என் மலர்
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க உடன் கருணாகரன், யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷக்தி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது ‘மாவீரன் கிட்டு’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுசீந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். வருகிற டிசம்பர் 2-ந் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"16 வயதினிலே கதையைக் கேட்டு ராஜ்கண்ணு `ஓ.கே' சொன்னதும், கதாநாயகனாக யாரைப்போடலாம் என்று கேட்டார். அப்போது சிவகுமார் நடித்த "அன்னக்கிளி'' போன்ற படங்கள் நன்றாகப் போனதால் ராஜ்கண்ணு பாரதிராஜாவிடம், "சிவகுமாரைப் போடலாமே'' என்று கூறியிருக்கிறார்.
பாரதிராஜாவோ திட்டவட்டமாக மறுத்து, "இந்தக் கதைக்கு கமலஹாசன்தான் சரியாக இருப்பார்'' என்று தன்பக்க காரணங்களை எடுத்து வைத்திருக்கிறார். அதனால் "கமலஹாசனே நடிக்கட்டும்'' என்று ராஜ்கண்ணு கூறிவிட்டார்.
பாரதி சொன்னது சரிதான். சிவகுமார் நன்றாகவே செய்திருக்கலாம். கமலஹாசன் இடத்தில் சிவகுமாரை இப்போது நம்மால் கற்பனைசெய்து பார்க்க முடியுமா?
அடுத்து இசையமைக்க யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, பாரதி, "இளையராஜாவைப் போடலாம்'' என்று என் பெயரை சொல்லியிருக்கிறார்.
"என்ன பாரதி! விளையாடறீங்களா? இளையராஜாவாவது கிடைக்கிறதாவது? அவர் இருக்கிற பிஸியில இதுமாதிரி படத்துக்கெல்லாம் வருவாரா?'' என்று கேட்டிருக்கிறார், ராஜ்கண்ணு.
"இல்லையில்லை. இளையராஜா என் நண்பன்தான்'' என்று பாரதி சொல்ல, ராஜ்கண்ணு நம்பவே இல்லை.
உடனடியாக நம்ப வைக்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்று எண்ணிய பாரதி, என் அண்ணன் பாஸ்கரை அழைத்துக்கொண்டு ராஜ்கண்ணுவை போய் பார்த்திருக்கிறார்.
"வாங்க பாரதி'' என்றவர், "இவர் யாரு?'' என்று பாஸ்கரை கேட்டிருக்கிறார். "இவர் இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர்'' என்று பாரதி சொல்ல, உடனே பாஸ்கருக்கு ராஜமரியாதை கிடைத்திருக்கிறது. இப்போது `உண்மையிலேயே இளையராஜா பாரதிராஜாவின் நண்பர்தான் போலிருக்கிறது' என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்.
ராஜ்கண்ணு பாஸ்கரிடம், "தம்பியிடம் சொல்லி படத்துக்கு இசையமைக்க ஏற்பாடு செய்யவேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார்.
"அதுக்கென்ன சார்! இதில் ஒரு பிரச்சினையும் இல்லே. தம்பிகிட்ட நான் சொல்றேன்'' என்று பாஸ்கரும் தன் பங்குக்கு படுகூலாக சொல்லிவிட்டார்.
அதே வேகத்தில் என்னிடம் வந்து, "டேய்.. பாரதிக்கு படம் வந்திருக்கிறது. நாமதான் மிïசிக்'' என்று சொன்னார்.
நான் அண்ணனிடம், "பாரதியின் இந்தப் படத்திற்கு நான் இசையமைக்கப்போவதில்லை'' என்றேன்.
அண்ணன் அதிர்ந்து போனார். "என்னடா சொல்றே?'' என்று, தன் அதிர்ச்சியை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினார்.
பாரதிக்கும், எனக்கும் ஏற்கனவே இருந்த பந்தயம் பற்றி அண்ணனிடம் விவரித்தேன். "பாரதியின் முதல் படத்துக்கு அண்ணன் ஜி.கே.வெங்கடேஷ்தான் இசையமைக்க வேண்டும். இரண்டாவது படத்துக்குகூட நான் இசையமைக்கும்படி ஜி.கே.வி.தான் சொல்ல வேண்டும்'' என்றேன்.
பாஸ்கருக்கு என் பிடிவாத குணம் தெரியும். ஒரு முடிவெடுத்தால் அதில் இருந்து என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்பதை அறிவார். அதனால் பாரதியை சந்தித்தவர், "விடு! எங்கே போயிடப்போறான்? இரண்டு மூணு நாள் விட்டுப் பிடிச்சா எல்லாம் சரியாப் போயிடும்'' என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்ன மூன்று நாள் மட்டுமல்ல... மூன்று வாரம் போனபோதும் என் நிலை அதுவாகத்தான் இருந்தது.
வாரங்கள் ஓடி மாதங்களானபோது, சகோதரர்களுக்குள் பிரச்சினை ஆகிவிட்டது. பாஸ்கரும், அமரும் (கங்கை அமரன்) என்னை பாரதி படத்துக்கு இசையமைக்க வற்புறுத்தினார்கள்.
பாரதியோ, இந்த காலக்கட்டத்தில் என்னைப் பார்க்க வரவேயில்லை. நானும் இறங்கி வருவதாக இல்லை.
ராஜ்கண்ணுவோ, "என்னாச்சு? என்னாச்சு?'' என்று என் விஷயமாய் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.
இனியும் பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த பாஸ்கர், நேராக ஜி.கே.வி.யிடம் போய்விட்டார். அவரிடம் முழு விஷயத்தையும் சொல்லியிருக்கிறார்.
ஜி.கே.வி. என்னை கூப்பிட்டு அனுப்பினார். என்னிடமும் விஷயத்தைக் கேட்டுக்கொண்டவர், "சரிடா! போ! வேலையைச் செய்''
என்றார்."இல்லண்ணா! நான் சொன்னா சொன்னதுதான்'' என்றேன்.
"என்ன, சொன்னா சொன்னதுதான்! நான் இசையமைக்கச் சொன்னாத்தான் பாரதி படத்துக்கு இசையமைப்பேன்னு சொல்லியிருக்கே அதானே?'' ஜி.கே.வி. கேட்க, "ஆமா! அதுமட்டுமில்ல. பாரதிக்கு முதல் படம் நீங்கதான் இசையமைக்கணும். இரண்டாவது படத்தைக்கூட நீங்க சொன்னாத்தான் நான் இசையமைக்கறதா ஐடியா.''
அவருக்கு கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது. "என்னடா இதெல்லாம், சின்னப்பசங்க மாதிரி! நான்தான் சொல்றேனில்லே... போடா, போய்ச் செய்'' என்றார். இதற்குப்பிறகும் மறுக்க முடியவில்லை. ஒத்துக்கொண்டேன்.
பாடல் பதிவுடன் பூஜை என்று முடிவு செய்யப்பட்டது. கம்போசிங்கிற்காக ராஜ்கண்ணுவின் ஆபீசுக்குப் போனேன்.
பூஜைப் பாடலாக, சப்பாணியை வெறுத்து வந்த மயிலுக்கு மனமாற்றம் ஏற்பட்டு, அந்த மனமாற்றம் சப்பாணிக்கும் தெரிய வருகிற ஒரு பாடலை கம்போஸ் செய்யலாம் என்று பாரதி சொன்னார்.
இதற்கிடையில், என்னுடைய ஒரு டிïனை என்னைக் கேட்காமல் பாரதியிடம் பாஸ்கர் பாடிக்காட்டி, "ஓ.கே''யும் செய்து வைத்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது. கம்போசிங் தொடங்கும் முன்பு அதைப் பாடிக்காட்டச் சொன்னார்கள்.
`சும்மா கேட்பதற்காகத்தான் போலிருக்கிறது' என்று எண்ணி நான் அந்த டிïனை பாடிக்காட்டினேன்.
"இதுவே போதும். இது ஓ.கே'' என்றார் பாரதி.
அந்த டிïனை பஞ்சு சார் (பஞ்சு அருணாசலம்) ஏற்கனவே அவரது `கவிக்குயில்' படத்துக்கு "ஓ.கே'' செய்து இருக்கிறார்.
இப்போது இவர்களும் "ஓ.கே'' சொல்லியிருக்கிறார்கள்!
எனக்கு மனசுக்கு கஷ்டமாயிருந்தது. என் இக்கட்டான நிலையை பாரதியிடம் விளக்கினேன்.
பாரதியோ, "பாஸ்கர் இதை பாடிப்பாடி அதற்கேற்ப எப்படி எப்படி `ஷாட்ஸ்' எடுக்கவேண்டும் என்று மனதில் நிறைய கற்பனைகளை செய்து வைத்துவிட்டேன்'' என்றார். அதோடு, "நான் நினைத்திருக்கும் அந்தக் காட்சிக்கு இதுபோல எந்த டிïனுமே அமையாது'' என்றும் உறுதிபடக் கூறிவிட்டார்.
நான் விடவில்லை. "அது எப்படி பாரதி? நான் பஞ்சு சார் செலக்ட் பண்ணின டிïனை `இது பாரதிக்கு வேணுமாம்' என்று எப்படிச் சொல்வேன்? இதைவிட நல்லா டிïனா உனக்குப் போடறேன்'' என்றேன்.
பாரதி வேண்டா வெறுப்பாக, "ம்... ம்... உன் இஷ்டம்'' என்றார்.
டிïன் கம்போஸ் செய்யத் தொடங்கியபோது, உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தார். என்ன பாடினாலும் கவனிக்காமல் சிரத்தையின்றி இருந்தார். கடைசியாக ஒரு டிïனை அடிக்கடி பாடிக்காட்டி "இது நல்லா வரும்'' என்றேன்.
பாரதி அரை மனதுடன்தான் அந்த டிïனுக்கு `ஓ.கே' சொன்னார். பாடலை எழுத கவிஞர் கண்ணதாசனை அழைக்கலாம் என்று
சொன்னேன்."கவிஞருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ? அதற்கு புரொடிïசர் என்ன சொல்வாரோ?'' என்றார், பாரதி. "அதை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றேன்.
கவிஞர் அப்போது ஒரு பாட்டுக்கு ஆயிரமோ ஆயிரத்து ஐநூறோ வாங்கிக் கொண்டிருப்பார். நான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம், "இது சின்னக் கம்பெனி படம். பாட்டுக்கு 750 ரூபாய் வாங்கிக்கச் சொல்லுங்க'' என்றேன்.
இந்நிலையில், காவியமானவரின் முன்னாள் மாமியார் அவரைப் பற்றி கூறிய ஒரு குற்றச்சாட்டு தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால், காவியமானவர் மூன்றெழுத்து நடிகர் மட்டுமில்லாமல், சாமியார் மற்றும் பல ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்தாராம். இதுதான் அவரின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், தன்னுடைய மகனை விருப்பமில்லாமலேயே காவியமானவர் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மகனை திருமணம் செய்துகொண்ட பிறகும், மூன்றெழுத்து நடிகருடன் மிகவும் நெருக்கமாக காவியமானவர் பழகி வந்ததாகவும் அவர் அந்த குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், முன்னாள் மாமியாரின் குற்றச்சாட்டை காவியமானவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லையாம். தற்போது தனது காதல் கணவருடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறாராம்.
இப்படத்தின் கதையை பற்றி இயக்குனர் கூறும்போது, கதாநாயகன் முத்துராமலிங்கத்தின் தந்தை சிலம்பம் கற்று தரும் பள்ளி நடத்தி வருபவர். ஒரு சமயம் திருநெல்வேலியில் நடக்கும் சிலம்பம் போட்டியில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதில் கதாநாயகன் எதிரிகளை தாக்குகிறார்.
இதனால், வில்லன் காவல்துறையில் புகார் செய்ய, கைது செய்ய வரும் காவல் துறை அதிகாரிக்கும், கதாநாயகனின் தந்தைக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன்பிறகு, தந்தையோடு தலைமறைவாகிறார் கதாநாயகன். இவர்களை கைது செய்ய வரும் தனிப்படை போலீஸ் அதிகாரி அவர்களை பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைகிறார்.
கதாநாயகனோடு சிலம்பம் சண்டை செய்து ஜெயித்தால் அவனை கைது செய்யலாம் என கதாநாயகி சவால்விட, இந்த போட்டியில் அதிகாரியும், கதாநாயகனும் களம் இறங்குகிறார்கள். அதில் கதாநாயகன் வெற்றியடைந்து ஊரையும் தந்தையின் மானத்தையும் காப்பாற்றுகிறார். இதுதான் படத்தின் மொத்த கதை என்று கூறுகிறார்.
படத்தில் காவல்துறை அதிகாரியாக வம்சி கிருஷ்ணாவும். அவருக்கு சிலம்பம் பயிற்சி கொடுப்பவராக பெப்சி விஜயனும், மேலும், கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக நெப்போலியனும் நடித்துள்ளனர். இப்படத்தின் நாயகி ப்ரியா ஆனந்த் +2 படிப்பவராக வருகிறார். படம் முழுக்க பாவடை, தாவணியில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முத்துராமலிங்க தேவரைப் பற்றிய ஒரு பாடல் உள்ளது. அந்த பாடலை கமல்ஹாசன் பாடிக் கொடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
அதனால், படத்தில் உள்ளவர்கள் அனைவரும் நெல்லை தமிழில்தான் பேசுவார்களாம். மேலும், அங்கு நடக்கும் சிலம்பம் சண்டையையும் இப்படத்தில் மையப்படுத்தி காட்டியிருக்கிறார்களாம். சிலம்பம் கற்றுக் கொள்வதற்காக மிகுந்த சிரத்தை எடுத்து கற்றுக் கொண்டுள்ளார் கவுதம் கார்த்திக்.
இந்நிலையில், இப்படத்தில் கங்கணா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்? என்ற பெரிய கேள்வி எழுந்து வந்தது. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படம் ரீமேக்காக இல்லாமல் தமிழுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களையும் செய்யவிருக்கிறார்களாம். திருமணத்திற்கு முதல் நாள் நாயகியின் திருமணம் நின்றுபோக, தனது தேனிலவிற்கு வாங்கிய டிக்கெட்களை எடுத்துக் கொண்டு கதாநாயகி வெளிநாடு போகிறாள். அந்தப் பயணத்தில் ராணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, மீண்டும் இந்தியா திரும்பும் நாயகி திருமணம் குறித்து எடுக்கும் முடிவு ஆகியவை தான் படத்தின் கதை.
கடந்த 2014ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருது இப்படத்திற்கு கிடைத்தது. மேலும் இப்படம் ரூ. 110 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.
மேலும், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமி நாதன், ஊர்வசி, மன்சூர் அலிகான், மயில்சாமி என ஒரு நகைச்சுவை பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்திற்காக சமீபத்தில் சென்னையில் அதிரடியான ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
இந்த சண்டைக் காட்சியில் வில்லனாக நடிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுடன் சந்தானம் மோதுவது மாதிரியான ஒரு சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர். இதில் டூப் இல்லாமல் மேலிருந்து கீழே தலைகீழாக தொங்கியும், மிக உயரத்திற்கு ஜம்ப் செய்தும் நடித்து யூனிட் ஆட்களின் கைதட்டலை பெற்றுள்ளார். சந்தானம் கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கத.
இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, நடிகர் சங்கத்தின் அறக்கட்டளையில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோரை சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சரத்குமார், ராதாரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், ‘சரத்குமார், ராதாரவி ஆகியோர் தற்காலிகமாக சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது நேற்று நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், இவர்கள் இருவரையும் நிரந்தரமாக சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
எனவே, இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கு காலாவதியாகி விடுகிறது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு நீதிபதி, ‘பத்திரிகைகளில் செய்தியை இன்று காலையில் படித்தேன். அதில் சரத்குமார், ராதாரவி ஆகியோரை நிரந்தரமாக தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிப்பதாக கூறப்பட்டிருந்தது. நிரந்தரமாக நீக்கப்பட்ட பின்னர், இடை நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிலுவையில் வைத்திருக்க முடியாது.
எனவே, அந்த வழக்கை முடித்து வைக்கிறேன். அதே நேரம், நிரந்தரமாக தங்களை நீக்கி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் புதிதாக வழக்கு தொடரலாம்’ என்று கூறினார்.
மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி அனைவருடைய வரவேற்பையும் பெற்ற படம் ‘காக்கா முட்டை’. இதில் சிறுவர்கள் விக்னேஷ்-ரமேஷ் இருவரும் அந்த படத்தில் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்ற பெயரில் அண்ணன்-தம்பியாக நடித்தார்கள்.
இதையடுத்து சமுத்திரக்கனி இயக்கி நடித்த ‘அப்பா’ படத்தில் விக்னேஷ் நடித்தார். ரமேஷ் தற்போது தயாராகி வரும் ‘டெய்லி பேப்பர்’ என்ற படத்தில் பேப்பர் போடும் சிறுவனாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
அடுத்து கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்தில் விக்னேஷ், ரமேஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்போது இவர்கள் மலையாளப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்கள்.
‘காக்கா முட்டை’ பாணியில் வித்தியாசமான கதையில் உருவாகி வரும் இந்த படத்திலும் இரண்டு பேரும் அண்ணன்-தம்பியாகவே நடிக்கிறார்கள். கடந்த 15-ந் தேதி முதல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விக்னேஷ்-ரமேஷ் இருவரும் கேரளாவில் தங்கி இருக்கிறார்கள்.
அதன் முழு விவரம் கீழே வருமாறு,
- பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் அதுபற்றி பலமுறை கேட்டும் எந்த விளக்கமும் அளிக்காமல் இருக்கும் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் செயற்குழுவால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள்.
- சங்க உறுப்பினர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது. மேலும் வயது வரம்பும் தளர்த்தப்படுகிறது.
- சங்கத்தோடு எந்த தொடர்பும் இல்லாத 67 உறுப்பினர்களும் அவர்கள் தங்களுடைய உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பாக பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கவேண்டும். அதன்பிறகும் அவர்கள் புதுப்பிக்க வில்லை என்றால் சங்கத்தை விட்டு நீக்கப்படுவர்.
- சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சிஎம்டிஏ அனுமதி கிடைத்ததும் டெண்டர் விடப்பட்டு கட்டிட பணி தொடங்கப்படும். 3 வருட காலத்திற்குள் கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
- சங்க அறக்கட்டளை விதிமுறைகளில் திருத்தம் செய்து தங்களை நிரந்தர அறங்காவலர்களாக நியமித்துக் கொண்ட முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் அறக்கட்டளையில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
- சங்கத்தின் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், சங்க விதிகளுக்கு முரணாகவும், எதிராகவும் நடப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
- தற்போது சங்கத்தில் 8.5 கோடி ரூபாய் இருப்பில் உள்ளது. மேலும், கட்டடம் கட்ட நிதி திரட்ட திரைப்படம் தயாரிப்பாது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முயற்சிக்கப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இவர் அவ்வப்போது தனது மாற்றுத்திறனாளி மாணவர்களை தனது படங்களிலும் டான்ஸ் ஆட வைத்து அவர்களுக்கு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறார். கடைசியாக ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா’ படத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். தெலுங்கு படங்களிலும் தனது மாற்றுத் திறனாளி மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் ‘சிவலிங்கா’ படத்தின் அறிமுக பாடலுக்கு மாற்றுத் திறனாளி மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடனம் ஆடப்போவதாக ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது படமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
‘சிவலிங்கா’ படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். சக்தி வாசுதேவன், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். எஸ்.தமன் இசையமைக்கிறார். கன்னடத்தில் பி.வாசு இயக்கிய ‘சிவலிங்கா’ படமே தமிழிலும் ‘சிவலிங்கா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
அதன் முன்னாள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், தியாகராஜபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, ஜெமினி கணேசன், நாகேஷ், சாவித்திரி உள்பட மறைந்த நடிகர்-நடிகைகளின் உருவப்படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சச்சு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு அழைப்பு இல்லை. அவர்களுடைய ஆதரவாளர்கள் கருப்புச்சட்டை அணிந்து பொதுக்குழுவுக்கு வந்திருந்தனர். நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டையும், அழைப்பிதழும் வைத்திருந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நடிகர் சங்க நுழைவுவாயிலில் போலீசாரும், தனியார் பாதுகாவலர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். கூட்டம் தொடங்கியதும் அழைப்பிதழ் இல்லாத சிலர் உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.
வாசலில் இருந்தவர்கள் அழைப்பிதழ் இருந்தால் தான் அனுமதிக்க முடியும் என்று தடுத்து நிறுத்தினார்கள். இந்தநிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளினார்கள். திடீரென்று பயங்கரமாக கைகலப்பில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடிகர் கருணாசின் கார் கண்ணாடியை சிலர் கல்வீசி உடைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்தனர்.
பின்னர் ரகளையில் ஈடுபட்டதாக 19 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பதற்றமான சூழ்நிலை நிலவியதை தொடர்ந்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்தநிலையில் தனது கார் உண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக கருணாஸ் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவடியை சேர்ந்த பிரபு என்பவரை கைது செய்தனர்.
கருணாஸ் தனது ஆதரவாளர்களை ஏவி தன்னை தாக்கியதாக பிரபுவும் தனியாக புகார் அளித்துள்ளார்.
விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலின் அலுவலகம் விருகம்பாக்கம், குமரன் காலனி, 1-வது தெருவில் உள்ளது. அந்த அலுவலகத்தின் வெளியே காவலுக்கு நின்றுகொண்டு இருந்த காவலாளி நேற்று மாலை திடீரென அய்யோ என்று அலறினார். சத்தம் கேட்டு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்த ஊழியர்கள் வெளியே வந்து பார்த்தபோது காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் 5 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்தின் மீது கற்களை வீசிவிட்டு அந்த காரிலேயே தப்பிச் சென்றனர்.

இதில் அலுவலக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த காரின் பின்பக்கத்தில் இருந்த விளக்கு கண்ணாடி உடைந்தது. கல்வீசி தாக்கிய மர்ம நபர்களை விஷாலின் மேனேஜர் சந்தானம் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றார். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த அலுவலகத்தில் வீசப்பட்ட கல்லையும் போலீசார் கைப்பற்றினர்.
நடிகர் சங்க பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட விரோதம் காரணமாக விஷால் அலுவலகத்தில் கல்வீச்சு நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








