என் மலர்
வாள மீனுக்கும்... விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் பிரபலம் கானா உலகநாதன் புதிய படத்தில் காமெடி தாதாவாக நடிக்க உள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் ‘வாள மீனுக்கும்... விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...’ பாடலை பாடி பிரபலமானவர் கானா உலக நாதன். படத்தில் வரும் அந்த காட்சியில் அவரே நடித்தார்.
தற்போது ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்ற படத்தில் வடசென்னையை சேர்ந்த காமெடி தாதாவாக நடிக்கிறார். ‘வேட்டி-டிஷர்ட் கெட்-அப்பில் புதுமையான ஹேர் ஸ்டைலில் நடித்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்துள்ள காவ்யா மாதவன் படத்தில் நடிக்க மாட்டேன் என்றுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
மலையாள நடிகர் திலீப் முதலில் மஞ்சுவாரியரை காதலித்து திருமணம் செய்தார். அப்போது மஞ்சுவாரியரை ஒருபடத்தில் நடிக்க வைக்க பிரியதர்ஷன் முயற்சி செய்தார். அதற்கு திலீப் ஒப்புக் கொள்ளவில்லை. அதன்பிறகு மஞ்சுவாரியர் நடிக்கவில்லை.
மஞ்சுவாரியர் பிரிந்த பிறகு, இரண்டாவதாக காவ்யா மாதவனை திலீப் மணந்தார். சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது. அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க காவ்யா மாதவன் ஒப்புக் கொள்ளவில்லை. பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதை அவர் தவிர்த்து வருகிறார்.
முதல் கணவரான நிஷால் சந்திராவை திருமணம் செய்ய இருந்த போதும் காவ்யா மாதவன் திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்றார். எனவே, இப்போது நடிக்காமல் இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஒரு திறமையான நடிகை நடிப்பை கைவிட்டு இருப்பது வேதனையானது என்று மலையாள ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாகும் சிரஞ்சீவி-பாலகிருஷ்ணா படங்களை வைத்து ரசிகர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
தெலுங்கு திரையுலக சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட நாளுக்கு பிறகு படத்தில் நடித்து உள்ளார். `கைதி நம்பர் 150' என்ற படம் பொங்கல் பண்டிகையை யொட்டி இன்று ரிலீஸ் ஆனது. சிரஞ்சீவிக்கு இது 150-வது படமாகும். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதேபோல் மற்றொரு முன்னணி நடிகரான பால கிருஷ்ணாவின் `கவுதமிபுத்ரா' என்ற சரித்திர படம் நாளை வெளியாகிறது. ஏற்கனவே இந்த இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படும். சிரஞ்சீவி அரசியலில் ஈடுபட்டதால் நடிப்பை நிறுத்தியதால் அது குறைந்து இருந்தது.
தற்போது சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட் டது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மாறி மாறி திட்டி கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களில் எது வெற்றிபெறும் என்று ரசிகர்கள் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர் கள் சூதாட்டத்தில் ஈடுபட்டாலோ, மோதலில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர்.

`தல 57' படத்திற்கு இசையமைக்கும் அனிருத் அஜித்திடம் பாராட்டுகளை பெற்றுள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
அனிருத் தற்போது அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இப்போது இவர் இசை அமைக்கும் படங்களுக்கான பாடல்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே இசை அமைத்து கொடுத்து வருகிறார்.
அஜித்தின் 57-வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் பாடல்களுக்கு இசை அமைக்கும் அனிருத் அதை பல்கேரியாவில் இருந்த அஜித், இயக்குனர் சிவா ஆகியோருக்கு அவ்வப்போது ஆன்லைன் மூலம் அனுப்பி ஒப்புதல் பெற்றார்.
இந்த படத்துக்கான அஜித்தின் ஒப்பனிங் பாடலுக்கு இசை அமைத்து விட்டார். இதை சமீபத்தில் சென்னை வந்த அஜித்திடம் போட்டுக் காட்டியுள்ளார். அதை கேட்ட அஜித் இந்த பாடல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார். இதனால் அனிருத் உற்சாகமாக மற்ற பாடல்களுக்கு இசை அமைத்து வருகிறார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
அஜித்துடன், காஜல் அகர்வால், அக்ஷரா, இந்தி நடிகர் விவேக் ஓப்ராய் நடிக்கும் இந்த படத்திற்காக பல்கேரியாவில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

சசிகலா பற்றி வாட்ஸ்-அப்பில் விமர்சனம் செய்ததாக நடிகர் மனோபாலா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
சென்னை நங்க நல்லூரைச் சேர்ந்தவர் எம்.ஆர்.சினிசரவணன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் நடிகராகவும் உள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று அவர் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட நடிகருமான மனோபாலா சக நடிகர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா பற்றியும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் விமர்சித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சத்யம் படத்திற்கு பின்னர் விஷால்-நயன்தாரா ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா. தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் பிசியாக இருக்கும் நயன், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளதால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். குறிப்பாக ஹீரோயின் சார்ந்த கதைகளில் அதிகமாக நடித்து வரும் நயன்தாரா தற்போது, ‘அறம்’, ‘டோரா’, ‘கொலையுதிர் காலம்’, ‘நேர் வழி’, ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் 2 பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா விஷாலுடன் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஷாலும், நயன்தாராவும் ‘சத்யம்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2008-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில், 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷால் படத்தில் நயன்தாரா நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இணையும் படத்தை சாக்ரடீஸ் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த ‘பிரம்மன்’ படத்தை இயக்கியவர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து, ‘இரும்பு திரை’, ‘சண்டக்கோழி 2’ படங்களில் நடிக்க உள்ளார். அதன்பிறகு, சாக்ரடீஸ் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

22 ஆண்டுகளுக்கு பிறகும் ரஜினி படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ரஜினி நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பாட்ஷா’. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். நக்மா, விஜயகுமார், ரகுவரன், ஜனகராஜ், தேவன், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்தார்.
கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் தற்போதைய நவீன தொழில்நுட்பமான டிஜிட்டலுக்கு மாற்றம் செய்யப்பட்டு நேற்று வெளியானது. சத்யம் குழுமத்தின் மிகப்பெரிய திரையரங்கில் இப்படம் 'Red Carpet Show' என்ற பெயரில் பிரத்யேக காட்சியாக ரசிகர்களுக்கு திரையிடப்பட்டது. டிஜிட்டலில் மாற்றம் செய்யப்பட்டு வெளியான இப்படத்தை காண அரங்கம் முழுவதும் ரசிகர்கள் குழுமியிருந்தனர்.
படத்தின் ஆரம்பத்தில் ரஜினியின் பெயர் வருவதில் இருந்து கடைசி வரை ரசிகர்கள் அனைவரும் விசில் சத்தத்தை பறக்க விட்டுக்கொண்டே இருந்தனர். 22 வருடங்களுக்கு பிறகும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போன்ற உணர்வுதான் திரையரங்கில் படம் பார்ப்பவர்களுக்கு இருந்தது. டிஜிட்டல் தொழில்நுட்பம் படத்திற்கு இன்னும் பிரம்மாண்டம் கூட்டியிருந்தது.
ரஜினி ஆடி-பாடும் பாடல்களில் எல்லாம் ரசிகர்கள் தங்களையும் மறந்து திரையின் அருகில் சென்று ஆட்டம் ஆடி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். 22 ஆண்டுகளை கடந்தும் இன்னும் ரசிகர்களை இந்த படம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்றால், அது சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெரிய கலைஞனால் மட்டுமே சாத்தியம் என்பது மட்டும் உண்மை.

விஜய் நடிப்பில் 'பைரவா' படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் மொத்தநீளம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் `பைரவா' படம் நாளை திரையரங்குளில் வெளியாகிறது. ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் `பைரவா' படத்தில் 'அழகிய தமிழ்மகன்' இயக்குநர் பரதனுடன் விஜய் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், நாளை வெளியாக உள்ள `பைரவா' படத்தின் மொத்த நீளம் 2 மணி 44(168 நிமிடங்கள்) நிமிடங்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதில் முதல் பாகம் 1 மணி 21 நிமிடங்களும், இரண்டாம் பாகம் 1 மணி 27 நிமிடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் நீளம் அதிகமாக இருந்ததாக படக்குழு அதனை சுருக்கியது குறிப்பிடத்தக்கது.
தணிக்கைக் குழு சோதனையில் 'யு' சான்றிதழை பெற்ற 'பைரவா' உலகம் முழுவதும் 55 நாடுகளில் ரிலீசாகிறது. மேலும் தமிழகத்தில் அதிகளவிலான (சுமார் 450) திரையரங்குகளில் 'பைரவா' வெளியாக உள்ளது. இதன்மூலம் முதல்நாள் வசூலில் 'கபாலி', 'வேதாளம்', 'தெறி' படங்களின் வசூலை 'பைரவா' முந்த வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
சென்னை ஐகோர்ட்டில் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரை தேர்தலை நடத்தும் அதிகாரியாக நியமிக்கவேண்டும்.
ஆனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் பிப்ரவரி 5-ந் தேதி தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.1 லட்சமும், பிற நிர்வாக பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் ரூ.50 ஆயிரமும், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் ரூ.10 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் 70 சதவீதம் பேர், சிறு பட்ஜெட் படத்தை தயாரிப்பவர்கள். தேர்தல் கட்டணமாக பெரும் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடம் கூட இவ்வளவு பெரிய தொகை வசூலிக்கப்படுவதில்லை. இதுபோல தேர்தல் கட்டணம் நிர்ணயிக்க செயற்குழுவுக்கு அதிகாரம் இல்லை.
தேர்தல் அறிவிப்பில் தேர்தலை நடத்தும் அதிகாரியின் கையெழுத்து எதுவும் இல்லை. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதமானது. அதனால், பிப்ரவரி 5-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று டிசம்பர் 17-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். இந்த தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல, மேலும் சில தயாரிப்பாளர்கள் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த தேர்தலை நடத்துவதற்கு ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியனை நியமிக்கலாம் என்று மனுதாரர்களின் வக்கீல்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை பின்னர் பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பைரவா’ படத்தின் தலைப்புக்கு தடைவிதிக்க சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு மறுத்து உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் ஜி.பொருள்தாஸ். இவர், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ் திரைப்படத்துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இணை இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். நான் நாய் ஒன்றின் வீரச்செயல் மற்றும் சாதனையை அடிப்படையாக கொண்ட ஒரு கதையை எழுதினேன். இந்த கதையை ‘3 டி அனிமேஷன்’ முறையில் திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்து, ஆரம்பக்கட்ட பணிகளை எல்லாம் செய்துள்ளேன்.
இந்த கதைக்கு ‘பைரவா’ என்ற தலைப்பும் வைத்தேன். தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி. தொடர் தயாரிப்பாளர் கில்டு என்ற அமைப்பில் உறுப்பினராக நான் இருப்பதால், அந்த அமைப்பிடம் ‘பைரவா’ தலைப்பை கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி பதிவு செய்தேன். இந்த பதிவை அவ்வப்போது பணம் கட்டி புதுப்பிக்கவும் செய்துள்ளேன்.
இந்த நிலையில், நடிகர் விஜய், கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படத்துக்கு ‘பைரவா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜயா புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் குறித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியான விளம்பரத்தை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
உடனடியாக பைரவா என்ற தலைப்பை பதிவு செய்துள்ள விவரங்களை எடுத்துக்கூறி, அந்த தலைப்பை மாற்றிக் கொள்ளும்படி விஜயா புரொடக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிசந்திரனுக்கு கடந்த 2-ந் தேதி நோட்டீசு அனுப்பினேன். என்னுடைய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அவர் கடந்த 4-ந் தேதி பதில் நோட்டீசு அனுப்பியுள்ளார். எனவே, ‘பைரவா’ என்ற தலைப்பை பயன்படுத்த தயாரிப்பாளர் ரவிசந்திரனுக்கு தடைவிதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர் கடைசி நேரத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எதிர்மனுதாரர் தரப்பின் கருத்தை கேட்காமல், இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. அதனால், இந்த வழக்கு விசாரணையை 12-ந் தேதிக்கு (நாளை) தள்ளிவைக்கிறேன். அன்று தயாரிப்பாளர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

பிரேமம் புகழ் இயக்குநர் அல்போன்ஸ் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்ட படத்தில், முக்கிய தோற்றத்தில் மம்முட்டி நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, மடோனா செபஸ்டின், சாய் பல்லவி மற்றும் அனுபமா நடித்து மலையாளத்தில் வெளியாகி, கேரளாவில் மிகப்பெரிய அளவில் வெற்றியை ருசித்த படம் பிரேமம். மேலும் இன, மொழி வேறுபாடின்றி தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், சென்னையில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. குறிப்பாக நிவின்-சாய் பல்லவி ஜோடியின் காதல் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன.
இதனையடுத்து, பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது. பிரேமம் படத்திற்கு பிறகு ஒருவருடமாக, தனது புதிய படத்திற்கு கதை எழுதிவந்த அல்போன்ஸ், தமிழில் முன்னணி நடிகருடன் இணையவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது, அந்த படத்தில் தமிழ் நடிகருடன் முக்கிய கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிம்புவிடம் கதை கூறிய அல்போன்ஸ், விரைவில் சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக கூறப்பட்டது. சிம்பு-அப்போன்ஸ்-மம்மும்டி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் பேசப்படுகிறது.

நயன நடிகையின் முன்னால் காதலரால் தற்போதைய காதலர் மிகவும் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நயன நடிகையும், சிவமான இயக்குனரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்தான். இருவரும் ஒன்றாக வெளியே வருவது, விழாக்களில் கைகோர்த்து கலந்துகொள்வது என இவர்களது உறவை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நயன நடிகை தனது முன்னாள் காதலரான நடன கலைஞரை சமீபத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து தனியாக சந்தித்து பேசியுள்ளாராம். இந்த விஷயம் தற்போதைய காதலரான சிவமான இயக்குனருக்கு தெரிய வந்ததும் நயன நடிகையுடன் கோபித்துக் கொண்டாராம்.
எனினும், நடிகையோ தனது காதலரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இதோடு மட்டுமில்லாமல், நடன இயக்குனரோடு, நயன நடிகை திருமண கோலத்தில் இருப்பதுபோன்ற புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருவதால் இதுவும் சிவமான இயக்குனரை கடுப்பேற்றியுள்ளதாம். இதனால், நடிகை என்னசெய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாராம்.