என் மலர்
மும்பையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹாலிவுட் கதாநாயகன் வின் டீசலுடன் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ‘லுங்கி டான்ஸ்’ ஆடி குத்தாட்டம் போட்டுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள "xXx: Return of Xander Cage" என்றப் படம் உலகம் முழுவதும் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் முன்கூட்டியே ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் அறிமுகவிழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஹாலிவுட் நாயகன் வின் டீசல் மும்பை வந்துள்ளார். அறிமுக விழாவின்போது நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது அங்கு ஒலிபரப்பான பாடலின் இசைக்கேற்ப வின் டீசலும் தீபிகாவுடன் சேர்ந்து ‘லுங்கி டான்ஸ்’ ஆடி அசத்தினார்.

அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனிஇடத்தை பிடித்துள்ளவர் இயக்குநர் அமீர். திரைக்கதையின் மூலம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமீரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. `சேது`, `மௌனம் பேசியதே`, `பருத்திவீரன்`, `ஆதி பகவன்` உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அமீர், ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
3 வருடங்களுக்கு பிறகு அமீர், இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்க உள்ளார். அமீர்-ஆர்யா முதன்முறையாக இணையவுள்ள இப்படத்திற்கு `சந்தனத்தேவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியிடப்படது. இதில், `சந்தனத்தேவன்' செங்கொடி மறவனின் கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடங்க மறு... அத்துமீறு... திமிறி எழு... திருப்பி அடி... மண்ணை நேசி... மனிதனாக இரு... என்ற வாசகமும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில்ஆர்யா ஜல்லிக்கட்டு வீரராக நடிக்க உள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் அமீர், ஆர்யாவின் தம்பி சத்யா உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர்.
இப்படத்தை அமீரின், அமீர் பிலிம் கார்பரேசன்(ஏஎப்சி) நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
மஞ்சப்பை பட இயக்குநர் ராகவனின் `கடம்பன்' படம் வெளியாக உள்ள நிலையில், ஆர்யா அமீரின் `சந்தனத்தேவன்' படத்தில் நடிக்க உள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி டி.ராஜேந்தருடன், நடிகர் சிம்பு மவுன போராட்டம் நடத்தினார். ரசிகர்கள் கருப்பு கொடியுடன் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், தடையை நீக்க கோரியும் தனது வீட்டின் முன்னால் மவுன போராட்டம் நடத்தப்போவதாகவும், தமிழர்கள் அனைவரும் இதேபோன்று மவுன போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் நடிகர் சிம்பு அறிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு சென்னை தியாகராயநகர் மாசிலாமணி தெருவில் உள்ள தனது வீட்டின் முன்னால் கருப்பு சட்டை அணிந்து சிம்பு மவுன போராட்டம் நடத்தினார். அவரது தந்தையும், லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர், தாய் உஷா, டைரக்டர் ராம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கருப்பு கொடியுடன் திரண்டு இருந்தனர். ‘ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்’, ‘ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கு’, ‘பீட்டா அமைப்பே வெளியேறு’ என்பன போன்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.
அந்த பகுதி முழுவதும் கருப்பு கொடி கம்பங்களும் நடப்பட்டு இருந்தன. மாசிலாமணி தெருவில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசாரும் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். 10 நிமிடங்கள் சிம்பு மவுன போராட்டம் நடத்தினார். அதன் பிறகு போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது:-
நமது பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மீட்டு எடுக்கவும், காப்பாற்றவும் இந்த மவுன போராட்டத்தை நடத்தி உள்ளோம். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும், தமிழர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நான் சினிமாவில் மட்டும் கதாநாயகன் இல்லை. மக்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் வீதியில் இறங்கி போராடுகிற மனிதன். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஒரு ஆரம்பம் தான் இந்த போராட்டம். ஜல்லிக்கட்டு நடந்தே தீரும். ரசிகர்கள் நீங்கள் முன்னே செல்லுங்கள். உங்கள் பின்னால் நான் வருகிறேன். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி தந்தே தீரவேண்டும். பிரச்சினை செய்தால் வேறு மாதிரி விளைவுகள் ஏற்படும்.
இவ்வாறு சிம்பு பேசினார்.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பைரவா’ நேற்று வெளியானது. இதில் பைரவா படத்தின் முதல்நாள் வசூல் குறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பைரவா’ திரைப்படம் உலகமெங்கும் நேற்று வெளியானது. தமிழகத்தின் முன்னணி ஹீரோவான விஜய்யின் படம் என்பதால், மிகுந்த எதிபார்ப்புக்களுக்கு மத்தியில் வெளிவந்த ‘பைரவா’ திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
பொதுவாகவே விஜய், அஜித் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். இந்நிலையில், தமிழகத்தில் `பைரவா' படத்தின் முதல்நாள் வசூல் சுமார் 20 கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் விஜய் படத்தின் முதல் நாள் வசூலில் `பைரவா' சாதனை படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இப்படம் வெளியான அன்றே இணையதளங்களிலும் ரிலீசாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்புக்கு இயக்குநர் ராஜேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தமிழகமெங்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில், பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. தமிழர்களின் மரபுசார்ந்த விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற இளைஞர்கள் பேரணியில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் இயக்குநர் அமீர், விக்ரமன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சிம்பு, சிவகாரத்திகேயன், தனுஷ், பாரதிராஜா, தங்கர்பச்சான் என பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் ராஜேஷும் இதில் இணைந்துள்ளார்.
ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பீட்டாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், பீட்டா ஏன் சிக்கன் 65, மட்டன் பாயா, மீன் வறுவல், பீப் கறி மற்றும் ஆம்லேட்டுக்கு எதிராக ஏன் போராடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விஜயகுமாரி நடித்த "சாரதா'' படத்தைப் பார்த்த பானுமதி, அவர் நடிப்பைப் பாராட்டி, பரிசு வழங்கினார்.
விஜயகுமாரி நடித்த சிறந்த படங்களில் ஒன்று "போலீஸ்காரன் மகள்.'' இது எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்தி வந்த நாடகம். அது, ஸ்ரீதர் டைரக்ஷனில் திரைப்படமாகியது. ஸ்ரீதர் டைரக்ஷனில் விஜயகுமாரி நடித்த இரண்டாவது படம் இது.
போலீஸ்காரராக எஸ்.வி.சகஸ்ரநாமமும், அவர் மகளாக விஜயகுமாரியும் நடித்தனர். விஜயகுமாரியை ஏமாற்றி விடும் இளைஞனாக பாலாஜி நடித்தார்.
இந்தப் படத்தில் ஒரு கட்டத்தில் சகஸ்ரநாமம் தன் இடுப்பிலிருந்த `பெல்ட்'டைக் கழற்றி, விஜயகுமாரியை அடித்து விளாசுவார். பார்த்தவர்கள் திகைத்து உறைந்துபோய் விடும் அளவுக்கு, அக்காட்சி தத்ரூபமாக அமைந்திருந்தது.
இதில் இடம் பெற்ற "கண்ணிலே நீர் எதற்கு? காலம் எல்லாம் அழுவதற்கு!'' என்ற பாடல் பெரிய ஹிட் ஆகியது.
ஸ்ரீதர் டைரக்ஷனில் "கொடி மலர்'' என்ற படத்திலும் விஜயகுமாரி நடித்தார். இதில் அவருக்கு ஊமைப்பெண் வேடம். அவருக்கு ஜோடி முத்துராமன். மற்றும் ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, நாகேஷ் ஆகியோரும் நடித்தனர்.
இந்த படத்தில் நடிக்கும் போது, தனக்கு ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் பற்றி விஜயகுமாரி சொன்னார்:
"கொடிமலர்'' படப்பிடிப்பின்போது ஸ்ரீதர் அவர்கள் என்னிடம், "நான் புதுமுகங்களைப் போட்டு ஒரு படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன். அதற்காக 2 பெண்களை மேக்கப் டெஸ்ட் எடுத்து இருக்கிறேன். இந்த 2 பேரில் ஒரு பெண்ணை போடலாம் என்று நாங்கள் நினைத்து இருக்கிறோம். நீ அந்தப் பெண்களின் படத்தைப் பார்த்து, உன் அபிப்பிராயத்தை சொல்'' என்று கூறினார்.
மேக்கப் டெஸ்ட் எடுத்த 2 படங்களையும் போட்டு காட்டினார்கள். அதில் ஒரு பெண் மிகவும் ஒல்லியாக இருந்தார். கைகள் நீளமாக, குச்சி குச்சியாக இருந்தன.
மற்றொரு பெண் அளவான உடம்போடு இருந்தார். முகம் பார்க்க அழகாக இருந்தது.
நான் இரண்டாவதாக நினைத்தப் பெண்ணை குறிப்பிட்டு, "இந்தப் பெண் நன்றாக இருக்கிறாள்'' என்று சொன்னேன்.
"நாங்களும் அந்தப் பெண்ணைத்தான் தேர்வு செய்து வைத்திருக்கிறோம்'' என்று டைரக்டர் ஸ்ரீதர் கூறி, "இந்தப் பெண் யார் தெரியுமா? சந்தியா அம்மா அவர்களுடைய பெண்'' என்று சொன்னார். ஆம்; ஜெயலலிதாதான் அவர்.
மற்றொரு பெண் ஒல்லியாக குச்சிபோல் இருந்தார் என்று சொன்னேன் அல்லவா? பிற்காலத்தில் வடநாட்டில் கனவு கன்னியாக கொடிகட்டிப் பறந்த ஹேமமாலினிதான் அவர்!
ஸ்ரீதரின் "வெண்ணிறஆடை'' படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான ஜெயலலிதா குறுகிய காலத்தில் நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிற மொழிப் படங்களிலும் அவரே வசனம் பேசி நடித்தார். நானும் பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன்.
முக்தா பிலிம்சின் "சூரியகாந்தி'' படம் ஜெயலலிதாவின் 100-வது படம். அந்தப் படத்தின் விழா கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்தது. அந்த விழாவிற்கு சந்தியா அம்மா என் வீட்டிற்கு வந்து, என்னை அழைத்திருந்தார். நானும் அந்த விழாவிற்கு போனேன். விழாவில் என்னை ஜெயலலிதா அவர்களுக்கு மலர் கிரீடம் வைத்து வாழ்த்தி பேசச் சொன்னார்.
நான் பேசினேன். "ஜெயலலிதா சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நான் அவரைப் பார்த்து இருக்கிறேன். அமைதியாக இருப்பார். அப்படிப்பட்டவர் இன்று 100 படங்கள் நடித்து கலைஞர் தலைமையில் விழா நடந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த 100 படங்களில் மட்டுமல்லாமல் இன்னும் பல 100 படங்களில் நடித்து விழா காணவேண்டும். அது மட்டும் இல்லை. வரும் காலத்தில் இவர் ஒரு இந்திரா காந்தி மாதிரி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை'' என்று பேசினேன். நான் பேசும்போது அரசியலுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்காக, நான் பேசியதால்தான் அவர் அரசியலுக்கு வந்தார் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்!
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சொந்தப்படம் "தெய்வத்தின் தெய்வம்.'' இந்தப் படத்தின் கதை - வசனம் - டைரக்ஷன் எல்லாம் அவர்தான். இந்தப் படத்தில் நான் எஸ்.எஸ்.ஆருக்கு ஜோடி. சந்தியாம்மா, மணிமாலா, ரங்காராவ், எஸ்.வி.ராஜம்மா எல்லோரும் நடித்தோம்.
இந்தப் படத்தின் கதை, காமெடி கலந்த குடும்பப்பாங்கான கதை. உண்மையிலேயே நாங்கள் எல்லோரும் ரசித்து ரசித்து நடித்தோம். இந்தப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
பி.எஸ்.வி. பிக்சர்ஸ் "ஆலயமணி'' டைரக்டர் கே.சங்கர் டைரக்ஷனில் உருவான படம். சிவாஜிகணேசன் - சரோஜாதேவி ஆகியோருடன் எஸ்.எஸ்.ஆர், நான், நாகையா, எம்.ஆர்.ராதா, புஷ்பலதா, எம்.வி.ராஜம்மா எல்லோரும் நடித்தோம்.
இந்தப் படத்தில் வரும் பாட்டுக்கள் எல்லாமே நன்றாக இருந்தன. இந்தப் படத்தில் நடிக்க பி.எஸ்.வீரப்பா என்னிடம் கேட்டபோது, "இந்த வேடத்தில் நடிக்க எனக்கு பிடிக்கவே இல்லை'' என்று சொன்னேன். அப்படி விருப்பமில்லாமலே நடித்த அந்தப்படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.
அந்தப் படத்தில் வரும், "தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே'' என்ற பாடல் அந்த சமயத்தில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட பாட்டு.
மேகலா பிக்சர்ஸ் படம் "காஞ்சித் தலைவன்.'' கதை - வசனம் கலைஞர். டைரக்ஷன் காசிலிங்கம்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர், பானுமதி, எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா எல்லோரும் நடித்தோம்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு நான் தங்கையாக நடித்தேன். அவரோடு நான் நடித்த முதல் படம் இதுதான்.
இந்தப் படத்தில் பானுமதி அம்மாவும், நானும் சேர்ந்து வருவது போல் ஒரு சீன்கூட இல்லை! இதனால், படப்பிடிப்பின்போது, ஒருநாள்கூட பானுமதி அம்மாவை பார்க்க முடியவில்லை. ஆகவே, அவரைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.
அந்தச் சமயத்தில் "சாரதா'' படப்பிடிப்பு நிலையத்தில் எனக்கு "படித்த மனைவி'' படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. பக்கத்து செட்டில் "காஞ்சித் தலைவன்'' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அன்று என் கணவர் எஸ்.எஸ்.ஆரும், பானுமதி அம்மாவும் பங்கு கொள்ளும் காட்சியை படமாக்கிக் கொண்டு இருந்தார்கள்.
அன்று பலத்த மழை கொட்டிக் கொண்டிருந்தது. நான் ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு அவர்கள் இருவரும் இருக்கும் இடத்திற்குப் போனேன். அங்கு என்னை பானுமதி அம்மாவிற்கு எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்தி வைத்தார். என் தலையில் கையை வைத்து "நல்லா இரும்மா'' என்று பானுமதியம்மா வாழ்த்தினார். பிறகு, "நீ நடித்த படம் ஒன்றைப் பார்க்க வேண்டுமே'' என்றார்.
நான் நடித்த "சாரதா'' படத்தை அவர்களுக்குப் போட்டுக் காட்டினேன். படத்தைப்பார்த்த பானுமதி அம்மா, "நீ ரொம்ப நல்லா நடித்திருக்கிறாய்'' என்று என்னை பாராட்டினார்.
அதன் பிறகு வரலட்சுமி நோன்பு அன்று பானுமதி அம்மா என் வீட்டிற்கு வந்து, எனக்கு காதில் போடும் ஒரு நகையை பரிசாகக் கொடுத்தார். அதை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.'' - இவ்வாறு சொன்னார் விஜயகுமாரி.

பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவரும் விஜய் சேதுபதி தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். கடந்த வருடம் இவரது நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகி சாதனை படைத்தன. அதேபோல இந்த வருடக் கணக்கை தனது 'புரியாத புதிர்' படத்தின் மூலம் தொடங்கவிருக்கிறார்.
இந்நிலையில் விக்ரம் வேதா படத்தில் ஒருபகுதியை நடித்த விஜய் சேதுபதி, தற்போது, 'ரேணிகுண்டா' புகழ் பன்னீர்செல்வம் இயக்கத்தில் 'கருப்பன்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்தில் கொம்பு வச்ச தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கவிருக்கிறார். மேலும் வில்லனாக பாபி சிம்ஹா நடிக்க உள்ளார்.
இதுதவிர 'கவண்', 'கருப்பன்', 'விக்ரம்-வேதா', '96', 'அநீதி கதைகள்' உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

மோதலால் ஏற்படும் இழப்பை சொல்லும் ‘யாகன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
மாப்பாணர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘யாகன்’. இதில் சஜன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடைய அப்பாவாக பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நடித்துள்ளார். நாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார். முனீஸ் ராஜா, தவசி, பாவா லட்சுமணன், ராஜேந்திர நாத் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே புரிந்துகொள் ளாமல் மோதுவது தான். அதனால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதை அழுத்தமாகச் சொல்லும் படைப்பாக ‘யாகன்’ உருவாகிறது. வில்லனின் தவறான புரிதலால் ஹீரோவின் குடும்பம் இழப்புகளைச் சந்திக்கிறது. அதற்கு ஹீரோ என்ன தீர்வு காண்கிறான் என்பது பரபரப்பான திரைக்கதை. இந்த படத்தில் அப்பாவும் மகனும் எவ்வளவு தூரம் அன்பாக இருக்கமுடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்களாம்.
இசை-நிரோ பிரபாகரன், ஒளிப்பதிவு- மகேஷ்.டி. படத்தொகுப்பு- சண்முகம், பாடல்கள்- நா. முத்துக்குமார், கபிலன், பத்மாவதி, அருண் பாரதி, தயாரிப்பு-யோகராசா சின்னத்தம்பி.
கதை, திரைக்கதை , வசனம், இயக்கம்-புதுமுக இயக்குனர் வினோத் தங்கவேலு.

10 ஆண்டுகளுக்கு பின் சிரஞ்சீவி நடித்த படம் நாடு முழுவதும் ரிலீசானது. இதன்மூலம் அரசியலுக்கு போய் மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார் சிரஞ்சீவி. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
10 ஆண்டுகளுக்குப்பின் சிரஞ்சீவி நடித்த படம் 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் நடிகர் சிரஞ்சீவி. ஆந்திரா- தெலுங்கானாவில் இவரது படங்கள் வசூலை குவித்து வந்தன. இந்த நிலையில் இளம் நடிகர்களின் வருகையால் சிரஞ்சீவிக்கு மவுசு குறைய ஆரம்பித்தது. வரிசையாக அவரது படங்கள் தோல்வியை தழுவியது.
இதனால் 2007-ம் ஆண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு 2008-ம் ஆண்டு பிரஜ்ஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அடுத்த ஆண்டு(2009) நடந்த ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் அவரது கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு அவரது கட்சி எழுச்சி பெற முடியாமல் போனது.
இதையடுத்து சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரசில் இணைத்து விட்டார். அவருக்கு முதலில் எம்.பி. பதவி வழங்கிய காங்கிரஸ் பின்னர் அவரை மத்திய மந்திரியாகவும் நியமித்தது.
இந்த நிலையில் இழந்த புகழை நிலைநிறுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். ஏற்கனவே 149 படங்களில் நடித்திருந்த சிரஞ்சீவி தனது 150-வது படமாக ‘கைதி நம்பர் 150’ என்ற பெயரில் புதிய படத்தை தொடங்கினார்.
இது தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் தழுவல் ஆகும். 10 ஆண்டுகளுக்கு பின்பு சிரஞ்சீவி சினிமாவில் நடித்ததால் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்று நாடு முழுவதும் சிரஞ்சீவி படம் ரிலீஸ் ஆனது. மொத்தம் 1000 தியேட்டர்களில் படம் வெளியானது.
ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் சிரஞ்சீவி படம் பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் வந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். 10 ஆண்டுக்குப்பின் சிரஞ்சீவி படம் வெளியானதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்து விற்கப்பட்டது. தியேட்டர்களில் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது.
‘ஆன்லைனில்’ சில விநாடிகளிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. தியேட்டர் கவுண்டர்களில் டிக்கெட்டுகள் வாங்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். சில நிமிடங்களில் தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து “ஹவுஸ் புல்” போர்டுகள் தொங்கவிடப்பட்டன.
படத்தை பார்த்த ரசிகர்கள் கூறும் போது, சிரஞ்சீவி வழக்கமான உற்சாகத்துடன் சண்டை காட்சிகளில் நடித்து இருப்பதாகவும், நடன காட்சிகளிலும் நடிப்பிலும் எப்போதும் போல் தனது பாணியில் ஸ்டைலாக நடித்து இருப்பதாகவும் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
ஆந்திர பல்கலைக்கழக மாணவர் அனில் குமார் கூறுகையில், சிரஞ்சீவி இளமையுடனும் எழுச்சியுடனும் நடித்து இருக்கிறார், ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து உள்ளார் என்றார். சிரஞ்சீவி படத்தை அவரது மனைவி சுரேகா மற்றும் குடும்பத்தினர் ஜதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு சென்று பார்த்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் மாணவர் போராட்டம் வெற்றி பெறும் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்பினரும் கலந்து கொண்டனர். இதில் சத்யராஜ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மிகவும் ஆவேசமாக பேசினார். இன்று விலங்குகளுக்கு ஆதரவாக பலர் பேசுகிறார்கள். மனிதர்களே துன்புறுத்தப்படுகிறார்கள். இது அவர்களுக்கு தெரியவில்லையா?
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும் இளைஞர்களும் களம் இறங்கி இருக்கிறார்கள். நிச்சயம் அது வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள ‘பச்சைக்கிளி பரிமளா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
நாயகன் தாமோதரன் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில், மாடர்ன் பெண் ஒருத்தியை திருமணம் செய்துகொண்டு, அவளுடன் உல்லாசமாக குடும்பம் நடத்தி வருகிறார் நாயகன். இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையிலேயே, நாயகனின் மனைவிக்கு இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இவரை விட்டு ஓடிவிடுகிறாள்.
மனைவி தன்னை பிரிந்த சோகத்தில் குடியே கதியென்று கிடக்கிறார் நாயகன். அப்போதுதான் விபச்சார தொழில் செய்யும் நாயகி சக்தி ஸ்ரீயின் அறிமுகம் நாயகனுக்கு கிடைக்கிறது. ஏற்கெனவே, கணவனை பிரிந்து வேறு வழியில்லாமல் விபச்சாரத்தில் விழுந்த சக்திஸ்ரீக்கு, தாமோதரனின் வலி புரியவே, அவரை அரவணைத்து ஆதரவு கொடுக்கிறாள்.
சக்தி ஸ்ரீயின் அரவணைப்பும், ஆதரவும் தாமோதரனுக்கு நிம்மதியை கொடுக்கவே, குடிப்பழக்கத்தில் இருந்து விலகுகிறார். இதேவேளையில், நாயகனின் நண்பரும் மாடர்ன் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து வருகிறார். ஆனால், அவருக்கோ கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள்.
தனக்கு மாடர்ன் பெண் கிடைக்காத விரக்தியில், தனக்கு மனைவியாக வந்த கிராமத்து பெண்ணை மாடர்ன் பெண்ணாக மாற்ற முயற்சிக்கிறார் நாயகனின் நண்பர். அந்த முயற்சி அவருக்கு எந்தவிதமான வலிகளை கொடுத்தது. தாமோதரன்-சக்திஸ்ரீயின் உறவு எந்த நிலைமைக்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருக்கும் நாயகன், நாயகி முதற்கொண்டு அனைவரும் புதுமுகங்கள் என்பதால் யாரிடமும் அவ்வளவாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. அவரவர் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாடர்ன் பெண்ணை நம்பி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என்ற சமூக அக்கறையோடு இந்த படத்தை எடுத்திருக்கிறார். நாகரீக வாழ்க்கைக்கும், புதுவிதமான வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு செல்லும் இளைஞர்களின் வலியை படத்தில் சொல்ல வந்திருக்கிறார். ஆனால், அதை சரியான காட்சியமைப்பு இல்லாமல் படமாக்கியிருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. சிறு பட்ஜெட் படமென்பதால் நடிகர், நடிகைகள் தேர்விலும் அதிகம் கவனம் செலுத்த தவறியிருக்கிறார்.
குபேரன் இசையில் பாடல்களை ரசிக்க முடியவில்லை. பின்னணி இசையும் இரைச்சல்தான். கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் குளுமை சேர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘பச்சைக்கிளி பரிமளா’ பறக்கவில்லை.

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான `என்னை அறிந்தால்` படம் கன்னடத்தில் டப்பிங் செய்யப்படுகிறது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2015ல் வெளியான மெகா ஹிட் படம் 'என்னை அறிந்தால்'. அஜித் கேரியரில் முக்கியமான படமாக அமைந்த 'என்னை அறிந்தால்' ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமைந்தது. இதில் அஜித் ஜோடியாக த்ரிஷாவும், காமெடியனாக விவேக் மற்றும் வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தை பிற மொழிகளில் டப்பிங் செய்ய முயற்சி செய்யப்பட்டது. இந்நிநிலையில், தற்போது, இப்படம் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
கன்னடத்தில் பிறமொழிகளின் டப்பிங் படங்கள் நீண்ட நாட்களாக வெளியாகாத நிலையில், தற்போது அஜித் நடித்துள்ள `என்னை அறிந்தால்` படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.