என் மலர்
மனைவி தன்னை பிரிந்த சோகத்தில் குடியே கதியென்று கிடக்கிறார் நாயகன். அப்போதுதான் விபச்சார தொழில் செய்யும் நாயகி சக்தி ஸ்ரீயின் அறிமுகம் நாயகனுக்கு கிடைக்கிறது. ஏற்கெனவே, கணவனை பிரிந்து வேறு வழியில்லாமல் விபச்சாரத்தில் விழுந்த சக்திஸ்ரீக்கு, தாமோதரனின் வலி புரியவே, அவரை அரவணைத்து ஆதரவு கொடுக்கிறாள்.
சக்தி ஸ்ரீயின் அரவணைப்பும், ஆதரவும் தாமோதரனுக்கு நிம்மதியை கொடுக்கவே, குடிப்பழக்கத்தில் இருந்து விலகுகிறார். இதேவேளையில், நாயகனின் நண்பரும் மாடர்ன் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து வருகிறார். ஆனால், அவருக்கோ கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள்.
தனக்கு மாடர்ன் பெண் கிடைக்காத விரக்தியில், தனக்கு மனைவியாக வந்த கிராமத்து பெண்ணை மாடர்ன் பெண்ணாக மாற்ற முயற்சிக்கிறார் நாயகனின் நண்பர். அந்த முயற்சி அவருக்கு எந்தவிதமான வலிகளை கொடுத்தது. தாமோதரன்-சக்திஸ்ரீயின் உறவு எந்த நிலைமைக்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருக்கும் நாயகன், நாயகி முதற்கொண்டு அனைவரும் புதுமுகங்கள் என்பதால் யாரிடமும் அவ்வளவாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. அவரவர் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாடர்ன் பெண்ணை நம்பி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என்ற சமூக அக்கறையோடு இந்த படத்தை எடுத்திருக்கிறார். நாகரீக வாழ்க்கைக்கும், புதுவிதமான வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு செல்லும் இளைஞர்களின் வலியை படத்தில் சொல்ல வந்திருக்கிறார். ஆனால், அதை சரியான காட்சியமைப்பு இல்லாமல் படமாக்கியிருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. சிறு பட்ஜெட் படமென்பதால் நடிகர், நடிகைகள் தேர்விலும் அதிகம் கவனம் செலுத்த தவறியிருக்கிறார்.
குபேரன் இசையில் பாடல்களை ரசிக்க முடியவில்லை. பின்னணி இசையும் இரைச்சல்தான். கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் குளுமை சேர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘பச்சைக்கிளி பரிமளா’ பறக்கவில்லை.
வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தை பிற மொழிகளில் டப்பிங் செய்ய முயற்சி செய்யப்பட்டது. இந்நிநிலையில், தற்போது, இப்படம் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
கன்னடத்தில் பிறமொழிகளின் டப்பிங் படங்கள் நீண்ட நாட்களாக வெளியாகாத நிலையில், தற்போது அஜித் நடித்துள்ள `என்னை அறிந்தால்` படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பார்வை குறைபாடு உள்ள விஜயலட்சுமி, தனது தனித்துவமான குரலுக்காகவும், பாடும் திறனுக்காகவும் பலராலும் போற்றப்படுபவர். மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பாகுபலி’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘வீரசிவாஜி’ படத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கண்களுக்காக சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமிக்கு கண்பார்வை கிடைத்துள்ளது. பிறப்பிலேயே கண்பார்வையற்றவராய் பிறந்த விஜயலட்சுமிக்கு பார்வை கிடைத்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவருக்கும் கோழிக்கோட்டை சேர்ந்த சந்தோஷ் என்னும் இசைக் கலைஞருக்கும் டிசம்பர் மாதம் 13-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதனைத்தொடர்ந்து மார்ச் 29-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் `தல 57' படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக அஜித்தின் `வேதளாம்` படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், `தல 57` படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் இசை ஜேம்ஸ் பாண்ட் பட தரத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக `தல 57` படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பாடல்களும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
இப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், ரம்ஜானை முன்னிட்டு ஜுன் 23 அல்லது 24ம் தேதியில் படம் ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஷால் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஷால் நற்பணி இயக்க செயலாளர் ஹரி கிருஷ்ணன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள் புகாரில் கூறி இருப்பதாவது:-
சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், விஷால் தமிழக மக்களை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக அவதூறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு விஷால் அளித்த பதிலில், இணையதளத்தில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. நான் தமிழக மக்களை பெரிதும் மதிக்கிறேன். என் மீது வீண் பழி சுமத்துவது போல் இந்த அவதூறு செய்தியை வெளியிட்டுள்ளனர். என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழக மக்களின் மனதில் விஷால் மீது வேற்றுமை ஏற்படுத்த முயன்ற ‘வெப்சைட்’ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர சமீபகாலமாக, அடையாளம் தெரியாத நபர்கள் போன் மூலம் தகாத வார்த்தைகளால் விஷாலை திட்டுகிறார்கள். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 3 வருடங்களுக்கு பிறகு அமீர், ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. அமீர்-ஆர்யா முதன்முறையாக இணையவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் நாளை வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
`மஞ்சப்பை` இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள `கடம்பன்` படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. `கடம்பன்` படத்திற்கு பின்னர் ஆர்யா, அமீருடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. பேச்சாளரும், நடிகருமான மனோபாலா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா பற்றி வாட்ஸ்-அப்பில் விமர்சனம் செய்திருப்பதாக சினி சரவணன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் மனோபாலா இன்று கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
என்னைப் பற்றி வாட்ஸ் அப்பில் வந்த தகவலின் அடிப்படையில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலை நான் அனுப்பவில்லை. படப்பிடிப்பின் போது, எனது செல்போனை யாரோ எடுத்து அதுபோன்று அவதூறு செய்தியை அனுப்பிவிட்டனர்.
கடந்த 15 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக உள்ளேன். எனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்ப திட்டமிட்டு இதனை செய்துள்ளனர். எனது புகழை கெடுக்க சதி நடந்துள்ளது. இதனை அனுப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே ‘பைரவா’ திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வாக சென்றனர். இந் தநிலையில் இந்த படம் இன்று இணையத்தில் திருட்டுதனமாக வெளியிடப்பட்டுள்ளது. திருட்டுதனமாக படம் வெளியானதால் ரசிகர்களும் படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கெனவே, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘கபாலி’ படமும் திரைக்கு வந்த முதல் நாளிலேயே இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. பெரிய படங்கள் மட்டுமில்லாமல், சிறிய படங்களும் வெளியான முதல்நாளிலேயே இணையதளத்தில் வெளியாகி வருவதை தடுக்க சினிமா உலகமும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் வருகிறது. ஆனால், அதற்கு இதுவரை பலன் கிட்டவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
பொங்கல் விருந்தாக `பைரவா` இன்று ரிலீசாகி உள்ள நிலையில், பார்த்திபன் இயக்கத்தில் சாந்தணு நடிப்பில் `கோடிட்ட இடங்களை நிரப்புக` படம் நாளை மறுநாள் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், பார்த்திபன் தனது படத்தின் விளம்பரத்தில் `பைரவா` படம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அதில், ஒரு பை - ரவா-வில் 100 பேருக்கு கேசரி கிண்டலாம். அதில் ரவையூண்டு சிதறினாலே கோடி எறும்பு உண்ணலாம் என்று தனது ஸ்டைலில் கிண்டலடித்துள்ளார். முன்னதாக `பைரவா` படத்தலைப்பை வெளியிட்ட போது அஜித் ரசிகர்கள் `பைரவா`(buy rava) என்று கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.
இது விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரான பார்த்திபன், விஜய் படம் குறித்து கிண்டலான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சில திரையரங்குகளில் முதல்நாள் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கே திரையிடப்பட்டது. நடுங்கும் குளிரிலும் திரையரங்குகளில் பைரவா படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது. தங்களது அபிமான நடிகரின் கட்-அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதற்கெல்லாம் பிரம்மாண்டம் சேர்க்கும் வகையில் திருநெல்வேலியில் விஜய் ரசிகர்கள் 150 அடி உயரத்தில் விஜய்க்கு கட் அவுட் வைத்து தங்களது மாஸை காட்டியுள்ளனர். திருநெல்வேலி ராம் திரையரங்கில் இதற்கான ஏற்பாடுகளை இரண்டு நாட்களுக்கு முன்பே ரசிகர்கள் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தனர்.
இன்று பைரவா படம் ரிலீசானதும் 150 அடி உயரத்தில் விஜய் நிற்பது போன்று கட்-அவுட் வைத்து அதற்கு மாலையும் போட்டு அழகு சேர்த்துள்ளனர். ஏற்கெனவே, விஜய் நடித்த ‘தெறி’ படத்திற்காக இதே திரையரங்கில் 140 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்ததே அதிகபடியாக இருந்தது. இப்போது, அவரது ரசிகர்களே அதை தகர்த்தெறிந்துள்ளனர்.
இதுவரை எந்தவொரு நடிகருக்கும் இவ்வளவு உயரத்தில் கட்-அவுட் வைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 4000 ஆண்டுகளாக விளையாடி வரும் தமிழர்களின் வீர விளையாட்டைத் தடை செய்வது எந்த வகையில் நியாயம்? இது மிருக வதையல்ல, மனித வதையென்று கொஞ்சம் மாற்றிச் சொல்லுங்கள். ஜல்லிக்கட்டில் மாடுகள் இறந்ததாக சாட்சிகள் இல்லை. மாறாக மனிதர்கள் மரித்துப் போனதாய்தான் செய்தி இருக்கிறது. இது இப்படியிருக்க, இதை மிருக வதை என்று சொல்லி தடை செய்வது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.
ஜல்லிக்கட்டு மிருக வதையென்றால் அனுதினமும் ஆயிரக்கணக்கான மாடுகள் கேரளாவிற்கு அடிமாடுகளாய் போகும் அவலத்தை உங்களால் தடுக்க முடியுமா?
கோயில்களில் காட்சிப் பொருளாய், கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் யானைகளை உங்களால் அவிழ்த்துவிட முடியுமா?
பறவைகளையும் விலங்குகளையும் சிறைப்பிடித்து அதை ஜோக்கர்களாக ஜோடித்து ரசிக்கும் மிருகக்காட்சி சாலைகளின் கதவை மூடுங்கள். அடைத்து வைத்திருக்கும் அனைத்து உயிரினங்களையும், மிருகங்களையும், பறவைகளையும் சுதந்திரமாக வெளியே விட முடியுமா?
குதிரைப் படை, யானைப் படை என்று மத்திய மாநில அரசு விழாக்களில் அணிவகுத்து நிற்கும் விலங்குகளுக்கு விடுதலை கிடைக்குமா?
தேர்தல் நேரங்களில் கழுதைகளும், ஒட்டகங்களும் மலைக் கிராமங்களுக்கு ஓட்டுப்பெட்டி சுமக்கும் விலங்குகளுக்கு கருணை கிடைக்குமா?
காவல் துறையில் பயன்படுத்தப்படும் மோப்ப நாயக்ளை விடுவிக்க முடியுமா?
ஏன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் விலங்குகளுக்கு, மாற்று உணவு ஏற்பாடு செய்ய முடியுமா? இந்திய முழுவதும் சைவ உணவுதான் - அசைவத்திற்கு தடை விதியுங்கள்.
இதெல்லாம் உங்களால் முடியும் என்றால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதியுங்கள். இது ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்குமான உணர்வுப்பூர்வமான விளையாட்டு. இதில் திமிலா, தேளா? என்ற போட்டியே தவிர, மிருக வதைக்கான இடமே இல்லை. மனிதன், மடிந்திருக்கிறானே தவிர மாடுகள் இறந்ததாக தகவல் இல்லை. மனித வதையென்று மனு செய்திருந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம். மிருக வதை என்பது இரண்டாம் கருத்து.
ஜல்லிக்கட்டுக்கு தடையென்ற பெயரில் நாட்டு மாடுகள் அழிக்கப்படுகின்றன. சினை போட காளைகள் இல்லாமல், நம் பசு மாடுகளுக்கு சினை ஊசி போட்டே கருத்தரிக்கச் செய்கிறோம். இதிலிருந்து வரும் பால், விஷத்தன்மை கொண்டதாக சொல்கிறார்கள். அந்நிய முதலீடும் இதில் தலை காட்டுகிறது.
நம் கண்முன்னே பண்பாட்டு, பாரம்பரியம் பலியாக வேண்டுமா? திருவிழாக் காலங்களில் மனிதர்கள் மட்டுமே சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருக்க வேண்டாமென்று மாடுகளையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டாடும் தமிழனின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிக்கு போட்ட கடிவாளத்தை கழட்டி விடுங்கள். எங்கள் காளைகளுக்கு கட்டிய மூக்கனாங்கயிற்றை அவிழ்த்து விடுங்கள்.
எங்கள் வாடி வாசலில் காளைகளின் காலடிக் குளம்புக் கோலங்கள் பதியட்டும். தமிழர்களின் தொன்மையான பாரம்பரியம் அழியாதிருக்கட்டும்.
ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு மனுசனையே கடிக்க வருமாம் ஒன்று. கடைசியில் அங்கே இங்கேன்னு கையை வைத்து தமிழனின் பழக்க வழக்க பண்பாட்டு கலாச்சாரத்தின் அடி மடியிலேயே கையை வைக்கின்ற அவல நிலையை மத்திய அரசு கையாள்வதும், அதறகு மாநில அரசு கைகட்டி நிற்கும் என்று எதிர்பார்ப்பதும் தமிழனை அவமானத்தின் பெருங்குழியில் தள்ளுவதற்கு சமமானதாகும். உங்கள் அறிவிப்புகளாலும், சில சட்டத்திட்ட முறைகேடுகளாலும் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களில் கை வைக்காதீர்கள்.
அது தேசிய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்பதை தாழ்மையோடு கேட்டுக் கொள்வது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை. இதனை இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து உலகத்துக்கு நாமெல்லாம் தமிழினம்தான் என்பதை உணர்த்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை தான். அதேவேளையில் இந்தப் பண்டிகைக்கு ஆதாரமான, நமக்கெல்லாம் உணவளித்து இந்த உயிரையும் உடலையும் காப்பாற்றித் தருகின்ற மிச்சம் மீதி இருக்கின்ற உழவர்களும் நம்மைப் போலவே கொண்டாட வேண்டும் என்பதையும் நாம் நினைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கும் மேலாக நாள்தோறும் அடுக்கடுக்காக செத்து மடியும் உழவர்கள் பற்றிய செய்திகளை நாமும் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறோம்.
விவசாயிகளின் உயிரும் போய் அவர்களுக்கு நேர்மையாக கிடைக்க வேண்டிய இழப்பீடுத் தொகையும் கிடைக்காத நிலையில் அந்த குடும்பங்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை.
வேட்டி கட்டி காளையை அடக்க வேண்டியவர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு ஒன்றில்தான் தமிழர்களின் மானம் காப்பாற்றப் படுவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உயிர் ஒன்றுதான் விவசாயிகளிடம் இருக்கிறது, அதுவும் இன்று பறிபோய்க் கொண்டிருக்கிறது. எப்பொழுதும் போல் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தாமல் தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. கடமைக்கு தனித்தனியாக தங்களின் இருப்பை பதிவு செய்து, இந்த நிலையில் கூட ஓரணியில் திரண்டு, போராடி மத்திய அரசைப் பணிய வைக்காமல், அரசியல் கட்சிகள் கடமையை முடித்துக் கொள்கின்றன. பொதுமக்கள் எனும் பெயரில் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பாதிப்பு வராத வரையில் அது பாதிப்பே இல்லை என மக்கள் அனைவரும் ஒதுங்கிக் கொண்டோம். இந்நிலையில் பாவம் விவசாயி அவன் உயிரை காப்பாற்றிக் கொள்வானா? அவன் நிலையை உணர்த்தப் போராடுவானா?
இவ்வளவு காலம் எப்படியோ இருந்து விட்டோம் இப்போதாவது அவனது அழுகுரல் இந்த உலகத்துக்கு கேட்கட்டும். செத்து மடிந்த விவசாயிகளுக்காகவும், சாகப்போகிற விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காகவும் நாம் இந்த ஆண்டுப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடாமல் தவிர்க்கலாம். இது நடக்கிற காரியமா?
தமிழக அரசு விவசாயிகளுக்காக 15 சலுகைகளை அறிவித்திருக்கிறது. நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால் அதனால் எந்த அளவுக்கு அது விவசாயிகளை வாழ வைக்கும் என்பது புரியும். பருவமழை நம்மைக் கைவிட்டு விட்டது. கோடை மழை நமக்கு மழைத் தரும் என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை. கால்நடைகளைக் காப்பாற்றும் வழியும் தெரியவில்லை. குடிநீருக்கும் காலைக்கடன் கழிப்பதற்கும் நாமெல்லாம் இவ்வாண்டில் அலையப் போகிறோம் என்பதை போகப்போக அனுபவிக்கலாம்.
அனைத்தையும் கண்டும் காணாததுபோல் இருக்கும் மத்திய அரசு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மக்கள் வீதியில் இறங்கினால் மட்டுமே விடிவு கிடைக்கும். அறிவித்தால் பலன் பெறப் போவது செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் மட்டுமல்ல, அடிப்படைத் தேவைக்கே தண்ணீரில்லாமல் தவிக்கப் போகும் நாமும் தான்.
விவசாயிகளுக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து, படமெடுத்து வலைத்தளங்களில் பகிர்வதற்குப் பதிலாக இந்தச் செய்தியைப் பரப்பி நாம் தமிழர்கள் தான் என்பதை நிலைநாட்டுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன் பின்னர் கோவை வந்த தங்கர்பச்சான் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும், மத்திய அரசு அமைக்கவில்லை. இந்தியாவில்தான் தமிழகமும், கர்நாடகாவும் உள்ளது என்பதை மறந்து விட்டனர். இதனால் தான் தமிழ்நாட்டில் தற்போது விவசாயிகள் சாகும் நிலை உள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. ஆகவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழர்களின் ஒரே பண்டிகை பொங்கல். சாதி, மத வேறுபாடு இல்லாமல் கொண்டாடப்படுகிறது. நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் உணவில்லாமல் தவிக்கிறார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்டு இறந்த விவசாயிகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இந்த பொங்கல் பண்டிகையன்று வீடுகள் தோறும் கறுப்புக்கொடி ஏற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.








