப் கூறும்போது எனது மகளின் முடிவை பொறுத்தே நான் மறுமணம் செய்வேன் என்றார்.
இந்தநிலையில் இன்று திடீரென திலீப் - காவ்யா மாதவன் இருவரும் கொச்சியில் திருமணம் செய்து கொண்டனர். இன்று காலை நடந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் மம்முட்டி, ஜெயராம், நடிகைகள் மீரா ஜாஸ்மின், மேனகா, சிப்பி, ஜோமோள் உள்பட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் மோகன்லாலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது.
இந்த திடீர் திருமணம் மூலம் திலீப் - காவ்யா மாதவன் பற்றி இதுவரை வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக மலையாள திரையுலகினர் தெரிவித்தனர்.
இதற்காக அந்த பணத்தை வாங்குவதற்காக விச்சுவை மலேசியாவுக்கு அனுப்புகிறார். மலேசியாவில் விச்சுவுக்கு உதவி செய்ய கிளப் டான்சரான சாந்தினியை பாலாஜி நியமிக்கிறார். அங்கு, இவர்களுக்கு முதல்கட்டமாக ரூ.20 கோடி கிடைக்கிறது. அதை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் வேளையில், சிறு சிறு திருட்டு வேலைகள் செய்யும் கல்யாண் மாஸ்டர், யோகி பாபுவுக்கு இவர்களிடம் இருக்கும் பெரும்தொகை பற்றிய தகவல் கிடைக்கிறது. அந்த பணத்தை கொள்ளையடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்ற எண்ணத்தில் அதை கொள்ளையடிக்க முயல்கிறார்கள்.
அதேநேரத்தில், வாழ்க்கையில் எந்த முன்னேற முடியாத விரக்தியில் இருக்கும் நாயகன் அரவிந்த் ஆகாஷும், அவரது தாத்தாவான எம்.எஸ்.பாஸ்கரும் திருட்டு தொழில் செய்து பிழைப்பை நடத்தலாம் என்று முடிவெடுக்கின்றனர். இவர்களுக்கும் விச்சுவின் கைவசம் இருக்கும் ரூ.20 கோடி பற்றிய தகவல் கிடைக்க, அதை கொள்ளையடிக்க முடிவு செய்கின்றனர்.
இந்நிலையில், விச்சுவை மலேசியாவுக்கு அனுப்பிய பாலாஜி விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு செல்கிறான். இதையறியும் விச்சு, தன்னை அனுப்பியது பாலாஜிக்கு மட்டுமே தெரியும் என்பதால், அந்த பணத்தை அவரே கைப்பற்ற நினைக்கிறார். இறுதியில், அந்த பணம் அமைச்சர் வசம் சென்றதா? அல்லது கொள்ளையடிக்க நினைத்த கும்பல் கைப்பற்றியதா? அச்சுவே அந்த பணத்தை கைப்பற்றிக் கொண்டாரா? என்பதை மீதிக்கதை.
படத்தின் நாயகன் அரவிந்த் ஆகாஷ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியிலும், காமெடியிலும் ரசிக்க வைக்கிறார். இவருடைய தாத்தாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் ஒரு காமெடி படத்துக்குண்டான நடிப்பை வரவழைத்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.
படத்தின் காமெடிக்கு மிகப்பெரிய பலமே யோகி பாபுதான். இவர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் ஒரே சிரிப்பலைதான். குறிப்பாக இறுதிக் காட்சியில் இவருடைய காமெடி வயிற்றை புண்ணாக்குகின்றன. இவருடன் வரும் கல்யாண் மாஸ்டரும் யோகி பாபுவுக்கு இணையாக காமெடியில் கலக்கியிருக்கிறார்.
கிளப் டான்ஸராக வரும் சாந்தினி அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான கவர்ச்சியுடன் வலம் வந்திருக்கிறார். அரசியல்வாதியாக வருபவர், விச்சு விஸ்வநாத், பாலாஜி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் மேஜர் கவுதம் தனது முதல் படத்திலேயே எல்லோரும் ரசிக்கும்படியும், கலகலப்பாகவும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்பவர்களுக்கு பெரிய தொகையை திருடும் வாய்ப்பு கிடைத்தால் என்னவெல்லாம் யோசிப்பார்கள் என்பதை படம் முழுக்க கலகலப்புடன் சொல்லியிருக்கிறார்.
திவாகர் சுப்பிரமணியமின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். அதேசமயம் பின்னணி இசையில் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு மலேசியாவை வித்தியாசமான கோணத்தில் காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘கண்ல காச காட்டப்பா’ மகிழ்ச்சி.
இந்நிலையில், விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் நாயகியாக அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்ணு விஷால் அடுத்ததாக ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர் ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக அமலாபால் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.
சைக்கோ திரில்லர் படமாக உருவாக இருக்கும் இதில் விஷ்ணு விஷால் போலீசாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








