என் மலர்
இளையராஜா, திரைப்பட இசை அமைப்பில் பல புதுமைகளை செய்தார். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அதனால் தினமும் 4 மணி நேரமே அவர் தூங்கினார்.

தன் வாழ்க்கைப்பாதையைப் பற்றி இளையராஜா கூறியதாவது:-
"எனக்கு கார்த்தி, பவதா, யுவன் என மூன்று குழந்தைகள். அண்ணன் பாஸ்கருக்கு பார்த்தி, வாசுகி, ஹரி என மூன்று குழந்தைகள். குடும்பம் பெரிதான சூழலில் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்களும் இருப்பது சிரமமாக இருந்ததை பாஸ்கர் உணர்ந்து கொண்டார். இதனால் தனியாக வீடு பார்த்தார்.
ஒரு வீடு அவருக்கு பிடித்துப்போக, என்னிடம் வந்தார். "ராஜா! நீ வந்து பார்த்து சரி என்று சொன்னால் நான் மாறிக்கொள்கிறேன்'' என்றார்.
நானும் பார்க்கப்போனேன். பார்த்த வீடு எனக்குப் பிடித்துப்போயிற்று. நான் பாஸ்கரிடம், "வீடு நன்றாக இருக்கிறது. இதில் நான் குடியிருந்து கொள்கிறேன். நீ வேறு வீடு பார்த்துக்கொள்'' என்றேன்.
பாஸ்கரும், "சரி; நீயே இருந்து கொள். நான் வேறு இடம் பார்க்கிறேன்'' என்று கூறிவிட்டார்.
தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அந்த வீடு இருந்தது. வீட்டு எண் 157.
"வீட்டின் கூட்டுத்தொகை 13 வருகிறது. அதனால் இந்த வீடு வேண்டாம். அதோடு கவியரசர் கண்ணதாசன் இந்த வீட்டில்தான் அவருடைய சினிமாக் கம்பெனியை தொடங்கி பெரும் கடனுக்கு உள்ளானார். அதனால் ராசி இல்லாத இந்த வீட்டுக்குப் போகவேண்டாம்'' என்றார்கள் நண்பர்கள்.
எனக்கோ வீட்டைப் பார்த்தவுடன் பிடித்துப்போனதால், அந்த வீட்டுக்கே குடிபெயர்ந்தேன். அம்மா என்னுடனே வந்துவிட்டார்கள்.
இவ்வாறு இளையராஜா கூறினார்.
சினிமாவில் வளர்ந்து வந்த நிலையிலும் கர்நாடக சங்கீதத்தை முழுமையாக கற்கும் ஆர்வம் இளையராஜாவை விட்டுவிடவில்லை. இதனால் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசை கற்க விரும்பினார்.
அதுபற்றி கூறியதாவது:-
ஏற்கனவே டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் கர்நாடக இசை கற்கும் ஆவல் எனக்குள் நீடித்து வந்தது. புது வீட்டுக்கு வந்த பிறகுதான் அதற்கான வாய்ப்பு அமைந்தது. டி.வி.கோபாலகிருஷ்ணன் அப்போது பெசன்ட் நகரில் இருந்தார். காரணீஸ்வரர் கோவில் தெருவில் இருக்கும்போது பத்து நிமிடத்தில் அவர் வீட்டுக்கு நடந்தே போய் விடலாம். இப்போதோ பெசன்ட் நகர் போய்வரவே அரை மணி நேரமாவது ஆகும்.
அவரிடம் மறுபடியுமாக என் கற்றல் ஆர்வம் சொன்னபோது, "நீங்கள் எந்த நேரத்தில் வந்தாலும் நான் சொல்லித்தர தயாராயிருக்கிறேன். உங்களுக்கு எந்த நேரம் சவுகரியமோ அதைச் சொல்லுங்கள்'' என்றார்.
எனக்கு இருந்த வேலைகளுக்கிடையே சரியான நேரத்தை எப்படி அமைப்பது என்று யோசித்தேன். அவரோ எந்த நேரமானாலும் பரவாயில்லை என்று சொன்னதால் விடிகாலை நேரத்தை தேர்ந்தெடுத்தேன்.
எப்போதும் விடிகாலை 4 மணிக்கு நான் எழுந்து பழக்கப்பட்டவன். சமீபகாலமாக அது கொஞ்சம் நின்று போயிருந்தது. இப்போது மீண்டும் அந்த நேரத்துக்கு மாறினேன். நான்கு மணிக்கு சமஸ்கிருத பாடம் அரை மணி நேரமும், பிறகு குளித்து விட்டு 5 மணிக்கு பெசன்ட் நகரில் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் கர்நாடக சங்கீத பாடமும், 6 மணிக்கு உடற்பயிற்சியும், தியானமும், பூஜையுமாக தொடர்ந்தது.
7 மணிக்கு ரெக்கார்டிங் ஸ்டூடியோ. இல்லையேல் கம்போசிங். தினசரி இரண்டு பாடல்கள் இருக்கும்.
ரெக்கார்டிங் இரவு 9 மணிக்கு முடிய, வீட்டுக்கு வந்து மீண்டும் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் பெசன்ட் நகரில் சங்கீதப் பாடம் முடித்துவிட்டு வர இரவு 12 மணி ஆகிவிடும்.
இந்த அன்றாட நிகழ்ச்சி நிரலில் பெரும்பாலும் மாற்றமிருக்காது. எங்காவது வெளிïர் கோவிலுக்கு போனால் மட்டுமே மாறும். இந்த வகையில் தினசரி என் தூக்கம் 4 மணி நேரம்தான்.
ஓரளவே நான் கற்றுக்கொண்ட சங்கீதம், டி.வி.கோபாலகிருஷ்ணனின் ஒத்துழைப்பால்தான் எனக்கு சாத்தியமாயிற்று. ஆயினும் அது எனக்கு அந்த அளவேனும் வந்ததே என்பதில் திருப்தியைக் காட்டிலும், அத்தனையையும் கற்றுக்கொள்ள இயலாமையால் ஏற்பட்ட வருத்தமே அதிகம் மேலோங்கி இருந்தது.
ஜி.கே.வி.யிடம் இருந்தபோது ரெக்கார்டிங் ஓய்வு நேரத்தில், நான் எழுதிய இசைப் பகுதிகளை அங்கிருக்கும் கலைஞர்களை வாசிக்க வைத்துக் கேட்கும் பழக்கம் எனக்கிருந்தது.
அவர்கள் கருத்தை வைத்து, எனது இந்த இசை அணுகுமுறை சினிமா சங்கீதத்துக்கு ஒத்துவராது என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.
ஆனால் அதை உபயோகிக்க, தரத்தில் உயர்ந்த ஒரு படம் வரும்போதுதான் சரியாக இருக்கும். எனவே, புதிதாக நான் கற்றுக்கொண்டவைகளை எப்படி பயன்படுத்துவது என்று ஆலோசித்து, அவ்வப்போது அதை நடைமுறைக்கு கொண்டு வரவும் செய்தேன்.
மேல்நாட்டு இசையில் `கவுண்டர் பாயிண்ட்' என ஒரு விஷயம் இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேறு வேறு டிïன்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்படுவதுதான் அது. அதில் `ஹார்மோனி' என்ற அம்சம் உள்ளடங்கி இருக்கவேண்டும்.
இதை எனது இரண்டாவது படமான "பாலூட்டி வளர்த்த கிளி'' படத்தில் "நான் பேச வந்தேன்'' என்ற பாடலின்போதே தொடங்கிவிட்டேன். அந்தப் பாடலின் இடையே வரும் இசையின் ஹம்மிங்கில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு டிïன் `ஹம்' செய்ய, எஸ்.ஜானகி வேறு டிïனில் ஹம்மிங் செய்து பதில் சொல்வது போல அமைத்திருந்தேன்.
இது படத்தின் டைரக்டருக்கோ, இசைக் குழுவில் வாசித்தவர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இசைக் குழுவில் அட்வான்ஸ் ஆக இருக்கும் ஓரிரு கலைஞர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.
காற்றினிலே வரும் கீதம் என்ற பாடலிலும் இந்த யுக்தியை பாடலின் கடைசியில் கையாண்டிருந்தேன். இது பாடலின் அதே டிïனை அப்படியே `ரிபீட்' செய்யும் `இமிடேஷன்' என்ற விதிக்குள் அடங்கும்.
பின்னால் "சிட்டுக்குருவி'' என்ற படத்தை தேவராஜ் - மோகன் இயக்கியபோது அதற்கு கம்போஸ் செய்ய நேரமே இல்லாமல் போனது.
அப்போது "துர்காதேவி'' என்ற படம் சங்கரய்யர் டைரக்ஷனில் வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு பின்னணி இசை நடந்து கொண்டிருந்ததால் எங்கும் நகர முடியவில்லை.
இதற்கிடையே சிட்டுக்குருவி படத்துக்கு தேவராஜ் - மோகன் ரெக்கார்டிங்கிற்கு தேதி குறித்துவிட்டார்கள்.
ரெக்கார்டிங் இரவு 9 மணிக்கு முடியும். பத்து மணிக்கு தயாரிப்பாளர் அலுவலகத்தில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் கம்போஸ் தொடரும். அது முடிய விடிகாலை 3 மணி வரை ஆகிவிடும்.
அதற்குப் பிறகு 4 மணிக்கு படுப்பதெங்கே? அடுத்த நாள் தொடங்கி விடும்.''

சூர்யாவுடன் நேரடியாக மோதவிருந்த விக்ரம் பிரபு தற்போது அந்த மோதலில் இருந்து பின்வாங்கியிருக்கிறார். அதுகுறித்த செய்தியை விரிவாக பார்ப்போம்.
விக்ரம் பிரபு, ஷாம்லி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வீர சிவாஜி'.கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 23-ம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் சூர்யாவின் 'எஸ்3' உட்பட பல்வேறு பெரிய படங்கள் அன்றைய தினத்தில் வெளியாவதால் தற்போது வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்துள்ளனர்.
அதன்படி டிசம்பர் 16-ம் தேதி 'வீர சிவாஜி' வெளியாகிறது. அதே நாளில் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'போங்கு' திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

‘போகன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், கதாநாயகன் ஜெயம் ரவியை ‘குட்டி கமல்ஹாசன்’ என தயாரிப்பாளர் பிரபு தேவா பாராட்டினார்.
ஜெயம் ரவி - ஹன்சிகா நடிப்பில் லஷ்மண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘போகன்’. அரவிந்த் சாமி, வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ், பிரபு தேவா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து வரும் 23-ம் தேதி ரிலீசாக உள்ளது. ஸ்ரீ கிரீன் புரொடக்சன் படத்தை வெளியிடுகிறது.
இந்நிலையில், ‘போகன்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், ஜெயம் ரவி, ஹன்சிகா, ஐசரி கணேஷ், பிரபு தேவா, ஸ்ரீ கிரீன் புரொடக்சன் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரபுதேவா பேசுகையில், “எனது தயாரிப்பில் போகன் படத்தைத்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தோம். இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி பணிகளையும் தொடங்கினோம். ஆனால், ‘தேவி’ படம் முதலில் முடிந்து வெளிவந்துள்ளது.
மாறுபட்ட கதையம்சம் கொண்ட போகனை லஷ்மண் மிகவும் நன்றாக இயக்கியிருக்கிறார். வித்தியாசமான கதையை இயக்குவது என்பது மிகவும் கடினம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். 80 சதவீதம் படத்தை பார்த்துவிட்டேன். அழகாக வந்திருக்கிறது. அவருக்கு எனது பாராட்டுக்கள்.
இதேபோல் படத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா அரவிந்த் சாமி என ஒவ்வொரு கேரக்டரும் தங்களுக்குரிய பணியை ஒரு டீமாக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜெயம் ரவி ஒரு குட்டி கமலஹாசன். அவர் ஒன்றும் தெரியாதவர் போன்று அமைதியாக இருப்பார். ஆனால், ஒவ்வொரு அம்சங்களையும் திரும்பத் திரும்ப கேட்டு தெரிந்துகொண்டு, படத்தை சிறப்பாக கொண்டுவரும் அளவுக்கு நடித்துக் கொடுப்பார்.
ஹன்சிகாவைப் பொருத்த வரை இதில் வித்தியாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரது நடிப்பை நேரில் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
அரவிந்த் சாமியுடன் ‘மின்சாரக் கண்ணா’ படத்தில் நடித்தபோது எங்களுக்குள் நட்பு கிடையாது. இந்த படத்தில் இணைந்ததன்மூலம், இருவருக்குமிடையே நல்ல நட்பு உருவாகி உள்ளது. அவரும் இப்படத்தில் தனது கேரக்டரை நன்றாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘போகன்’ எல்லோருக்கும் வெற்றியைத் தேடித்தரும் படமாக இருக்கும். ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்” என்றார்.
தியேட்டர்களில் பழைய ரூபாயை வாங்க அனுமதிக்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை விடுத்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பால் தமிழ்த்திரையுலகில் 1000 கோடிகளுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் பழைய ரூபாய் நோட்டுகளை தியேட்டர்களில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில் "பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் திரைப்பட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மார்ச் 31-ந்தேதிவரை திரையரங்குகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க அனுமதிக்க வேண்டும்.
கருப்பு பணத்துக்கு ஆதரவாகவோ, பிரதமர் மோடி அறிவிப்புக்கு எதிராகவோ இதை கூறவில்லை.சினிமா துறையின் நலன் கருதிதான் இதை சொல்கிறேன். அதை அனுமதித்தால் சினிமா தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து கொஞ்சமாவது தப்பிப்பார்கள்.திரை உலகினர் ஒற்றுமையுடன் இந்த பிரச்சினையை அணுகாதது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

விஜய்-அட்லி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
‘ராஜா ராணி’ வெற்றிக்குப்பிறகு விஜய் நடித்த ‘தெறி’ படத்தை அட்லி இயக்கினார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.அடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். இதற்கான பணிகளில் அட்லி தீவிரமாகி இருக்கிறார்.
தற்போது விஜய் நடித்துள்ள ‘பைரவா’ படப்பிடிப்பு கடந்த 29-ந்தேதி நிறைவு பெற்றது. அடுத்து விஜய்-அட்லி மீண்டும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ந் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கதாநாயகி யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் 60-வது படமாக உருவாகி இருக்கும் 'பைரவா' 2017-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தை 'அழகிய தமிழ்மகன்' புகழ் பரதன் இயக்கியிருக்கிறார்.

மிக இயல்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காக நடிகை நயன்தாரா மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா தற்போது ‘டோரா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘கொலையுதிர்காலம்’ உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘அறம்’ படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மிக இயல்பாக தெரிய வேண்டும் என்பதற்காக மேக்கப் இல்லாமல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இதில் தனது வேடம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நயன்தாரா மேக்கப் போடாமல் இயல்பாக நடித்து வருகிறாராம்.
கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற 'மாயா' படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருந்தார். 'மாயா' வெற்றிக்குப்பின்னர் தான் கதாநாயகியை மையமாகக்கொண்ட படங்களில் நயன்தாரா அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான நடிகர்களைப் பார்த்து இன்னும் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை? என கேளுங்கள் என்று பாலிவுட் நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார். அவர் எதற்காக அப்படிக் கூறினார்? என்பதற்கான விளக்கத்தை கீழே பார்க்கலாம்.
வித்யாபாலன் நடித்துள்ள ‘கஹானி-2’ படம் திரைக்கு வந்துள்ளது. இதையொட்டி அவர் அளித்த பேட்டியில் "எனது திருமண வாழ்க்கை பற்றியும்,நான் எப்போது குழந்தை பெறப்போகிறேன்? என்றும் திரும்பத் திரும்ப கேட்கிறார்கள்.
திருமணம் ஆன நடிகர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் உங்கள் மனைவியை எப்போது கர்ப்பிணி ஆக்குவீர்கள்? என்று யாரும் கேட்பது இல்லை. நடிகர்களிடம் உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று கூட யாரும் கேட்பது கிடையாது.
திருமணம் ஆன பெண் என்பதையும் கடந்து எனக்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. என் வாழ்வில் எனக்கு நான் தான் முக்கியம் என்று கூறினால் ஒருமாதிரி பார்க்கிறார்கள். திருமணமாகி விட்டதால் என் கணவர் தான் முக்கியமானவர் என நான் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
என் கணவரை நான் மிகவும் நேசிக்கிறேன். என்றாலும் என் வாழ்வில் நான் தான் முக்கியமானவள். இப்படி நான் சொல்வதால் என்னை சுயநலவாதி என்று நினைத்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை” என்றார்.

நடிகர் சூர்யா ஜெயம் ரவி-அமீர்கான் ஆகியோருடன் நேரடியாக மோதவிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
சூர்யா, சுருதி ஹாசன், அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'எஸ் 3'. 'சிங்கம்', 'சிங்கம்-2' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஹரி-சூர்யா இருவரும் மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் படக்குழு மாற்றம் செய்துள்ளது.
அதன்படி வருகின்ற டிசம்பர் 23-ம் தேதி 'எஸ்3' வெளியாகிறது. அதே நாளில் ஜெயம் ரவி-அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியிருக்கும் 'போகன்', சசிகுமாரின் 'பலே வெள்ளையத்தேவா', விக்ரம் பிரபுவின் 'வீர சிவாஜி', பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' அமீர்கானின் 'டங்கல்' ஆகிய படங்கள் வெளியாகின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் மேலே சொன்ன ஆறு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிசில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'வேலையில்லாப் பட்டதாரி 2' படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்போவதாக தனுஷ் கடந்த மாதம் அறிவித்தார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் 'வேலையில்லாப் பட்டதாரி-2' வை தனுஷின் மைத்துனி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க அனிருத், ஷான் ரோல்டன் இருவரும் இசையமைக்கிறார்கள்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை கஜோல் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாகவும், இதற்காக அவருக்கு 4 கோடிரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் கஜோல் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் கடைசியாக 19 வருடங்களுக்கு முன் வெளியான 'மின்சார கனவு' படத்தில் கஜோல் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பால் தமிழ்த்திரையுலகம் கடும் இழப்பை சந்தித்துள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு நாடு முழுவதும் மக்களிடம் பணப்புழக்கத்தை குறைத்துள்ளது.புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அச்சடித்து கொடுக்கப்பட்டதும் போதுமான அளவுக்கு இல்லை. இதனால் பணப்பரிவர்த்தனை முடங்கி உள்ளது.
மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாததால் அனைத்துத் துறைகளிலும் கடும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரூபாய் நோட்டு விவகாரம் தமிழ்த்திரை உலகிலும் கடும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கையில் சில்லரை பணம் குறைந்து போனதால் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது தியேட்டர்களின் வருவாயில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து புதிய படங்கள் வெளியிடப்படுவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட்டில் தயாரான படங்களின் ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தினசரி சம்பளம் கொடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. இது படப்பிடிப்புகளை முடக்கிப் போட்டுள்ளது.
இதன் காரணமாக திரை உலகில் நிலவும் பணப்பரிவர்த்தனை முடங்கி உள்ளது. இது ரூ.1,250 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை சகஜ நிலைக்கு வர இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் தமிழ்த்திரை உலகம் மேலும் சில ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்திருக்கிறது.
இதனால் தனது அடுத்தடுத்த கதைகளை மிகவும் கவனத்துடன் விஜய் சேதுபதி தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படமொன்றில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங்கும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 'பீட்சா', 'சூது கவ்வும்', 'இறைவி', 'ஜிகர்தண்டா' ஆகிய படங்களில் விஜய் சேதுபதி-பாபி சிம்ஹா இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படங்கள் தோல்வி அடைந்தால் நான் துவண்டு போகிறேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். இது குறித்த செய்தியை கீழே விரிவாக பார்க்கலாம்.
நடிகை தமன்னா மும்பையில் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-
நான் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கில் நடித்த முதல் படம் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்து வந்த ஹேப்பி டேஸ் வெற்றிகரமாக ஓடி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது. பாகுபலி படத்தில் நடித்த பிறகு எல்லோரும் என்னை திரும்பி பார்த்தனர். இவ்வளவு உயரத்துக்கு வந்த நான் சிறு வயதில் இருந்து பயணப்பட்டு வந்த தூரங்களை நினைவுபடுத்தி பார்க்கும் போது வியந்து போகிறேன்.
எனது தந்தை கப்பலில் வேலை செய்ததால் அதிக நாட்களை கடலிலேயே கழித்தார். அதன்பிறகு அந்த வேலையை விட்டு விட்டு நகை வியாபாரத்தில் இறங்கினார். அம்மாவும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து நான் பிறந்ததும் எனக்காக வேலையை விட்டுவிட்டார். அவருடைய தியாகம் எப்போதும் என் மனதில் இருக்கிறது. பள்ளியில் படித்தபோது நாடகமொன்றில் நடித்தேன். அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நாடக குழுவில் சேர்ந்தேன்.
நடிப்பவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து யோகா கற்க ஆரம்பித்தேன். நான் படித்த பள்ளிக்கு நடிகை ராணிமுகர்ஜி உள்பட நிறைய திரையுலக பிரபலங்கள் வந்தனர். அவர்களை பார்த்து நடிப்பில் எனக்கு மேலும் தீவிரமான பற்று ஏற்பட்டது. எனது அம்மாவும் நீ ஒரு நாள் மிஸ் இந்தியா ஆவாய் என்று பேசி வந்தார். தொடர்ந்து நடிப்பு பயிற்சி எடுத்தேன். நடனமும் கற்றேன். அதன்பிறகு முழு நேர நடிகையாகி விட்டேன்.
தென்னிந்திய மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டேன். சினிமாவில் வெற்றி-தோல்வியை சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலர் சொல்வதை கேட்டு இருக்கிறேன். அது யாராலும் முடியாது. வெற்றியில் சந்தோஷப்படுவதும் தோல்வியில் கவலைப்படுவதும் மனிதர்களுக்கு உள்ள இயற்கையான குணம். நான் நடித்த படம் தோல்வி அடைந்தால் எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும். எனது படங்கள் தோல்வி அடையும் போதெல்லாம் நான் துவண்டுபோகிறேன்.
கஷ்டப்பட்டு நடித்தும் சரியாக போகவில்லையே என்ற வேதனை இருக்கும். வெற்றி வரும்போது பலருக்கு கர்வம் ஏற்படும். ஆனால் அனுபவம் வரவர அது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.”
இவ்வாறு தமன்னா கூறினார்.