என் மலர்
பிரியங்கா சோப்ரா தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
“நான் சொந்த காலில் சுதந்திரமாக இருக்கிறேன். எதற்கும் பயப்பட மாட்டேன். ஆண்கள் உள்பட யாராலும் என்னை தோற்கடிக்க முடியாது. குழந்தை பெற்று எடுப்பதை தவிர்த்து, வேறு எதற்கும் எனக்கு ஒரு ஆண் துணை தேவை இல்லை. எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.
அதற்காக ஒரு ஆணை நிச்சயம் தேர்ந்தெடுப்பேன். ஆனால் அந்த ஒருவர் கூட என்னைப் போலவே யோசிப்பவராகவும் என்னை உண்மையாக விரும்புபவராகவும் இருக்க வேண்டும். நம்பிக்கையானவராகவும் இருக்க வேண்டும். எனக்கு அவர் துரோகம் செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன். அந்த வாழ்க்கைத் துணைவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்.
திருமண வாழ்க்கையில் நம்பிக்கை என்பது முக்கியமானது. நம்பிக்கை துரோகத்தை எந்தவிதத்திலும் ஏற்க முடியாது. சினிமாவில் வெற்றி-தோல்வி பற்றி நான் கவலைப்படுவது இல்லை. தோல்வியை பார்த்து துவண்டு போக மாட்டேன். எனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடிக்கிறேன். பலனை பற்றி எந்த எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்வது இல்லை.
அதிர்ஷ்டவசமாக என்னை சுற்றிலும் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு மற்றவர்கள் தரும் உற்சாகம் என்பது பெரிய பலம். எனது நண்பர்கள் எப்போதும் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது எனக்கு எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.”
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.
அந்த பங்களாவில் பணிபுரியும் பார்வதி நாயரை பார்த்தவுடனே சாந்தனுவுக்குள் ஒருவித ஈர்ப்பு வந்துவிடுகிறது. அவளும் சாந்தனுவிடம் நெருங்கி பழக ஆரம்பிக்கிறாள். ஒருகட்டத்தில் பார்த்திபனின் மனைவிதான் பார்வதி நாயர் என்பது சாந்தனுவுக்கு தெரிய வருகிறது.
பார்த்திபனின் வயதுக்கும், பார்வதி நாயரின் வயதுக்கும் ஒத்துப்போகாத நிலையில், இந்த திருமணம் எப்படி நடந்தது? என்று சாந்தனு கேட்கையில், அதற்கு பார்த்திபன், தான் சிறுவயதிலிருந்தே பார்வதி நாயரை தூக்கி வளர்த்ததாகவும், அவளுக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோன நிலையில், வேறு வழியின்றி சிறுவயதிலிருந்து தனக்கு ஆதரவளித்த பார்வதி நாயருடைய அம்மாவுக்கு நன்றிகடன் செலுத்தும்வகையில் அவளை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு நடந்த ஒரு விபத்தில் தனக்கு காலில் அடிபட்டதையும், இதையடுத்து, தாம்பத்ய ரீதியாக தனது மனைவியை திருப்திபடுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட வேதனையையும் சொல்லி முடிக்கிறார்.
இதையெல்லாம் பொறுமையாக கேட்ட சாந்தனு, அவர் மீது இரக்கப்படுவதா? அல்லது வேதனைப்படுவதா? என்ற நிலைமையில் இருக்கிறார்.
இந்நிலையில், அடிக்கடி பார்வதி நாயருக்கு வலிப்பு வருவதும், அதற்காக அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதையும் சாந்தனு அறிகிறார். ஒருமுறை வலிப்பு வரும்போது அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார், சாந்தனு. அந்த நேரத்தில் சாந்தனுவிடம், மருத்துவர் அவள் தாம்பத்யத்தில் முழு திருப்தி கிடைக்காததால்தான் வலிப்பு வருவதாக கூறுகிறார்.
இதையெல்லாம் கேட்ட சாந்தனு இதற்கு என்ன முடிவெடுத்தார்? சாந்தனுவை பார்த்திபன் தன்னுடனே தங்க வைக்க காரணம் என்ன? என்பதற்கெல்லாம் பிற்பாதியில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
பார்த்திபன் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். வெறுமனே நடிக்கவேண்டும் என்பதைவிட இப்படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பார்த்திபனின் வழக்கமான நக்கல், நையாண்டி வசனங்களும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து படைக்கிறது.
இப்படத்தின் நாயகன் சாந்தனு என்பதைவிட, அவரைவிட அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி பார்வதி நாயர். கடைசிவரை இவருடைய கதாபாத்திரம் மர்மமாகவே செல்வது சிறப்பு. அவருடைய தோற்றத்தை விட, நடிப்பு பிரமாதமாக இருக்கிறது.
சாந்தனு, இப்படத்தில் கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். நடனத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் வந்துபோனாலும் சிம்ரன் ரசிக்க வைத்திருக்கிறார். தம்பிராமையாவின் காமெடி வழக்கம்போல்தான் என்றாலும், ஒருசில இடங்களில் அதிகமான முகபாவனைகளை கொடுத்து ரசிக்க விடாமல் செய்துவிடுகிறார்.
இந்தப் படம் முற்றிலும் புதுமையமான கதைக்களம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு, வேறு கோணத்தில் யோசித்து எடுக்கப்பட்ட கதையென்று சொல்லிவிட முடியும்.
ஏனென்றால், இந்தப் படத்தில் கதையைவிட, வசனங்கள், திரைக்கதை, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தன்மை என அனைத்தும் அருமையாக அமைந்துள்ளது. அவ்வப்போது கொஞ்சம் கிளாமரான காட்சிகளும் வந்துபோகிறது. குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு எதையும் அளவுக்கு மீறி கொண்டு செல்லாமல் அழகாக சொல்லியிருக்கிறார், பார்த்திபன்.
கதாபாத்திரங்களின் போக்கு வேறுவிதமாக இருந்தாலும், அது சரியென்று சொல்லும்படி முடிவை வைத்திருந்தாலும், குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாத ஒரு படத்தை பார்த்திபன் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
சத்யாவின் இசையமைப்பில் பாடல்கள் சுமார் ரகம்தான். ‘டமுக்காட்டலாம் டமுக்காட்டலாம்’ பாடல் கேட்பதற்கு மட்டும் குதூகலம் கொடுத்திருக்கிறது. அதை தனது நடனத்தினால் மேலும் மெருகேற்றியிருக்கிறார் சாந்தனு. அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ முழுமையடைந்து விட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த ஒரு விழாவில், ரஜினி, விஜய் என பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து ரஜினி கூறுகையில், ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது.என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள்.

பெரியவர்கள் ஒரு கலாச்சாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
எரிந்து பூமியில் விழுந்த செயற்கைக்கோளுடன் இருந்த அந்த கருவியை வைத்து, அந்த கருவியை யார் செய்திருப்பார்கள்? யார் இந்த நாச வேலையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று உயர்மட்ட விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்தநேரத்தில், இவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அந்த கருவியை திருடி சென்றுவிடுகிறார்.
இந்நிலையில், அந்த கருவியை கண்டுபிடிப்பதற்காக வின் டீசல் தலைமையில் XXX குழுவை களமிறக்க அமெரிக்கா ராணுவம் முடிவு செய்கிறது. XXX குழுவில் இருந்து விலகி இருக்கும் வின் டீசல், நாட்டின் பாதுகாப்பு குறித்த பிரச்சினைக்காக இந்த குழுவில் இணைகிறார். வின் டீசலுடன் மேலும் 3 பேர் XXX குழுவில் இணைகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சக்திகள் உண்டு.
இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து கருவியை திருடிச் சென்றவர்களை தேடி புறப்படுகின்றனர். கருவியை திருடியவர்கள் ஒரு தீவில் இருப்பதை அறிந்து அங்குபோய் சேருகிறார்கள். அங்கு சென்றபிறகுதான் ஏற்கெனவே, XXX குழுவில் இருந்தவர்களான டோனி ஜா, தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர்தான் இந்த கருவியை திருடியதாக தெரிகிறது. அவர்கள் எதற்காக இந்த கருவியை திருடினார்கள்? அவர்கள்தான் செயற்கைகோளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார்களா? அல்லது வேறு யாருக்கும் இதற்கு தொடர்பு இருந்ததா? என்பதே கண்டுபிடித்து, அதை அழிப்பதே மீதிக்கதை.
XXX படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான காட்சிகளும் நினைவுக்கு வரும். அதேபோல், இந்த படத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. XXX படவரிசையில் முதல் பாகத்தில் நடித்தபிறகு, தற்போது மூன்றாம் பாகத்தில் நடித்திருக்கிறார் வின் டீசல். இரண்டாம் பாகத்தில் இவர் இல்லையென்ற குறையை மூன்றாம் பாகத்தில் அவர் பூர்த்தி செய்திருக்கிறார். அவருடைய உடல் வாகு, அதற்கேற்ற ஆக்ஷன் காட்சிகளெல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
தீபிகா படுகோனேவுக்கு ஹாலிவுட்டுக்கு புதிது என்றாலும், ஆக்ஷன் காட்சிகளெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஹாலிவுட் நடிகைகளுக்கு போட்டி போடும் அளவுக்கு இவரது ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. இந்திய நடிகர், நடிகைகளுக்கு ஹாலிவுட்டில் இடம் கிடைத்தாலும், அவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படுவது கிடையாது. ஆனால், இந்த படத்தில் தீபிகா படுகோனேவுக்கு முதல் படமாக இருந்தாலும் நல்லதொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கவர்ச்சியிலும் ரொம்பவுமே தாராளம் காட்டியிருக்கிறார்.
முதல் இரண்டு பாகத்திலும் வந்த சாமுவேல் எல்.ஜாக்சன் இந்த பாகத்திலும் வந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். டோனி ஜா, டோனி யென் ஆகியோரும் சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது ஆக்ரோஷ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
படத்தின் கதை சாதாரணமாக இருந்தாலும், காட்சியமைப்புகளில் விறுவிறுப்பு, ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதால் படம் பார்க்கிறவர்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாமல் செல்கிறது. அதை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் கருஷோ. குறிப்பாக, எதிரியிடம் பேசிக் கொண்டிருக்கும் வின் டீசல், தனது விரலை உயர்த்தி ஒன்று இரண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவரது விரல்களுக்கு இடையில் குண்டு பாய்ந்து எதிரி வீழ்வது எல்லாம் ரசிகர்களை ஒருநொடியில் அதிர்ச்சியாக்கியிருக்கிறது.
படத்தில் நிறைய காட்சிகள் நிஜவாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருந்தாலும், அதை பார்க்கும்போது நமக்கே வியக்க வைக்கும் வண்ணம் தத்ரூபமாக காட்சிப்படுத்தியருப்பது சிறப்பு.
மொத்தத்தில் 'XXX தி ரிட்டன் ஆப் ஸேண்டர் கேஜ்' ஆக்ஷன் பிரியர்களுக்கு சரியான விருந்து.
இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் உடனடியாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
டாக்டர்கள் அறிவுரையின்படி, இரண்டு நாட்கள் பூரண ஓய்வுக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற 74-வது ‘கோல்டன் குளோப்’ விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா, சமீபத்தில்தான் மும்பை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் பீட்டா அமைப்புக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது, மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது. இதுவெல்லாம் பீட்டா அமைப்பின் கண்ணுக்கு தெரியாதே என்று கூறியிருந்தார்.
இதை பார்த்த பீட்டா இந்தியா அமைப்பு குஷ்புவுக்கு பதிலளிக்கும்விதமாக ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தது. காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஒரு வீடியோ லிங்கை குஷ்புவுக்கு அனுப்பி, காளைகள் துன்புறுத்தப்படுகின்றன. இதனால்தான் இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்டவிரோதமானது என்று பதில் அனுப்பியுள்ளது.
இதற்கு குஷ்புவும் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி, ஜல்லிக்கட்டை உங்களால் வேறு எங்காவது தடை செய்ய முடிந்ததா? மடகாஸ்கர் அரசிடம் அவர்களுடைய ரூபாய் நோட்டில் இருக்கும் சின்னத்தை நீக்க பேச முடிந்ததா? என்பதை தயவு செய்து கூறுங்கள். ஜல்லிக்கட்டால் நன்மைகள் பல உண்டு.
ஒரு காளையை எப்படி கவனித்துக் கொள்கிறார்கள், ஒரு விவசாயி காளை அல்லது பசுவை எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதை நிரூபிக்க நான் லட்சக்கணக்கில் வீடியோக்களை காண்பிக்க முடியும். ஜல்லிக்கட்டில் நீங்கள் 5 தவறுகளை பார்த்தால் நாங்கள் ஏன் அதை ஆதரிக்கிறோம் என்பதற்கு 50 ஆயிரம் சரியானவற்றை காண்பிக்கமுடியும். விதிமுறைகளை கொண்டு வந்தால் நாங்கள் மதிப்போம். ஆனால் தடையை ஏற்கமுடியாது என்று கூறியுள்ளார்.
இதற்கு பீட்டா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், புத்தா பிலிம்ஸ் போன்ற பெரிய பட நிறுவனங்களில் இருந்து விஜயகுமாரிக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், அவர் ஏவி.எம். நிறுவனத்துடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தினால், மற்ற படங்களில் நடிக்க முடியாத நிலை இருந்தது.
இதை அறிந்த ஏவி.மெய்யப்ப செட்டியார், விஜயகுமாரியை அழைத்து, "உனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அதற்கு, நாங்கள் போட்ட ஒப்பந்தம் தடையாக இருக்கக்கூடாது. எனவே அதை ரத்து செய்து விடுகிறோம். இனி நீ எல்லாப் படங்களிலும் நடிக்கலாம். நீ பெரிய நடிகையாக வருவாய்'' என்று கூறினார்.
நெகிழ்ந்து போன விஜயகுமாரி, அவர் காலைத்தொட்டு வணங்கி, ஆசி பெற்றார்.
ஜெமினியின் "வஞ்சிக்கோட்டை வாலிபன்'' படத்தில், ஜெமினிகணேசனின் தங்கையாக நடித்தார். அந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதே படத்தை, இந்தியிலும் ஜெமினி எடுத்தது. தமிழில் நடித்த அதே வேடத்தில், இந்தியிலும் விஜயகுமாரி நடித்தார். இதுவும் பெரிய வெற்றிப்படம்.
விஜயகுமாரிக்கு இந்திப் படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்தன. அவர் கவனம் முழுவதும், தமிழில் சிறந்த இடத்தைப் பெறவேண்டும் என்பதிலேயே இருந்தது. அதனால் அவர் இந்திப்பட உலகின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அவர் நடித்த ஒரே இந்திப்படம், "ராஜ்திலக்'' (வஞ்சிக்கோட்டை வாலிபன் இந்திப்பதிப்பு) மட்டுமே.
புத்தா பிலிம்ஸ் தயாரித்த "பதிபக்தி''யில் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.என்.ராஜம் ஆகியோருடன் விஜயகுமாரியும் நடித்தார். இதில், விஜயகுமாரிக்கு, ஜெமினிகணேசனின் முறைப்பெண் வேடம்.
பீம்சிங் டைரக்ட் செய்த இந்தப்படம் மெகா ஹிட் படமாகும்.
கதை-வசன கர்த்தாவாக இருந்த ஸ்ரீதர், முதல் முதலாக டைரக்ட் செய்த படம் "கல்யாணப்பரிசு.'' தமிழ்ப்பட உலகில், ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்த படம் இது.
ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில், விஜயகுமாரியும், சரோஜாதேவியும் அக்கா - தங்கையாக நடித்தனர். விஜயகுமாரிக்காக சரோஜாதேவி தன் காதலை தியாகம் செய்வார்.
திருப்பங்கள் நிறைந்த இந்த முக்கோணக் காதல் கதையை, ஒரு காவியமாக உருவாக்கியிருந்தார், ஸ்ரீதர். 9-4-1959-ல் வெளிவந்து வெள்ளி விழா கண்ட இப்படத்தின் மூலம், விஜயகுமாரி மேலும் புகழ் பெற்றார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பெற்ற மகனை விற்ற அன்னை'' படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இணைந்து நடித்தனர். மனோகர், பண்டரிபாய் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். பாடல்கள், படப்பிடிப்பு எல்லாம் சிறப்பாக அமைந்தபோதிலும் படம் வெற்றி பெறவில்லை.
இந்தக் காலக்கட்டத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் இணைந்து, விஜயகுமாரி பல நாடகங்களிலும் நடித்தார்.
அதுபற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-
"நாங்கள் நடித்த நாடகங்களில் கலைஞர் எழுதிய "மணி மகுடம்'' பெரும் புகழ் பெற்றது. மற்றும் "தென்பாண்டிய வீரன்'', "புதுவெள்ளம்'', "முதலாளி'', "முத்து மண்டபம்'' போன்ற நாடகங்களை நாங்கள் நடத்தினோம்.
நாடகங்களில் நடித்துக் கொண்டே "மனைவியே மனிதனின் மாணிக்கம்'', "கைதியின் காதலி'', "தங்க மனசு தங்கம்'' போன்ற படங்களிலும் நடித்தேன்.
அந்த சமயத்தில் நாங்கள் "தங்கரத்தினம்'' என்ற படத்தை தயாரித்தோம். இந்தப்படத்தில் நான் ஆதிதிராவிடப் பெண்ணாக நடித்தேன். சாதியில் ஏற்ற தாழ்வு கிடையாது, எல்லோருடைய உடம்பிலும் ஓடுவது ஒரே ரத்தம்தான். எல்லோரும் மனிதசாதி'' என்ற தத்துவத்தை சொல்லும்
கதை.இந்த படத்தில், அப்போது பழனியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் அண்ணா பேசுவது, கலைஞர் பேசுவது முதலான காட்சிகள் இடம் பெற்றன. மக்கள் இதை மிகவும் வரவேற்றார்கள்.
இந்தப்படம் முடியும்போது நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தேன்.
அதனால் நாடகங்களில் நடிக்க முடியவில்லை. எனவே, "மணிமகுடம்'' நாடகத்தில் எனக்கு பதிலாக நடிக்க கோவையிலிருந்து ஒரு பெண் வந்திருந்தார். அவரால் கலைஞர் எழுதிய வசனங்களை பேச முடியவில்லை. ஆகவே மணிமகுடம் நாடகத்திற்குப் பதிலாக "தென்பாண்டிய வீரன்'' என்ற நாடகத்தை நடத்தினோம்.
அந்தப் புது நடிகை யார் தெரியுமா? பிற்காலத்தில் மலையாள பட உலகில் கொடிகட்டிப் பறந்த "செம்மீன்'' பட நாயகி ஷீலாதான்!
மருத்துவமனையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. என் குழந்தைக்கு டாக்டர் வாதிராஜ×ம் அவருடைய மனைவியும்தான் பெயர் சூட்டினார்கள். என் கணவரின் முதல் எழுத்தான "ர'', என்னுடைய பெயரின் முதல் எழுத்தான "வி'' இந்த இரண்டையும் சேர்த்து ரவிக்குமார் என்ற பெயர் வைத்தார்கள்.
குழந்தை பிறப்பதற்கு முன் வீமண்ண முதலி கார்டனில் குடியிருந்தேன். இது எனக்கு சொந்த வீடு. குழந்தை பிறந்த பிறகு, என் கணவர் அவருடைய முதல் மனைவி பங்கஜம் அக்காளுடன் இருந்த தேனாம்பேட்டை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அந்த காம்பவுண்டுக்குள் மூன்று வீடுகள். அடுத்தடுத்து இருந்தன. அதில் ஒரு வீட்டில், என் கணவரின் முதல் மனைவி பங்கஜம் அக்காள் அவர்களுடைய குழந்தைகளும், மற்றொரு வீட்டில் என் கணவரின் தங்கையும் அவருடைய கணவர் டி.வி.நாராயணசாமியும் அடுத்த வீட்டில் நானும் என் மகனும் இருந்தோம். அப்பா, பாட்டி, அக்காள், தங்கை, அக்காளுடைய மகள் ஆகியோரும் என்னுடன் இருந்தார்கள்.
நாங்கள் தனித்தனி வீட்டில் இருந்தாலும், எல்லோரும் ஒரே குடும்பத்தில் இருப்பதுபோல், ஒற்றுமையாக - சந்தோஷமாக இருந்தோம். அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் மனதில் இன்னும் நிழலாடுகின்றன.
தைப்பொங்கல் வந்துவிட்டால் எங்கள் வீடு திருவிழா கோலம் பூண்டுவிடும். என் கணவரும், நானும் பொங்கல் அன்று காலை 6 மணிக்கு போர்ட்டிகோவில் வந்து நிற்போம். நாடக கம்பெனியில் உள்ளவர்கள், சினிமாத் துறையில் உள்ளவர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள், ரசிகர் மன்றத்தினர், நரிக்குறவர்கள் கூடியிருப்பார்கள். ஒருபக்கம் நாதஸ்வரம் ஒலி ஒலித்துக்கொண்டிருக்கும்.
பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகஆட்டம் என்று வீடே கலகலப்பாக இருக்கும், பிறகு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுச்
செல்வார்கள்.இதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத இனிய நிகழ்ச்சியாகும்.
அறிஞர் அண்ணா அவர்களின் 50-வது பிறந்த நாள் விழாவை எங்கள் வீட்டில் கொண்டாடினோம். அப்போது ஒரு வெள்ளித்தட்டில் 50 தங்கக் காசுகளை வைத்து அண்ணா அவர்களிடம் என் கணவர் கொடுத்தார்.
எனக்கு குழந்தை பிறந்து 2 மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். மாடர்ன் தியேட்டர் படம் "குமுதம்'' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். எனக்கு ஜோடி என் கணவர். இதில் ரங்காராவ், பி.எஸ்.சரோஜா, சவுகார்ஜானகி, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம்.
சுப்பையா டைரக்ட் செய்ய, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதினார்.
இந்தப் படத்தில் எனக்கு வக்கீல் வேடம். காதலனுக்காகவும், காதலன் மனைவிக்காகவும் கோர்டடில் என் தந்தையை எதிர்த்து வாதாடி ஜெயித்து, தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு பெண்ணின் கதை.
இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து முதல்தர நாயகி அந்தஸ்தை எனக்குத் தேடித்தந்தது.
- இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
உலகின் சில நாடுகளில் விலங்குகள் நல அமைப்பு என்ற பெயரில் பீட்டா என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்தியாவில் விலங்குகளை பாதுகாப்பதாக கூறி வரும் இந்த அமைப்பில் பல்வேறு இந்திய பிரபலங்கள் உறுப்பினர்களாகவும், அதன் விளம்பர தூதர்களாகவும் இருக்கின்றனர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் ஆபாச நடிகையாக அறிமுகமாகி, இன்று கவர்ச்சி நடிகையாக மாறி இருக்கும் சன்னி லியோன் பீட்டா அமைப்பில் பல்வேறு விளம்பரங்களில் நடித்திருக்கிறார். தெருக்களில் இருக்கும் நாய்களை தத்து எடுக்க வலியுறுத்தும் விளம்பரங்களும் இதில் அடங்கும்.
இந்நிலையில் பீட்டா அமைப்பில் சன்னி லியோனின் பங்களிப்புகளை கருத்தில் கொண்டு பீட்டா சார்பில் 'ஆண்டின் சிறந்த நபர்' (Person of the Year) என்ற விருதை வழங்கியுள்ளது. இதனை சன்னி லியோன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சில மணி நேரங்களுக்கு முன் பதிவு செய்துள்ளார்.
இந்த தகவலை வீடியோ வடிவில் குறிப்பிட்ட சன்னி லியோன் தான் வெளியிட்ட வீடியோவில் பீட்டா வழங்கிய விருதிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதோடு அவர் விட்டபாடில்லை. தனது படத்தின் உரிமையை மற்ற மொழிகளுக்கு கொடுத்தால், அதற்கு வாங்கப்படும் தொகையில் பாதியை தனக்கு தருமாறும் கேட்டுள்ளாராம். மூன்றாவது படத்திலேயே இவ்வளவு அடாவடியாக சம்பளம் பேசும் இயக்குனர் மீது அந்த தயாரிப்பு நிறுவனம் மிகவும் கோபத்தில் உள்ளதாம்.
இருப்பினும், தளபதி நடிகருக்காக இயக்குனர் சொன்னதையெல்லாம் காதுகொடுத்து கேட்டபடி இருக்கிறதாம். இதை தளபதி நடிகர் வசமும் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறதாம். அதன்பிறகு, தளபதி நடிகர் எடுக்கிற முடிவுதான் இப்படத்தின் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எங்களது தமிழர்கள் சொல்லில் பண்பாடு வைத்திருக்கிறார்கள். ஏறு தழுவுதல். தழுவுதல் என்றால் காயப்படுத்துதல் என்று அர்த்தமாகுமா? தழுவுதல் என்றால் வதை என்ற துன்பம் வருமா? தழுவுதல் என்றால் ரணம் நேருமா? தழுவுதல் என்றால் ஒரு உயிருக்கு விரோதமான காரியம் என்று ஒப்புக் கொள்ளப்படுமா? தாய் குழந்தையை தழுவுகிறாள். காயப்படுத்துவதற்கா? காதலன் காதலியை தழுவுகிறான், வன்முறை செய்வதற்கா? மலையின் மீது முகில் தழுவுகிறது, மலையை நொறுக்குவதற்கா? மாட்டின் மீது தமிழன் தாவி தழுவுகிறான், ஏறி தழுவுகிறான், மாட்டை காயப்படுத்துவதற்கா? இந்த வாதத்தை உயர்ந்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வைத்திருக்கிறார்களா? அறிவார்ந்த வழக்கறிஞர்கள் இந்த வாதத்தை முன்வைத்திருந்தால் அந்த நீதிபதிகள் புரிந்துகொண்டால் அவரச சட்டமே தேவையில்லையே. இன்றே தீர்ப்பு வழங்கலாமே. இதைத்தானே தமிழகம் எதிர்பார்க்கிறது.
ஏறு தழுவுதல் குற்றம் என்றால், சிவபெருமானை என்ன செய்வீர்கள்? சிவன், கடவுள் என்பதெல்லாம் இந்து மதத்தின் நம்பிக்கை. ஆனால், மானுடவியல் வரலாற்றின்படி, நான் உணர்ந்துகொண்ட விஷயம் ஒன்று உண்டு. எவன் ஒருவன் காட்டு மாட்டை வசக்கி, தன் வசப்படுத்தி, ஏரில் பூட்டி அதில் சவாரி செய்தானோ அவன்தான் சிவபெருமான் என்று மனித இனம், நம் தமிழ் இனம் பெயர் சூட்டியது. மாட்டை வசக்கி ஏரியில் பூட்டுவது தவறு என்றால் எந்த விதியின் கீழ் சிவபெருமானை கைது செய்வீர்கள். அது முடியாது. ஜல்லிக்கட்டில் மாடுகளால் மனிதன் காயம்படுகிறான். ஆனால், மனிதர்களால் மாடுகள் காயம் படுவதில்லை.
ஜல்லிக்கட்டால் மாடு காயமுறுகிறது என்று சொல்கிறார்கள். அப்படியில்லை, நாங்கள் மாட்டை காயப்படுத்துவதில்லை. ஜல்லிக்கட்டு காளைகளுக்குத்தான் எங்கள் வீட்டில் முதல் மரியாதை. உழவன் பட்டினி கிடப்பான், ஜல்லிக்கட்டு மாட்டை பட்டினி போடமாட்டான். உழைக்கும் பெண் இழைத்திருப்பாள், பருத்தி விதையை மாட்டுக்கு போடாமல் தூங்கமாட்டாள். தங்களைவிட தங்கள் மாடு ஆரோக்கியமாக, வலிமையுடயதாக, பெருமையுடயதாக திகழவேண்டும் என்று ஜல்லிக்கட்டை வளர்க்கிறவன் நினைக்கிறான்.
இல்லையென்றால், கேரளாவுக்கு அடிமாடுகளுக்கு செல்வதுபோல் இந்த ஜல்லிக்கட்டு காளைகளும் செல்லவேண்டிய அபாயம் உருவாகும். இந்த விளையாட்டில் மாடுகளால் மனிதன் சாகிறான் என்று கூறினால், அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், ஆள் சாகாத விளையாட்டு ஒன்று இங்கு இருக்கிறதா? என்று சொல்லுங்கள். விபத்து இல்லாத வாழ்வு உண்டா? மாடு பிடித்து பிழைத்தவனும் உண்டு, கல் தடுக்கி கீழே விழுந்து செத்தவனும் உண்டு.
சமீபத்தில் குத்துச்சண்டை பயிற்சி பெற்ற மாணவி திடீர் நெஞ்சுவலியால் இறந்துவிட்டாள். அப்படியிருக்கையில், உலக குத்துச் சண்டைப் போட்டியை நிறுத்திவிடலாமா? கிரிக்கெட் பந்து பட்டு வீழ்ந்தவர் இல்லையா? நீச்சல் போட்டியில் செத்தவர் இல்லையா? அப்படிப்பட்ட போட்டிகளை நிறுத்திவிடலா? என்று கேள்வி எழுப்பினார்.
பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா நடித்த படம் ‘கவுதமிபுத்ரா சதகர்னி’. இது சரித்திர கதையை பின்னணியாக கொண்டு மிக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. இது பாலகிருஷ்ணாவுக்கு 100-வது படம் ஆகும்.
அவருடன் ஸ்ரேயா, ஹேமமாலினி போன்ற பிரபல நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். நேற்று முன்தினம் இந்தப் படம் ஆந்திரா- தெலுங்கானா மாநிலங்களில் ரிலீஸ் ஆனது.
ஐதராபாத்தில் உள்ள இந்தோ-அமெரிக்கன் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புற்று நோயாளிகளுக்கு உதவுவதற்காக படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத் தியேட்டரில் திரையிடப்பட்டது. இதற்காக ரூ.500, ரூ.2000 என டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. பாலகிருஷ்ணா ரசிகர் ஒருவர் ஒரு டிக்கெட்டை ரூ.1 லட்சத்து 100 கொடுத்து வாங்கினார்.
அந்த ரசிகர் பெயர் கோபிசந்த் ஜின்னா முரி (27). எம்.பி.ஏ. பட்டதாரி. குண்டூர் மாவட்டம் நர்சராபேட் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அங்கு சிறிய அளவில் ஓட்டல் நடத்தி வருகிறார். நடிகர் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகரான இவர் பாலகிருஷ்ணாவின் 100-வது படம் வெளியாவதையொட்டி அவரது கவனத்தை ஈர்க்க முடிவு செய்தார்.
இதையடுத்து சிறப்பு காட்சி பார்க்க வந்தார். காட்சி ஏற்பாட்டாளர்களை சந்தித்து டிக்கெட் கட்டணமாக ரூ.1 லட்சத்து 100-க்கான காசோலையை வழங்கினார். காசோலையை பெற்றுக்கொண்ட ஏற்பாட்டாளர்கள் ரசிகரின் ஆர்வத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
இந்த ஆஸ்பத்தியின் டிரஸ்டிகளில் ஒருவராக பாலகிருஷ்ணா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் இந்த படம் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. திரையில் பாலகிருஷ்ணா தோன்றிய போது, “ஜெய் பாலையா, ஜெய் பாலையா, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்” என்று கோஷம் எழுப்பினார்கள்.
ஜல்லிக்கட்டை நடத்தியே தீர்வது என்பதில் அரசியல் பிரமுகர்கள், சினிமா கலைஞர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் நடந்தது.
இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடி, நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, நடிகர் ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கிரண்பேடி, “ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. எனவே சுப்ரீம் கோர்ட்டு தடை செய்தது சரிதான்” என்றார்.
இதற்கு பதில் அளித்த ஆர்.ஜே. பாலாஜி,” நான் குஜராத் சென்றிருந்தேன். அங்கு ஒட்டகங்கள் மீது கடுமையான சுமைகள், மூட்டைகள் ஏற்றப்படுகின்றன. அது சித்ரவதை இல்லையா? என்று கேள்வி தொடுத்தார். அதற்கு கிரண்பேடி, “ கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும்” என்றார்.
உடனே குறுக்கிட்ட ஆர்.ஜே.பாலாஜி, “சரி... நாங்கள் தீர்ப்பை மதிக்கிறோம். தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு மாநிலம் இந்த உத்தரவை ஏற்க மறுக்கிறது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்” என்றார்.
கிரண்பேடி பதில் சொல்ல முடியாமல் கீழே பார்க்க, ஆர்.ஜே.பாலாஜி தொடர்ந்தார். “உங்கள் காலில் நீங்கள் அணிந்திருக்கும் செருப்பு தோல் எதில் இருந்து வந்தது. மாட்டை அறுத்து அதன் தோலை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை முதலில் தடைசெய்யுங்கள்... அது சித்ரவதை இல்லையா? என்றார்.
ஆர்.ஜே. பாலாஜியின் நியாயமான கேள்வியால் கிறங்கிப்போன கிரண்பேடி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசிக்க தொடங்கினார்.
சபாஷ் பாலாஜி.








