என் மலர்
மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாததால் அனைத்துத் துறைகளிலும் கடும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரூபாய் நோட்டு விவகாரம் தமிழ்த்திரை உலகிலும் கடும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கையில் சில்லரை பணம் குறைந்து போனதால் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது தியேட்டர்களின் வருவாயில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து புதிய படங்கள் வெளியிடப்படுவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட்டில் தயாரான படங்களின் ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தினசரி சம்பளம் கொடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. இது படப்பிடிப்புகளை முடக்கிப் போட்டுள்ளது.
இதன் காரணமாக திரை உலகில் நிலவும் பணப்பரிவர்த்தனை முடங்கி உள்ளது. இது ரூ.1,250 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை சகஜ நிலைக்கு வர இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் தமிழ்த்திரை உலகம் மேலும் சில ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது.
இதனால் தனது அடுத்தடுத்த கதைகளை மிகவும் கவனத்துடன் விஜய் சேதுபதி தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படமொன்றில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங்கும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 'பீட்சா', 'சூது கவ்வும்', 'இறைவி', 'ஜிகர்தண்டா' ஆகிய படங்களில் விஜய் சேதுபதி-பாபி சிம்ஹா இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கில் நடித்த முதல் படம் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்து வந்த ஹேப்பி டேஸ் வெற்றிகரமாக ஓடி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது. பாகுபலி படத்தில் நடித்த பிறகு எல்லோரும் என்னை திரும்பி பார்த்தனர். இவ்வளவு உயரத்துக்கு வந்த நான் சிறு வயதில் இருந்து பயணப்பட்டு வந்த தூரங்களை நினைவுபடுத்தி பார்க்கும் போது வியந்து போகிறேன்.
எனது தந்தை கப்பலில் வேலை செய்ததால் அதிக நாட்களை கடலிலேயே கழித்தார். அதன்பிறகு அந்த வேலையை விட்டு விட்டு நகை வியாபாரத்தில் இறங்கினார். அம்மாவும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து நான் பிறந்ததும் எனக்காக வேலையை விட்டுவிட்டார். அவருடைய தியாகம் எப்போதும் என் மனதில் இருக்கிறது. பள்ளியில் படித்தபோது நாடகமொன்றில் நடித்தேன். அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நாடக குழுவில் சேர்ந்தேன்.
நடிப்பவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து யோகா கற்க ஆரம்பித்தேன். நான் படித்த பள்ளிக்கு நடிகை ராணிமுகர்ஜி உள்பட நிறைய திரையுலக பிரபலங்கள் வந்தனர். அவர்களை பார்த்து நடிப்பில் எனக்கு மேலும் தீவிரமான பற்று ஏற்பட்டது. எனது அம்மாவும் நீ ஒரு நாள் மிஸ் இந்தியா ஆவாய் என்று பேசி வந்தார். தொடர்ந்து நடிப்பு பயிற்சி எடுத்தேன். நடனமும் கற்றேன். அதன்பிறகு முழு நேர நடிகையாகி விட்டேன்.
தென்னிந்திய மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டேன். சினிமாவில் வெற்றி-தோல்வியை சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலர் சொல்வதை கேட்டு இருக்கிறேன். அது யாராலும் முடியாது. வெற்றியில் சந்தோஷப்படுவதும் தோல்வியில் கவலைப்படுவதும் மனிதர்களுக்கு உள்ள இயற்கையான குணம். நான் நடித்த படம் தோல்வி அடைந்தால் எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும். எனது படங்கள் தோல்வி அடையும் போதெல்லாம் நான் துவண்டுபோகிறேன்.
கஷ்டப்பட்டு நடித்தும் சரியாக போகவில்லையே என்ற வேதனை இருக்கும். வெற்றி வரும்போது பலருக்கு கர்வம் ஏற்படும். ஆனால் அனுபவம் வரவர அது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.”
இவ்வாறு தமன்னா கூறினார்.
இவர் ஏற்கனவே சில பக்திப்பாடல்களையும், திரை இசை பாடல்களையும் பாடி இருக்கிறார். இசை ஆல்பம் ஒன்றில் பாடி, நடனம் ஆட வேண்டும் என்பது இவரது நீண்டநாள் கனவாக இருந்திருக்கிறது. தற்போது, 74 வயது நடிகர் அமிதாப்பச்சனுடன் சேர்ந்து கனவை அவர் மெய்ப்பித்துவிட்டார்.
மும்பை ஓபரா ஹவுசில் நடிகர் அமிதாப்பச்சனும், அம்ருதா பட்னாவிசும் சேர்ந்து இசை ஆல்பம் ஒன்றுக்கு நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அமிதாப்பச்சன் தன்னுடைய டுவிட்டரில் தகவல் வெளியிட்டிருக்கிறார்.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளிகிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரியவந்ததுமே எனக்கு கொஞ்சம் கவலையாகி விட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடியவேண்டுமே.
ரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.
ஸ்வரத்தை பாடலின் வரிகள் மேல் எழுதிப் பாடினார். அதுதான் "சின்னக்கண்ணன் அழைக்கிறான்'' என்ற பாட்டு.
பாடலைப் பாடியவர், "இதுதான் புதிது. சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைந்திருக்கும் இசையில் `ஸகரிக மரினி' என்று ஆரோகணபரமான பிரயோகத்தை - அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே! அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சாதாரணமாக கர்நாடக கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாடமாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே'' என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப்படுத்திய நிகழ்ச்சி இது.
ஓரளவு படங்கள் வந்து, ஓய்வில்லாத வேலைகள் தொடர்ந்தன. இருந்தாலும் நானும், பாஸ்கரும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில்தான் இருந்து வந்தோம்.
ரெக்கார்டிங்குக்கு நான், அமர், பாஸ்கர் மூவரும் டாக்சியில்தான் போவோம்.
ஒருநாள் வீட்டில் இருந்து மூவரும் டாக்சியில் கிளம்பினோம். மந்தைவெளி வழியாக, நந்தனம் மவுண்ட்ரோடு கிராசிங்கில், சிக்னலுக்காக காத்திருந்தோம். காலை 6-30 மணி இருக்கும். அப்போது பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது.
அதில் முன் சீட்டில் சாண்டோ சின்னப்பதேவர் கையை கார் கதவில் வைத்தபடி உட்கார்ந்திருந்தார். அப்படியே பக்கத்தில் நின்றிருந்த எங்கள் டாக்சியை கவனித்தார். என்னை பின்சீட்டில் பார்த்து ஆச்சரியப்பட்டு, "ஏய் கேவலப்படுத்தாதீங்கப்பா'' என்றார்.
எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. தொடர்ந்து அவரே பேசினார்.
"என்னப்பா நீங்க! இவ்வளவு பெரிய பேர் எடுத்திட்டு டாக்சியிலே போறீங்களேப்பா! கேவலப்படுத்தாதீங்க. சீக்கிரமா ஒரு கார் வாங்குங்கப்பா'' என்றார்.
இதற்குள் சிக்னல் கிடைத்துவிட, "சரிங்க அய்யா'' என்று விடைபெற்றோம்.
அதற்கும் முதல் வாரம்தான் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் கையால் `கலைமாமணி' விருது வாங்கியிருந்தேன்.
அங்குதான் தேவர் அவர்களிடம் என்னை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.
நான்தான் இளையராஜா என்று அவரால் நம்பமுடியவில்லை. என்னை மேலும் கீழுமாக பார்த்துக் கொண்டே இருந்தார்.
அப்போது பார்த்து நடிகை கே.ஆர்.விஜயா அங்கு வர, "ஏம்மா, இங்க பார்த்தியா? இவருதான் இளையராஜாவாம்மா'' என்று ஆச்சரியப்படும் பாணியில் அறிமுகப்படுத்தினார்.
கலைமாமணி விருது விழாவில் நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். எங்களை தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்ததும் வணக்கம் போடுபவர்களும், மரியாதை செலுத்தும் அதிகாரிகளுமாய் வந்து போய்க்கொண்டிருந்தாலும் எங்களுடன் சர்வசாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார்.
பழகுவதில் அவரது எளிமை கண்டு எனக்குள்ளும் அவரிடம் சகஜமாகப் பேசும் ஆர்வம் எழுந்தது. நானும் சாதாரணமாக, "அண்ணே! உங்ககூட ரெயிலில் வந்தது ரொம்ப ரொம்ப மோசம்ணே'' என்றேன்.
"ம்... என்ன சொல்றே?'' தனது ஆச்சரியத்தை கேள்விக்குறியாக்கினார் எம்.ஜி.ஆர்.
"ஆமாண்ணே! அன்னைக்கு மதுரை பாண்டியனில் நீங்க மதுரைக்குப் போனப்போ, அதே வண்டியில் நானும் இருந்தேண்ணே.''
"ஆமாமா? எனக்கும் சொன்னாங்க'' என்று சொன்ன எம்.ஜி.ஆர், "ஆமா அதுல என்ன மோசம்'' என்று திருப்பிக் கேட்டார்.
"இல்லண்ணே! நீங்க அந்த ரெயிலில் வர்றது வெளியே தெரிஞ்சு, காலையில் ரெயில் சோழவந்தான் விட்டுக் கிளம்பும்போது, ரசிகர்கள், வண்டி கிளம்பவும் செயினைப் பிடித்து இழுத்து நிறுத்தி உங்களைப் பார்க்க ஆர்வத்தோடு அவங்க செய்த கலாட்டா...''
நான் சொல்லி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார். "ம்... ம்... அப்புறமா?'' என்று கேட்டார்.
"இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒருமுறை செயினைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்துவதும், நீங்கள் கையைக் காட்டியவுடன் விட்டு விடுவதுமாக இருந்தார்கள். இப்படி காலையில் 6 மணியில் இருந்து 7 மணிக்குள் மதுரை வரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் அன்றைக்கு காலை 10 மணிக்குத்தானே மதுரைக்கே வந்து சேர்ந்தது.''
நான் இப்படிச் சொன்னதும், "ஆமா தம்பி... மக்கள் அவ்வளவு ஆர்வமா இருந்தா நாம என்ன செய்யமுடியும்?'' என்று மக்கள் தன் மீது வைத்திருந்த அன்பை சிலாகித்தபடி சொன்னார் எம்.ஜி.ஆர்.
இதற்குள் விழா தொடங்கி விட்டது. எம்.ஜி.ஆர். கையால் கலைமாமணி விருது வாங்கினேன்.
தேவர் அன்றைக்கு என்னைப் பார்த்தவர், இப்போது வாகனப் பயணத்தின்போது மறுபடியுமாக என்னைப் பார்க்கிறார். டாக்சியில் நாங்கள் வருவதைப் பார்த்ததும், சொந்தமாய் கார் வாங்கும் எண்ணத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து விட்டார்.
அடித்தளம் என்று உறுதியாக சொல்லக் காரணம் உண்டு.
சொந்தக்கார் விஷயத்தை நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டு `நேரம் வரும்போது அமைவது அமையும்' என்று இருந்துவிட்டேன்.
ஆனால் பாஸ்கரும், அமரும் அதை சீரியசாக எடுத்துக்கொண்டார்கள். ஜி.ராமநாதனின் உதவியாளராக இருந்த ராமச்சந்திரனின் தம்பி டி.பி.துரைமணி ரிலையன்சில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் போய் கார் வாங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டார்கள்.
அது டி.எம்.டபிள்ï 3335 என்ற அம்பாசிடர் கார்.
என் ஆர்மோனியம் பெட்டி போல எனது இன்னொரு உடன் பிறப்பு.
படங்கள் அதிகமானதால் உதவியாளர் தேவைப்பட்டது. பாஸ்கரின் நண்பர் ஒருவர் வந்தார்.
இத்தனை காலங்களும் எங்கள் குடும்பத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு வந்த என் இளவயது உயிர்த்தோழன் எம்.சுப்பிரமணியன் அவ்வப்போது என்னைப் பார்த்துப்போக வருவதுண்டு.
அப்படி வந்த ஒரு நாள் அவரிடம், "ஏம்ப்பா! உனக்கு காலேஜில் என்ன சம்பளம்?'' என்று கேட்டேன். நான் இப்படிக் கேட்பது - சுப்பிரமணியனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். "ஐயாயிரம் ரூபாய் வாங்கறேன். என்னப்பா திடீர்னு இப்ப இந்தக் கேள்வி?'' என்று கேட்டார்.
"அதை நான் தந்தால் என்னிடம் மானேஜராக வேலை செய்ய முடியுமா?'' என்று கேட்டு விட்டேன்.
"ஏய்! என்னப்பா இது?''
"ஆமாப்பா. நாமெல்லாம் ஒண்ணா இருந்தா நல்லாயிருக்கும் இல்லையா?'' என்றேன்.
அவருக்கு திருமணமாகி குழந்தையும் இருந்தது.
அவர் ஆவடியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் புரொபசராக இருந்தார். நான் கேட்டதற்காக வேலையை விட்டுவிட்டு உடனே எங்களிடம் வந்துவிட்டார்.
தமாசுக்காக அவரை, "என்ன மானேஜர் ரெடியா? போகலாமா? அடுத்து என்ன புரோகிராம்?'' என்று நான், அமர், பாஸ்கர் மூவருமே கிண்டல் செய்வோம்.
அம்மாவும் வெற்றிலைப்பாக்கு போட்ட வாயோடு கன்னத்தில் கை வைத்தபடி எங்களை ஆச்சரியமாய் பார்ப்பார்கள். அதோடு, "அட போங்கப்பா! உங்களை பண்ணைபுரத்துல பார்த்த மாதிரி அப்படியே இருக்கு. இப்படியே கடைசிவரை இருங்கப்பா'' என்பார்கள்.
இதனால், அவர்களுக்கு எதிராக கீழ் ஜாதியைச் சேர்ந்த பார்த்திபன் போராடி, தங்கள் ஊர் தலைவரின் உடலை மேல் ஜாதியினர் பகுதி வழியாக எடுத்துச் செல்ல வழிவகை செய்கிறார். இந்நிலையில், கீழ் ஜாதியை சேர்ந்த விஷ்ணு விஷால், பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். அவரை கலெக்டர் ஆக்கவேண்டும் என்று பார்த்திபன் முயற்சி செய்கிறார்.
ஆனால், கீழ்ஜாதியை சேர்ந்த விஷ்ணுவிஷால் பெரிய ஆளாக வளர்வது மேல் ஜாதிக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. அதே நேரத்தில், மேல் ஜாதியைச் சேர்ந்த ஸ்ரீதிவ்யாவின் அப்பா, கீழ் ஜாதிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, ஸ்ரீதிவ்யாவின் அப்பாவை மேல் ஜாதிக்காரர்களே கொலை செய்துவிட்டு, அந்த கொலைப் பழியை விஷ்ணுவிஷால் மீது போட்டு, கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
பின்னர் ஜாமினில் வெளியே வரும் விஷ்ணுவிஷாலை உயர் ஜாதியை சேர்ந்த போலீஸ் அதிகாரியான ஹரிஷ் உத்தமன் மீண்டும் விசாரணை என்ற பெயரில் ஜெயிலுக்கு கொண்டு சென்று அடித்து உதைக்கிறார். இதன்பிறகு விஷ்ணு மாயமாகிறார். அவர் எங்கு சென்றார் என்று ஊரே தேட ஆரம்பிக்கிறது.
இனியும் அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது என்று மேல் ஜாதிக்காரர்களுக்கு எதிராக திட்டம் ஒன்றை தீட்டி தனது போராட்டத்தை தொடங்குகிறார் பார்த்திபன். இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? மாயமான விஷ்ணு விஷால் கிடைத்தாரா? என்பதே மீதிக்கதை.
மாவீரன் கிட்டு என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விஷ்ணு விஷாலுக்கு இப்படத்தில் கம்பீரமான கதாபாத்திரம். அதை தனது இயல்பான நடிப்பால் நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். ஸ்ரீதிவ்யா பாவாடை தாவணியில் கிராமத்து பெண் மாதிரி வந்து போயிருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.
இதுவரை பார்த்திராத புதுவிதமான பார்த்திபனை இப்படத்தில் பார்க்க முடிகிறது. ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான நடிப்பை கொடுத்து ரசிக்க வைக்கிறார். இவர்தான் முதல் ஹீரோ என்று சொல்லும்விதமாக இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இவர் பேசும் வசனங்களில் அனல் தெறிக்கிறது.
1980-களில் வேரூன்றியிருந்த ஜாதி பிரிவினையை இப்படத்தில் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் சுசீந்திரன். அவர் என்ன நினைத்தாரோ அதை சுதந்திரமாக இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார். படத்தின் பிற்பாதியில் வரும் பாடல்கள் படத்திற்கு கொஞ்சம் தொய்வை கொடுத்திருக்கின்றன. கமர்ஷியல் படத்திற்குண்டான அம்சங்கள் படத்திற்கு கைகொடுக்காவிட்டாலும் திரைக்கதையின் பலம் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. யுகபாரதியின் வசனங்கள் படத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறது.
டி.இமானின் பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் இதம். குறிப்பாக ‘இணைவோம்’ என்ற பாடலும் சரி, அதற்கான காட்சிகள் அமைத்த விதமும் அருமையாக இருக்கிறது. படத்தின் கதைக்களம் 80-களில் நடப்பதால் அந்தக் காலகட்டத்திற்குண்டான ஒளியமைப்புடன் கூடிய காட்சியமைப்புகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா.
மொத்தத்தில் ‘மாவீரன் கிட்டு’ வெற்றி பெறுவான்.
இவர்கள் திரும்பிய மறுநிமிடம் இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரை ஒரு கும்பல் வெட்டி சாய்க்கிறது. சம்பவ இடத்திற்கு வரும் போலீசார், அப்போது அந்த கடைக்கு வந்து சென்றவர்களை பற்றிய விவரங்களை கேட்கிறது. அப்போது நாயகன் மற்றும் அவரது நண்பர்களை பற்றிய தகவலை போலீசாருக்கு கடைக்காரர் கொடுக்கிறார்.
அதன்பேரில், பிரஜின் மற்றும் அவரது நண்பர்களை சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். அப்போது, அங்கு ஏற்கெனவே சந்தேகத்தின் பெயரில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் டான்ஸ் மாஸ்டர் ஜான், நிஷாந்த் ஆகியோருடன் பிரஜின் மற்றும் அவரது நண்பர்கள் நட்புடன் பழகுகிறார்கள்.
இந்நிலையில், அரசியல் பிரமுகருடன் வெட்டுப்பட்ட மற்றொருவர் ஆஸ்பத்திரியில் வாக்குமூலம் கொடுக்கும்போது, பிரஜின் நண்பர்களில் ஒருவனை சந்தேகமாக அடையாளம் காட்டுகிறார். ஆனால், போலீசார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், ஆஸ்பத்திரியில் வெட்டுப்பட்டு கிடந்த அரசியல் பிரமுகர் இறந்துபோக, போலீஸுக்கு உண்மையான குற்றவாளியை பிடிக்க நெருக்கடி வருகிறது.
இதனால் போலீஸ் வேறு வழியில்லாமல் பிரஜினின் நண்பனையே குற்றவாளியாக காட்ட போலீஸ் முடிவெடுக்கிறது. இதனால், அவனை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு மற்றவர்களை விடுவிக்கின்றனர். இந்நிலையில், போலீஸ் உயரதிகாரியாக வரும் ரிச்சர்ட், பிரஜினின் நண்பன் உண்மையான குற்றாவளி இல்லை என்று அறிந்து, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். மறுமுனையில் தனது நண்பனை மீட்பதற்காக பிரஜினும், நிஷாந்தும் உண்மையான குற்றவாளியை தேடி புறப்படுகிறார்கள்.
இறுதியில், யார் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தார்கள்? போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பிரஜினின் நண்பன் வெளியே வந்தானா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
பிரஜின் வடசென்னை வாலிபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். அவரது நண்பர்களாக வருபவர்களும் இயல்பாக வந்து நடித்து கொடுத்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் ரிச்சர்ட் கம்பீரமும், போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மாஸ்டர் ஜான் லுங்கி கட்டிக்கொண்டு வடசென்னை ஏரியா தாதாவாக பளிச்சிடுகிறார். நிஷாந்த் வழக்கம்போல தனது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். கருணாஸின் கெட்டப் மற்றும் அவரது நடிப்பும் பலே சொல்ல வைக்கிறது.
ஆக்ஷன், திரில்லர் படமாக இருந்தாலும், காதல், காமெடி என அனைத்தையும் அளவாக சேர்த்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி. தான் சொல்ல வந்ததை ரொம்பவும் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். நாயகியிடம் நாயகன் காதலை சொல்லும் காட்சிகள் புதுமையாக இருக்கிறது.
இசையமைப்பாளர் ஜுபினின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் கிளைமாக்ஸ் வரை பின்னணி இசையால் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். பாடல்களிலும் தாளம் போட வைக்கிறார். ஒளிப்பதிவாளர் பாரூக் வண்ணாரப் பேட்டையின் மூலை முடுக்குகளையெல்லாம் நன்றாக படமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தல் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ புதுசு.
அதேபோல், நாயகனுக்கு ஒரு குணாதிசயமும் உண்டு. அது என்னவென்றால், எந்த விஷயத்தை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ, அந்த விஷயத்தை அவர் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இப்படியாக, அவரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில், ஒருநாள் சாலையின் ஓரத்தில் இளநீர் குடித்துக் கொண்டு நிற்கும் இவரை பார்க்கும் நாயகி ஆர்ஷிதா, இவர் இளநீர் குடிக்கும் அழகை பார்த்து சிரித்து விடுகிறாள்.
அந்த சிரிப்பை பார்க்கும் நாயகனுக்கு அவள் மீது காதல் வருகிறது. அன்றுமுதல் அவளை பின்தொடர்வதையே வேலையாக இருந்து வருகிறார் நாயகன். தன் பின்னாலேயே சுற்றுவதால் நாயகி, பொறுத்துக் கொள்ளமுடியாமல் அவளை பலமுறை எச்சரிக்கிறார். செருப்பை எடுத்துக் காட்டி அவமானப்படுத்துகிறாள். ஆனால், இதையெல்லாம் நாயகன் கண்டுகொள்வதாக இல்லை.
ஒருபடி மேலே போய் நாயகனின் அப்பாவான பட்டிமன்றம் ராஜாவிடம் போய் புகார் செய்கிறார். அவருடைய பேச்சையும் நாயகன் கேட்பதாக இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கொடுத்தும் நாயகன் எதற்கும் அடங்கிய பாடில்லை. கடைசியில், நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாத நாயகி என்ன முடிவெடுத்தாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் முழுக்க வடசென்னையில் நடக்கிறது. வடசென்னையில் வாழக்கூடிய சில இளைஞர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் நாகராஜன். ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் எந்த பெண்ணை எப்படியாவது டார்ச்சர் செய்து, அவளை காதலிப்பதற்கு ஒத்துக் கொள்ள வைக்கும் இளைஞனின் அலுச்சாட்டியத்தை இப்படத்தில் காமெடியாக சொல்லியிருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வில் முதல் வெற்றி பெற்றுவிட்டார். மேலும், அவர்களை அழகாக வேலை வாங்கியிருப்பதும் நன்றாக தெரிகிறது.
நாயகன் ரிஜன் சுரேஷ் வடசென்னை இளைஞனுக்குண்டான தோற்றத்துடன் படம் முழுக்க தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். சினிமா பைத்தியமான இவர் எந்த இடத்திற்கு சென்றாலும் சினிமா டயலாக்கே பேசுவது ரசிக்க வைக்கிறது. போலீஸ் ஸ்டேஷனிலும் ரஜினி ஸ்டைலில் இன்ஸ்பெக்டரையே எதிர்த்து கேள்வி கேட்பது, இவருடைய டார்ச்சர் தாங்க முடியாத போலீஸ்காரர் அவரை என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பது என படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.
வசனங்கள் பேசும் ஸ்டைலிலும் இவர் ரசிக்க வைக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருந்தியிருக்காரா? அல்லது இவரை இயக்குனர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறாரா? என்பதுபோல் இருக்கிறது. நாயகி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாமல் தவிக்கும் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு ஓகே சொல்ல வைக்கிறது. பட்டிமன்றம் ராஜா வழக்கமான கண்டிப்பான அப்பாவாக வந்து மனதில் பதிகிறார்.
படத்தில் நாயகனுக்கு நண்பர்களாக வருபவர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படம் ஆரம்பத்தில் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரியாத மாதிரி இருக்கும். ஆனால், நாயகனின் கோமாளித்தனமான கதாபாத்திரத்தை உணர்ந்து இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக அனைவரும் ரசித்து மகிழலாம்.
ரஜின் மகாதேவ் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக, ‘வியாசர்பாடி அண்ணா கேடி’ பாடல் துள்ளி ஆட்டம் போட வைக்கிறது. ‘என் தேவதையோட’ பாடல் மெலோடியாக வந்து தாலாட்டுகிறது. பின்னணி இசையிலும் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். கல்யாண் ராமின் ஒளிப்பதிவும் ரசிக்க வைத்துள்ளது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ அழகு.
எமிஜாக்சன் முன்பு இந்தி நடிகர் பிரத்தீக்பாபரை காதலித்ததாக கூறப்பட்டது. இப்போது, சல்மான்கானை காதலிப்பதாக இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி எமிஜாக்சன் கூறியதாவது:-
‘‘நான் தற்போது தனியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். யார்தான் சல்மான்கானை ‘டேட்’ செய்யமாட்டேன் என்பார்கள்? சல்மான் எனது நல்ல நண்பர். எனக்கு நம்பிக்கை அளிப்பவர். ஒரு நண்பராக பாலிவுட்டில் வழிகாட்டி வருகிறார். சல்மான்கான் எவ்வளவு அழகாக உடலை பராமரித்து வருகிறார். அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன்.
சல்மான் தற்போது அவரது உடல் எடையை ஒரே மாதத்தில் 20 கிலோ குறைத்திருக்கிறார். எப்படி இது முடிந்தது என்று ‘2.0’ இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த அவரிடம் கேட்டேன். அந்த அளவு தன்னை அருமையாக பராமரிக்கிறார். நட்புடன்தான் பழகுகிறேன்’’.
‘மனிதன்’ படத்துக்கு பிறகு கதை கேட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வருகிறார்.
இதில் எழில் இயக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. இது உதயநிதி ஸ்டாலின் சொந்தமாக தயாரிக்கும் படம். மற்றொன்று ‘பொதுவாக எம் மனசு தங்கம்’. இது அறிமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கும் படம். இதை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவை தவிர லைகா படநிறுவன தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதை கவுரவ் இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டனர். ஏற்கனவே உதயநிதி நடிப்பில் வெளியான ‘மனிதன்’ படம் ரஜினி பட தலைப்பு. இப்போது நடிக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ ரஜினி பேசிய வசனம். ‘பொதுவாக என் மனசு தங்கம்’ ரஜினி பாடல் வரிகள். எனவே பெயர் சூட்டப்படாத படத்துக்கும் ரஜினி தொடர்பான பெயர் வைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
“நடிகர் தனுஷ் எனது மகன்தான். இதில் சந்தேகம் இல்லை. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கு 4 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் கிடைத்தது. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது. எங்களுக்கு செல்வராகவனும் தனுசும் மகன்களாக பிறந்தார்கள். ஒரு மகளும் உள்ளார். செல்வராகவனுக்கு நடிக்க ஆசை இருந்தது. ஆனால் அவர் இயக்குனராகி விட்டார்.
தனுசுக்கு நடிப்பில் விருப்பம் இல்லை. பள்ளியில் தனுஷ் படித்துக்கொண்டு இருந்தபோது ‘துள்ளுவதோ இளமை’ படத்தை எடுக்க தயாரானேன். அந்த படத்தில் தனுசை நடிக்க வைக்க முடிவு செய்தேன். தனுசிடம் அதில் நடிக்கும் படி கேட்டபோது எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று சொல்லி ஒதுங்கினார். ஆனாலும் வற்புறுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தேன்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் வாழ்க்கையில் இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. பெயர் புகழ். பணம் எல்லாம் வந்து விட்டது. ஆனாலும் அப்போதைய மகிழ்ச்சி இல்லை. யாரோ ஒருத்தர் தனுசை எனது மகன் என்கிறார். தனுஷ் எனது மகன். என்னுடைய மகனேதான்.”
இவ்வாறு கஸ்தூரி ராஜா பேசினார்.
சமீபத்தில் குஷ்பு நடத்திய பஞ்சாயத்தில் தகராறு மூண்டு அதில் கலந்து கொண்ட ஒருவரை அவர் சட்டையைப் பிடித்து இழுத்து அடிக்க பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிகளுக்கு தற்போது திடீர் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நடிகைகள் பஞ்சாயத்தை விமர்சித்து நடிகை ஸ்ரீப்ரியாவும் கருத்து வெளியிட்டார். அவர் கூறும்போது, “குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்த நடிகைகளுக்கு தகுதி இல்லை. குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வக்கீல்களும், நீதிபதிகளும் இருக்கிறார்கள்.” என்றார்.
தற்போது முதல் மரியாதை, கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம், உரிமை கீதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள முன்னாள் கதாநாயகி ரஞ்சனியும், குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணனை கண்டித்து உள்ளார்.
டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-
கவுன்சிலிங் கொடுக்கிறேன் என்று பல்வேறு மொழிகளில் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதனை வெட்கக்கேடான நிகழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன். தாக்குதல், பாலின பாகுபாடு, பொதுமக்களுக்கான தொல்லைகளாகவே இவை இருக்கின்றன. நடிகைகள் இந்த நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதன்மூலம் குடும்ப கவுரவம் குறைக்கப்படுகிறது. அப்பாவிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.
ஏழைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு நடிகைகளுக்கு தகுதி இல்லை. அந்த பணிகளை செய்ய தொண்டு அமைப்புகளும் கோர்ட்டுகளும் இருக்கின்றன. நடிகை குஷ்பு இந்த பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து ஆவேசமாக பேசி இருக்கிறார். இதுதான் கவுன்சிலிங்கா? அந்த நபர் கோர்ட்டுக்கு செல்லும் முன்பு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு, லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்
இந்த பிரச்சினை குறித்து நிகழ்ச்சியிடமும், எங்களிடமும் நம்பிக்கை இருப்பதால்தான் எங்களை தேடி மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதுதான் எங்கள் நோக்கம். ஒருசில விஷயங்களை போலீசிடம் ஒப்படைப்போம், ஒருசில விஷயங்களுக்கு வக்கீலை ஏற்பாடு செய்து தருகிறோம்.
ஸ்ரீப்ரியா, தொகுப்பாளரின் ஆடை ஆடம்பரத்தை பற்றி பேசியிருக்கிறார். அரைகுறையாக ஆடை அணிந்து ஒழுக்கமில்லாமல் உடலைகாட்டி உட்காருவதுதான் தவறு. ‘டீஸண்டாக’ நல்ல ‘டிரஸ்’ பண்ணியிருப்பதில் எந்த தவறும் இல்லை. அதனால், அவர் என்னுடையை ஆடை அலங்காரத்தை குறித்து பேசக்கூடாது.
இவ்வாறு லட்சுமி ராம கிருஷ்ணன் கூறியுள்ளார்.








