என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ‘சபாஷ் நாயுடு’ படத்தில் தனது தந்தையான கமல்ஹாசன் இயக்கத்தில் நடிக்க பயமாக இருந்தது என்று நடிகை ஸ்ருதி ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
    ஸ்ருதி தற்போது கமல் இயக்கத்தில் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதையடுத்து தனது அப்பாவின் இயக்கத்தில் நடிப்பது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    ஒரு நாற்காலியைகூட என்னால் காதலிக்க முடியும் என்று என் அப்பா கூறுவார். அவரால் முடியும், தன்னை அவர் காதலிப்பதை அந்த நாற்காலியும் விரும்பும். ‘சபாஷ் நாயுடு’ படத்தை அவர் மிக சிறப்பாக தயாரித்தும் இயக்கியும் வருகிறார்.

    வார்த்தைகளை குழைத்துப்பேச அவருக்கு தெரியாது. ஒரு காட்சியை படமாக்கும்போது தனக்கு தேவையானது கிடைக்கும்வரை அவர் விடமாட்டார்.

    இந்தப் படத்தில் நடிப்பது மிக அற்புதமான அனுபவம். ஆனால், இதில் நடிக்கும்போது தனிப்பட்ட முறையில் எனக்கு மனஅழுத்தமும், பயமும் அதிகமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    இன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், அக்‌ஷய் குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    12-12-1950 அன்று பிறந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ஆகியோரின் மறைவையடுத்து, தனது பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். வழக்கம்போல், பெரிய விழாவாக கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில், இன்று 66-வது பிறந்தநாள் காணும் ரஜினிகாந்துக்கு பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், அக்‌ஷய் குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இன்று பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடனும் மனமகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என அமிதாப் பச்சன் வாழ்த்தியுள்ளார்.

    நமது சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லாம் நட்சத்திர  மண்டலமாக இருக்கும் அன்புக்குரிய ரஜினி சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என அவருடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்‌ஷய் குமார் வாழ்த்தியுள்ளார்.

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!, உங்கள் நடிப்பின் மூலம் எங்களை பலகாலம் மகிழ்விக்க நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்திருக்க வேண்டுகிறேன் என ஷாருக்கான் வாழ்த்தியுள்ளார்.

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!, என்று அபிஷேக் பச்சனும் வாழ்த்தியுள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!, எங்களுக்கு நீங்கள் கடவுள் கொடுத்த வரம், தன்னடக்கம் மற்றும் வெற்றிக்கான நவீனக்கால மரபாக உங்களது வாழ்க்கைப் பயணம் தொடரட்டும் என நடிகர் அனுபம் கெர் குறிப்பிட்டுள்ளார்.
    இன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    12-12-1950 அன்று பிறந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ஆகியோரின் மறைவையடுத்து, தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். பெரிய விழாவாக கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில், இன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!, நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் விரேந்திர ஷேவாக் உள்ளிட்ட பல்துறை பிரபலங்களும் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    சிவாஜிகணேசன் - கே.ஆர்.விஜயா நடித்த `ரிஷிமூலம்' படத்துக்கு, இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தின் பாடல் பதிவின்போது ருசிகரமான நிகழ்ச்சிகள் நடந்தன.
    தனது இசை வாழ்வு அனுபவங்கள் குறித்து, இளையராஜா கூறியதாவது:-

    "சென்னை கமலா தியேட்டரில் `கிழக்கே போகும் ரெயில்' படத்தின் வெற்றி விழா. விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கலந்துகொண்டு எங்கள் எல்லாருக்கும் பரிசு வழங்கினார்.

    அவர் பேசும்போது, படத்தில் இடம் பெற்ற ``மாஞ்சோலைக் கிளிதானோ'' என்ற பாடலை வாய்விட்டுப் பாடி, ``அடடா! என்ன பாடல்! என்ன பாடல்!'' என்று புகழ்ந்து பேசினார். நடிகர் திலகத்திடம் இருந்து கிடைத்த இந்தப் பாராட்டு, எங்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    சிவாஜி பேசும்போது, பாரதிராஜாவை வானளாவ உயர்த்திப்பேசினார். அப்போது, விழாவுக்கு வந்திருந்தவர்களில் ஒருவராக, பாரதிராஜாவின் அம்மாவும் அமர்ந்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.



    விழா முடிந்ததும், தனது தாயாரை சந்தித்த பாரதிராஜா, ``எப்படி இருந்தது?'' என்று கேட்க, அந்தத் தாயாரோ சர்வ சாதாரணமாக, ``அது என்னமோப்பா! அவங்க என்னென்னமோ பேசுறாங்க! ஆனா என் காதுல பாரதிராசா, பாரதிராசாங்கற உன் பேர் மட்டும்தான் கேட்டுதுப்பா'' என்று சொன்னார்.

    உயர்ந்த தாயுள்ளத்தின் உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத்தான் என்னால் இதை உணர முடிந்தது.

    இதற்கிடையில் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் ஆபீசிற்கு ஒருநாள் போய் வரலாம் என்று போனேன். அப்போது ராஜ்கண்ணுவுடன் சிலர் இருந்தனர். என்னைப் பார்த்ததும், ``படத்தின் பாடல்கள் சரியில்லை. பதினாறு வயதினிலே படப்பாடல்கள் மாதிரி அமைந்திருந்தால் படம் இன்னும் நன்றாகப் போகும்'' என்றார்கள்.

    என் முகத்திற்கு எதிரேயே அவர்கள் இப்படிச் சொன்னதில், எனக்கு வருத்தமாகி விட்டது. எல்லா படப் பாட்டுக்களும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமா? என்ன இவர்களின் பேச்சு? ஒரு அடிப்படை கலை உணர்வு கூடவா இல்லாமல் இருப்பார்கள்? மனம் வருந்தினேன். அந்த மாதிரியான வருத்தங்கள், மனதில் வடுவாகத் தங்கி விட்டன.

    நடிகர் திலகம் சிவாஜி நடிக்க ``ரிஷிமூலம்'' என்ற படத்தை எஸ்.எஸ்.கருப்பசாமி தயாரித்தார். நான் இசை. மகேந்திரன் வசனம், எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷன்.

    எஸ்.எஸ்.கருப்பசாமி அப்போது அருப்புக்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மிகவும் கண்டிப்பானவர். கண்ணியமானவரும் கூட.

    பாடல்கள் கம்போசிங்கிற்கு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கருப்பசாமி ஆகியோருடன் மகாபலிபுரம் போனேன். அங்குள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் தங்கினோம்.

    மூன்று நாட்கள் தொடர்ந்து கம்போசிங் நடந்தது. ``நேரமிது'' என்ற பாடலுக்கான சூழ்நிலை புதிது. சிவாஜி - கே.ஆர்.விஜயா பாடுவதாக வரும் இந்த டூயட் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? அவர்கள் பெட்ரூமில்! அதுவும் குழந்தை அருகில் படுத்திருக்கும்போது!

    அதாவது தூங்கும் குழந்தை விழித்து விடாதபடி, மிக மெல்லியதாக அவர்களின் டூயட் அமைய வேண்டும். டிïன் அமைத்து, பாடிக்காட்டினேன். எல்லாருக்கும் பிடித்திருந்தது.

    இந்த டியுனை நான் கம்போஸ் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

    அந்த மாலை நேரத்தில் பிரான்சில் இருந்து சுற்றுலா வந்திருந்த தம்பதியரில் பெண் மட்டும் எங்கள் அறையை கடந்து போயிருக்கிறார். பாடலைக் கேட்டவர் அப்படியே நின்று விட்டார். பிறகு ``நான் உள்ளே வரலாமா?'' என்று வெளியில் இருந்தவாறே சைகை மூலம் கேட்டார். ``ப்ளீஸ் கம் இன்'' என்று டைரக்டர் சொல்ல, உள்ளே வந்தார்.

    நாங்களெல்லாம் கீழே தரையில் விரிப்பை விரித்து அமர்ந்திருந்தோம். எங்களோடு அவரும் கீழே உட்கார்ந்தார். என் முகம் பார்த்தவர், ``நீங்கள் பாடிய பாடலை மறுபடியும் ஒருமுறை பாட முடியுமா?'' என்று கேட்டார்.

    ``ஓ'' என்றேன். மெதுவாக பாடவும் செய்தேன்.

    அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து `பொலபொல' வென்று கண்ணீர் கொட்டியது.

    பாடல் முடிந்ததும் எல்லாரும் அமைதியானோம்.

    இப்போது அந்தப் பெண்மணி பேசினார். "இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்'' என்றார். அதோடு, ``இந்த இசையை எனக்காக எழுதித்தர முடியுமா?'' என்று கேட்டவர், தனக்கு பியானோ வாசிக்கத் தெரியும் என்றும்

    சொன்னார்.என்னிடம் மிïசிக் எழுதும் பேப்பர் இல்லை. எனவே என் லெட்டர்பேடில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அதில், கோடுகள் போட்டு அந்த இசையை பியோனோவில் வாசிப்பதற்கு தகுந்தாற்போல் எழுதிக் கொடுத்தேன்.

    வாங்கிக் கொண்ட அந்தப் பெண் நன்றி ததும்ப, ``இந்த இசையை வாங்குவதற்குத்தான் இந்த சுற்றுலா நடந்ததோ என்னவோ?'' என்று சொல்லியபடி விடை பெற்றுச் சென்றார்.

    இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டபோது, இன்னொரு சம்பவம்.

    டி.எம்.சவுந்தர்ராஜனும், பி.சுசிலாவும் பாடிக் கொண்டிருந்தார்கள். ``மேகத்திலே வெள்ளி நிலா, காதலிலே பிள்ளை நிலா'' என்ற சரணம் போய்க் கொண்டிருந்தது.

    அப்போது எஸ்.பி.முத்துராமன் என்னை அழைத்தார். ``ராஜா சார்! நீங்கள் கம்போசிங்கில் வெறும் ஆர்மோனியத்துடன் பாடும்போது காதருகில் மிகவும் மெல்லிய குரலில் பாடுவது போல இருந்ததே! இப்போது இவர்கள் பாடும்போது பலமான குரலில் வருவது போலல்லவா இருக்கிறது'' என்றார்.



    மகேந்திரனோ அவர் பங்குக்கு, ``ராஜா! இவ்வளவு சத்தமாக பாட்டைக் கேட்டால், கட்டிலில் தூங்கும் பையன் எழுந்து விடமாட்டானா?'' என்றார்.

    நான் டி.எம்.எஸ். - சுசிலா பாடிக் கொண்டிருந்த அறைக்குப் போனேன்.

    டி.எம்.எஸ்.சிடம், ``அண்ணா! குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும்போது கணவனும், மனைவியும் பாடும் ரொமாண்டிக் பாடல் இது. மெதுவாகக் கேட்க வேண்டும். இதுவோ பெரிய மலைச்சாரலில் நின்று கொண்டு ``மேகத்திலே வெள்ளி நிலா'' என்று பாடுவது போல் வருகிறது. உங்களுக்கு தெரியாததல்ல. மெதுவாகப் பாடினால் நன்றாக இருக்கும்'' என்றேன்.

    அவர், ``ராஜா! நான் மெதுவாகத்தான் பாடுகிறேன். இப்போ கேளு''என்றவர் பாடினார். மிகவும் சன்னமாக குரல் ஒலிக்க, மெதுவாகத்தான் கேட்டது.

    ``பிறகு எப்படி ரிக்கார்டிங்கில் அவ்வளவு பெரிய சத்தமாக கேட்கிறது?'' என்று கேட்டேன்.

    ``நான் என்னப்பா பண்றது? என் குரல் அமைப்பு அப்படி! நேரில் கேட்டால் மென்மையாகவும் மைக்கில் கேட்டால் கம்பீரமாகவும் ஒலிக்கிற குரலாக ஆண்டவன் கொடுத்து விட்டான்'' என்றார், டி.எம்.எஸ்.

    உள்ளே போய் இருவருடைய குரலையும் குறைத்து பாடலைப் பதிவு செய்தோம்.

    ஆனாலும், அது ஒருவருக்கொருவர் காதில் ரகசியமாக பாடுகிற மாதிரி வரவில்லை.

    மகேந்திரன் கதை வசனம் எழுதிய படங்கள் எல்லாம் நன்றாக ஓடியதால் அவருக்கு டைரக்டு செய்யும் வாய்ப்பு வந்தது. ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் அப்படியொரு வாய்ப்பை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து வார இதழ் ஒன்றில் தொடர் கதையாக வந்திருந்த ``முள்ளும் மலரும்'' கதையை படமாக்க மகேந்திரன் முடிவு செய்தார். திரைக்கதை அமைத்து டைரக்ட் செய்யும் ஏற்பாடுகளை தொடர்ந்தார்.

    ரஜினி, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு என நட்சத்திரங்கள் முடிவானார்கள்.

    கம்போசிங் நடந்தது. அப்போது ``16 வயதினிலே'' படத்தைப் பற்றியும், பாரதிராஜாவின் திறமையைப் பற்றியும் மட்டுமே மகேந்திரன் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தார். அதே நேரம், ``தரத்தில் உயர்ந்த நல்ல படமாக இதைக் கொண்டு வந்து விட வேண்டும்'' என்றும் சொன்னார்.

    ``செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்'', ``அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை'', ``ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...'' ``நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'' போன்ற பாடல்கள் உருவாயின. பாலு மகேந்திராதான் கேமரா. மகேந்திரனும், பாலு மகேந்திராவும் நல்ல நண்பர்கள்.

    ரஜினியின் நல்ல நடிப்பு, படத்தின் இயக்கம், கேமரா, கதை, திரைக்கதை எல்லாம் கச்சிதமாக அமைந்து படத்துக்கு வெற்றியை தேடித்தந்தன.

    ஒரு படத்தின் வெற்றிக்காகவே ஒட்டுமொத்த யுனிட்டும் உழைத்தாலும், வெற்றியைத் தருவது நமக்கும் மேலே உள்ள ஒருசக்தி.

    இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. நானும் மகேந்திரனும், சேலத்தில் ``முள்ளும் மலரும்'' ஓடிய ஒரு தியேட்டருக்கு போன போது அது நடந்தது.

    தியேட்டர் முதலாளி எங்களை வரவேற்று அழைத்துச் சென்று படம் பார்க்க வைத்தார்.

    படத்தின் ஆறாவது ரீலில், ரஜினி மீது லாரி ஏறியது போல் ஒரு சீன் வரும். அங்கே இடைவேளை என்று போட்டு விட்டார்கள். எனக்கு அதிர்ச்சி. நான் பார்த்தவரை படத்தின் இடைவேளை அது இல்லை.என்னைவிட மகேந்திரன் இன்னும் அதிர்ச்சியாகி இருந்தார்.
    அரசியல் துறையில் தன்னுடைய குருநாதரான எம்.ஜி.ஆரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா விஞ்சி விட்டார் என்று நடிகர் ரஜினி காந்த் கூறினார்.
    சென்னை:

    தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவுடன் சேர்த்து மறைந்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில், மூத்த நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர். அப்போது ரஜினிகாந்த் ஜெயலலிதா பற்றிய தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    கார்பன் வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் காலப்போக்கில் வைரமாக மாறும். அதுபோல், ஜெயலலிதாவும் பல்வேறு போராட்டங்களால் வைரமாக மாற்றப்பட்டார். பொதுவாழ்க்கையில் ஜெயலலிதா வைரம் போன்றவர்.

    துணிச்சல் எதிர்நீச்சல் போன்றவற்றை ஜெயலலிதாவிடம் இருந்து கற்க வேண்டும். ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் தன்னுடைய முயற்சியால் முன்னேறி வந்தவர்.

    1996 தேர்தலில் நான் பேசிய அரசியல் பேச்சால் அவர் மனம் துன்பப்பட்டார். இருப்பினும், என்னுடைய அழைப்பை ஏற்று மகளின் திருமணத்திற்கு வந்தார்.

    அவரைப் போல் சோதனைகளை சாதனையாக்கியவர் யாரும் இல்லை. இது பெண்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் முன் உதாரணம். பொதுவாழ்க்கைக்காக தனது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    இந்த வருடத்தில் தொடர்ந்து ஹிட் கொடுத்த நடிகை சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    சமத்தான நடிகைக்கு தெலுங்கு நடிகர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் இருவருக்கும் திருமணம் நடக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், திருமணத்திற்கு முன்பே அவரை சினிமாவில் இருந்து ஒதுக்கி வருவதாக நடிகை தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம்.

    இந்த வருடத்தில் இவர் நடித்த 6 படங்களும் மிகப்பெரிய ஹிட்டானது. இருப்பினும், தொடர்ந்து அவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் இல்லை. தற்போதைக்கு சங்கத் தலைவருடனான படம் மட்டுமே இவர் கைவசம் உள்ளது. எந்த நேரத்தில் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டாரோ, அதுநாள் முதல் இவரை தேடி வரும் தயாரிப்பாளர்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    திருமணத்திற்கு பிறகு நடிகை நடிப்பதற்கு அவரின் வருங்கால கணவர் எந்த ஆட்சபனையும் தெரிவிக்கவில்லையாம். இருப்பினும், தனக்கு படவாய்ப்பு குறைந்து வருவது குறித்து நடிகை ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாராம். 
    ரஜினி பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்று அறிவித்திருந்தாலும், அவரது ரசிகர்களுககு ஒரு சிறப்பான விருந்து ரெடியாகி வருகிறது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    ரஜினிக்கு நாளை பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த வருடத்தின் இந்த மாதத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததையொட்டி தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று ரஜினி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதனால் ரசிகர்கள் அனைவரும் ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்து ஒன்று தயாராகியுள்ளது. அது என்னவென்றால், ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து சரித்திர சாதனை படைத்த ‘கபாலி’ படத்தின் நிராகரிக்கப்பட்ட, யாரும் பார்க்காத காட்சிகளை (Deleted Scenes) வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    தங்களது தலைவரின் பிறந்தநாளை கொண்டாட முடியவில்லையே என்ற வருத்தத்தில் உள்ள ரசிகர்களுக்கு இந்த செய்தி கண்டிப்பாக ஒரு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும் என்று நம்பலாம்.
    நீண்டநாளாக இயக்கும் பணிக்கு இடைவெளி விட்டிருந்த டி.ராஜேந்தர், தற்போது கல்லூரி காதல் கதையுடன் புத்தம் புதிதாக களமிறங்கியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த முக்கால் வாசி படங்கள் கல்லூரி காதலை மையமாகவும், குடும்ப உறவுகளை மையப்படுத்தியும் உருவாகியிருக்கும். அந்த வரிசையில் கடந்த சில வருடங்களாக இயக்குனர் பதவிக்கு ஓய்வு கொடுத்து வைத்திருந்த டி.ராஜேந்தர், தற்போது மீண்டும் அந்த பதவியை கையிலெடுக்க முடிவு செய்திருக்கிறார்.

    அதன்படி, தற்போது அவர் கைவசம் இரண்டு கதைகள் உள்ளதாகவும் அதில் ஒன்று கல்லூரி காதல் கதையை மையமாக வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது, ‘கவண்’ படத்தில் நடித்து வரும் டி.ராஜேந்தர், அந்த படம் முடிந்த கையோடு வரும் ஜனவரி 2017-ல் அப்படத்திற்கான பூஜையை போடவிருக்கிறாராம்.

    அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் அப்படத்தின் படப்பிடிப்புகளில் களமிறங்கவுள்ளாராம். கல்லூரி காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகளை நடிக்கவைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை டி.ராஜேந்தரே தயாரிக்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

     டி.ராஜேந்தர் கடைசியாக 2007-ஆம் ஆண்டு ‘வீராசாமி’ என்ற படத்தை இயக்கி அதில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாலிவுட் நடிகர் அமீர்கான் விடுத்த வேண்டுகோளை ரஜினி நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினி. தென்னிந்திய சினிமா மட்டுமில்லாது பாலிவுட்டும் கொண்டாடும் மிகப்பெரிய கலைஞர் அவர். இந்நிலையில், பாலிவுட்டில் அமீர்கானின் கடுமையான உழைப்பில் உருவாகியிருக்கும் ‘தங்கல்’ படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பிப்பதற்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார் அமீர்கான்.

    ரஜினி, தனுஷ் உள்பட அவரின் குடும்பத்தார் அனைவருக்கும் ‘தங்கல்’ படத்தை திரையிட்டு காண்பித்தார். படத்தை பார்த்து முடித்துவிட்டு அப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த அமீர்கானை பாராட்டினார். அவர் அந்த கதாபாத்திரத்திற்காக மெனக்கெட்டிருப்பதை குறிப்பிட்டு பாராட்டினாராம்.

    இதனால், மனம் குளிர்ந்த அமீர்கான், ரஜினியிடம் வரும் 23-ந் தேதி வெளியாகவிருக்கும் ‘தங்கல்’ படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு தன்னுடைய குரலுக்கு ரஜினியை டப்பிங் கொடுக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். ஆனால், ரஜினியோ, உங்களுடைய தோற்றத்துக்கு என்னுடைய குரல் சரியாக பொருந்தாது என்று அவருடைய வேண்டுகோளை அன்போடு மறுத்தாராம்.

    பிறகுதான், வேறொருவரை வைத்து தமிழில் டப்பிங் செய்து வெளியிடவிருக்கிறார்களாம். தங்கல் படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரஜின் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தர தயங்குவதாக வேதனையுடன் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் 'பழைய வண்ணாரப்பேட்டை'. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் பிரஜினைப் பாராட்டத் தவறவில்லை. ரசிகர்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் என பல தரப்பிலிருந்து வரும் விமர்சனங்களின் பாராட்டால் மகிழ்ச்சியில் இருக்கிறார் பிரஜின்.

    ஆனால் இந்த ஒரு தகுதிக்கு அவர் கொடுத்த விலை அதிகம். அனுபவித்த வலிகளும் அதிகம். பிரஜின் பிரபல தொலைக் காட்சிகளில் நடிகராக வலம் வந்தவர். அலுவலக வேலைபோல போய் கைநிறைய சம்பளம் பெற்று வாழ்ந்தவர். ஆனாலும் அங்கேயே தங்கி விடவில்லை.

    தன் இலக்கு சின்னத்திரை அல்ல பெரியதிரை என்று உணர்ந்து கொண்ட அவர், திரைவாய்ப்புகள் தேடத் தொடங்கினார். இன்று ஒருபடத்தின் முழு நாயகனாக நிற்கிறார். இந்நிலையில், தன்னை பலருக்கும் தெரிந்தும் வாய்ப்பு தர தயங்குகிறார்கள் என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் பேசும்போது, 2003-ல் டிவிக்குப் போன நான் நான்கு ஆண்டுகள் மட்டுமே அங்கே இருந்தேன். 2007-ல் வெளியே வந்து விட்டேன். நான் டிவி யிலிருந்து வெளியே வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழில் இதுவரை 3 படங்கள் வந்துள்ளன. இடையில் மலையாளத்தில் 4 படங்கள் நடித்தேன். பிருத்திவிராஜ், லால் படங்களும் அதில் அடங்கும்.

    இடைப்பட்ட காலத்தில் போராட்டங்கள் தான். ஆனாலும் போராடியே நமக்கான இடத்தை அடைவது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் மனதை திசை திரும்ப விடவில்லை சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நடிக்க வருவதில் சாதகமும் உண்டு. பாதகமும் உண்டு.

    டிவி மூலம் எல்லாருக்கும் தெரிந்திருப்பதாலேயே வாய்ப்பு தரத்தயங்குவார்கள். என்னை எல்லாருக்கும் தெரியும். ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள். இது ஒரு மாதிரியான சிக்கல். சிலர் இவருக்கு என்ன வியாபார மதிப்பு இருக்கிறது? என்பார்கள். இதற்கிடையே நான் 2007 ல் திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி ஒரு சின்னத்திரை நடிகை. அவர் என்னையும் என் இலக்கையும் புரிந்து கொண்டிருப்பதால் ஆதரவு தந்து பக்கபலமாக இருந்தார். இது சாதாரண விஷயமல்ல.'' என்கிறார்.

    பிரஜின் நடிப்பில் தற்போது குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் படம் வெளிவர தயாராக இருக்கிறது. இதைத் தொடந்து ‘மிரண்டவன்’ என்ற படமும் வெளிவர தயாராக இருக்கிறது. சமுத்திரகனி நடிக்கும் ‘ஆண் தேவதை’ படத்தை இரண்டாவது நாயகனாக நடித்து வருகிறார். இன்னொரு படம் ஒன்றிலும் நடிப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை திரிஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் கடந்த 6-ந் தேதி அடக்கம் செய்யப்பட்டது. அங்கு தினமும் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    ஜெயலலிதாவின் சமாதியை பார்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் 6-வது நாளாக அதிகாலை 4 மணி முதலே ஜெயலலிதா சமாதியில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    காலை 9.30 மணி அளவில் நடிகை திரிஷா தனது தாயுடன் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார். திரிஷா மட்டும் போலீசாரின் பாதுகாப்பு அரண்களை தாண்டி ஜெயலலிதா சமாதி அருகே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் சமாதி அருகே விழுந்து கும்பிட்டார்.

    பின்னர் நடிகை திரிஷாவும், அவரது தாயையும் போலீசார் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு அடுத்த ஆண்டில் இருந்து சிறந்த சண்டை காட்சிக்கும் தேசிய விருது வழங்க தீர்மானித்துள்ளது.
    புதுடெல்லி:

    நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனுஷ், சினிமா இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், இருந்து வருகிறார். சினிமா துறையில் சண்டை காட்சிகளை அமைத்த கலைஞர்களைப் பற்றிய திரைப்படம் ஒன்றை அவர் உருவாக்கி வருகிறார்.

    சண்டைக்காட்சி நடிகர்கள் சங்கத்தின் 50-வது ஆண்டை பெருமைப்படுத்தும் வகையில் ‘சினிமா வீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்துக்கு குரல் கொடுக்க ரஜினிகாந்த் சம்மதித்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கய்யா நாயுடுவை சந்தித்த ஐஸ்வர்யா தனுஷ், இந்திய சினிமாவுக்கான தேசிய விருதுகள் வழங்கும் பட்டியலில் ஸ்டண்ட் காட்சி இயக்குனர்களும் கவுரவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக பரிசீலித்த மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு அடுத்த ஆண்டு நடைபெறும் 64-வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறப்பான வகையில் சண்டை காட்சிகளை அமைக்கும் ஸ்டன்ட் மாஸ்டருக்கு தேசிய விருது அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

    மேலும், சிறந்த ஒலியமைப்பு மற்றும் சிறந்த லொக்கேஷன் ஒலிப்பதிவாளர் என்ற பிரிவின்கீழும் அடுத்த ஆண்டில் இருந்து தேசிய விருதுகள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
    ×