என் மலர்
சூர்யாவின் இடத்தை விஷால் பிடித்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி உலாவி வருகிறது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சி-3’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி டிசம்பர் 23-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதால் அதற்கு ‘யு’ சான்றிதழ் வாங்குவதற்காக போராடுவது ஒருபக்கம், மறுபக்கம், இப்படத்தின் காட்சிகளுக்கு அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்று படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பது போன்ற காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் தள்ளிப்போனதால் அன்றைய தேதியில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலே வெள்ளையத்தேவா’ என்ற படம் மட்டுமே ரிலீசாகும் என்ற நிலை இருந்து வந்தது. இந்நிலையில், சூர்யா விட்டுச் சென்ற அந்த இடத்தை நிரப்ப விஷால் முன்வந்துள்ளார்.
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்திச்சண்டை’ படத்தை டிசம்பர் 23-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படம் ஏற்கெனவே பொங்கல் தினத்தையொட்டி ஜனவரியில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே டிசம்பர் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

சிங்கம் 3’ படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அதிகக்கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், செம்பியத்தை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திரைப்படங்களை பார்க்க வரும் ரசிகர்களிடம் இருந்து எவ்வளவு தொகை நுழைவுக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இந்த கட்டணத்தை தான் ரசிகர்களிடம் திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்களிடம் இருந்து திரையரங்கு உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றனரா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளை கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
பொதுவாக பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியான நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு அதிக தொகையை கட்டணமாக திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். ஆனால், பெரிய நடிகர்கள் நடித்துள்ள திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அரசு விதிமுறைகளை பகிரங்கமாக மீறி அதிக கட்டணத்தை ரசிகர்களிடம் இருந்து திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர்.
இவ்வாறு அதிக கட்டணம் வசூலிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
கடந்த 2009-ம் ஆண்டு சினிமா தியேட்டர் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10-க்கு டிக்கெட் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு ரூ.10 மதிப்புள்ள டிக்கெட் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது விற்கப்படுவதே இல்லை.
இந்தநிலையில், நடிகர் சூர்யா, நடிகைகள் சுருதிஹாசன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சிங்கம் 3’ என்ற ‘எஸ்.3’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள ஞானவேல் ராஜாவும், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களும், இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அதிக தொகையை நுழைவு கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதை தடுத்து நிறுத்தும்படி, கடந்த நவம்பர் 23-ந் தேதி தமிழக தலைமை செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், நில அளவுத்துறை ஆணையர், வணிக வரித்துறை ஆணையர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்துள்ளேன். இந்த புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, திரையரங்கு உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்காமல் உள்ளனர். எனவே, சிங்கம் 3 என்ற எஸ். 3 படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு 21-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

தனுஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. அமலாபால், விவேக், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை வேல்ராஜ் இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தனுஷ் தயாரானார்.
அதன்படி, இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதாகவும், அப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய வி.கிரியேசன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. இப்படத்தின் பூஜை ஏற்கெனவே போடப்பட்டுள்ள நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இந்த படப்பிடிப்பை நடிகரும், தனுஷின் மாமானாருமான ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். மேலும், தனுஷுக்கு மாலை அணிவித்து அவருக்கு வாழ்த்துக்களையும் கூறினார். இந்த படப்பிடிப்பில் நடிகை அமலாபால், விவேக், சரண்யா பொன்வண்ணன், சௌந்தர்யா ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சதுப்பு நிலக்காடு அழிக்கப்பட்ட விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
இந்தி நகைச்சுவை நடிகரும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான கபில் சர்மா மும்பை கோரேகாவில் வசித்து வருகிறார். மும்பை அந்தேரி மேற்கு எஸ்.வி.பி. நகரில் இவரது பங்களா வீடு, அலுவலகம் உள்ளது. இந்த பங்களா வீடு கட்டும்போது மாநகராட்சியிடம் உரிய அனுமதி இன்றி, சட்டவிரோதமாக கட்டுமான பணிகளை மேற்கொண்டது தெரியவந்தது. மேலும் கட்டுமான பணிகளுக்காக அவர் சட்டவிரோதமாக சதுப்பு நிலக்காட்டை அழித்து இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து கபில் சர்மாவுக்கு மாநகராட்சி நோட்டீசு அனுப்பியது. இதை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதில் அளிக்கும்படி மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி மாநகராட்சி தரப்பில் ஐகோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கபில் சர்மா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் கபில் சர்மாவுக்கு எதிராக ஆபாசிங் என்ற வக்கீல் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், சதுப்பு நில பகுதியில் உள்ள மான்குரோவ் செடிகளை அழித்து, அவர் பங்களா வீட்டை கட்டி உள்ளதாகவும், மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை செய்ததாகவும் தெரிவித்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தபோது, சுற்றுச்சூழலுக்கு நடிகர் கபில் சர்மா தீங்கு ஏற்படுத்தி உள்ளதாக கூறிய ஐகோர்ட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வெர்சோவா போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் உத்தரவின்பேரில் வெர்சோவா போலீசார் நடிகர் கபில் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் எனக்கு 60 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். பணத்தை விட ரசிகர்களை சம்பாதிப்பதே மகிழ்ச்சி” என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார்.
நடிகர்-நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவற்றில் அதிகமான ரசிகர்கள் தங்களை பின்தொடர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையை வைத்தே நடிகைகளின் மார்க்கெட் நிலவரங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
இதற்காகவே அடிக்கடி சமூகம் சம்பந்தமான கருத்துகளை பதிவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்களையும் பதிவேற்றம் செய்கிறார்கள். நடிகை இலியானா தனது நீச்சல் உடை படங்கள் மற்றும் கவர்ச்சி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பின்தொடர்வோர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
நடிகை திரிஷா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. அவரை டுவிட்டரில் 30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இதற்காக ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து உள்ளார். நடிகை ஹன்சிகாவை பேஸ்புக்கில் 60 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இதற்காக அவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது:-
“பேஸ்புக்கில் எனக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. 60 லட்சம் பேர் என்னை பின்தொடர்கிறார்கள். ரசிகர்கள் தங்கள் மனதில் எனக்கு உயர்வான இடம் அளித்து இருப்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை கோடி சம்பாதித்தோம் என்பது முக்கியம் இல்லை. எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது. ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் என்னை சின்ன குஷ்பு என்று அழைக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது.”
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
மர்ம ஆசாமிகள் சிலர் நடிகைகள் போல் போலி கணக்குகள் தொடங்கி ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் சங்கடங்களும் அவற்றை முடக்க சம்பந்தப்பட்ட நடிகைகள் சைபர் கிரைம் போலீசில் புகார்கள் அளிப்பதும் அடிக்கடி நடக்கின்றன. ஹன்சிகா சமீபத்தில் தன்பெயரில் போலி கணக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

"பிரியா'' படத்துக்கு முதன் முதலாக "ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்தார், இளையராஜா.
"பிரியா'' படத்துக்கு முதன் முதலாக "ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்தார், இளையராஜா. அந்தப் பாட்டைக் கேட்ட பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி, "இதுபோன்ற திரை இசையை இதுவரை நான் கேட்டது இல்லை'' என்று பாராட்டினார்.
திலீப்குமார் - வைஜயந்திமாலா நடித்த "மதுமதி'' உள்பட ஏராளமான இந்திப் படங்களுக்கு இசை அமைத்தவர் சலீல் சவுத்ரி. தென்னாட்டில் இருந்து முதன் முதலாக ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற "செம்மீன்'' மலையாளப் படத்துக்கு இசை அமைத்தவரும் அவர்தான்.
தனது இசைப்பயணம் குறித்து இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-
"முள்ளும் மலரும்'' படத்தில் டைரக்டர் மகேந்திரன் முடிவு செய்த இடைவேளை வேறு. இப்போது தியேட்டரில் பார்த்த இடைவேளை வேறு.
இதனால் என்னைவிட, டைரக்டர் மகேந்திரன் அதிகம் அதிர்ந்து போனார். அதற்கப்புறம் படம் பார்க்கப் பிடிக்காமல் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பிவிட்டோம்.
தியேட்டர் முதலாளி தன் வீட்டில் சமைத்த சாப்பாட்டுடன் எங்களைப் பார்க்க வந்திருந்தார்.
அவரைப் பார்த்ததும் மகேந்திரன் கோபமாக, "என்ன சார் இது! இடைவேளை இந்த இடத்தில் இல்லையே! எப்படி மாறியது?'' என்று கேட்டார்.
தியேட்டர் அதிபரோ எங்கள் டென்ஷனை கண்டுகொள்ளாமல் "ஓ! அதுவா... சார்! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நம்ம தியேட்டர் ஆபரேட்டர் இருக்கிறானே, அவன் ஒரு டைரக்டருக்கு மேல சார்! சொன்னா நம்பமாட்டீங்க. இந்த படத்துல இடைவேளை போடற இடம் சரியில்லை. ரஜினி மேல லாரி ஏறுகிற மாதிரி ஒரு சீன். அப்ப இடைவேளை போட்டாத்தான் "ரஜினிக்கு என்னாச்சு?'' என்ற பதட்டத்தோடு படத்தைப் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது "கை மட்டும்தான் போய்விட்டது'' என்று காட்டினால் ஒரு `பஞ்ச்' இருக்கும் என்றான் சார்! சொன்னது சொன்னபடி சீனை கட் பண்ணி முன்னே பின்னே போட்டு எப்படி சூப்பரா பண்ணியிருக்கான் பார்த்தீங்களா? அதனாலதான் நான் அவன் விஷயத்திலே தலையிடறதே இல்லை சார்!'' என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.
அதோடு, டைரக்டர் மகேந்திரனை பார்த்து, "இப்ப படம் எப்படியிருக்கு சார்?'' என்றும் கேட்டார்.
மகேந்திரன் பதில் சொல்லவில்லை. ஆனால் நான் மகேந்திரனைப் பார்த்து, "நமக்கும் மேலே ஒருவனடா! அவன் நாலும் தெரிந்த தலைவனடா'' என்று பாடினேன்.
பஞ்சு அருணாசலம் சார் அடுத்து "பிரியா'' படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.
பஞ்சு சார் கதை வசனம் எழுத, சுஜாதா திரைக்கதை அமைக்க எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்வதாக ஏற்பாடு. ரஜினி, ஸ்ரீதேவி இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள்.
இந்தப் படத்துக்கான பாடல்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று பஞ்சு சார் விரும்பினார். அவர் விருப்பத்தில் எனக்கும் உடன்பாடுதான். எனவே யோசித்தேன். அப்போது ஜேசுதாஸ் தனது தரங்கிணி ஸ்டூடியோவிற்காக, "ஸ்டீரியோ'' முறையில் பாடல் பதிவு செய்வதற்கான கருவிகளை புதிதாக வாங்கியிருந்தார்.
அவருடைய மெல்லிசை நிகழ்ச்சிகளில் இந்த புதிய கருவிகளைப் பயன்படுத்தி ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் விதத்தில் `சவுண்ட் சிஸ்டம்' அமைத்தார்.
"பிரியா'' படத்தின் பாடல்களை இந்த `ஸ்டீரியோ' முறையில் பதிவு செய்ய முயன்று பார்த்தால் என்ன என்று தோன்றியது. "கம்போசிங்கிற்கு, பெங்களூர் போகலாம்'' என்றார், பஞ்சு அருணாசலம். போனோம்.
முதல் நாள் ஓட்டலில் உட்கார்ந்தோம். கம்போசிங்கில் திருப்தி வரவில்லை. நான் பஞ்சு சாரிடம் "அண்ணே! பெங்களூர் வந்து ரூமிற்குள் அடைந்து கிடப்பதா? லால்பாக், கம்பன்பாக் போன்ற இடங்களுக்கே போய் கம்போஸ் செய்வோம்'' என்றேன்.
பஞ்சு சாரும் சிரித்துக்கொண்டே, "சரி, அங்கேயே போவோம்'' என்றார்.
காரில் வாத்தியங்களை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம்.
லால்பாக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு பெட்ஷீட் விரித்து உட்கார்ந்து கம்போஸ் செய்ய ஆரம்பித்தோம். கூட்டம் நாங்கள் இருந்த பக்கமாக வரவில்லை என்பதால் `இசை'க்கு இடைïறு இல்லாதிருந்தது.
இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்தில் கம்போசிங் நடந்ததில் 6 பாடல்களும் முடிந்தன.
சென்னைக்கு திரும்பியதும், ஜேசுதாசிடம் எங்கள் புதிய இசை முயற்சி பற்றி தெரிவித்தேன். இது விஷயத்தில் எங்கள் ஆர்வத்துக்கு இணையாக ஜேசுதாஸ் உற்சாகமாகி விட்டார். "இன்னும் சில புதிய மெஷின்கள் வாங்கி விடுகிறேன்'' என்று சொன்னவர் கையோடு அப்போதே ஆர்டர் கொடுத்துவிடடார். புதிய மெஷின்களும் வந்து சேர்ந்தன.
பரணி ஸ்டூடியோவில் அத்தனை மெஷின்களையும் செட்டப் செய்து, மைக், வயரிங், ஹெட்போன்ஸ் எல்லாம் அமைத்து முதன் முதலாக "என்னுயிர் நீதானே'' என்ற பாடலை பதிவு செய்தோம்.
நம்பவே முடியவில்லை. இசை மிகத் தெளிவாக இருந்தது. தனியாகக் கேட்டபோதும் சரி, மொத்தமாக கேட்டபோதும் சரி துல்லியமாக ஒலித்தது பாட்டு. அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும் இசையாக அது இருந்தது.
தமிழ்த்திரை உலகில், உலகத் தரத்துக்கு ஒப்பாக ஒரு இசையைக் கேட்பது அதுதான் முதல் தடவை.
இசைக் கலைஞர்கள் எல்லா ரெக்கார்டிங்குகளிலும் இதுபற்றியே பேசினார்கள். அப்போது ஒரு மலையாளப் படத்துக்கு இசையமைக்க சென்னை வந்திருந்த பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி காதுக்கும் இந்த செய்தி சென்று விட்டது. அவர் ரெக்கார்டிங்கை பார்க்க பரணி ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். அவருடன் அவரது மகள், உதவியாளர் நேபு ஆகியோரும் வந்திருந்தார்கள்.
அன்றைக்கு, பி.சுசீலா பாடிய "டார்லிங் டார்லிங்'' பாடல் பதிவாகியிருந்தது.
சலீல் சவுத்ரி வந்தவுடன், அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினோம். அவர் முகம் பிரகாசம் அடைந்தது. பாடல் முழுவதையும் கேட்டுவிட்டு, "இதுபோன்ற சினிமா இசையை இதுவரை கேட்டதில்லை'' என்றார், பரவசக் குரலில். ஒரு உண்மைக் கலைஞரின் உயர்ந்த மனோபாவத்தை அது எடுத்துக்காட்டியது.
இந்த வகையில் முதல் "ஸ்டீரியோ'' இந்தப் படத்தின் பாடல்கள்தான். ஜேசுதாஸ் அவர்களின் ஒத்துழைப்பால்தான் இதை சாதிக்க முடிந்தது.
இந்த ரெக்கார்டிங் முடிவதற்குள், ரெக்கார்டு செய்த பாடல்களைக் கேட்கும் உற்சாகத்தில் சவுண்டு என்ஜினீயர் வால்ïமை ஏற்ற, ஒரு `ஸ்பீக்கர்' போய்விட்டது.
ஜேசுதாஸ் அதையும் பொருட்படுத்தாமல், உடனடியாக வேறு ஸ்பீக்கருக்கு ஏற்பாடு செய்தார்.
"பிரியா'' படம் முழுக்க முழுக்க மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் படமானது. சண்டைக் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் பாடல்களுமாக "பிரியா'' ஜனரஞ்சகமான படமாக வெளிவந்தது.
இந்தப் படத்தின் ஒரு ரீலில் தொடர்ந்து 10 நிமிடம் வசனம் எதுவும் வராது. `சைலன்ட் மூவி' போல இருக்கும் இந்த இடத்தில் மிïசிக் 10 நிமிடமும் வந்தாக வேண்டும்.
ரஜினியும், ஸ்ரீதேவியும் சிங்கப்பூரில் உள்ள டூரிஸ இடங்களையெல்லாம் ஜாலியாக பார்த்துத் திரிவது போன்ற காட்சிகள், டால்பின் ஷோ, கிளிகள் விளையாட்டு இதுபோல பலப்பல காட்சிகள் இடம் பெற்ற இந்த ரீலுக்கு இசையமைப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்தது. சரியான தாள கதியில் மிïசிக்கை கண்டக்ட் செய்யாவிட்டால் கிளி விளையாட்டுக்கு வரவேண்டிய மிïசிக் வேறு இடத்துக்கு போய்விடும்! அந்த காலகட்டத்தில் எந்த வசதியும் இல்லாமல் ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒவ்வொரு மிïசிக் வரவைப்பதென்பது எவ்வளவு கடினம் என்பது இப்போதுதான் தெரிகிறது. அன்றைக்கு நான் ஏதோ விளையாட்டுப் போல அதை செய்துவிட்டேன். அன்று அரை மணி நேரத்தில் முடிந்த அந்த ரீலுக்கு, இன்று மிïசிக் செய்தால் மூன்று நாட்களாவது ஆகும். அதிலும் அன்றைக்கு கிடைத்த அந்த இசை கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.
தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.க்காக "சிகப்பு ரோஜாக்கள்'' என்ற படத்தை பாரதிராஜா டைரக்ட் செய்யும் வாய்ப்பு வந்தது.
கமலஹாசன் - ஸ்ரீதேவி நடித்த இந்த படத்தை, ஒரு "மர்டர் மிஸ்ட்ரி'' படமாகத்தர பாரதி திட்டமிட்டிருந்தார். படத்தில் இரண்டே பாடல்கள். ஒன்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய "இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது.'' அடுத்தது வாலி எழுதிய "நினைவோ ஒரு பறவை'' பாடல்.
ரெக்கார்டிங்கை பார்ப்பதற்காக, கமல் வந்திருந்தார். ரிகர்சல் பார்த்து முடித்த நேரத்தில் "பிரேக்'' விடப்பட்டது
அந்த நேரத்தில் கமல் சில ஆங்கிலப் பாடல்களைப் பாடிக்காட்டினார். நன்றாக இருந்தது.
நான் கமலிடம், "படத்திலும் நீங்களே இந்தப் பாட்டை பாடிவிடுங்கள்'' என்றேன்.
"ஓ பாடலாமே'' என்றார். ஜானகியுடன் சேர்ந்து பாடினார். "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களுமே "ஹிட்'' ஆயின. படமும்தான்.

2016-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பெற்றுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்னும் ஹாலிவுட் சீரியலின் மூலம் உலகளவில் புகழ் பெற்றார். தொடர்ந்து ஆஸ்கர் விருது விழாவில் விருது வழங்கும் நபர்களில் ஒருவராக பிரியங்கா சோப்ரா இடம் பெற்றது உலகளாவிய அவரது புகழை மேலும் அதிகப்படுத்தியது.
ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் ஜோடியாக பிரியங்கா நடித்திருக்கும் 'பே வாட்ச்' திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளது. இதுதவிர ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யூனிசெப்) நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 2016-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா முதலிடம் பெற்றுள்ளார். ஆஸ்கர் ரெட் கார்பெட் நிகழ்வில் பங்கேற்றவர்கள் குறித்து கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளனர். அதில் குறிப்பாக பிரியங்கா சோப்ரா குறித்தே பெரும்பாலோனோர் தேடியதாக கூகுள் தெரிவித்துள்ளது.
அதிகம் தேடப்பட்ட ஆடை வடிவமைப்பாளர்களின் பட்டியலில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரேச்சல் ராய்க்கு முதலிடமும், இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்ரேவுக்கு ஏழாவது இடமும் கிடைத்துள்ளது.
விளையாட்டுகளில் போக்கிமான் கோவை அதிகம் பேர் தேடியுள்ளனர். அதிகம் தேடப்பட்ட தனிநபர் பட்டியலில் டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் இருவரும் இடம் பெற்றுள்ளனர். அதிகம் தேடப்பட்ட நடிகர் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் முதலிடம் பிடித்துள்ளார். நடிகை ஏஞ்சலினா ஜோலியுடனான விவாகரத்து காரணமாக பிராட் பிட்டை அதிகம் பேர் தேடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் படத்தின் மூலம் ஹிப் ஹாப் பாடகர் ஒருவர் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆகியுள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்...
மலேசியாவை சேர்ந்த ஹிப் ஹாப் பாடகர் யோகி பி. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கியிருக்கிறார். இவருடைய ஆல்பத்தில் ‘மடை திறந்து’ பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. இதைப் பார்த்த இசையமைப்பாளர் வித்யாசாகர் விஜய் நடித்த ‘குருவி’ படத்திற்காக ‘ஹேப்பி நியூ இயர்’ பாடலை பாடவைத்தார்.
அதன்பிறகு, ‘பொல்லாதவன்’ படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ பாடல் யோகி பி.யை ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கியது. அதன்பின், தமிழில் எந்த பாடலையும் பாடாமல் இருந்த யோகி பி. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு மீண்டும் வந்திருக்கிறார்.
இவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருப்பவர் அனிருத். அனிருத் தற்போது அஜித்தன் 57-வது படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை யோகி பி.யை பாடவைத்திருக்கிறார் அனிருத். 7 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு தமிழில் பாட வாய்ப்புக் கொடுத்த அனிருத்துக்கு யோகி.பி நன்றி தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் உருவாகிவரும் பெயரிடப்படாத இப்படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கியிருக்கிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கணேசை ஆயுள் சிறையில் வைத்து இருப்பதாக குண்டு ஆர்த்தி கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நகைச்சுவை நடிகை குண்டு ஆர்த்தியும், கணேசும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும் விவாகரத்து செய்து கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதற்கு ஆர்த்தி அளித்த பதில்...
“ஒரு கணவன்-மனைவி பிரச்சினை இல்லாமல் வாழ்ந்தால் அவர்களைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள். பிரச்சினை வந்தால் அவர்களைப் பற்றியே பேசுவார்கள். தற்போது விவாகரத்து தான் டிரண்ட். நாங்களும் டிரண்டில் இருக்கிறோம்.
இப்போது எங்களைப்பற்றி பேசுகிறார்கள். நானும் கணேசும் சேர்ந்து கோவிலுக்கு சென்றோம். நாங்கள் ஜோடியாக சென்றதை யாரும் பார்க்கவில்லை. விவாகரத்து கொடுத்தால் அது சுதந்திரம் கொடுத்ததுபோல ஆகி விடும். நான் கணேசை ஆயுள் சிறையில் வைத்து இருக்கிறேன் என்றார்.
ராகுல் பிரீத் சிங் விஷாலுக்கு நோ சொல்லிவிட்டு கார்த்திக்கு ஓகே சொல்லியிருக்கிறார். அது எதற்காக? என்பதை கீழே பார்ப்போம்..
தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராகுல் பிரீத் சிங், தற்போது தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராகுல் பிரீத் சிங் அடுத்தாக கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்தபிறகு ‘சதுரங்கவேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில்தான் ராகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். அடுத்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் பிரீத் சிங் ஏற்கெனவே விஷால் நடிப்பில் உருவாகும் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிக்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் பீலே என்பவரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘ஜிங்கா’ என்ற ஹாலிவுட் படத்துக்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாகி உள்ள நிலையில் அடுத்த (2017) ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இந்த படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானின் இருவேறு பிரிவுகளின்கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
படத்தின் பின்னணி இசை, பாடல்களுக்கான இசையமைப்பு ஆகிய இரண்டு பிரிவுகளில் இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. படங்களில் இடம்பெற்ற தனிப்பாடல்களுக்கான பிரிவில் ரஹ்மானின் பாடல்களுடன் சுமார் 140 பாடல்கள் மோதுகின்றன.
எனினும், ஸ்லம்டாக் மில்லியனைர் படத்துக்கு இசையமைத்ததற்காக கடந்த 2009-ம் ஆண்டு சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடலுக்கான இசை என்று ஒரே மேடையில் இரு ஆஸ்கர் விருதுகளை அள்ளிவந்த ரஹ்மான் வரும் ஆண்டிலும் ஆஸ்கர் விருதை வெல்ல வாழ்த்துவோம்!

ராணாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு பாகுபலி படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கு இன்று பிறந்தநாள். இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருந்தால் இவருடைய கதாபாத்திரம் பலராலும் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராணாவின் பிறந்தநாளையொட்டி ‘பாகுபலி’ படக்குழுவினர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முன்வந்தனர். அதன்படி, அவர் நடித்து வரும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரத்தை சித்தரித்து அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கெனவே, ‘பிரபாஸ்’ பிறந்தநாளின்போதும் அவருடைய புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். தற்போது ராணாவுக்கும் அதையே படக்குழுவினர் பின்பற்றியுள்ளனர். பிறந்தநாளில் தன்னுடைய பிரத்யேக போஸ்டரை ‘பாகுபலி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளது ராணாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.