என் மலர்
நடித்தார்."குலதய்வம்'' வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்ப்பட உலகில் நிரந்தரமான ஓர் இடத்தை விஜயகுமாரி தேடிக்கொண்டார்.
ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், புத்தா பிலிம்ஸ் போன்ற பெரிய பட நிறுவனங்களில் இருந்து விஜயகுமாரிக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், அவர் ஏவி.எம். நிறுவனத்துடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தினால், மற்ற படங்களில் நடிக்க முடியாத நிலை இருந்தது.
இதை அறிந்த ஏவி.மெய்யப்ப செட்டியார், விஜயகுமாரியை அழைத்து, "உனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அதற்கு, நாங்கள் போட்ட ஒப்பந்தம் தடையாக இருக்கக்கூடாது. எனவே அதை ரத்து செய்து விடுகிறோம். இனி நீ எல்லாப் படங்களிலும் நடிக்கலாம். நீ பெரிய நடிகையாக வருவாய்'' என்று கூறினார்.
நெகிழ்ந்து போன விஜயகுமாரி, அவர் காலைத்தொட்டு வணங்கி, ஆசி பெற்றார்.
ஜெமினியின் "வஞ்சிக்கோட்டை வாலிபன்'' படத்தில், ஜெமினிகணேசனின் தங்கையாக நடித்தார். அந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதே படத்தை, இந்தியிலும் ஜெமினி எடுத்தது. தமிழில் நடித்த அதே வேடத்தில், இந்தியிலும் விஜயகுமாரி நடித்தார். இதுவும் பெரிய வெற்றிப்படம்.
விஜயகுமாரிக்கு இந்திப் படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்தன. அவர் கவனம் முழுவதும், தமிழில் சிறந்த இடத்தைப் பெறவேண்டும் என்பதிலேயே இருந்தது. அதனால் அவர் இந்திப்பட உலகின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அவர் நடித்த ஒரே இந்திப்படம், "ராஜ்திலக்'' (வஞ்சிக்கோட்டை வாலிபன் இந்திப்பதிப்பு) மட்டுமே.
புத்தா பிலிம்ஸ் தயாரித்த "பதிபக்தி''யில் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.என்.ராஜம் ஆகியோருடன் விஜயகுமாரியும் நடித்தார். இதில், விஜயகுமாரிக்கு, ஜெமினிகணேசனின் முறைப்பெண் வேடம்.
பீம்சிங் டைரக்ட் செய்த இந்தப்படம் மெகா ஹிட் படமாகும்.
கதை-வசன கர்த்தாவாக இருந்த ஸ்ரீதர், முதல் முதலாக டைரக்ட் செய்த படம் "கல்யாணப்பரிசு.'' தமிழ்ப்பட உலகில், ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்த படம் இது.
ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில், விஜயகுமாரியும், சரோஜாதேவியும் அக்கா - தங்கையாக நடித்தனர். விஜயகுமாரிக்காக சரோஜாதேவி தன் காதலை தியாகம் செய்வார்.
திருப்பங்கள் நிறைந்த இந்த முக்கோணக் காதல் கதையை, ஒரு காவியமாக உருவாக்கியிருந்தார், ஸ்ரீதர். 9-4-1959-ல் வெளிவந்து வெள்ளி விழா கண்ட இப்படத்தின் மூலம், விஜயகுமாரி மேலும் புகழ் பெற்றார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பெற்ற மகனை விற்ற அன்னை'' படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இணைந்து நடித்தனர். மனோகர், பண்டரிபாய் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். பாடல்கள், படப்பிடிப்பு எல்லாம் சிறப்பாக அமைந்தபோதிலும் படம் வெற்றி பெறவில்லை.
இந்தக் காலக்கட்டத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் இணைந்து, விஜயகுமாரி பல நாடகங்களிலும் நடித்தார்.
அதுபற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-
"நாங்கள் நடித்த நாடகங்களில் கலைஞர் எழுதிய "மணி மகுடம்'' பெரும் புகழ் பெற்றது. மற்றும் "தென்பாண்டிய வீரன்'', "புதுவெள்ளம்'', "முதலாளி'', "முத்து மண்டபம்'' போன்ற நாடகங்களை நாங்கள் நடத்தினோம்.
நாடகங்களில் நடித்துக் கொண்டே "மனைவியே மனிதனின் மாணிக்கம்'', "கைதியின் காதலி'', "தங்க மனசு தங்கம்'' போன்ற படங்களிலும் நடித்தேன்.
அந்த சமயத்தில் நாங்கள் "தங்கரத்தினம்'' என்ற படத்தை தயாரித்தோம். இந்தப்படத்தில் நான் ஆதிதிராவிடப் பெண்ணாக நடித்தேன். சாதியில் ஏற்ற தாழ்வு கிடையாது, எல்லோருடைய உடம்பிலும் ஓடுவது ஒரே ரத்தம்தான். எல்லோரும் மனிதசாதி'' என்ற தத்துவத்தை சொல்லும் கதை.
இந்த படத்தில், அப்போது பழனியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் அண்ணா பேசுவது, கலைஞர் பேசுவது முதலான காட்சிகள் இடம் பெற்றன. மக்கள் இதை மிகவும் வரவேற்றார்கள்.
இந்தப்படம் முடியும்போது நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தேன்.
அதனால் நாடகங்களில் நடிக்க முடியவில்லை. எனவே, "மணிமகுடம்'' நாடகத்தில் எனக்கு பதிலாக நடிக்க கோவையிலிருந்து ஒரு பெண் வந்திருந்தார். அவரால் கலைஞர் எழுதிய வசனங்களை பேச முடியவில்லை. ஆகவே மணிமகுடம் நாடகத்திற்குப் பதிலாக "தென்பாண்டிய வீரன்'' என்ற நாடகத்தை நடத்தினோம்.
அந்தப் புது நடிகை யார் தெரியுமா? பிற்காலத்தில் மலையாள பட உலகில் கொடிகட்டிப் பறந்த "செம்மீன்'' பட நாயகி ஷீலாதான்!
மருத்துவமனையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. என் குழந்தைக்கு டாக்டர் வாதிராஜம் அவருடைய மனைவியும்தான் பெயர் சூட்டினார்கள். என் கணவரின் முதல் எழுத்தான "ர'', என்னுடைய பெயரின் முதல் எழுத்தான "வி'' இந்த இரண்டையும் சேர்த்து ரவிக்குமார் என்ற பெயர் வைத்தார்கள்.
குழந்தை பிறப்பதற்கு முன் வீமண்ண முதலி கார்டனில் குடியிருந்தேன். இது எனக்கு சொந்த வீடு. குழந்தை பிறந்த பிறகு, என் கணவர் அவருடைய முதல் மனைவி பங்கஜம் அக்காளுடன் இருந்த தேனாம்பேட்டை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அந்த காம்பவுண்டுக்குள் மூன்று வீடுகள். அடுத்தடுத்து இருந்தன. அதில் ஒரு வீட்டில், என் கணவரின் முதல் மனைவி பங்கஜம் அக்காள் அவர்களுடைய குழந்தைகளும், மற்றொரு வீட்டில் என் கணவரின் தங்கையும் அவருடைய கணவர் டி.வி.நாராயணசாமியும் அடுத்த வீட்டில் நானும் என் மகனும் இருந்தோம். அப்பா, பாட்டி, அக்காள், தங்கை, அக்காளுடைய மகள் ஆகியோரும் என்னுடன் இருந்தார்கள்.
நாங்கள் தனித்தனி வீட்டில் இருந்தாலும், எல்லோரும் ஒரே குடும்பத்தில் இருப்பதுபோல், ஒற்றுமையாக - சந்தோஷமாக இருந்தோம். அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் மனதில் இன்னும் நிழலாடுகின்றன.
தைப்பொங்கல் வந்துவிட்டால் எங்கள் வீடு திருவிழா கோலம் பூண்டுவிடும். என் கணவரும், நானும் பொங்கல் அன்று காலை 6 மணிக்கு போர்ட்டிகோவில் வந்து நிற்போம். நாடக கம்பெனியில் உள்ளவர்கள், சினிமாத் துறையில் உள்ளவர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள், ரசிகர் மன்றத்தினர், நரிக்குறவர்கள் கூடியிருப்பார்கள். ஒருபக்கம் நாதஸ்வரம் ஒலி ஒலித்துக்கொண்டிருக்கும்.
பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகஆட்டம் என்று வீடே கலகலப்பாக இருக்கும், பிறகு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுச்
செல்வார்கள்.இதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத இனிய நிகழ்ச்சியாகும்.
அறிஞர் அண்ணா அவர்களின் 50-வது பிறந்த நாள் விழாவை எங்கள் வீட்டில் கொண்டாடினோம். அப்போது ஒரு வெள்ளித்தட்டில் 50 தங்கக் காசுகளை வைத்து அண்ணா அவர்களிடம் என் கணவர் கொடுத்தார்.
எனக்கு குழந்தை பிறந்து 2 மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். மாடர்ன் தியேட்டர் படம் "குமுதம்'' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். எனக்கு ஜோடி என் கணவர். இதில் ரங்காராவ், பி.எஸ்.சரோஜா, சவுகார்ஜானகி, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம்.
சுப்பையா டைரக்ட் செய்ய, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதினார்.
இந்தப் படத்தில் எனக்கு வக்கீல் வேடம். காதலனுக்காகவும், காதலன் மனைவிக்காகவும் கோர்டடில் என் தந்தையை எதிர்த்து வாதாடி ஜெயித்து, தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு பெண்ணின் கதை.
இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து முதல்தர நாயகி அந்தஸ்தை எனக்குத் தேடித்தந்தது.
- இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
மிகப்பிரமாண்டமாக தயாரான பாகுபலி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ.250 கோடியில் உருவான இந்த படம் ரூ. 500 கோடி வசூல் குவித்து சாதனைபடைத்தது. இதன் இரண்டாம் பாகம் ரூ. 300 கோடி செலவில் படமானதாக கூறப்படுகிறது.
‘பாகுபலி -2’ படப்பிடிப்பும் நிறைவடைந்ததையடுத்து, 2 பாகங்களுக்கும் சேர்ந்து சுமார் 4 ஆண்டுகள் பணிபுரிந்த படக்குழுவினர் கண்ணீருடன் பிரியாவிடை பெற்றனர்.
இதில் நடித்தவர்கள் அனைவரும் குழுவாக இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதில் நடித்தது குறித்து கூறிய தமன்னா....
“ மென்மையான பயந்த பெண்ணாக இருந்த என்னை வலிமையான பெண்ணாக மாற்றியது ‘பாகுபலி’ தான். பாகுபலியில் நான் ஏற்ற அவந்திகா பாத்திரத்துக்காக குதிரையேற்றம், வாள்வீச்சு எல்லாம் கற்றுக் கொடுத்து என்னை தைரிய சாலியாக மாற்றினார்கள். அதற்கு காரணம் அந்த அவந்திகா பாத்திரம். இப்போது அவந்திகாவை விட்டு பிரிகிறேன்”என்றார்.
‘பாகுபலி’ படதயாரிப்பாளர் ஷோபு அவரது டுவிட்டர் பக்கத்தில், “ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பாகுபலி 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு வெற்றி கரமாக நிறைவடைந்திருக்கிறது. 2012-ல் தொடங்கிய எங்கள் பயணம் அற்புதமாக நிறைவு பெற்று இருக்கிறது. இது இந்த குழுவால் தான் சாத்தியமானது. எந்த நிபந்தனையும் இல்லாமல் படத்தின் நாயகன் பிரபாஸ் நேரம் ஒதுக்கி நடித்துக்கொடுத்தது எங்களால் மறக்க முடியாத ஒன்று. தற்போது கமலக்கண்ணன் தலைமையில் கிராபிக்ஸ் பணி நடந்து வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என பெருகிவரும் ஆதரவுக் குரல் தொடர்பாக தலைமை செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழர்களின் பாரம்பரிய மரபுசார்ந்த வாழ்க்கையில் இடம்பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 'ஏறுதழுவுதல்' என்றழைகப்பட்டது. ஏறுதழுவுதல், அதாவது காளைகளை அணைத்துப் பிடித்தல் என்ற இந்தப் போட்டியின் நேரடி பொருளை காயப்படுத்துதல் என நாம் தவறாக புரிந்துகொள்ள கூடாது என்று குறிப்பிட்டார்.
ஆனால், இந்த விளையாட்டில் காளைகளுக்கு காயம் ஏற்படுகிறது, அடிபட்டு ரத்தம் வடிகிறது என்றெல்லாம் பிராணிகள் வதை சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகிறார்களே.., என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அப்படியானால் பிரியாணிக்கும் நாம் தடை விதிக்க வேண்டும் என்றார்.
ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நேரிடையாக பதிலளித்த கமல்ஹாசன், நிச்சயமாக, அது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்தார்.
தாவரங்களுக்கும் உயிர் உண்டு, அவை மனிதர்களுடன் உணர்வுபூர்வமாக உறவாடுகிறது. அவற்றுக்கும் வலியை அறியும் உணர்ச்சி உள்ளது என்று தாவரவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் தெரிவித்திருந்தார் என்பதற்காக நாம் எலுமிச்சை பழத்தை வெட்டாமல் இருந்து விட்டோமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால், ஜல்லிக்கட்டின்போது காளைகள் காயப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.. என்ற நிருபரை இடைமறித்த கமல்ஹாசன், ஆம், எனக்கு தெரியும். நான் ஜல்லிக்கட்டில் விளையாடி இருக்கிறேன். இந்த விளையாட்டில் இறங்கி காளையை தழுவிய வெகு குறைந்த அளவிலான நடிகர்களில் நானும் ஒருவன் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளை வெற்றி பெற்றதா? அல்லது, அதனுடன் மோதியவர் வெற்றி பெற்றாரா? என்ற பேச்சுக்கே இடமில்லை. காளையை தழுவிப்பிடித்தபடி நீங்கள் எவ்வளவு நேரம் தரையில் உருண்டு தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம்.
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் தொடர்பான நிறைய விஷயங்களை நினைவுப்படுத்தும் இந்த வீரவிளையாட்டை தமிழன் என்ற முறையில் நான் நேசிக்கிறேன், ஆதரிக்கிறேன்.
இந்த விளையாட்டில் காளைகள் காயப்படுத்தப்படுவதோ, வெட்டப்படுவதோ, கொல்லப்படுவதோ இல்லை. அவ்வாறு இருந்தால் இதற்கு தடை விதிக்கலாம், ஜல்லிக்கட்டு நீக்கப்படலாம்.
ஆனால், காளைகள் மோதியதால் நேர்ந்த விபத்து மரணங்களைவிட, தற்போது இருசக்கர வாகன விபத்துகளால் பெருகிவரும் மரணங்களைப் பற்றியும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.
பேராசிரியர் பிரபா கல்வி மணி தொகுத்து எழுதி இருந்த இந்த புத்தகத்தை நீதிபதி சந்துரு வெளியிட்டார். விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
கல்வி சூழல் எப்படி உள்ளது என்று விரிவாகவும் தெளிவாகவும் அனைவரும் பேசியதற்கு என் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.
36 வருடங்களுக்கு முன்பு சிவகுமார் அறக்கட்டளை என்ற பெயரில் மாநில அளவில் இடம் பிடித்த மாணவர்கள் அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாக வீட்டிற்கு அழைத்து காசோலை செலுத்தி மரியாதை செய்து வந்தோம். இந்தச் செயல் சரியானதா என்ற கேள்வி தோன்றியது.
அனைவரையும் சமமாக பார்கிறோமா என்று கேள்வி ஞானவேலிடம் இருந்து வந்தது பின்பு பார்க்கும்போது மாநில அளவில் இடம் பிடித்த மாணவர்களில் 75 சதவீதம் மேல் ஐ.ஏ.ஸ் அதிகாரியோட மகனாகவோ மகளாகவோ இருக்கலாம், ஒரு பொறியாளரின் அல்லது மருத்துவரின் மகனாகவோ மகளாகவோ இருக்கலாம். நகரத்தில் படித்து வந்த மாணவர்களையும் கிராமத்தில் படித்து வந்த மாணவர்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்றும் இதற்கும் மேல் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன பண்ண போகிறோம் என்று தோன்றியது.
அதற்கு இந்த கல்வி சூழல் எப்படியுள்ளது என்று 10 வருடங்களுக்கு முன்பாகத்தான் இன்னும் அழமாக யோசிக்க தொடங்கினோம். அகரம் மூலமாக அரசு பள்ளி மற்றும் அதை சார்ந்த உதவிகள் பெற்றுள்ள 1500 பள்ளி மாணவர்களுக்கு பக்கபலமாக அகரம் அமைய அந்த ஒரு உரையாடல் முக்கியகாரணமாக அமைந்தது .
கடந்த 10 வருடங்களாக கல்வி முறையில் நிறைய கேள்விகள் இருக்கிறது, அதை அலசி ஆராயும் விஷயமாக தான் இந்த புத்தகத்தை நான் பார்க்கிறேன். இதை அகரம் மூலமாக வெளியிட நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.
தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் படித்து முடித்த பின்பு கல்லூரிகளில் சேரும்போது அவர்கள் படுகின்ற கஷ்டங்களை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம். தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கும் நகர்புற வாழ்க்கையை வாழ படும் கஷ்டங்கள் மிகவும் கடினமான ஒன்று.
கால்களை கட்டி போடவில்லை. கட்டிபோட்டு ஓட்டபந்தயம் வைத்து முதலில் வந்தவருக்கு பரிசு கொடுக்கவில்லை . கிட்டதட்ட கால்களை வெட்டி போட்டு முதலில் வந்த மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகின்றோம். இது சரியா, இல்லையா என்பதை அலசி ஆராய்ந்து நிறைய தொகுப்புகளை கல்விமணி இந்த புத்தகத்தில் வைத்துள்ளார்.
ஒரு படத்தை பார்த்து அதற்கு விமர்சனம் கொடுக்கிறோம் . அதை இப்படி பண்ணிருக்கலாம் அப்படி பண்ணிருக்கலாம் என்று படத்தின் இடைவேளை காட்சியை கொஞ்சம் மாற்றியமைத்திருக்கலாம் என்று உரையாடுகின்றோம்.
கிட்டதட்ட 25 லட்சம் மாணவர்கள் தொடக்க கல்வியில் சேருகிறார்கள். பின்பு பள்ளி முடித்து கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றவர்கள் 1 ½ லட்சம் மாணவர்கள் கூட கிடையாது. நிறைய மாணவர்கள் பின்தள்ளப்படுகிறார்கள்.
இப்போ 2800 இடங்கள் அரசு பள்ளியில் உள்ளது அதில் படிப்பவர்கள் 60 சதவீதம் மாணவர்கள் தான் . இதுதான் நமது தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை. ஆனால் அவர்கள் மருத்துவ துறையில் நுழைய நிறைய கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டியதாக உள்ளது. 2,3 இடங்கள் மட்டுமே ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு கிடைக்கின்றது.
அத்தனை கோடி மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு பண்ணுவது கல்வி மட்டுமே. எங்கேயாவது டிசைன் இன் இந்தியா என்ற வாசகத்தை பார்க்கின்றோமா எப்போதாவது மேட் இன் இந்தியா என்ற வாசகத்தை பார்க்கின்றோம். தயவு செய்து இந்த புத்தகத்த்தில் நேரத்தை செலவிடுங்கள்.
இவ்வாறு சூர்யா பேசினார்.
விழாவில் தேவகுமார் வரவேற்றார். பேராசிரியர் பிரபா கல்விமணி, எழுத்தாளர் ரவிக்குமார், டாக்டர் சுரேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அட்லி படத்திற்கு பின்னர், விஜய் தனது 62-வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. முருகதாஸ் - விஜய் கூட்டணி துப்பாக்கி, `கத்தி' உள்ளிட்ட இரு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தனுசும் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தனுசின் ஒன்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது. முன்னதாக விஜயின் `கத்தி' படத்தை தனுஷ் தயாரிக்க இருந்தார். பல்வேறு காரணங்களால் அது தடைபட்ட நிலையில், தற்போது, விஜயின் 62-வது படத்தை தனுஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள `பைரவா' படம் பொங்கல் விருந்தாக வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அனிருத் அளித்துள்ள விளக்கம் இது....
“தனுஷ் எப்போதும் என் நலம் விரும்பி. எனக்கே என்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்த போது என்னை நம்பிய ஒரே ஆள் தனுஷ்தான்.
ஒரு படைப்பாளி அடுத்தடுத்து ஒருவரோடு மீண்டும் மீண்டும் சேர்ந்து பணிபுரிந்தால், பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி இருக்காது. போர் அடித்து விடும். ரசிகர்களுக்கும் போர் அடித்து விடும்.
இதனால் தான் நானும் தனுசும் ஒரு குட்டி பிரேக் எடுத்திருக்கிறோம். 4 அல்லது 5 படங்கள் கழித்து நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக பணியாற்றுவோம்” என்றார்.
`லாலா லாண்ட்' என்ற இசை மற்றும் காமெடி கலந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்த ரியான் கோஸ்லிங் சிறந்த நடிகராகவும், எம்மா ஜோன்ஸ் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்ற வண்ணமயமான இவ்விழாவில், தொலைக்காட்சி தொடர்கள் உள்ளிட்ட பிற பிரிவுகளுக்கும் விருதுகள் அளிக்கப்பட்டன.
சிறந்த தொலைக்காட்சி தொடர் நடிகராக தேர்வு செய்யப்பட்ட பில்லி பாப் தார்ன்ட்டான் என்பவருக்கு இவ்விருதினை ஹாலிவுட் நடிகர் ஜெப்ரி டீன் மோர்கன் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இணைந்து வழங்கினர்.
பாலிவுட் மற்றும் இந்திய சினிமா எல்லையை கடந்து 'குவாண்ட்டிக்கோ' தொடரில் தோன்றியதன் மூலம் அமெரிக்க மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ள பிரியங்கா சோப்ராவிடம் இவ்விழாவின்போது நிருபர்கள் சில கேள்விகளை முன்வைத்தனர்.

அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்திய நடிகை என்ற முறையில் என்ன கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா, ‘நான் ஒரு நடிகை என்ற முறையில் எனது பணிக்கான இடம் எங்கே இருந்தாலும் அங்கு போக வேண்டும் என்றே நினைக்கிறேன்’ என்றார்.
குவாண்ட்டிகோ தொடரின் மூலம் அமெரிக்க ரசிகர்கள் என்னை அங்கீகரித்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். 'பேவாட்ச்' (பிரியங்கா நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம் உருவாகிவரும் விதத்தை எண்ணியும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு இது நல்ல நேரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னரும் அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் மற்றும் எம்மி விருதுகள் வழங்கும் விழாவிலும் பிரியங்கா சோப்ரா பங்கேற்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இதனையடுத்து, இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மார்ச்சில் துவங்க உள்ளதாகவும், இதில் விஜய் சேதுபதி பங்கேற்பார் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் தற்போது, `பவர்பாண்டி' போஸ்ட் புரெக்ஷன் பணியிலும், `விஐபி 2'-விலும் நடித்து வருகிறார். இந்த பணிகள் பிப்ரவரியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனுஷ் `வடசென்னை' படத்தில் நடிக்க உள்ளார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் 'புரியாத புதிர்' பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது. இதுதவிர 'கவண்', 'கருப்பன்', 'விக்ரம்-வேதா', '96', 'அநீதி கதைகள்' உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார்.
`வாலு' பட இயக்குநர் படத்தில் நடித்து வரும் விக்ரம் தற்போது கவுதம் மேனனுடன் இணைகிறார். இதற்கான படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தை உலக தரத்தில் எடுக்க முடிவு செய்துள்ள கவுதம், உலகின் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களை அழைத்துள்ளாராம். மேலும் படத்தை 2017 ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
படத்தின் முக்கால்வாசி பாகத்தில் 'சால்ட் அன்ட் பெப்பர்' லுக்கிலும், பிளாஷ்பேக்கில் இளமையான தோற்றத்திலும் விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. விக்ரம் - கவுதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல சினிமாவில் இருந்து விலக விரும்புவதாக மோகன்லால் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். மோகன்லாலுக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியிட்ட தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள முன்னணி கதாசிரியர் வாசுதேவன் நாயரின் ‘ரண்டமூலம்’ படத்தில் நடிக்க நடிகர் மோகன்லால் ஆர்வமாக உள்ளார். இது தனது கனவு திட்டம் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தை தயாரிக்க ரூ.600 கோடி செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு பிறகு மோகன்லால் சினிமாவில் இருந்து விலகுவார் என தெரிகிறது.
`லாலா லாண்ட்' படக்குழு மொத்தமாக பரிந்துரை செய்யப்பட்ட 7 பிரிவிலும் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்துள்ளது. லாலா லாண்ட் வென்றுள்ள விருதுகளாவன,
கோல்டன் குளோப் சிறந்த படம் - லாலா லாண்ட்
கோல்டன் குளோப் சிறந்த இயக்குநர் - டேமியன் சேஷல்
கோல்டன் குளோப் சிறந்த திரைக்கதை - டேமியன் சேஷல்
கோல்டன் குளோப் சிறந்த நடிகர் - ரியான் கோஸ்லிங்
கோல்டன் குளோப் சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன்
கோல்டன் குளோப் சிறந்த இசையமைப்பாளர் - ஜஸ்டின் ஃகுர்விட்ஸ்
கோல்டன் குளோப் சிறந்த பாடலாசிரியைர் - பென்ஞ் ஹாசக், ஜஸ்டின் பால்
உள்ளிட்ட 7 பிரிவுகளில் லாலா லாண்ட் படக்குழுவினர் விருது வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதர முக்கிய படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் விருதுகள் வருமாறு:
கோல்டன் குளோப் சிறந்த அனிமேசன் படம் - சூடோபியா
கோல்டன் குளோப் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் - எல்லி- பிரான்ஸ்
கோல்டன் குளோப் சிறந்த துணை நடிகை- வியோலா டேலிஸ் பென்சஸ்
கோல்டன் குளோப் சிறந்த துணை நடிகர் ஆரோன் டெய்லர் -ஜான்சன், நாக்டர்னல் அனிமல்ஸ்
கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி தொடர் தி க்ரவுண்
கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி நடிகர் - பில்லி பாப் தோர்டன் - கோலியத்
கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி நடிகை க்ளேய்ர் ஃபாய் - தி க்ரவுண்
இந்த பேரணியை தொடங்கி வைப்பதற்காக இந்தி நடிகர் ரன்வீர் சிங் வந்திருந்தார். அவர் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைப்பதற்காக சென்றபோது, அதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஒருவர் ஹெல்மட் அணியாமல் இருப்பதை கண்டார். இதையடுத்து ரன்வீர் சிங் அவரிடம் சென்று ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்லவேண்டாம் என கூறி அவரை இறங்கிக்கொள்ளுமாறு வலியுறுத்தினார். இதையடுத்து அவர் இறங்கி சென்றார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, சாலை விதிகளை பின்பற்றாததால் ஏற்பட்ட பல்வேறு விபத்து சம்பவங்களையும், அதனால் உயிரிழந்தவர்களையும் மேற்கொள்காட்டி பேசினார். மேலும், இளைஞர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “சாலை விதிமுறைகளை முறைப்படி பின்பற்றுவது விபத்துகளின் எண்ணிக்கையையும், இறப்புகளையும் கணிசமாக குறைக்கிறது ” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தானே போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.








