என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கோவையை சேர்ந்த என்ஜினீயர் சிறந்த தொழில் நுட்பத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
    திரையுலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி நடக்கிறது. இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் விருதுகளை தி அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் நிறுவனம் கடந்த 4-ந்தேதி அறிவித்தது.

    இதில் 18 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த என்ஜினீயர் கிரண்பட் (வயது 41) என்பவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

    இவர் ஹாலிவுட் படங்களான அவெஞ்சர்ஸ், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன், ஸ்டார் வார்ஸ் எபிசோட்-7, ஸ்டார் வார்ஸ் ராக் ஒன், வார்கிராப்ட் உள்பட பல்வேறு படங்களில் நடித்த கதாபாத்திரங்களின் முகபாவனைகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாற்றும் பணியை மிகவும் சிறப்பாக மேற்கொண்டார். இதனால் அவருக்கு தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

    கிரண்பட் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு பாயல்பட் என்ற மனைவியும், 4 வயதில் மேகனா, புவனா என்ற இரட்டைக்குழந்தைகளும் உள்ளனர்.

    கிரண்பட் அமெரிக்காவில் லூம் டாட் ஏ.ஐ. என்ற நிறுவனத்தை நடத்தி வருவதுடன், அதன் மூலம் ஹாலிவுட் படங்களின் கதாபாத்திரங்களின் முகபாவனைகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

    ஏற்கனவே கோவையை சேர்ந்த கொட்டலாங்கோ லியான் (45) என்பவர் இதே துறையில் கடந்த ஆண்டு ஆஸ்கார் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ‘ஆஸ்கார் விருதுக்கு கிரண்பட் தேர்வு செய்யப்பட்டு உள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த மாதம் 11-ந்தேதி அமெரிக்காவில் அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாங்கள் ஓரிரு நாட்களில் அமெரிக்கா செல்ல உள்ளோம்’ என கிரண்பட்டின் பெற்றோர் தெரிவித்தனர். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்தி தனது குடும்பத்தாரை பின்பற்றி புதிய பணியில் களமிறங்கியுள்ளார். இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.
    தமிழ் சினிமாவை பொறுத்தவரை நாளுக்கு நாள் அடுத்தடுத்த இலக்கை தொட்டுக் கொண்டே செல்கிறது. மேலும் சினிமாவில்  நடிகர், நடிககைள் மட்டுமல்லாது, இயக்குநர்கள், படத் தயாரிப்பாளர்கள் என பல்வேறு துறைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள், பிரபலங்களை தவிர்த்து, நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதற்காக தனக்கென ஒரு  தயாரிப்பு நிறுவனத்தையும் துவக்கி அதன் மூலம் படத் தயாரிப்பு வேலைகளை மேற்கொள்கின்றனர்.

    குறிப்பாக நடிகர் விஷால், விஷ்ணு விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பலர் தங்களது தயாரிப்பிலேயே  படங்களை தயாரித்து வெளியிடுகின்றனர். இந்த வரிசையில் நடிகர் கார்த்தியும் இணைந்துள்ளார்.

    கார்த்தி `கே எண்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  மேலும்,  தனதுஅண்ணனும் நடிகருமான சூர்யா 2டி எண்டர்டெயின்மண்ட் என்ற பெயரிலும், தனது உறவினர்களான எஸ்.ஆர்.பிரபு டிரீம்  வாரியர்ஸ் பிக்சர்ஸ்-ம் மற்றும் கே.இ.ஞானவேல்ராஜா  ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த வரிசையில்  கார்த்தியும் தற்போது இணைந்துள்ளார். இதன்மூலம் கார்த்தி தனது குடும்பத்தாரை பின்பற்றி தயாரிப்பில் களமிறங்கியுள்ளது  தெரிகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியடப்பட உள்ளது.
    ஜல்லிக்கட்டு போட்டிக்கு நடிகர்கள் தனுஷ், விவேக், ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, சூரி ஆகியோர் ஜல்லிக்கட்டில் காளைகள் வதைக்கப்படுவது இல்லை என்றும், ஏறு தழுவுதல் என்ற பெயரில் தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வரும் இந்த போட்டிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார்கள்.

    நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம் மற்றும் அவர்களுடைய ஒருங்கிணைந்த குரல். ஜல்லிக்கட்டை ஆதரிப்போம், ஜல்லிக்கட்டு தேவையானது என்று கூறியுள்ளார்.

    நகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், “நாட்டு மாட்டுக்காக குரல் கொடுக்காதவன் வீரன் அல்ல. விவசாயிக்காக குரல் கொடுக்காதவன் தமிழன் அல்ல. மரத்தை மறந்தவன் மனிதனே அல்ல. இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். பயிர் கருகுவது பார்த்து விவசாயிகள் விடும் கண்ணீர் இதயம் பிளக்கிறது. ஆனாலும் மஞ்சள், கரும்பு, பானை வாங்கி விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக “கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற பாடலை இசையமைத்து வெளியிட இருப்பதாகவும் அந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானத்தை கஷ்டப்படும் விவசாயிகளுக்கு அளிக்கப்போவதாகவும் டுவிட்டரில் அறிவித்து இருக்கிறார்.
    அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் படமாக்கப்பட்டு வரும்`தல 57 படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.
    `வீரம்', `வேதாளம்' படங்களைத் தொடர்ந்து அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் `தல 57' படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். வில்லனாக பாலிவுட் பிரபலம்  விவேக் ஓபராய்  நடித்து வருகிறார்.

    அஜித் படங்களிலேயே ரூ.100 கோடியை தாண்டி அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் `தல 57' படத்தை சத்யஜோதி  பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

    நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் `தல 57' படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக  பரவி வருகின்றன. தற்போது, பல்கேரியாவில் எடுக்கப்பட்டு வரும் சில காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் கசிந்து  வைரலாக பரவி வருகிறது.

    ரம்ஜானை முன்னிட்டு ஜுன் 23 அல்லது 24ம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஏ.எல்.எஸ். தயாரித்த "சாரதா'' படத்தை, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன் முதலாக டைரக்ட் செய்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி இணைந்து நடித்த இந்தப்படம், பெரிய வெற்றி பெற்றது.
    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், குடும்பப்பாங்கான கதைகளுக்கு அருமையாக வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த காலக்கட்டம் அது. திறமைசாலிகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் கொண்ட பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன் (கவிஞர் கண்ணதாசனின் அண்ணன்), கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் "சாரதா'' என்ற படத்தை தயாரிக்கத் திட்டமிட்டார்.

    இது புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்டது.

    விபத்தில் ஆண்மை இழந்து விடும் கதாநாயகன், மனைவிக்கு மறுமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வான். இதை விரும்பாத கதாநாயகி, பெரிய மனப்போராட்டத்தில் இருப்பாள். இறுதியில், கணவன் காலில் விழுந்து ஆசி பெறும்போது, உயிர் போய்விடும்.

    இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாகவும், விஜயகுமாரி கதாநாயகியாகவும் நடித்தனர். மற்றும் எம்.ஆர்.ராதா, நாகையா, எம்.வி.ராஜம்மா, புஷ்பலதா ஆகியோரும் நடித்தனர்.

    படத்தின் கதை - வசனத்தை உணர்ச்சி பொங்க எழுதியிருந்தார், கோபாலகிருஷ்ணன்.

    கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்...'', "மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத்தொட்டு'', "தட்டுத்தடுமாறி நெஞ்சம்'' என்பது உள்பட எல்லா பாடல்களும் இனிமையாக அமைந்திருந்தன.

    "சாரதா'', 16-3-1962-ல் வெளிவந்தது. கதை, வசனம், நடிப்பு, பாடல் என்று அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததால், படம் `சூப்பர் ஹிட்' ஆகியது.

    குறிப்பாக, விஜயகுமாரியின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது.

    சாரதா பட அனுபவங்கள் பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-

    "சாரதா'' ஸ்டூடியோ உதயம்

    "ஏ.எல்.எஸ். அவர்கள் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, "மெஜஸ்டிக்'' என்ற ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து, அதற்கு "சாரதா ஸ்டூடியோ'' என்று பெயர் சூட்டினார்.

    சாரதா படத்திற்கு பிறகு ஏ.எல்.எஸ். எடுத்த படங்களுக்கெல்லாம் படத்தின் கதாநாயகிகளின் பெயரையே சாந்தி, ஆனந்தி, வசந்தி என்று வைத்தார். இந்தப் படங்களில் எல்லாம் நான்தான் கதாநாயகியாக நடித்தேன்.

    "சாரதா'' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே, சரவணா பிலிம்ஸ் தயாரித்த "பாதகாணிக்கை'' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். இந்தப் படத்தின் டைரக்டர் கே.சங்கர். ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, அசோகன், எஸ்.வி.சுப்பையா, எம்.வி.ராஜம்மா, ஆகியோருடன் கமலஹாசனும் சின்னப்பையனாக நடித்தார்.

    இந்தப் படத்தில் என்னுடைய மேக்கப் சரியில்லை என்று கூறி, ஹரிபாபு என்ற பெரிய மேக்கப்மேனை எனக்கு மேக்கப் போட ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    ஹரிபாபு, வெளியே எங்கேயும் போகமாட்டார். நடிகர் - நடிகைகள் அவர் வீட்டிற்குப்போய்தான் மேக்கப் போட்டுக் கொள்ள

    இதனால் நான் மேக்கப் போட்டுக் கொள்வதற்காக, அதிகாலை 4-30 மணியிலிருந்து 5 மணிக்குள் புறப்பட்டுப் போவேன். ஏறத்தாழ அதே நேரத்தில், என்.டி.ராமராவும் ஹரிபாபுவிடம் மேக்கப் போட்டுக்கொள்ள வருவார். அப்போது என்னைப் பார்த்த என்.டி.ஆர், என்னை தெலுங்குப் படத்தில் நடிக்க அழைத்தார். அதற்கு நான், "எனக்கு தெலுங்கு தெரியாதே'' என்று சொன்னேன்.

    "நான் உனக்கு தெலுங்கு சொல்லிக் கொடுத்து சின்ன சின்ன ஷாட்டாக எடுக்கிறேன். அதன் பிறகு உனக்கு தெலுங்கில் நடிப்பது சுலபமாகப் போய்விடும்'' என்றார்.

    அப்போது நான் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்ததால், என்.டி.ஆர். அவ்வளவு ஆர்வமாக கேட்டும், என்னால் நடிக்க முடியாமல் போயிற்று.

    அன்று அவர் கூறியபடி தெலுங்குப் படத்தில் நடித்திருந்தால், தெலுங்குப்பட உலகிலும் எனக்கொரு கதாநாயகி அந்தஸ்து கிடைத்து இருக்கும்.

    அடுத்து ராஜாமணி பிக்சர்ஸ் பட நிறுவனம் "குங்குமம்'' என்ற படத்தை கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் தயாரித்தது. இந்தப் படத்தில், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், ரங்காராவ், எம்.வி.ராஜம்மா, நான் எல்லோரும் நடித்தோம். இந்தப்படத்தில் சாரதா

    அறிமுகமானார்.இதில், நான் சிவாஜிகணேசனை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கதை நன்றாக இருந்தும், பாட்டுக்கள் எல்லாம் அருமையாக அமைந்திருந்தும் படம் ஓடவில்லை.

    அடுத்து ஏ.எல்.எஸ். புரொடக்ஷன் தயாரித்த "சாந்தி'' என்ற படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம். டைரக்டர் பீம்சிங்.

    இந்தப் படத்தில் சிவாஜிகணேசனுக்கும், எனக்கும் முதல் இரவு காட்சி. அந்தக் காட்சியில், முதல் இரவு நடக்கக்கூடாது என்பதற்காக என் புடவையை எரியும் விளக்கில் போட்டு புடவை எரிய ஆரம்பித்ததும் "முதல் இரவு அன்று இப்படி நடந்தது அபசகுனம்'' என்று காரணம் காட்டி, சிவாஜிகணேசன் முதல் இரவை தள்ளி வைத்துவிடுவார்.

    இது அன்றைய தினம் படமாக்கப்பட வேண்டிய காட்சி.

    அப்போது எதிர்பாராமல் என் புடவையில் தீ மள மளவென்று பரவியது.நான் பயந்து போய், என் கையால் அதைக் கசக்கி தீயை அணைத்துவிட்டேன். இதனால் என் கையில் தீக்காயம் ஏற்பட்டு, நான் துடித்துப்போனேன்.

    உடனே, சிவாஜி மருந்து வாங்கி வரச்சொல்லி, அவரே என் அருகில் அமர்ந்து தீக்காயத்திற்கு மருந்து தடவினார். அந்த மனிதாபிமானத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்த "சாந்தி'', நன்றாக ஓடியது.

    இதைத்தொடர்ந்து டைரக்டர் ப.நீலகண்டன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். நிறுவனம் எடுத்த படம் "ஆனந்தி.'' இதில் நானும் எஸ்.எஸ்.ஆரும் கதாநாயகன், கதாநாயகி. எம்.என்.நம்பியாரும் இதில் நடித்திருந்தார். இந்தப்படம் சுமாராக ஓடினாலும், இந்தப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்; நெஞ்சிலே நினைவிருந்தால் நீரிலும் தெய்வம் வரும்'' என்ற அந்தப்பாடலை, அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டு இருப்பேன்.

    தொடர்ந்து "பணம் பந்தியிலே'', "உல்லாசப்பயணம்'', "தேடி வந்த திருமகள்'', "அவன் பித்தனா'', "வழிகாட்டி'', "அல்லி'' முதலிய படங்கள் வந்தன. இவை நானும் எஸ்.எஸ்.ஆரும் இணைந்து நடித்த எங்களுடைய சொந்தப் படங்கள்.

    பெல் பிக்சர்ஸ் நிறுவனம் பீம்சிங் டைரக்ஷனில் எடுத்த படம் "பச்சை விளக்கு.'' இந்தப்படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா, ரங்காராவ், சவுகார்ஜானகி, புஷ்பலதா, நாகேஷ் ஆகியோர் நடித்தோம்.

    இந்தப்படத்தில் நான் சிவாஜிகணேசனின் தங்கையாக நடித்தேன். அதில் சிவாஜிகணேசன் என்னை வாழ்த்தி "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது'' என்று பாடுவார். "குங்குமச் சிமிழே, குடும்பத்தின் விளக்கே, குலமகளே வருக! எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக!'' என்று அந்தப்பாட்டில் வரிகள் வரும்.

    அன்றே சிவாஜிகணேசன் என்னிடம், "விஜி! நீ வருங்காலத்தில் கண்ணகியாக நடிப்பாய்!'' என்றார். அவர் என்னை வாழ்த்தி, பச்சை விளக்கு காட்டினார் என்றே நினைத்தேன்.

    பச்சை விளக்கு படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியது.''

    இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
    துருவங்கள் 16-ஐ தொடர்ந்து ரகுமான் பகடி ஆட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் துப்பறியும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
    ரகுமான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘துருவங்கள் 16’. இப்படத்தில் ரகுமான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இதில் ரகுமானின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக பத்திரிகையாளர்களும், ஊடகங்களும், இணையத்தளங்களும் ரகுமானின் நடிப்பை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

    இப்படத்தை தொடர்ந்து ரகுமான் நடிப்பில் ‘பகடி ஆட்டம்’ படம் உருவாகி வருகிறது. இதில் ரகுமான் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக் கொண்டுவரும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கிறார்.

    பெண்களுக்கு விழிப்புணர்வு கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ராம் கே.சந்திரன் இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார். மாரம் மூவிஸ் மற்றும் பரணி மூவிஸ் பெருமையுடன் வழங்கும் ‘பகடி ஆட்டம்’ படத்தை குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். வி.டி. நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட இருக்கிறது.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 7 மணியளவில் இயக்குனர் பாண்டிராஜ் வெளியிடுகிறார்.
    ஜுராசிக் அட்டாக் என்ற பெயரில் ஹாலிவுட்டில் வெளிவந்த படம் தமிழிலும் டப்பாகி வெளியாகியுள்ளது. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    அமேசான் காடுகளை சுற்றிப் பார்க்க நினைக்கும் தந்தை-மகன் இருவரும் ஒரு தனி விமானத்தில் பயணிக்கின்றனர். அமேசான் காடுகளின் மீது பயணிக்கும்போது, இவர்களுடைய விமானம் பழுதடைந்து காட்டுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் இருவரும் சிறு காயத்துடன் தப்பித்தாலும், அங்கிருக்கும் டைனோசர், தந்தையை கொடூரமாக கொன்று விடுகிறது. மகன் மட்டும் தப்பித்து காட்டுக்குள் செல்கிறான்.

    அதேநேரத்தில் தீவிரவாத கும்பல் ஒன்று அமெரிக்காவின் பெண் அணு விஞ்ஞானியை கடத்திக் கொண்டுபோய் வைத்துவிடுகிறார்கள். அவளை மீட்பதற்காக அமெரிக்க ராணுவத்தின் 5 பேர் கொண்ட குழு காட்டுக்குள் பயணமாக தொடங்குகிறது. தீவிரவாதிகள் இருக்கும் காட்டுக்குள் விமானம் செல்ல முடியாது. மாறாக, ஆற்று வழிப் பாதையிலோ அல்லது நடந்துதான் செல்லவேண்டும்.

    எனவே, விமானம் மேலே பறந்து கொண்டிருக்கும்போதே பாராசூட் உதவியுடன் இவர்கள் கீழே குதிக்கிறார்கள். இவர்களும் டைனோசர் இருக்கும் காட்டுப் பகுதியிலேயே குதிக்கிறார்கள். அங்கிருக்கும் டைனோசரிடமிருந்து இவர்கள் தப்பித்து, அணு விஞ்ஞானியை காப்பாற்றினார்கள்? காட்டுக்குள் தப்பி ஓடிய மகன் என்ன ஆனான்? என்பதே மீதிக்கதை.

    ஜுராசிக் பார்க் பட வரிசையை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ஏமாற்றத்தைத்தான் தரும். இப்படத்தில் கிராபிக்சில் உருவாக்கிய டைனோசர்கள் எல்லாம் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளும் ரொம்பவும் செயற்கையாகவே தோன்றுகிறது.

    அதேபோல், படத்தில் டைனோசர் வரும் காட்சிகளும் மிகவும் குறைவே. அவற்றை வீரர்கள் சுடும்போது அவைகள் செத்து விழும் காட்சிகள் எல்லாம் நமக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. ஜுராசிக் என்ற பெயரை வைத்துக் கொண்டு எப்படிவேண்டுமானாலும் படத்தை எடுத்தால் படத்தை பார்க்க வருவார்கள் என்று இயக்குனர் நினைத்திருப்பார்போல. டைனோசரின் தாக்குதலை கண்டு வரலாம் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம்தான்.

    மொத்தத்தில் ‘ஜுராசிக் அட்டாக்’ தாக்கம் இல்லை. 
    புதுமுகங்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘உன்னை தொட்டு கொள்ள வா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
    ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் நாயகி அஞ்சனாவுக்கு தன்னை ஒரு மர்ம உருவம் பின்தொடர்வது போலவே உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் பயந்து நடுங்கும் அஞ்சனாவை அவரது தோழிகள் கிராமத்தில் இருக்கும் அவளது பாட்டியின் வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள்.

    நாயகி அஞ்சனாவின் தாத்தா லிவிங்ஸ்டன் மிகப்பெரிய ஜமீன்தார். அவர் இறந்துவிட்ட நிலையில் அவளது பாட்டி பல்லவி மட்டும் அந்த கிராமத்து வீட்டில் வசித்து வருகிறார்.

    பாட்டியின் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணி இருக்கும் அஞ்சனாவுக்கு அங்கேயும் மர்ம உருவத்தால் தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. இதனால், அங்கேயும் நிம்மதியில்லாமல் தவிக்கிறாள் நாயகி. இதற்கிடையில், அந்த ஊருக்கு வரும் நாயகன் சிலம்பரசனும், அஞ்சனாவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

    இந்நிலையில், தன்னை அச்சுறுத்தும் மர்ம உருவம் யார் என்று தெரியாமல் குழம்பி போகிறார் நாயகி. ஒருகட்டத்தில் தனது தாத்தா லிவிங்ஸ்டன் செய்த தவறால்தான் இந்த மர்ம உருவம் தன்னை துன்புறுத்துவதை கண்டறிகிறாள். அவளுடைய தாத்தா செய்த அந்த தவறு என்ன? அதனால் பாதிக்கப்பட்டது யார்? என்பதை சொல்வதே மீதிக்கதை.

    படத்தின் கதை முழுக்க நாயகி அஞ்சனாவே நிறைந்திருக்கிறார். அதனால், தனது கதாபாத்திரத்தின் வலு தெரிந்து ஓரளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். நிறைய காட்சிகளில் இவர் பயப்படுவதுகூட ரொம்பவும் செயற்கையாக இருப்பது படத்தை ரசிக்க தோன்றவில்லை.

    நாயகன் சிலம்பரசனுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. இருப்பினும், சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார். பாட்டியாக வரும் பல்லவி, தாத்தாவாக வரும் லிவிங்ஸ்டன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். லிவிங்ஸ்டனிடன் உதவியாளராக வரும் காதல் தண்டபாணியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    மற்றபடி, படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் பதியவில்லை. இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த படம் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. அதற்குள் நிறைய திகில் படங்கள் வெளியாகி, ரசிகர்களை பீதியாக்கியுள்ள நிலையில், இந்த படம் பெரிதாக பீதியை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை. இருப்பினும், இன்னமும் கிராமங்களில் வழிபட்டு வரும் பெண் தெய்வங்கள் உருவான கதையை இந்த படத்தில் சொல்லியிருப்பதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

    வசந்தமணியின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையும் மிரட்டவில்லை. சாய் நடராஜின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளும் பெரிதாக இல்லை.

    மொத்தத்தில் ‘உன்னைத் தொட்டுக் கொள்ள வா’ தொட முடியவில்லை.
    புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் ‘பெய்யென பெய்யும் குருதி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியின் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு வரும் முக்கிய தலைவர்களில் 40 பேரை மட்டும் மர்ம நபர்கள் சிலர், கொன்று அவர்களுடைய இதயத்தை எடுத்து சென்று விடுகிறார்கள்.

    இந்த சம்பவம் தமிழகம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. இதுகுறித்த விசாரணையில் இறங்கும் போலீஸ் குழு, சம்பவ இடத்தில் இருந்த நாயகர்களான ஜனா, சீனிவாசன், ஹரிஸ், கணேசன், ராபின் ஆகியோரை பிடித்து வைத்து விசாரிக்கிறது. அந்த விசாரணையில், இவர்கள் ஐந்து பேரும்தான் அந்த கொலையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.

    அப்பாவிகளான இவர்களுக்கு பணத்தாசை காட்டி, இவர்களை கொலை செய்ய வைத்தது வேறொரு நபர் என்றும் தெரிய வருகிறது. இவர்களை கொலை செய்ய தூண்டிய அந்த மர்ம நபர் யார்? எதற்காக அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்களை அவர் கொலை செய்ய வைத்தார்? என்பதே மீதிக்கதை.

    நாயகர்களான ஜனா, சீனிவாசன், ஹரிஸ், கணேசன், ராபின் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய கதாபாத்திரத்தையும் வெவ்வேறு கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த கதாபாத்திரங்களை உணர்ந்து இவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    இயக்குனர் சுதாகர் சண்முகம் இன்றைய சினிமா உலகில் பெண்களே இல்லாத ஒரு படத்தை தைரியமாக இயக்கியிருக்கிறார். கதையாக இப்படத்தை கேட்கும்போது சுவாரஸ்யமாகவும், திரில்லாகவும் இருக்கிறது. ஆனால், அதை காட்சிப்படுத்திய விதத்தில் சுவாரஸ்யத்தையும், திரில்லையும் கொடுக்க தவறிவிட்டார். கொலை, கொலைக்கான விசாரணை என குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை சுற்றியே கதை நகர்வதால் படத்தை தொடர்ந்து ரசிக்க முடியவில்லை.

    தமிழ் சினிமாவுக்கு வழக்கமான பழிவாங்கும் கதை என்றாலும், அதை மாறுபட்ட கோணத்தில் சொன்னவிதம் அருமை.

    சீனிவாசன், கணேஷ் பாபு ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்கு சிறிது பலம் கூட்டியிருக்கிறது. ஜோஸ் பிராங்களின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘பெய்யென பெய்யும் குருதி’ புதிய முயற்சி.
    திரிஷாவுக்காக பிரபல நடிகை ரம்யா நம்பீசன் பின்னணி பாடல் ஒன்றை பாடியுள்ளார். அது எந்த படத்திற்காக என்பதை கீழே பார்ப்போம்...

    ரம்யா நம்பீசன் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, சிபிராஜுடன் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அவ்வப்போது பின்னணி பாடல்களையும் பாடி வருகிறார்.

    மலையாளத்தில் பல பாடல்கள் பாடியிருக்கும் ரம்யாநம்பீசன், தமிழில் ‘பாண்டியநாடு’ படத்தில் லட்சுமிமேனனுக்காக டி.இமான் இசையில் பாடிய ‘பை... பை... பை... கலாசி பை...’ பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    பின்னர் ‘டமால் டுமீல்’, ‘சகாப்தம்’, ‘சகலகலாவல்லவன்’ படங்களிலும் பாடினார். தற்போது ‘சதுரங்க வேட்டை-2’ படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் திரிஷாவுக்காக ஒரு பாடலை ரம்யா நம்பீசன் பாடி இருக்கிறார்.

    அஸ்வமித்ராவின் இசையில் அவர் இந்த பாடலை பாடி இருக்கிறார். இந்த தகவலை இதன் தயாரிப்பாளர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    சுந்தர்.சி தனக்கு கணவராக அமைந்ததால்தான், தெம்பாக இருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    சினிமா, அரசியல், சின்னத்திரை என்று இப்போதும் சுறுசுறுப்பாக வலம் வருபவர் குஷ்பு. அடுத்து, விரைவில் நடைபெற இருக்கும்  தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலிலும் போட்டியிட தயாராகி வருகிறார்.

    சுந்தர்.சி தனக்கு கணவராக அமைந்ததால்தான், தெம்பாக இருப்பதாக குஷ்பு தெரிவித்து இருக்கிறார். சுந்தர். சி குறித்து தனது  டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குஷ்பு...

    ‘என் நிஜ வாழ்க்கை ஹீரோ... என் சிறந்த நண்பர்... நாங்கள் இருதுருவங்கள் என்றாலும் எனது ஆத்ம துணையாக இருக்கிறார்...  அவர் என்னவராக இருப்பதால்தான் தெம்பாக இருக்கிறேன்... என் இனிய கணவர் அவர்...’ என்று தெரிவித்து இருக்கிறார்.
    ஜெயலலிதா மரணம் பற்றி பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து கேட்டதால் பேட்டியை பாதியிலேயே முடித்துவிட்டு கவுதமி கிளம்பினார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    கமலுடன் 13 ஆண்டுகள் வாழ்ந்த கவுதமி சமீபத்தில் கமலை விட்டு பிரிந்தார். ஆனால் அதற்கான காரணம் எதையும் கூறவில்லை.  ‘எனது மகள் சுப்புலட்சுமிக்கு நல்ல தாயாக இருக்க விரும்புகிறேன்’ என்று மட்டும் கூறி இருந்தார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, அதில் சந்தேகம் இருப்பதாகவும், அதுபற்றிய உண்மையை  வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அவரது கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கவுதமி ஒரு பண்பலை வானொலியில் பேட்டி அளிக்க சென்றார். அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, “நீங்கள்  ஏன் உலகநாயகன் கமல்ஹாசனை பிரிந்தீர்கள்?” இதை கேட்ட உடனே கவுதமி லேசாக கோபப்படத் தொடங்கினார்.

    அடுத்து, “ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது விளம்பரம்  தேடத்தானே?” என்று கேட்டது தான் தாமதம், ஆவேசம் அடைந்த கவுதமி கோபம் அடைந்து பாதியிலேயே பேட்டியை  முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
    ×