என் மலர்
நடிகர் சல்மான் கானுடன் மேலும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க விரும்புவதாக ‘பாலிவுட் பாதுஷா’ ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.
மும்பை நகரில் நடைபெற்ற சினிமா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பாலிவுட் கதாநாயகர்கள் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் இணைந்து ‘திடீர்’ நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக மாறினார்கள். இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்ததாக குறிப்பிட்ட ஷாருக் கான், சல்மானுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த கருத்தை வரவேற்பதாக அதே மேடையில் கூறிய சல்மான் கான், நல்ல திரைக்கதையுடன் ஒரு திறமையான இயக்குனர் தன்னை அணுகினால் ஷாருக் கானின் விருப்பத்தை நிறைவேற்ற நானும் தயார் என்றார்.
உடனடியாக, திறமையுடன் ஏராளமான பொறுமையும் அந்த இயக்குனருக்கு இருக்க வேண்டும் என்று ஷாருக் கான் கிண்டல் அடித்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, பலமுறை ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சல்மானும், ஷாருக்கானும் இணைந்து ‘கரண் அர்ஜூன்’ ‘ஹம் துமாரி ஹே சனம்’, ‘குச் குச் ஹோத்தா ஹே’ போன்ற படங்களில் இதற்கு முன்னர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் பூஜை அறை கிடையாது. ஆனாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது” என்று நடிகை சுருதிஹாசன் கூறினார்.
நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. கடவுள் மீது இருக்கும் பக்தி சாதாரண நிலைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பிட்ட சாமிதான் என்று இல்லாமல் அனைத்து சாமிகளையும் கும்பிடுகிறேன். எனக்கு கடவுளை வழிபடுவதற்கு யாரும் சொல்லித் தரவில்லை. வீட்டில் பூஜை அறை கூட கிடையாது. ஆனாலும் தானாகவே கடவுள் நம்பிக்கை வந்து விட்டது. எப்படி கடவுள் பக்கம் ஈர்க்கப்பட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.
எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கோவில்களுக்கு போகிறேன். புண்ணிய ஸ்தலங்களையெல்லாம் சுற்றி வருகிறேன். கோவிலுக்குள் எந்த சாமி இருக்கிறார் என்றெல்லாம் பார்ப்பது இல்லை. வழிபாட்டு ஸ்தலங்களை பார்த்தாலே கும்பிட்டு விடுவேன். படப்பிடிப்புகளுக்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அங்கு இருக்கும் கோவில்களுக்கு சென்று விடுகிறேன். ஏராளமான கோவில்களில் சாமி கும்பிட்டு இருக்கிறேன்.
சாமி கும்பிடும் போதெல்லாம் கடவுளிடம் வேண்டியது என்ன என்று கேட்கின்றனர். எனக்கு எந்த வேண்டுதலும் இல்லை என்றால் அது பொய் சொல்வதுபோல் ஆகி விடும். எனக்கும் சின்ன சின்ன வேண்டுதல்கள் இருக்கிறது. சாமி கும்பிடும்போது அவற்றை நினைத்துக் கொள்வேன். ஆனாலும் கடமைகளை செய்வதில் தயக்கம் கூடாது. சும்மா இருந்துவிட்டு எல்லாவற்றையும் கடவுள் செய்ய வேண்டும் என்று கருதினால் அது சரியல்ல. கடமைகளை செய்து முடிக்க வேண்டும். முடிவை கடவுளிடம் விட்டு விட வேண்டும்”
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
சுருதிஹாசன் ‘சி-3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தந்தை கமல்ஹாசனுடன் ‘சபாஷ்நாயுடு’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது. பவன்கல்யாண் ஜோடியாக ‘காட்டமரயடு’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.

இயக்குனர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்கு கதை கேட்டு வருகிறாராம். அந்த இயக்குனர், வருங்கால மனைவி யார் என்பதை கீழே பார்ப்போம்.
நயன நடிகையும் சிவமான இயக்குனரும் காதலர்களாக வலம் வருவது ஊர் அறிந்ததே. இவர்கள் இருவரும் தனிமையில் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கோலிவுட்டில் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இதுநாள் வரையில் இதுகுறித்து இருவருமே மௌனம் காத்து வருகிறார்கள்.
இந்நிலையில், முன்பெல்லாம் படங்களில் நடிக்க தனது அபிமானிகளிடம் கதைகளை பற்றி பேசி முடிவெடுத்து வந்த நயன நடிகை, இப்போது தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் தன்னை தொடர்பு கொண்டாலே, முதலில் தனது காதல் இயக்குனரை போய் பாருங்கள் என்று அவர் பக்கம் திருப்பி விடுகிறாராம்.
அதனால், நயன நடிகையின் கால்ஷீட் வாங்க வருவோர் இயக்குனரைத்தான் துரத்திக் கொண்டு வருகிறார்களாம். இப்படி துரத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருப்பதால், ஏற்கெனவே கேட்கப்பட்ட கதைகள் இன்னும் பல கிடப்பில் இருப்பதாகவும், கைவசம் நயன நடிகைக்கு அதிக படங்கள் இருப்பதாலும் இந்த படங்களையெல்லாம் முடித்த பிறகுதான் நடிகையின் கால்ஷீட் கிடைக்கும் என இயக்குனர் அனைவரையும் திருப்பி அனுப்புகிறாராம்.
அப்படி அவர்களுக்கு கால்ஷீட் கொடுப்பதாக இருந்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் தேதியில் கொடுக்க மாட்டாராம். அவர் முடிவு பண்ணும் தேதியில்தான் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று இயக்குனர் கண்டிஷன் போடுகிறாராம். இருப்பினும் நடிகையின் மார்க்கெட் கருதி பல இயக்குனர்கள் கதைகளை சொல்லிவிட்டு அவரது கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடக்கோரி நடிகை ரம்பா தொடர்ந்த வழக்கை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்து சென்னை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் பிரபு நடித்த ‘உழவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமி (வயது 39). இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமார் (வயது 47) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்தனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ரம்பாவுக்கும், அவரது கணவர் இந்திரகுமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார்.
இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட்டில் நடிகை ரம்பா ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘தன் கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார். மேலும், ‘தற்போது சினிமாவில் நடிக்காததால் தனக்கு வருமானம் எதுவும் இல்லை. அதனால், மாதந்தோறும் தனக்கு ரூ.1.50 லட்சமும், தனது இரு மகள்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ.1 லட்சமும், ஆக ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க தன் கணவர் இந்திரகுமாருக்கு உத்தரவிடவேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி சிவதாணு, விசாரணையை டிசம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சிவதாணு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரம்பா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், என்னுடைய கணவர் என்னுடன் தற்போது சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் இருவரும் என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எனவே, இந்த இரு குழந்தைகளின் சட்டப் படியான பாதுகாவலராக என்னை (ரம்பாவை) அறிவிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, ரம்பாவும், அவரது கணவரும், குழந்தைகளும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்களது சார்பில் அவர்களுடைய வக்கீல்கள் ஆஜரானார்கள். ரம்பாவால் கோர்ட்டுக்கு வரமுடியவில்லை என்றும், அதனால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் ரம்பா தரப்பு வக்கீல் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 21-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மூகாம்பிகை மீது 4 பக்திப் பாடல்களை, இளையராஜா இசை அமைத்துப் பாடினார்.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"டைரக்டர்கள் தேவராஜ் - மோகன் இரட்டையர்களில், தேவராஜ் எப்போதும் ஏதாவது பரிசோதனையாக செய்ய முயற்சிப்பார். "சிட்டுக்குருவி'' படத்தில் காதலனும், காதலியும் தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். அப்படியொரு சூழ்நிலையில் ஒரு பஸ்சில் இருவரும் அருகருகே அமர்ந்து போகிறார்கள். இப்போது காதலனின் உள்ளமும், காதலியின் உள்ளமும் கலந்து பாடுவது போல, ஒரு பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.
இது ஒரு புது விஷயமல்லவா? இதற்கு மேல் நாட்டு இசையின் `கவுண்ட்டர் பாயிண்ட்டை உபயோகிக்க முடிவு செய்தேன்.
இதுபற்றி தேவராஜிடம் விளக்கி சம்மதமும் வாங்கிவிட்டேன்.
கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் ஒத்துழைத்து தினமும் வந்தார். அவரிடம் இதை விளக்கியபோது டியுனை வாசிக்கச் சொல்லி கேட்டார். "ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டியுன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா?'' என்று கேட்டார்.
நான் அவரிடம், "அண்ணே! இரண்டு டியுனும் தனியாக பாடப்பட்டால் அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டியுனுக்கு இன்னொரு டியுன் பதில் போலவும், அமையவேண்டும். அந்த பதில் டியுனும் தனியாகப்பாடினால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல் ஒரே பாடலாக ஒலிக்கவேண்டும்'' என்றேன்.
பதிலுக்கு வாலி, "என்னய்யா நீ! இந்த நட்ட நடு ராத்திரியில `சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்கிறே! முதல்ல ஒரு "மாதிரி'' பாடலை சொல்லு!'' என்றார்.
உடனே வேறு ஒரு பாடலைப்பாடி விளக்கினேன். நான் ஒரு டியுனையும், அமர் ஒரு டியுனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.
ஆண்: பொன்
பெண்: மஞ்சம்
ஆண்: தான்
பெண்: அருகில்
ஆண்: நீ
பெண்: வருவாயோ?
- இப்படி பாடிக்காட்டினோம். அதாவது ஆண் பாடுவதை தனியாகவும், பெண் பாடுவதை தனியாகவும் பிரித்துப் படித்தால் தனித்தனி அர்த்தம் வரும்.
அதாவது `பொன் தான் நீ' என்கிறான் ஆண்.
`மஞ்சம் அருகில் வருவாயோ' என்கிறாள், பெண்.
சேர்ந்து பாடும்போது `பொன் மஞ்சம் தான் அருகில் நீ வருவாயோ' என்று பொதுவாக இன்னொரு அர்த்தம் வரும்.
`சரி' என்று புரிந்ததாக தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார். பிறகு கையில் பேடை எடுத்தவர் யாருக்கும் காட்டாமல் அவர் எழுதும் பாணியில் மளமளவென எழுதினார்.
இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாதிரியே வாலி எழுதியிருந்ததில் எல்லோருக்குமே பிடித்துப்போயிற்று.
இந்தப் பாடலை ரெக்கார்டு செய்யும்போது இன்னொரு பிரச்சினை வந்தது. ஒரு குரலில் காதலன் பாட, இன்னொரு குரலில் காதலனின் உள்ளமும் பாடவேண்டும் அல்லவா.
ஏவி.எம். சம்பத் சாரிடம் "ஒரு குரல் பாடுவதை மட்டும் முதலில் ரெக்கார்டு செய்வோம். மற்றொரு குரல் பாடும் இடத்தை வெறுமனே விட்டு விடாமல் இசைக்கருவிகளை இசைப்போம். இப்படி முழுப்பாடலையும் பதிவு செய்து விட்டு, அதை மறுபடி "பிளே'' செய்து இன்னொரு குரலை அதனுடன் பாட வைப்போம். பிறகு இன்னொரு ரெக்கார்டரில் மொத்தமாக இரண்டையும் பதிவு செய்வோம் என்று முடிவு செய்து தொடங்கினோம்.
டைரக்டர்கள் தேவராஜ் - மோகன் இருவரில், மோகன் சாருக்கு கம்போசிங் சமயத்தில் இருந்தே இதற்கு உடன்பாடில்லை. இந்தப் பாடலும் பிடிக்கவில்லை. பாடல் பதிவு நேரத்திலும் எதுவும் பேசாமல் "உம்''மென்றே காணப்பட்டார்.
`எப்படி வருமோ?' என்று அடிக்கடி சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார்.
தேவராஜோ உற்சாகமாக இருந்தார். "இந்த மாதிரி ஐடியா வருவதே கஷ்டம். புதிதாக ஏதாவது செய்வதற்கு எப்போது சந்தர்ப்பம் கிட்டும்? இப்படிச் செய்கிற நேரத்தில் அதைப்பாராட்டாவிட்டாலும், புதிய முயற்சி என்று ஊக்குவிக்கவில்லை என்றால் `கலைஞனாக' இருப்பதற்கு அர்த்தம் என்ன?'' என்று பேசினார்.
இந்தப் பாடலின் இடையிடையே, பஸ்சில் கண்டக்டர் "தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட்... இறங்கு!'', "இந்தாம்மா கருவாட்டுக்கூடை! முன்னாடி போ!'' என்று பேசுகிற மாதிரி வரும். இதற்கு அண்ணன் பாஸ்கரை பேச வைத்தேன்.
அந்தப் பாடல் ரசிகர்களிடையே அதற்குரிய வரவேற்பை பெற்றது.''
- இப்படிச் சொன்ன இளையராஜா, மூகாம்பிகை அம்மன் பேரில் கொண்ட பக்தியால் 4 பாடல்களை அதுவும் கன்னடப் பாடல்களை பாடி அன்றைய இசை உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். அதுபற்றி கூறியதாவது:-
"என்னதான் பாடல்கள் இசையமைப்பு, பாட்டுப் பயிற்சி என்று பிசியாக இருந்தாலும் அம்மா மூகாம்பிகை மீது எனக்கு ஒரு கவனம் எப்போதுமே இருந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மூகாம்பிகை போவதும், யார் வந்தாலும் என் செலவில் அழைத்துப்போவதும் தொடர்ந்தது.
இந்த நேரத்தில் அம்மாவைப் பற்றி கன்னடத்தில் பக்திப்பாடல் பாடி வெளியிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே தாமதமின்றி கன்னடப் பாடலாசிரியர் உதயசங்கரை சந்தித்தேன். "மூகாம்பிகை அம்மன் பற்றி 4 பக்திப்பாடல்கள் எழுதித்தர வேண்டும்'' என்று கேட்டேன்.
அவரோ பிசியாக இருப்பதாகவும், இன்னொரு நாள் எழுதித் தருவதாகவும் சொல்லிவிட்டார்.
நான் அவரை விட பிசியாக இருந்தும், குறிப்பிட்ட அந்த நாளில் அந்த 4 பாடல்களையும் ரெக்கார்டு செய்தே தீருவது என்பதில் உறுதியுடன் இருந்தேன்.
என் பிடிவாதம் தெரிந்து கொண்ட உதயசங்கர், "எப்படியாவது பாடல்களை எழுதித்தந்து விடுகிறேன். ஆனால் நான் ரெக்கார்டிங்கிற்கு வரமுடியாது. என்னுடைய உதவியாளரை அனுப்புகிறேன். ஆனால் உன்னால் கன்னடத்தில் பிழையின்றி பாடமுடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கன்னடம் சரியில்லை என்றால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்.
"பரவாயில்லை; முயற்சி செய்து பார்க்கிறேன்'' என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட நாளில் ரெக்கார்டிங் தொடங்கி விட்டேன். டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் புதல்வர் கே.எஸ்.ரமணனின் "ஜெயஸ்ரீ ரெக்கார்டிங் தியேட்டரில்'', குறைந்த வாத்தியங்களை வைத்துக்கொண்டு பாடினேன்.
அப்போது என் மனமெல்லாம் அம்பாளின் திருவடியிலேயே ஒன்றியிருந்தது. பாடும்போது உடலெங்கும் ஒரு அதிர்வு இருந்து கொண்டிருந்தது.
4 பாடல்களையும் ரெக்கார்டு செய்து முடிக்கும் நேரம் உதயசங்கர் வந்தார். பாடலின் கன்னட உச்சரிப்பில் தவறு ஏதும் இருக்கிறதா என்பதை கேட்பதற்காக வந்தார்.
பாடலைக் கேட்டவர்: "கன்னடப் பாடகர்களே பாடினாலும் இத்தனை தெளிவான கன்னடமாக இருக்காது. அவ்வளவு நன்றாக பாடிவிட்டீர்கள்'' என்று பாராட்டினார்.
அந்த டேப்பை ஜி.கே.வி.யிடம் போட்டுக்காட்ட அவர் வீட்டுக்குப்போனேன். என்னைப் பார்த்ததும், "வாடா ராஜா!'' என்றார். அவருக்கு பாடல்களை போட்டுக் காட்டினேன். "இது நீ பாடலைடா? அம்பாளே வந்து பாடியிருக்கா'' என்று பாராட்டினார்.
அண்ணியும் (ஜி.கே.வி.யின் மனைவி) உடனிருந்து பாடலை கேட்டார். "அண்ணி! எப்படி இருக்கிறது?'' என்று கேட்டேன்.
"ஐயோ அதைக் கேட்காதப்பா? எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது'' என்றார்கள்.

தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் பவர் பாண்டி பவர்புல்லான தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அது எந்த தேதி என்பதை கீழே பார்ப்போம்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘பவர் பாண்டி’. இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், மடோனா செபஸ்டியான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அதிவேகமாக நடந்து வரும் நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, இப்படம் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14-ந் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். பவர் பாண்டி படத்தை இயக்குவதோடு மட்டுமில்லாமல் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினியும் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தனுஷ் இயக்கத்தில் முதன்முதலாக உருவாகிவரும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சந்தானம்- செல்வராகவன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து செல்வராகன் சந்தானத்தை வைத்து ஒரு படத்தையும், விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க தயாராக இருக்கிறார். முதலில், சந்தானத்தை முடித்துவிட்டு, அதன்பிறகு விஜய் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று செல்ராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. சந்தானமும், செல்வராகவனும் சேர்ந்து நிற்பதுபோல் புகைப்படத்தை சமூக இணையதளங்களில் வெளியிட்டு, படப்பிடிப்பு தொடங்கியது என்று அறிவித்துள்ளனர்.
ரொமான்டிக், காமெடி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ஹீரோயின் யார்? என்பதை இதுவரை படக்குழுவினர் தேர்ந்தெடுக்கவில்லை. முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் 24 வருட திரைப்பயணத்தை ரசிகர்கள் விழாவாக எடுத்து கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்...
நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 24 வருடம் முடிகிறது. அவர், 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் #24YearsOfUnrivalledVIJAY #24YearsOfVIJAYism #24YearsOfIlayaThalapathyVIJAY #24yearsofthalapathyism ஆகிய ஹேஷ்டேக்கை டுவிட்டரில் உருவாக்கி அதனை டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.
விஜய்-யின் 24 வருட திரைப்பயனத்தை கொண்டாடும் வகையில் இன்று சில திரையரங்குகளில் இவரது படங்கள் திரையிடப்படவுள்ளது. சில ஏரியாக்களில் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு அன்னதானத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் டிசம்பர் 4, 1992-ல் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் விஜய். ஆரம்பகாலத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் 1996-ஆம் வருடம் விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். ‘திருமலை’, ‘கில்லி’, ‘போக்கிரி’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘தெறி’ என பல வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ள விஜய்-க்கு தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாது கேரளா சினிமாவிலும் ரசிகர்கள் பட்டாளம் கொடிகட்டிப் பறக்கிறது.
இன்று தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் அளவுக்கு இவரது புகழ் உலகம் முழுக்க பரவியிருக்கிறது. விஜய்-யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் 'துப்பாக்கி'. இப்படத்தின் வசூல் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்று சொல்லப்படும் விஜய், இதுவரை மூன்று முறை 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவா’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளிவரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே பல மடங்கு அதிகரித்துள்ளது.

புதிய நிர்வாகத்தின் ஆதரவாளரான ஜே.கே.ரித்தீஷ் தற்போது திடீரென அந்த நிர்வாகத்தின் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அது என்னவென்பதை வீடியோவாகவும் செய்தியாகவும் கீழே பார்ப்போம்.
நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகம் பதவிக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்தவர் ஜே.கே.ரித்தீஷ். இவர் தேர்தலின்போது ஆற்றிய பணிகளால்தான் புதிய நிர்வாகமே பதவிக்கு வர காரணமாக இருந்தது. இதை நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று ஜே.கே.ரித்தீஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நடிகர் சங்கம் தேர்தல் வரைக்கும்தான் நம்முடைய போட்டியே தவிர, தேர்தலுக்கு பிறகு அனைவரும் நாம் நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் தேர்தல் முடிந்த அன்றைக்கே சொன்னேன், அதைத்தான் இன்றைக்கும் சொல்கிறேன். சரத்குமார், ராதாரவி மீது வழக்கு போட்டுள்ளது, அவர்களை நீக்கியுள்ளது முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை. இதை யாரும் செய்யக்கூடாது.
நமக்குள் ஒரு பிரச்சினை என்றால் அவர்களை நேரடியாக கூப்பிட்டு நண்பர்களாக பேசி உட்கார்ந்து தீர்க்கவேண்டும். நம்மால் தீர்க்க முடியவில்லை என்றால்தான் கோர்ட்டுக்கு போகவேண்டும். ஊழல் குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தால் நிர்வாகம் நேர்மையாக இருக்காது, நாகரீகமாகவும் இருக்காது.
நடிகர் சங்கம் என்பது மக்கள் மத்தியில் ஒரு நல்ல மதிப்பை பெற்றிருக்கிறது. அந்த மதிப்பை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பது என்னுடைய எண்ணம். ஒரு நல்ல நிர்வாகம் வரவேண்டும் என்று நினைத்துதான் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தோம். ஆனால், அவர்கள் இப்படி பழிவாங்குவார்கள் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.
நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு ஒருத்தருக்கொருத்தர் பழிவாங்கும் எண்ணம் இருக்கக்கூடாது. பதவி இன்று வரும், இன்னும் இரண்டு வருடத்திற்கு பிறகு வேறொருவர் நிர்வாகத்துக்கு வருவார்கள். பொதுக்குழு கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்ன தவறு செய்தார்கள். அவர்களை எதற்காக நீக்கினார்கள்.
நிர்வாகத்தின் பதவியில் வருபவர்களுக்கு ரொம்பவும் பொறுமை, தவறு செய்தால் மன்னிக்கக்கூடிய தன்மை இருக்கவேண்டும். தவறு செய்தவர்களை கூப்பிட்டு அவர்களுடைய தவறுகளை தட்டிக்கேட்கவேண்டும். எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வது நாகரீகமான செயல் அல்ல. சினிமாவுக்கும் இது நாகரீகம் கிடையாது. என்றைக்கு இந்த நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியதோ அன்று முதல் நான் அந்த நிர்வாகத்தின் எந்த கூட்டத்திலும் கலந்து கொண்டது கிடையாது என்றார்.
ஜே.கே.ரித்தீஷ் பேசிய வீடியோ கீழே...

#எங்கள் அண்ணன் Jk.ரித்திஸ்குமார் அவர்களின் நேர்மையான பேச்சு... சேதுசீமை இராமநாதபுரத்தான்
Posted by Mangal Kumar MB on Saturday, December 3, 2016
சென்னையில் நடந்த ‘2.0’ படப்பிடிப்பின் போது, நடிகர் ரஜினிகாந்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

‘கபாலி’ திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், ‘2.0’. இந்த படத்தை ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இந்தி நடிகர் அக்ஷய்குமார், நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணியின் முந்தைய படைப்பான ‘எந்திரன்’ படத்தின் 2-ம் பாகமாக இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அடுத்தாண்டில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
கடந்த சில நாட்களாக ‘2.0’ படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. நேற்று பிற்பகலில் இருந்து படப்பிடிப்பு சென்னை அருகே மேலகோட்டையூர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனம் அருகே நடந்து கொண்டிருந்தது. ரஜினிகாந்த் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை முடிந்த சில நிமிடங்களிலேயே அவர் வீடு திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இளையராஜா, திரைப்பட இசை அமைப்பில் பல புதுமைகளை செய்தார். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அதனால் தினமும் 4 மணி நேரமே அவர் தூங்கினார்.

தன் வாழ்க்கைப்பாதையைப் பற்றி இளையராஜா கூறியதாவது:-
"எனக்கு கார்த்தி, பவதா, யுவன் என மூன்று குழந்தைகள். அண்ணன் பாஸ்கருக்கு பார்த்தி, வாசுகி, ஹரி என மூன்று குழந்தைகள். குடும்பம் பெரிதான சூழலில் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்களும் இருப்பது சிரமமாக இருந்ததை பாஸ்கர் உணர்ந்து கொண்டார். இதனால் தனியாக வீடு பார்த்தார்.
ஒரு வீடு அவருக்கு பிடித்துப்போக, என்னிடம் வந்தார். "ராஜா! நீ வந்து பார்த்து சரி என்று சொன்னால் நான் மாறிக்கொள்கிறேன்'' என்றார்.
நானும் பார்க்கப்போனேன். பார்த்த வீடு எனக்குப் பிடித்துப்போயிற்று. நான் பாஸ்கரிடம், "வீடு நன்றாக இருக்கிறது. இதில் நான் குடியிருந்து கொள்கிறேன். நீ வேறு வீடு பார்த்துக்கொள்'' என்றேன்.
பாஸ்கரும், "சரி; நீயே இருந்து கொள். நான் வேறு இடம் பார்க்கிறேன்'' என்று கூறிவிட்டார்.
தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அந்த வீடு இருந்தது. வீட்டு எண் 157.
"வீட்டின் கூட்டுத்தொகை 13 வருகிறது. அதனால் இந்த வீடு வேண்டாம். அதோடு கவியரசர் கண்ணதாசன் இந்த வீட்டில்தான் அவருடைய சினிமாக் கம்பெனியை தொடங்கி பெரும் கடனுக்கு உள்ளானார். அதனால் ராசி இல்லாத இந்த வீட்டுக்குப் போகவேண்டாம்'' என்றார்கள் நண்பர்கள்.
எனக்கோ வீட்டைப் பார்த்தவுடன் பிடித்துப்போனதால், அந்த வீட்டுக்கே குடிபெயர்ந்தேன். அம்மா என்னுடனே வந்துவிட்டார்கள்.
இவ்வாறு இளையராஜா கூறினார்.
சினிமாவில் வளர்ந்து வந்த நிலையிலும் கர்நாடக சங்கீதத்தை முழுமையாக கற்கும் ஆர்வம் இளையராஜாவை விட்டுவிடவில்லை. இதனால் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசை கற்க விரும்பினார்.
அதுபற்றி கூறியதாவது:-
ஏற்கனவே டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் கர்நாடக இசை கற்கும் ஆவல் எனக்குள் நீடித்து வந்தது. புது வீட்டுக்கு வந்த பிறகுதான் அதற்கான வாய்ப்பு அமைந்தது. டி.வி.கோபாலகிருஷ்ணன் அப்போது பெசன்ட் நகரில் இருந்தார். காரணீஸ்வரர் கோவில் தெருவில் இருக்கும்போது பத்து நிமிடத்தில் அவர் வீட்டுக்கு நடந்தே போய் விடலாம். இப்போதோ பெசன்ட் நகர் போய்வரவே அரை மணி நேரமாவது ஆகும்.
அவரிடம் மறுபடியுமாக என் கற்றல் ஆர்வம் சொன்னபோது, "நீங்கள் எந்த நேரத்தில் வந்தாலும் நான் சொல்லித்தர தயாராயிருக்கிறேன். உங்களுக்கு எந்த நேரம் சவுகரியமோ அதைச் சொல்லுங்கள்'' என்றார்.
எனக்கு இருந்த வேலைகளுக்கிடையே சரியான நேரத்தை எப்படி அமைப்பது என்று யோசித்தேன். அவரோ எந்த நேரமானாலும் பரவாயில்லை என்று சொன்னதால் விடிகாலை நேரத்தை தேர்ந்தெடுத்தேன்.
எப்போதும் விடிகாலை 4 மணிக்கு நான் எழுந்து பழக்கப்பட்டவன். சமீபகாலமாக அது கொஞ்சம் நின்று போயிருந்தது. இப்போது மீண்டும் அந்த நேரத்துக்கு மாறினேன். நான்கு மணிக்கு சமஸ்கிருத பாடம் அரை மணி நேரமும், பிறகு குளித்து விட்டு 5 மணிக்கு பெசன்ட் நகரில் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் கர்நாடக சங்கீத பாடமும், 6 மணிக்கு உடற்பயிற்சியும், தியானமும், பூஜையுமாக தொடர்ந்தது.
7 மணிக்கு ரெக்கார்டிங் ஸ்டூடியோ. இல்லையேல் கம்போசிங். தினசரி இரண்டு பாடல்கள் இருக்கும்.
ரெக்கார்டிங் இரவு 9 மணிக்கு முடிய, வீட்டுக்கு வந்து மீண்டும் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் பெசன்ட் நகரில் சங்கீதப் பாடம் முடித்துவிட்டு வர இரவு 12 மணி ஆகிவிடும்.
இந்த அன்றாட நிகழ்ச்சி நிரலில் பெரும்பாலும் மாற்றமிருக்காது. எங்காவது வெளிïர் கோவிலுக்கு போனால் மட்டுமே மாறும். இந்த வகையில் தினசரி என் தூக்கம் 4 மணி நேரம்தான்.
ஓரளவே நான் கற்றுக்கொண்ட சங்கீதம், டி.வி.கோபாலகிருஷ்ணனின் ஒத்துழைப்பால்தான் எனக்கு சாத்தியமாயிற்று. ஆயினும் அது எனக்கு அந்த அளவேனும் வந்ததே என்பதில் திருப்தியைக் காட்டிலும், அத்தனையையும் கற்றுக்கொள்ள இயலாமையால் ஏற்பட்ட வருத்தமே அதிகம் மேலோங்கி இருந்தது.
ஜி.கே.வி.யிடம் இருந்தபோது ரெக்கார்டிங் ஓய்வு நேரத்தில், நான் எழுதிய இசைப் பகுதிகளை அங்கிருக்கும் கலைஞர்களை வாசிக்க வைத்துக் கேட்கும் பழக்கம் எனக்கிருந்தது.
அவர்கள் கருத்தை வைத்து, எனது இந்த இசை அணுகுமுறை சினிமா சங்கீதத்துக்கு ஒத்துவராது என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.
ஆனால் அதை உபயோகிக்க, தரத்தில் உயர்ந்த ஒரு படம் வரும்போதுதான் சரியாக இருக்கும். எனவே, புதிதாக நான் கற்றுக்கொண்டவைகளை எப்படி பயன்படுத்துவது என்று ஆலோசித்து, அவ்வப்போது அதை நடைமுறைக்கு கொண்டு வரவும் செய்தேன்.
மேல்நாட்டு இசையில் `கவுண்டர் பாயிண்ட்' என ஒரு விஷயம் இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேறு வேறு டிïன்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்படுவதுதான் அது. அதில் `ஹார்மோனி' என்ற அம்சம் உள்ளடங்கி இருக்கவேண்டும்.
இதை எனது இரண்டாவது படமான "பாலூட்டி வளர்த்த கிளி'' படத்தில் "நான் பேச வந்தேன்'' என்ற பாடலின்போதே தொடங்கிவிட்டேன். அந்தப் பாடலின் இடையே வரும் இசையின் ஹம்மிங்கில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு டிïன் `ஹம்' செய்ய, எஸ்.ஜானகி வேறு டிïனில் ஹம்மிங் செய்து பதில் சொல்வது போல அமைத்திருந்தேன்.
இது படத்தின் டைரக்டருக்கோ, இசைக் குழுவில் வாசித்தவர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இசைக் குழுவில் அட்வான்ஸ் ஆக இருக்கும் ஓரிரு கலைஞர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.
காற்றினிலே வரும் கீதம் என்ற பாடலிலும் இந்த யுக்தியை பாடலின் கடைசியில் கையாண்டிருந்தேன். இது பாடலின் அதே டிïனை அப்படியே `ரிபீட்' செய்யும் `இமிடேஷன்' என்ற விதிக்குள் அடங்கும்.
பின்னால் "சிட்டுக்குருவி'' என்ற படத்தை தேவராஜ் - மோகன் இயக்கியபோது அதற்கு கம்போஸ் செய்ய நேரமே இல்லாமல் போனது.
அப்போது "துர்காதேவி'' என்ற படம் சங்கரய்யர் டைரக்ஷனில் வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு பின்னணி இசை நடந்து கொண்டிருந்ததால் எங்கும் நகர முடியவில்லை.
இதற்கிடையே சிட்டுக்குருவி படத்துக்கு தேவராஜ் - மோகன் ரெக்கார்டிங்கிற்கு தேதி குறித்துவிட்டார்கள்.
ரெக்கார்டிங் இரவு 9 மணிக்கு முடியும். பத்து மணிக்கு தயாரிப்பாளர் அலுவலகத்தில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் கம்போஸ் தொடரும். அது முடிய விடிகாலை 3 மணி வரை ஆகிவிடும்.
அதற்குப் பிறகு 4 மணிக்கு படுப்பதெங்கே? அடுத்த நாள் தொடங்கி விடும்.''

சூர்யாவுடன் நேரடியாக மோதவிருந்த விக்ரம் பிரபு தற்போது அந்த மோதலில் இருந்து பின்வாங்கியிருக்கிறார். அதுகுறித்த செய்தியை விரிவாக பார்ப்போம்.
விக்ரம் பிரபு, ஷாம்லி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வீர சிவாஜி'.கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 23-ம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் சூர்யாவின் 'எஸ்3' உட்பட பல்வேறு பெரிய படங்கள் அன்றைய தினத்தில் வெளியாவதால் தற்போது வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்துள்ளனர்.
அதன்படி டிசம்பர் 16-ம் தேதி 'வீர சிவாஜி' வெளியாகிறது. அதே நாளில் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'போங்கு' திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.