என் மலர்
பிரபுவின் 60-வது பிறந்தநாளையொட்டி ரஜினி நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனும், நடிகருமான பிரபுவுக்கு வருகிற டிசம்பர் 27-ந் தேதி பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு அவருக்கு 60 வயது ஆகிறது. இந்நிலையில், பிரபுவின் பிறந்தநாளையொட்டி இன்று பிரபுவை அவரது அன்னை இல்லத்தில் ரஜினி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
ரஜினி நேரில் வாழ்த்தியது பிரபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த சந்திப்பின் போது, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் பிரபு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடனிருந்தனர். ரஜினியும் பிரபுவும் ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
சினிமாவையும் தாண்டி, ரஜினியும், பிரபுவும் நிஜ வாழ்க்கையிலும் உடன்பிறவா சகோதரர்களாக இருந்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், தன்னுடைய பிறந்தநாளையொட்டி ரஜினி நேரில் வந்து வாழ்த்தியது பிரபுவை அவரது குடும்பத்தாரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விக்ரம் பிரபு நடிப்பதாக இருந்த முடிசூடா மன்னன் தற்போது சத்ரியன் என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டது. படத்திற்கு முடிசூடா மன்னன் என்று தலைப்பும் உறுதிசெய்யப்பட்ட இருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் இப்படத்திற்கு சத்ரியன் என்று தலைப்பு வைக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தது. இருப்பினும், படக்குழுவினர் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் சொல்லாமலே இருந்து வந்தனர். இந்நிலையில், ‘சத்ரியன்’ தலைப்பு வைக்கப்படுவதாக வெளிவந்த செய்திக்கு இயக்குனர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, என்னுடைய அடுத்த படமான ‘முடிசூடா மன்னன்’ படத்தின் தலைப்பு மாற்றப்படுவது உண்மைதான். இப்படத்திற்கு ‘சத்ரியன்’ என்று தலைப்பு வைத்துள்ளோம். இந்த தலைப்பை புத்தாண்டு அன்று சொல்வதாக இருந்தோம். ஆனால், இதைப் பற்றி அறிந்த நண்பர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் தலைப்பை வெளியிட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.
‘சத்ரியன்’ என்ற தலைப்பு ஏற்கெனவே விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படம். இப்படத்தை மறைந்த இயக்குனர் சுபாஷ் இயக்கியிருந்தார். மணிரத்னம் கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த இந்தி திரையிசைப் பாடகர் முஹம்மது ரபியின் பெயரால் வழங்கப்படும் சிறப்பு விருதுகளை பாடகர் உதித் நாராயணன், பாடகி உஷா கண்ணா ஆகியோருக்கு பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வழங்கினார்.
மும்பையில் இயங்கிவரும் ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் மறைந்த இந்தி திரையிசைப் பாடகர் முஹம்மது ரபியின் பெயரால் இசைத்துறை பிரபலங்களை தேர்வுசெய்து சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு பாடகர் உதித் நாராயணன், பாடகி உஷா கண்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்கள் இருவருக்கும் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியின்போது, மறைந்த பாடகர் முஹம்மது ரபிக்கு புகழாரம் சூட்டிய மந்திரி பிரதான், அவர் மிகச்சிறந்த பாடகராக பிரபலமானது மட்டுமல்லாமல், தனது ஈடிணையற்ற குரலால் பல நடிகர்களையும் பிரலமாக்கி வைத்தார் என குறிப்பிட்டார்.
கடந்த 1980-ம் ஆண்டு முஹம்மது ரபியுடன் இணைந்து பாடிய ஒரு பாடலை உதித் நாராயணன் விழா மேடையில் பாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.
"செம்பருத்தி'' படத்தில், கதாநாயகியாக ரோஜா அறிமுகமானார். அதற்குக்காரணமாக இருந்தது ஒரு புகைப்படம். விஜயகாந்த் நடிப்பில் "கேப்டன் பிரபாகரன்'' வெற்றி பெற்றிருந்த நேரம். படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி, புகழின் உச்சியில் இருந்தார்.
"செம்பருத்தி'' படத்தில், கதாநாயகியாக ரோஜா அறிமுகமானார். அதற்குக்காரணமாக இருந்தது ஒரு புகைப்படம்.
விஜயகாந்த் நடிப்பில் "கேப்டன் பிரபாகரன்'' வெற்றி பெற்றிருந்த நேரம். படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி, புகழின் உச்சியில் இருந்தார்.
அதிரடிப்படமாக "கேப்டன் பிரபாகரன்'' வந்திருந்ததால், அடுத்து ஒரு காதல் கதையை இயக்க விரும்பினார், செல்வமணி. அப்படி அவர் முடிவு செய்த படம்தான் "செம்பருத்தி.''
படத்தின் நாயகனாக பிரசாந்த். அவரது பாட்டியாக `அஷ்டாவதானி' நடிகை பானுமதி என தேர்வு செய்தவருக்கு, `நாயகி' கிடைப்பதில்தான் சிக்கல் இருந்தது. கதைக்கு புதுமுக நடிகையை போட்டால் சரியாக இருக்கும் என்று கருதினார் அவர். அதற்கேற்ப நாயகி தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டார்.
இதில் ரோஜா எப்படி சிக்கினார்? ரோஜாவே கூறுகிறார்:
"அப்போது என் புகைப்படம் ஒரு சினிமா பத்திரிகையின் அட்டையில் வந்தது. தெலுங்குப் படத்துக்காக அப்பாவின் நண்பர் எடுத்த படங்களில் ஒன்றுதான் இப்படி பத்திரிகையில் வந்துவிட்டது. இதை யாரோ டைரக்டர் செல்வமணியின் கண்களில் காட்டியிருக்கிறார்கள். உடனே அவரும் இப்படியொரு புதுமுகத்தைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்'' என்று கூறியிருக்கிறார்.
உண்மையில், போட்டோவில் பார்த்ததுமே எனது பெரிய கண்களும், புன்னகை முகமும் அவருக்குப் பிடித்து விட்டன. அதனால் என்னை கதாநாயகியாக தேர்வு செய்தார்.''
இவ்வாறு ரோஜா கூறினார்.
புது நாயகியை செல்வமணி முடிவு செய்ததும் திருப்பதியில் அவர் வீட்டுக்கு சினிமா ஆட்கள் போய்த் தேடியிருக்கிறார்கள். ரோஜாவோ (அப்போது ஸ்ரீலதா) தனது பெற்றோருடன் அதே நேரத்தில் சென்னையில் நடந்த உறவினர் திருமணத்திற்கு வந்திருக்கிறார். சென்னை தி.நகரில் உள்ள "ரோகிணி இன்டர் நேஷனல்'' ஓட்டலில்தான் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பு ஆட்கள் இதைத் தெரிந்து கொண்டார்கள்.
வேகவேகமாக ரோகிணி இன்டர்நேஷனல் ஓட்டலுக்குப் போனவர்கள், ரோஜாவின் குடும்பம் பத்து நிமிடம் முன்புதான் அறையை காலி செய்துவிட்டு காரில் திருப்பதிக்கு புறப்பட்டார்கள் என்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.
ரோஜாவை தேடி வந்திருந்த செல்வமணியின் நண்பர் ராமநாதன், உடனே செயலில் இறங்கினார். சினிமாவில் `கார் சேஸிங்' காட்சிகள் வருகிற மாதிரி காரை வேகமாக ஓட்டச்செய்து, சென்னை பாரிமுனை சந்திப்பில், ரோஜாவின் காரை மடக்கிவிட்டார். அதன் பிறகு நடந்ததை ரோஜாவே கூறுகிறார்:
"எங்கள் காரை மடக்கிய அதே வேகத்தில் "செம்பருத்தி'' படக்கம்பெனிக்கு அழைத்துப் போனார்கள். அப்போது கேப்டன் பிரபாகரன் படம் `ஓஹோ' என ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய டைரக்டர் படத்தில் நடிக்க நமக்கு அழைப்பா என்று எனக்கு திகைப்பாகக்கூட இருந்தது. அப்போது கூட நடிக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இல்லாதிருந்ததால், நடிக்க வந்த அழைப்பு என்னை பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தவில்லை.''
இவ்வாறு ரோஜா கூறினார்.
இதன் பிறகு ரோஜாவின் அப்பாவிடம், திரைக்கதையை செல்வமணி சொல்லி, ரோஜாவை நடிக்க வைக்க அனுமதி கேட்டிருக்கிறார். இப்போதும் ரோஜாவின் அப்பா மட்டுமே "ஓ.கே'' சொல்லியிருக்கிறார். ரோஜா தரப்பில் அப்போது மவுனமே பதிலாக இருந்திருக்கிறது.
மறுநாள் அழைத்து வரச்சொல்லி ரோஜாவின் அப்பாவிடம் டைரக்டர் செல்வமணி சொல்ல, மறுநாளே மேக்கப் டெஸ்ட் நடந்திருக்கிறது. அதன் பிறகு ஊருக்கும் வந்துவிட்டார்கள்.
அப்போது நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது என்றே எண்ணியிருக்கிறார் ரோஜா. அதுபற்றி அவர் சொல்லும்போது:
"நானெல்லாம் கறுப்பு. அப்போது படங்களில் நடிக்க வந்த நடிகைகள் எவ்வளவு கலராக இருந்தார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் நடித்த சினிமாவில் என்னை எங்கே அழைக்கப் போகிறார்கள்? அதுவும், செல்வமணி போன்ற பெரிய டைரக்டர்கள் நிச்சயம் என்னை அழைக்கமாட்டார்கள் என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.
ஆனால் நான் எதிர்பார்த்தே இராத அந்த தகவல் 10-வது நாளில் வந்துவிட்டது. நடிக்க வருமாறு, தகவல் அனுப்பினார்கள். வீட்டில் மகா சந்தோஷம். இப்போது அப்பா வழியில் அம்மாவும் நான் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அப்போது கூட நடிப்பில் சாதனை செய்த `அஷ்டாவதானி' பானுமதியம்மாவுடன் நடிக்கப் போகிறோம் என்றதும் எனக்கு பயமாகிவிட்டது'' என்றார், ரோஜா.
தமிழில் நடிக்க வந்து விட்டாரே தவிர, தமிழில் ஒரு வார்த்தை கூட ரோஜாவுக்குத் தெரியாது. டைரக்டர் சொல்லிக் கொடுத்ததை செய்தார். மற்ற நேரங்களில் அண்ணனுடன்தான் தெலுங்கில் `மாட்லாடிக்' கொண்டிருப்பார். படம் ஒரு வருடம் தயாரிப்பில் இருந்ததால் அவ்வப்போது கிடைத்த இடைவெளியில் ரோஜா தெலுங்கில் 3 படங்கள் நடித்து முடித்து விட்டார். முதல் படம் "பிரேம தப்பர்சு'' தோல்விப்படம் என்றாலும், அடுத்தடுத்து வந்த 2 படங்கள் வெற்றி பெற்று ரோஜாவுக்கு தெலுங்குப்பட உலகில் நிலையான மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.
அதிலும் கூட இரண்டாவது தெலுங்குப்படத்தை விடவும், மூன்றாவது தெலுங்குப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரோஜாவை தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக நிலை நிறுத்தியது.
தயாரிப்பில் ஒரு வருடம் நீடித்த "செம்பருத்தி'' ரிலீஸ் ஆகி அதுவும் வெற்றிப்படமானதில் ரோஜா தமிழிலும் முன்னணி நடிகையானார்.
திரையில் தனது (கறுப்பு) நிறத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ரோஜாவின் அழகுத்தோற்றம் வெளிப்பட்டதில் ரோஜாவுக்கு நம்ப முடியாத ஆச்சரியம்.
"நல்ல கலராக இருப்பவர்கள்தான் சினிமாவில் ஹீரோயினாக முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதனால்தான் நடிக்க அழைக்கப்பட்ட புதிதில் என் மீதே எனக்கு நம்பிக்கையில்லை. நானும் படத்தில் நடித்து அது திரையிலும் வந்த பிறகுதான், முன்னர் நடித்த பல பிரபல நடிகைகள் கூட மேக்கப் உபயத்தில்தான் கலர் கலராக காட்சியளித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிறகு `நிறம்' ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை'' என்கிறார், ரோஜா.
தெலுங்கில்படங்கள் தொடர்ந்து கொண்டிருக்க, தமிழிலோ "செம்பருத்தி'' படத்துக்குப் பிறகு உடனடி வாய்ப்பு வரவில்லை, ரோஜாவுக்கு. கொஞ்சம் இடைவெளி விட்டு அதன் பிறகு வந்த படமே `சூரியன்.' இதில் சரத்குமார் ஜோடியாகி இருந்தார் ரோஜா.
இந்தப்படமும் வெற்றி பெற, தமிழில் ராசியான நடிகை என்ற பெயரும் ரோஜாவுக்கு கிடைத்தது.
"செம்பருத்தி'' படத்திலேயே ரோஜாவின் குழந்தைக் குணமும், யதார்த்தமான போக்கும் டைரக்டர் செல்வமணியை கவர்ந்து இருக்கிறது. ரோஜா மாதிரியான வெள்ளை மனம் கொண்ட பெண்கள் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணிய அவர், அடுத்து எடுத்த அஸ்திரம்தான் "ரோஜாவுடன் திருமணம்.''

நடிகர் தனுஷ் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மூலம் தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தளித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. கவுதம் மேனன்-தனுஷ் இருவரும் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படத்தின் டீசரை வெளியிட்டு நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தளித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசரை வைத்துப் பார்க்கும்போது காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகளுக்கு கவுதம் மேனன் மிகுந்த முக்கியத்துவம் அளித்திருக்கிறார். இதனால் இருவேறு விதமான தோற்றங்களில் தனுஷ் வரும் இப்படத்தின் டீசர் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ரஜினியின் '2.0' படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு ஐந்து வருட இடைவெளிக்குப் பின் விஷாலின் 'கத்தி சண்டை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மருத்துவராக வரும் வடிவேலுவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தில் வடிவேலு காமெடி நடிகராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2', 'சிவலிங்கா', 'விஜய் 61' ஆகிய படங்களிலும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்.
கடைசியாக 'குசேலன்' படத்தில் ரஜினியுடனும், 'முதல்வன்' படத்தில் ஷங்கருடனும் வடிவேலு இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

பல்கேரியா படப்பிடிப்பில் இருந்த அஜித் மனைவி ஷாலினியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக சென்னை திரும்பியுள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் அவரது 57-வது படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. இதில் கஜால் அகர்வால், அக்ஷராஹாசன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்தி நடிகர் விவேக் ஒப்ராய் வில்லனாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் அஜித் மோட்டார் சைக்கிளில் சாகசம் (வீலிங்) செய்யும் காட்சி இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து, அஜித் கறுப்பு டீசர், ஜீன்ஸ் பேண்ட், கண்ணாடி, தொப்பியுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.
காஜல் அகர்வால் பல்கேரியாவில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் நீர் துளிகள் பனிக்கட்டியாக உறைந்திருப்பதை புகைப்படமாக எடுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பல்கேரியாவில் நடந்து வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புடன் இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. மீதம் உள்ள 20 சதவீத படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக அஜித் பல்கேரியாவில் இருந்து சென்னை திரும்பினார்.
இந்த படத்தின் பாடல்களை மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நான் முழுநீள நடிகனாக மாறியது இந்த ஆண்டுதான் என நடிகர் ஆர்ஜே பாலாஜி நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
நகைச்சுவை நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய இடம் பிடித்து வருகிறார். இது பற்றி அவர் கூறுகையில் "சென்ற வருடம் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பும் ஆதரவும், அது கொடுத்த தைரியமும் தான்,சரி இனி தொடர்ந்து நடிக்கலாம் என்று முடிவெடுக்க காரணமாக அமைந்தது.அதன் பலனாக இந்த வருடம் ஆறு படங்கள்.
நான் திரையில் வியந்து பார்த்த இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ்,சந்தோஷ் சிவன், ரவிவர்மன்,பிரபுதேவா, மகேஷ் பாபு போன்ற பல நட்சத்திரங்களுடன் பணியாற்றுவதும் பயணிப்பதும் என, கனவுகள் அரங்கேறி, என்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உதவிய மறக்க முடியாத வருடம்.
இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி. இந்த கனவு இன்னும் பல அதிசயங்களுடன் நீள வேண்டும். கால வெள்ளத்தை கடந்து ஓட வேண்டும். அதனை உங்களுடைய அன்பும், வாழ்த்துக்களும் சாத்தியமாக்கும். புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்றார்.

ரஜினியின் பாட்ஷா திரைப்படம் டிஜிட்டல் முறையில் ஜப்பான் நாட்டில் வெளியாகவுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
தமிழ் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ரஜினியின் ‘பாட்ஷா’.‘நான் ஒரு தடவை சொன்னால் நூறுதடவை சொன்ன மாதிரி’ என்று ரஜினி பேசும் வசனமும், ‘பாட்ஷா’ படத்தில் இடம் பெற்ற ‘நான் ஆட்டோக்காரன்...’ உள்ளிட்ட பாடல்களும் இன்றும் துள்ளல் போட வைப்பவை.
பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியின் அபார நடிப்பு, விறு விறுவென நகரும் திரைக்கதை, ரகுவரனின் நடிப்பு, தேவாவின் இசை மற்றும் வியக்க வைக்கும் அதிரடி காட்சிகள் ஆகியவை பாட்ஷா படத்தின் தனி சிறப்பு.
தயாரிப்பு துறையில் 50-வது வருடத்தை நிறைவு செய்திருக்கும் ‘சத்யா மூவீஸ்’, அதனை சிறப்பிக்கும் விதமாக ‘பாட்ஷா’ படத்தை, நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 5.1 டிஜிட்டல் ஒலி அமைப்பில் வெளியிட இருக்கின்றது.
இது குறித்து சத்யா மூவீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் முன்னிலை வகிக்க ஆரம்பித்து விட்டது.
ஜப்பான் நாட்டு ரசிகர்கள் எப்போதுமே ரஜினி படங்களை திருவிழா போல் கொண்டாடுவார்கள். அந்த வகையில் அவர்கள் இந்த டிரைலருக்கு அளித்த ஆதரவை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. சென்னையில் நடைபெற இருக்கும் சிறப்பு காட்சிக்கு ஜப்பான் ரசிகர்கள் வருகிறார்கள். அவர்கள் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கவும் இருக்கிறார்கள்.
டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் ‘பாட்ஷா’ படத்தை ஜப்பானில் ‘ஸ்பேஸ் பாக்ஸ் ஜப்பான்’ நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது படத்தின் வசனங்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீன டிஜிட்டல் ‘பாட்ஷா’ வருகின்ற ஜனவரியில் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளனர்.

என்னை நினைத்து என் தந்தையும் கணவரும் பெருமைப்படுகிறார்கள் என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் மனைவி ஐஸ்வர்யா சிறுவயது முதல் தனது தந்தை ரஜினியுடன் ஏற்பட்ட அனுபவத்தை ‘ஸ்டாண்டிங் ஆன் மை ஆப்பிள் பாக்ஸ்’ என்ற பெயரில் புத்தமாக எழுதி இருக்கிறார். இதன் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் இந்தி இயக்குனர் கரண்ஜோஹர், அமிதாப்பச்சன் மகள் சுவேதா, நடிகை சோனக்ஷி சின்கா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
“எனக்கு எழுதும் பழக்கம் உண்டு. நிறைய எழுதுவேன். ஆனால் புத்தகம் எழுத வேண்டும் என்று திட்டமிடவில்லை. அதுவாக நடந்தது.எனது புத்தகத்தை படித்து எங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். எனக்கு நல்ல குடும்பம் அமைந்திருக்கிறது. அவர்களுடைய முழு ஆதரவும் இருக்கிறது. நான் வெளியூர் சென்றால் என் அம்மா என் குழந்தைகளை பார்த்துக் கொள்வார். என் கணவரும் எனக்கு முழு ஆதரவாக இருக்கிறார்.
என் தந்தை ரஜினியும், கணவர் தனுசும் என்னை நினைத்து பெருமைப் படு கிறார்கள். நான் எழுத்தாளர் ஆவேன் என்று எனது தந்தைக்கு தெரியும் என்று நினைக்கிறேன். எனவே, நான் புத்தகம் எழுதியது அவருக்கு புதிதல்ல.
நான் 180 பக்கம் கொண்ட புத்தகம் எழுதி இருக்கிறேன். இது என் கணவர் தனுசுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. என் தந்தை பற்றிய ஏராளமான ஜோக்குகள் என் செல்போனுக்கு வரும். அதை என் தந்தையும் படித்துப் பார்த்து ரசித்து இருப்பார். சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்” என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு 6 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இதில் பெரும் பாலான படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அடுத்து ‘புரியாத புதிர்’ ‘கவண்’ உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.
ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்தார். இப்போது புதிய படத்தில் இவருடன் திரிஷா ஜோடி சேர்ந்திருக்கிறார். இதை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்‘ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இயக்குகிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்த கோபால் தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதியும்-திரிஷாவும் இணைந்து நடிக்கும் இந்த படத்துக்கு ‘96’ என்று பெயர் வைத்துள்ளனர். மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரியாக சமந்தா நடிக்கவில்லை என படக்குழு விளக்கமளித்துள்ளது.
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படம் ஆகிறது. இந்த படத்துக்கு ‘மகாநதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.இந்த படத்தில் சமந்தா நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே, அவர் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல் பரவியது. இணையதளங்களில் இது பரபரப்பான செய்தியானது.
இந்த நிலையில் தெலுங்கு ‘மகாநதி’ படத்தில் சமந்தா சாவித்திரி வேடத்தில் நடிக்கவில்லை என்று அந்த படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து படக்குழு கூறுகையில் "இந்த படத்தில் சமந்தா நடிப்பது உண்மை தான். அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் சாவித்திரி வேடத்தில் நடிக்கவில்லை. வேறு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் பார்வை வழியாக சாவித்திரியின் வாழ்க்கை சொல்லப்படும்.
சாவித்திரி வேடத்தில் நடிக்கும் நடிகை இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். அது யார் என்றது உறுதி செய்யப்பட்டவுடன் முறைப்படி அறிவிக்கப்படும்" என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
சாவித்திரி வேடத்தில் நடிக்க நடிகைகள் நித்யாமேனன், வித்யா பாலன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.