என் மலர்
கபாலி படத்தின் மூலம் பிரபலமான தன்ஷிகா தற்போது ஒரு படத்தில் விலை மாதுவாக நடிக்கவிருக்கிறாராம். அந்த படம் குறித்த தகவல்களை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எத்தனையோ வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் ஒருசில கதாபாத்திரங்களில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். அப்படி நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களில் ஒன்றுதான் விலைமாது வேடம்.
ஆனாலும் ஒருசில நடிகைகள் துணிச்சலாக இந்த வேடத்தில் நடித்து தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இந்த கதாபாத்திரத்தை நடிகை ஸ்ரீபிரியா, சரண்யா பொன்வண்ணன், சினேகா, அனுஷ்கா, சங்கீதா ஆகியோர் துணிச்சலாக எடுத்து நடித்து தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது தன்ஷிகாவும் களமிறங்கியிருக்கிறார். இவர் சினிமாவில் இல்லாமல் குறும்படம் ஒன்றில் விலைமாதுவாக நடித்திருக்கிறார். 25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த குறும்படத்திற்கு ‘சினம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ஆவணப்பட இயக்குனரான பெங்காலி நடிகை பிடிட்டா பேக்கும் தன்ஷிகாவுடன் இணைந்து விலை மாதுவாக நடித்துள்ளார்.
இந்த குறும்படத்தை லண்டனில் வசிக்கும் நேசன் திருநேசன் தயாரிப்பில் ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கியிருக்கிறார். இதற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த குறும்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, மேற்கு வங்காளத்தில் வாழும் ஒரு விலை மாதுவை சந்திக்கிறார் ஒரு ஆவணப்பட இயக்குனர். அந்த பெண் அந்த தொழிலில் தள்ளப்பட்ட காரணத்தை அறிந்துக்கொள்ளும் இயக்குனர் இறுதியில் யாரால் அவள் இந்த நிலைக்குள்ளானாள் என்பதை கண்டு அதிர்ச்சியடைகிறாள்.
கதைப்படி இருவரும் பெண்ணை கடவுளாக வணங்கும் மதத்தை சார்ந்தவர்கள். அண்டை மாநிலத்திலிருந்து வந்த பெண் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டாள், ஒரு பெண் சமுகத்தில் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகளை விளக்கும் குறும்படம்தான் ‘சினம்’ என்றார்.

மறைந்த அம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாடல் பாடிய வர்ஷன் - அஸ்மின் கூட்டணியில் விவசாயிகளுக்கான கண்ணீரை வரவழைக்கும் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த பாடல் குறித்த செய்தியையும், பாடலையும் கீழே பார்க்கலாம்
'வானே இடிந்ததம்மா' என்ற அம்மா இரங்கல் பாடலின் ஊடாக உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த ஈழத்து கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் மற்றும் இசையமைப்பாளர் வர்ஷன் ஆகியோர் மீண்டும் இணைந்து உலகத்தமிழர்கள் பொங்கலை மகிழ்வோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மரணவலியில் வாழ்வாதாரத்தை இழந்து வாடிக்கொண்டிருக்கும் உழவர்களின் உயிர்க்குரலாய் 'போங்கடா நாங்க பொங்கலடா' என்ற வலிமிகு பாடலை வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் 'புறம்போக்கு' திரைப்படத்தினூடாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இசையமைப்பாளர் வர்ஷன் இசையமைத்து இந்தப் பாடலை பாடியுள்ளார். இந்தப்பாடலை எழுதிய கவிஞர் அஸ்மின் விஜய் ஆண்டனியின் 'நான்' திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பேயில்லை' என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
இந்த பாடல் குறித்து அஸ்மின் கூறும்போது, 'உழவர்களுக்கு சமர்ப்பணம் செய்து தமிழ் சினிமா கலைஞர்களால் வெளியிடப்படும் முதல் கவன ஈர்ப்பு பாடல் இதுவாகும். இம்முறை பொங்கல் வாழ்த்துக்கள், 'ஹேப்பி பொங்கல்' போன்ற வார்த்தைகளில் உண்மையில்லை என்பதே உண்மை.
நாற்காலியில் அமர்ந்து மாத சம்பளத்தோடு பொங்கலுக்கான ஊக்கத்தொகையையும் பெறுபவர்களுக்கு வேண்டுமானால் இந்த ஆண்டு பொங்கல் மகிழ்வினை கொடுக்கலாம். ஆனால் நாற்றங்காலில் உழன்றபடி, வறண்ட பூமியையும், பொய்த்துப்போன வானத்தையும், வாடிய பயிரையும் கண்டு வாடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இந்தப் பொங்கல் மகிழ்வினை கொடுக்கவில்லை, மாறாக மரண பயத்தை கொடுத்துள்ளது.
குறுகிய காலத்தில் 100க்கும் அதிகமான விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளார்கள். இது எதனையும் கருத்தில் கொள்ளாது உலகம் வேறு ஒரு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது பற்றிய கவனத்தை உலகுக்கும், உலகத் தமிழர்களுக்கும் உணர்த்தும்விதமாக இந்த பாடலை அமைத்துள்ளோம். இந்தப்பாடலினூடாக இளையதலைமுறையினரும் கற்றவர்களும் உணர்வுபெற்று உழவர்களின் நலனுக்கா குரல்கொடுக்க ஓரணியில் திரளவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த பாடல் இதோ உங்களுக்காக....

கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த தியேட்டர் உரிமையாளர்கள் முதல்-மந்திரியின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
கேரள மாநிலத்தில் தியேட்டரில் வசூலாகும் வருமானத்தை பங்கீட்டு கொள்வது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாநிலத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அங்கு புதுப்படங்கள் வெளியாகாமல் முடங்கின.
இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் “கேரள அரசு இந்த பிரச்சினையை தீர்க்க சரியான நிலைப்பாட்டை எடுத்து வரும்போது தன்னிச்சையாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சரியல்ல. முதலில் வேலைநிறுத்தம் முடிவுக்கு வர வேண்டும்” என கூறி இருந்தார்.
முதல்-மந்திரியின் வேண்டுகோளை தொடர்ந்து ஒரு மாத கால வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி கூட்டமைப்பின் தலைவர் பஷீர் கூறுகையில் “இந்த பிரச்சினையை தீர்க்க முதல்-மந்திரி உறுதி அளித்துள்ளதால் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம்” என்றார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மனைவியின் அடிக்கு பயந்து வீடு போக மறுத்துவிட்டாரா என்கிற செய்தி உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்..
உல்லாசத்தில் உச்சம் பெற்றவர் நாகர்ஜுனா. அதனால் அவர் விரைவிலேயே எமலோகம் செல்ல வேண்டியதாயிற்று. அங்கு போன பிறகும் இவரது சரச விளையாட்டு நின்றபாடில்லை. எமதர்மராஜா பலவகையிலும் துன்புறுத்த சொல்லி எமலோக பெண்களை இவரிடம் அனுப்பி வைத்தார். நாகர்ஜுனாவோ அந்த பெண்களை மயக்கி ஜாலியாக இருந்தார். இது எமதர்மராஜனுக்கு தொல்லையாகிவிட்டது.
இந்த நிலையில் பூலோகத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த மகனும், மருமகளும் விவகாரத்து செய்துகொள்ளப் போவதாக தாயார் ரம்யா கிருஷ்ணனிடம் கூறுகிறார்கள். இதனால் மனம் வெதும்பிய அவர் தனி அறையில் போய் தனது கணவர் நாகர்ஜுனாவை சத்தம் போட்டு கூப்பிட்டார். இந்த சத்தம் எமலோக பெண்களுடன் கிலுகிலுப்பில் இருந்த நாகர்ஜுனாவுக்கு கேட்கவில்லை. ஆனால், எமதர்மனுக்கு கேட்டது. இதை வைத்து இவரை எப்படியாவது எமலோகத்தில் இருந்து விரட்டி விட்டால் போதும் என்று இருந்த எமனுக்கு உன் மனைவி உன்னை கூப்பிடுகிறாள் என்று கூறினார்.
அதைக் கேட்ட நாகர்ஜுனா பதறிப்போய், “அய்யா, நான் போகமாட்டேன். போனால் அவள் என்னை அடித்து, துவைத்து, பிழிந்து விடுவாள்’ என்று அடம்பிடித்தார். எமராஜனுக்கு இது பெரிய தொல்லையாகிவிட்டது. குழப்பத்தில் குழம்பி தவிக்க தொடங்கினார் எமன். இப்படி ஒரு காட்சி தேவி பரணிகா வழங்கும் ஓம்கார பிலிம்ஸின் ‘சோக்காலி மைனர்’ படத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தில் நாகர்ஜுனா இரு வேடங்களில் நடிக்க ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, லாவண்யா திரிபாதி, பிரம்மானந்தம், நாசர், ராமராஜீவ், தளபதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘சோக்காலி மைனர்’ என்ற பெயரில் தெலுங்கில் திரைக்கு வந்த மிகப்பெரிய வெற்றிப்படம் இது. இப்படத்தை கல்யாண கிருஷ்ண குரசாலா இயக்கியுள்ளார்.
கௌபாய் எம்.நிரஞ்சன் குமார் யாதவ் தயாரித்துள்ளார். சுகுமார் கணேஷின் பாடலுக்கு அனுப்ரூபன்சும், ஜான் பீட்டரும் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பி.எஸ்.வினோத்தும், ஆர்.சித்தார்த்தும் அமைத்துள்ளனர். மைக்கேல் யாகப்பன் வசனம் எழுதியுள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று நடிகர் சங்கம் வற்புறுத்தி உள்ளது. இது தொடர்பான செய்தியை கீழே விரிவாக பார்க்கலாம்.
தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழியினருக்கும் ஒவ்வொரு கலாசார அடையாளம் இருக்கிறது. இதையெல்லாம் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையாக நம்புகிறது. அந்த வகையில் சிந்துவெளி நாகரிக கல்வெட்டில் இருந்து இன்றுவரை ஏறுதழுவுதல் என்கிற ஜல்லிக்கட்டு தமிழர்களின் தொன்மை அடையாளமாய் இருந்து வருகிறது.
சட்டத்தின் முன் ஜல்லிக்கட்டு பற்றி வேறு பார்வை இருக்கிறது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இதை சட்டத்திற்கு புரியவைத்து நம்மொழி சார்ந்த கலாசாரங்களை வாழவைப்பது அவர்களுடைய கடமையாகிறது. கடவுள், மதம், வாழ்கை, பொருளாதாரம், கலாசாரம், அரசியல் இப்படி எல்லாவற்றுக்கும் தன் தனிப்பட்ட கருத்தை பதிவு செய்ய நம் அனைவருக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் தனது கருத்தை பதிவு செய்த சில நடிகர் நடிகையிடம், படப்பிடிப்பில் சிலர் எல்லை மீறி அவமரியாதை செய்தது வருந்தத்தக்கது. இந்த நேரத்தில் கமல்ஹாசன் தனது வலைபக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. அதில் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்பவர்களை எல்லை மீறாமல் விமர்சிக்க வேண்டியதும், அதுவும் பெண்ணாக இருந்தால் கொச்சைப்படுத்தாமல் பதில் விமர்சனம் செய்வதும் கூட தமிழர் மரபு தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழர்களின் மரபு சார்ந்தது ஏறுதழுவல். அவர்களின் உணர்வுகளையும், உள் எழுச்சிகளையும் புரிந்துகொண்டு அது எல்லை மீறுவதற்கு முன் மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியேனும், இந்த வருடம் ஏறுதழுவுதலை நடத்தி கொடுக்க வேண்டும் என நாங்கள் வேண்டுகிறோம். இதுவே தமிழக மக்களுக்கு தரும் பொங்கல் பரிசாக இருக்கும் என்றும் நம்புகிறோம். அதற்காக காத்திருக்கிறோம்.”
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மான்போல துள்ளிக் குதித்து நடனம் ஆடுவதில் புகழ் பெற்றவர், ஈ.வி.சரோஜா.
மான்போல துள்ளிக் குதித்து நடனம் ஆடுவதில் புகழ் பெற்றவர், ஈ.வி.சரோஜா. இவரது சொந்த ஊர் திருவாரூரை அடுத்த எண்கண். பெற்றோர்: வேணுபிள்ளை - ஜானகி. சரோஜாவுக்கு ஒரு அண்ணனும், 2 தம்பிகளும் உண்டு. தனது ஏழாவது வயதிலேயே தந்தையை இழந்தார், சரோஜா.
சிறு வயதில் இருந்தே இவருக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் அவருக்கு முறைப்படி நடனப்பயிற்சி அளிக்க தாயார் முடிவு
செய்தார்.இந்தக் காலக்கட்டத்தில், நடனக் கலையில் பெரிய மேதையாகத் திகழ்ந்தவர், வழுவூர் ராமையாப்பிள்ளை. குமாரி கமலா உள்பட பலருக்கு இவர்தான் குரு. அவர் திருவாரூருக்கு வந்திருந்த சமயம், அவரிடம் ஈ.வி.சரோஜாவை தாயார் அழைத்துச் சென்றார். "இவருக்கு நடனம் என்றால் உயிர். நீங்கள்தான் குருவாக இருந்து, நடனம் கற்றுத்தர வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
ஈ.வி.சரோஜாவின் தோற்றமும், துறுதுறுப்பும், அழகிய கண்களும் ராமையாப்பிள்ளையை கவர்ந்தன. `இந்தப்பெண் நடனத்தை முறையாகக் கற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் சிறந்த நடன நட்சத்திரமாகப் பிரகாசிப்பாள்'' என்று கருதினார். எனவே நடனப் பயிற்சிக்கு, சென்னைக்கு அழைத்துச் சென்றார்.
வழுவூர் ராமையாப் பிள்ளையிடம், பரதநாட்டியத்தை கற்றுக்கொண்ட ஈ.வி.சரோஜா, வெகு விரைவிலேயே நடனத்தில் முழுத் தேர்ச்சி
பெற்றார்.1951-ல் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில், நீதிபதி ஏ.எஸ்.பி.அய்யர் முன்னிலையில் ஈ.வி.சரோஜாவின் நடன அரங்கேற்றம் நடந்தது. அப்போது அவருக்கு வயது 15.
சிறந்த முறையில் நடனம் ஆடி, அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் ஈ.வி.சரோஜா பெற்றார்.
இந்த சமயத்தில், அசோகா பிக்சர்சார் "என் தங்கை'' என்ற படத்தை தயாரித்து வந்தார்கள். எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகன். அவருக்கு ஜோடி கிடையாது! படம் முழுவதும் சட்டை - வேட்டியுடன் வருவார்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு தங்கை மீனாவாக நடிக்க, ஒரு பெண்ணை பட அதிபர்கள் தேடிக்கொண்டு இருந்தார்கள். நடன நிகழ்ச்சியில் ஈ.வி.சரோஜாவை அவர்கள் பார்த்தார்கள். "மீனாவாக நடிக்க இந்தப் பெண்தான் பொருத்தமானவர்'' என்று தீர்மானித்து, அவரை ஒப்பந்தம் செய்தார்கள்.
"என் தங்கை''யில் ஈ.வி.சரோஜாவின் வேடம் மிக மிக முக்கியமானது. அவரைச் சுற்றிதான் கதை பின்னப்பட்டிருந்தது.
இந்தப் படத்தில், ஈ.வி.சரோஜா பார்வையற்ற பெண்ணாக நடித்தார். ஏழையான எம்.ஜி.ஆர். தன் தங்கை மீது உயிரையே வைத்திருப்பார். நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க படாதபாடு படுவார். "குருட்டுப் பெண்ணுக்கு கல்யாணமா?'' என்று எல்லோரும் கேலியாகப் பேசி மறுத்து விடுவார்கள்.
கடைசியில் ஒரு மாப்பிள்ளை அமையும்போது, சரோஜா இறந்து விடுவார். சோகத்தின் உச்சிக்கே சென்றுவிடும் எம்.ஜி.ஆர்., தங்கையின் உடலை தோளில் போட்டுக்கொண்டு கடற்கரையில் நடந்து செல்வார்; பிறகு விறுவிறுவென்று கடலுக்குள் இறங்கி விடுவார்.
உள்ளத்தைத் தொடும் உருக்கமான காட்சிகள் நிறைந்த இந்தப்படம் வெற்றி பெற்றது.
ஒரே படத்தின் மூலம் புகழ் பெற்றார், ஈ.வி.சரோஜா.
ஏ.பி.நாகராஜனின் "பெண்ணரசி''யிலும் நடித்தார்.
பின்னர், டி.ஆர்.ராமண்ணா டைரக்ஷனில் எம்.ஜி.ஆர், டி.ஆர்.ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி ஆகியோர் நடித்த "குலேபகாவலி'' படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார்.
"சொக்கா போட்ட நவாப்பு... செல்லாதுங்கள் ஜவாப்பு'' என்று சந்திரபாபுவுடன் சேர்ந்து பாடி ஆடிய நடனம், அவரை நாடறிந்த நட்சத்திரம் ஆக்கியது.
இதன்பின், "நீதிபதி'', "நல்லதங்காள்'' முதலிய படங்களில் சந்திரபாபுவுடன் இணைந்து நடித்தார்.
எம்.ஜி.ஆர்., பானுமதி, பத்மினி நடித்த "மதுரை வீரன்'' படத்தில் ஈ.வி.சரோஜாவும் இடம் பெற்றார்.
"வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க'' என்ற பாடலுக்கு ஈ.வி.சரோஜா ஆடிய நடனம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
"மதுரை வீரன்'', 35 தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சில ஊர்களில் 25 வாரங்கள் ஓடியது.

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல. தமிழ் சமுதாய உணர்வுக்கு என்றுமே துணை நிற்பேன் என்று நடிகை திரிஷா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பீட்டா அமைப்பு இருந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் இந்த அமைப்புதான் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா.
இவர் பீட்டா அமைப்பில் உள்ளார். தற்போது இவர் கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. அப்போது திரிஷா அதில் கலந்து கொள்ள சென்றார். அப்போது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் திரிஷாவிற்கு எதிராக கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தினார்கள். மேலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத வகையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனால் திரிஷா கோவை படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். பின்னர் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு எதிராக கடும் விமர்சனத்தை வைத்தார். இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கமல் திரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தால். என்றாலும் திரிஷாவிற்கு எதிராக போர்க்குரல் அதிக அளவில் ஒலித்தது.
இந்நிலையில் நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல என்று திரிஷா விளம் கொடுத்துள்ளார். மேலும், ‘‘நான் பிறப்பால் தமிழச்சி என்பதில் பெருமையடைகிறேன். தமிழ் சமுதாயத்தையும், பண்பாட்டையும் பெரிதும் மதிப்பவள் நான். தமிழ் சமுதாய உணர்வுக்கு என்றுமே துணை நிற்பேன்’’ என்று கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டை ஆதரித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர்களில் முன்வரிசையில் இருந்துவரும் நடிகர் கமலஹாசன், ஜல்லிக்கட்டு தடையால் இறைச்சிக்காக கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படும் காளை மாட்டின் மனநிலையில் இருந்து எழுதிய கவிதை..,
சென்னை:
ஜல்லிக்கட்டை ஆதரித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர்களில் முன்வரிசையில் இருந்துவரும் நடிகர் கமலஹாசன், ஜல்லிக்கட்டு தடையால் இறைச்சிக்காக கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படும் காளை மாட்டின் மனநிலையில் இருந்து எழுதிய கவிதை மீண்டும் உங்கள் பார்வைக்கு.,

"யாரும் மனம் வருந்துவதை காணச் சகிக்காத மனித நேயப் பண்பாளர் ரஜினிகாந்த்'' என்று விஜயகுமாரி கூறினார். சென்ற தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த விஜயகுமாரி, இன்றைய இளைய தலைமுறையினருக்கு அம்மாவாக நடிக்கிறார்.
"யாரும் மனம் வருந்துவதை காணச் சகிக்காத மனித நேயப் பண்பாளர் ரஜினிகாந்த்'' என்று விஜயகுமாரி கூறினார்.
சென்ற தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த விஜயகுமாரி, இன்றைய இளைய தலைமுறையினருக்கு அம்மாவாக நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
"நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது பூம்புகார் புரொடக்ஷன் தயாரித்த "பிள்ளையோ பிள்ளை'' என்ற படத்தில் மு.க.முத்துவிற்கு அம்மாவாக நடிக்கும்படி என்னைக் கேட்டார்கள். நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தபோது, அம்மா வேடத்தில் எப்படி நடிப்பது என்று யோசித்தேன்.
கலைஞர் அவர்கள், கண்ணகி வேடத்தை எனக்கு கொடுத்து என்னை உயர்த்தியவர். அவருக்கு நான் இந்தப் படத்தில் நடிக்காவிட்டால் நன்றி இல்லாதவள் ஆகிவிடுவேன் என்று கருதி, கலைஞருக்காக அந்தப் படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.
மு.க.முத்துவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் லட்சுமி நடித்தார்.
படம் முடிந்து பிரத்தியேக காட்சி போட்டார்கள். எல்லோரும் வந்து வாழ்த்தினார்கள். எம்.ஜி.ஆர். அவர்கள் பேசும்போது, "எந்த பாத்திரம் கொடுத்தாலும் அந்த பாத்திரமாகவே மாறி அந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து, சுத்தமாக தமிழ் பேசி உணர்ச்சி பூர்வமாக நடிக்கும் ஒரே தமிழ் நடிகை என் தங்கை விஜயகுமாரிதான்'' என்று வாழ்த்தினார்.
இதை, என் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக நான் கருதினேன்.
"மெட்டி'' என்ற படம் மகேந்திரன் டைரக்ஷனில் உருவாகியது. இதில் ராஜேஷ், சரத்பாபு, ராதிகா, வடிவுக்கரசி ஆகியோருடன் நான் நடித்தேன்.
இந்தப் படத்தில் எனக்கு முதல் ஷாட் எடுக்கும்போது டைரக்டர் மகேந்திரனே வந்து "கிளாப்'' அடித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. `உதவி டைரக்டர்கள் தானே கிளாப் அடிப்பார்கள். இவர் ஏன் கிளாப் அடிக்கிறார்'' என்று ஒரு நிமிடம் யோசித்தேன். அப்போது மகேந்திரன், "அம்மா! உங்களுக்கு "காஞ்சித்தலைவன்'' படத்தில் நான்தான் கிளாப் அடித்தேன். அப்போது நான் அந்தப் படத்தின் டைரக்டர் காசிலிங்கத்திடம் உதவி டைரக்டராக இருந்தேன். இப்போது நான் டைரக்டு செய்யும் படத்தில் நீங்கள் நடிப்பதால், நானே கிளாப் அடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை எனக்கு!'' என்றார்.
இந்தப் படத்தில் எல்லோரும் மேக்கப் இல்லாமலேயே நடித்திருந்தோம். பாடல்கள் அத்தனையும் மனதில் நிற்கும் அளவிற்கு இருந்தன. ஆனால், படம் சுமாராகத்தான் ஓடியது.
சத்யா மூவிஸ் தயாரித்த படம் "தங்க மகன்.'' இந்தப்படம் ஏ.ஜெகந்நாதன் டைரக்ஷனில் உருவாகியது. ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம், தேங்காய் சீனிவாசன், ஜெய்சங்கர், வி.கே.ராமசாமி, ஆர்.எஸ்.மனோகருடன் நான் நடித்தேன்.
இதில் நான் ரஜினிகாந்திற்கு அம்மாவாக நடித்தேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்த் தனியாக அமர்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பார். சில சமயம் எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார்.
ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். "நீங்கள் நடித்த படங்களை பார்த்து இருக்கிறேன். அந்தப் படங்களில் யார் கதாநாயகனாக நடித்தாலும், கதை உங்களை மையமாக வைத்துத்தான் இருக்கும்'' என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவு கவனம் செலுத்தி பார்த்திருக்கிறார் என்று வியந்தேன்.
மற்றொரு நாள் என்னிடம், "நீங்கள் தியானம் செய்யுங்கள்'' என்று சொன்னார். நான் சிரித்தேன்.
"ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்றார். "எனக்கு தலைக்கு மேல் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறதே!'' என்றேன்.
அதைக்கேட்டு அவர் சிரித்தார். நான் அவரைப்பார்த்து, "நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்றேன். அதற்கு அவர், "தலை இருக்கும் வரை பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதையெல்லாம் மறந்து தியானம் செய்யுங்கள்'' என்றார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரம் செங்கல் சூளை ஒன்றில் நடந்தது. அப்போது ஒருநாள் நான், ரஜினி மற்றும் உடன் நடித்தவர்களிடம், "நாளைக்கு நான் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரச்சொல்கிறேன். எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்'' என்றேன்.
"சரி'' என்று எல்லோரும் சொன்னார்கள்.
அடுத்த நாள் ரஜினிகாந்திற்கு 11 மணிக்கே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. "எனக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டது. நேற்று நீங்கள் கூறியபோது, நான் இன்று உங்களுடன் சாப்பிடுவதாகச் சொன்னேன். சாரி! இன்னொரு நாள் சாப்பிடுகிறேன்'' என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
அன்று மத்தியானம் என் வீட்டிலிருந்து சாப்பாடு 2 மணிக்குத்தான் வந்தது. நாங்கள் எல்லோரும் சாப்பிட சென்றோம். அங்கு ரஜினிகாந்த் தரையில் படுத்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் சென்ற சத்தத்தை கேட்டு அவர் எழுந்து விட்டார். "சாரி! சாரி! நான் நன்றாக தூங்கிவிட்டேன் என்று சொல்லிவிட்டு, "சாப்பிடலாமா?'' என்று கேட்டார்.
சற்று நேரத்துக்கு முன்தான், `இன்று சாப்பிட இயலவில்லை. இன்னொரு நாள் சாப்பிடுகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்றவர், இங்கேயே இருந்திருக்கிறார்; சாப்பிடலாமா என்றும் கேட்கிறாரே' என்று எண்ணியபடி வியப்புடன் அவரை நோக்கினேன்.
"என்ன பார்க்கிறீர்கள்! நான் சாப்பிடாமல் சென்றால் உங்கள் மனசு கஷ்டப்படும். அதனால்தான் இங்கேயே இருந்து விட்டேன்'' என்றார்.
நான் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு எல்லோருக்கும் நானே பரிமாறினேன். அப்போது நான் நினைத்தேன். `ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட மற்றவர்கள் மனம் கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறாரே. இவருடைய உள்ளம் எவ்வளவு உயர்ந்தது!' என்று எண்ணினேன்.
ஏவி.எம். தயாரித்த "சூரக்கோட்டை சிங்கக்குட்டி'' என்ற படத்தில் பிரபுவுக்கு அம்மாவாக நடித்தேன். நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த நான், அவருடைய வாரிசுக்கு அம்மாவாக நடிப்பதில் அளவு கடந்த ஆனந்தம்.
அதேபோல், முத்துராமனுடன் ஜோடியாக நடித்த நான், அவருடைய வாரிசு கார்த்திக்கின் அம்மாவாக "வணக்கம் வாத்தியாரே'' படத்தில் நடித்ததும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் "வசந்தகாலம்'', "பூவே உனக்காக'', ராஜ்கிரணின் "அரண்மனைக்கிளி'', "இரணியன்'' - இதெல்லாம் நான் அம்மா வேடத்தில் நடித்த படங்கள்.
நான் நடித்த "காதல் சடுகுடு'' என்ற படம்தான் நான் கடைசியாக நடிக்கும் படம் என்று கருதி, படப்பிடிப்பு முடிந்தவுடன் என்னுடன் நடித்தவர்களுக்கெல்லாம் என் நினைவாக பரிசுப் பொருட்களைக் கொடுத்தேன்.
மல்லியம் ராஜகோபால் தயாரித்த முதல் படத்தில் நான்தான் கதாநாயகி. ஸ்ரீதர் டைரக்ட் செய்த முதல் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருத்தி நான். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன் முதலில் டைரக்ட் செய்த படத்திலும் நான்தான் கதாநாயகி.
பி.மாதவன் முதலில் டைரக்ட் செய்த படத்திலும் நான்தான் கதாநாயகி. ஏ.சி.திருலோகசந்தரின் முதல் படத்திலும் நான்தான் கதாநாயகி. ஆரூர்தாஸ் டைரக்ட் செய்த முதல் படத்திலும் நான்தான் கதாநாயகி.
அந்தக்காலத்தில் திரை உலகில் புகழ் பெற்றவர்களின் முதல் படங்களில் எல்லாம் நான் கதாநாயகியாக நடித்ததை இன்னும் நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
இந்த பாக்கியம் எனக்கு மட்டும்தான் கிடைத்தது என்று எண்ணும்போது, பெருமையாக இருக்கிறது.
இதேபோல திரை உலகில் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி, 1968-ம் ஆண்டு மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள ரசிகர்கள் சிறந்த நடிகையாக என்னை தேர்ந்தெடுத்ததுதான். சிறந்த நடிகராக எம்.ஜி.ஆரை தேர்ந்தெடுத்திருந்தார்கள். இதுவும் என் திரை உலக வாழ்க்கையில் மறக்க முடியாதது.
சிறு வயதிலேயே என் தாயை இழந்து விட்டேன். அதன் பிறகு இன்று வரை எனக்கு உண்மையான அன்பு எங்கும் எனக்கு கிடைக்கவில்லை. நான் முதன் முதலாக காதலித்த சினிமா மட்டும்தான் எனக்கு ஆதரவாக-துணையாக என்னுடன் வாழ்ந்து வருகிறது.
ஆம்; எனக்கு இப்போதெல்லாம் காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை டெலிவிஷனில் வரும் சினிமாக்கள்தான் துணையாக இருக்கின்றன.
சில சமயங்களில் இனம் புரியாத ஏதோ ஒரு வேதனை என்னை வாட்டும். அந்த நேரம் நான் நேராக காரை எடுத்துக்கொண்டு மெரீனா கடற்கரைக்கு சென்று காரில் இருந்தபடியே அங்கு இருக்கும் கண்ணகி சிலையை பார்த்து சந்தோஷப்பட்டு கையெடுத்து கும்பிட்டு விட்டு நிறைந்த மனதோடு திரும்புவேன்.
இன்றும் என்னை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் நினைவு கொள்வது கண்ணகி வேடத்தில் நான் நடித்ததைத்தான். அந்த அளவிற்கு இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள். இந்த உலகம் இருக்கும் வரை, எத்தனை தலைமுறைகள் வந்தாலும் கண்ணகி பெயருடன் சேர்த்து, என்னையும் ரசிகர்கள் நினைவு கொள்வார்கள். இது எனக்கு கிடைத்த பெரும் பேறு.
எனக்கு ரவிக்குமார் என்று ஒரு மகன். அவனுக்கு இரண்டு குழந்தைகள். பேத்தி அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்கிறாள். பேரன் சென்னையில் படிக்கிறான்.''
இவ்வாறு கூறினார், விஜயகுமாரி.

திரிஷாவிற்கு எதிராக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு கோர்ட்டில் தடை வாங்கிய விலங்குகள் நல வாரிய அமைப்பான 'பீட்டா'வில் நடிகை திரிஷா முக்கிய அங்கத்தினராக இருந்து பிராணிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
சென்னையில் தெருவோரம் திரியும் நாய்களை பிடித்து குளிப்பாட்டி வளர்த்து தத்து கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார். பிராணிகளுக்காக தனியாக பாதுகாப்பு இல்லம் அமைக்கவும் திட்டமிட்டு உள்ளார். பிராணிகள் மீது திரிஷா காட்டும் இந்த தீவிரத்தை பார்த்துத்தான் பீட்டா அமைப்பினர் அவரை அணுகி அதன் தூதுவராக ஆக்கி விலங்குகள் பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தினர். 'பீட்டா'வில் சேர்ந்த பிறகு திரிஷா இன்னும் வேகமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில்தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா செயல்படுவது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பீட்டாவுக்கு எதிராக இளைஞர்களும், மாணவர்களும் போராடுவதுடன் அந்த அமைப்பை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள்.
ஆனால் 'பீட்டா' அமைப்பில் இருக்கும் திரிஷா இந்த பிரச்சினையில் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. 'பீட்டா' அமைப்பில் இருந்து வெளியேறும்படி அவரை வற்புறுத்துவதற்கும் பதில் அளிக்கவில்லை. மேலும் கர்ஜனை படப்பிடிப்பு கோவை அருகே நடைபெற்றது. இந்த படபிடிப்பிற்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திரிஷா படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சென்னை திரும்பினார். பின்னர் தனது கண்டனத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை ஷ்ருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார்.
மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை சுருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார்.
எம்.டி.வி. தயாரித்துள்ள ’ராயல் ஸ்டாக் பேரல் சீசன் சிக்ஸ்’ இசை நிகழ்ச்சிக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்தப் பாடலை பாடிய அனுபவம் தொடர்பாக சுருதி ஹாசன் கூறியதாவது:-
ஐஷ்வர்யா ராய் பச்சனுக்காக ரேகா பரத்வாஜ் முன்னர் பாடியிருந்த பாடலை தற்போது நான் பாடியுள்ளதை மிகவும் சிறப்புக்குரிய அனுபவமாக கருதுகிறேன். ஒரு பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் சில எல்லைகளை கடந்து புதிதாக ஏதாவது சாதிப்பதை நான் மகிழ்ச்சியுடன் விரும்புகிறேன்,
குறிப்பாக, நான் உயரத்தில் வைத்து பார்க்கும் ரஹ்மான் சாரிடம் இருந்து இந்த வாய்ப்பு வந்தபோது, இதை தவிர்க்கவே முடியாது என்பதை உணர்ந்து, மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன்.
உயிர்ப்புடன் உள்ள பெரிய இசைக்குழுவுடன் ஒருங்கிணைந்து இந்தப் பாடலை பாடிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானதும், திருப்தியானதுமாக அமைந்திருந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சுருதி ஹாசன் பாடிய இந்தப் பாடல் இன்றிரவு 8 மணிக்கு எம்.டி.வி. இசை சேனலில் ஒளிபரப்பாகிறது.

“நான் எதற்கும் பயப்பட மாட்டேன். குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஆண் தேவை” என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.
இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ராவின் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் குவித்து வருகின்றன. இதனால் 34 வயதான பிறகும் மார்க்கெட்டில் இருக்கிறார். தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
“நான் சொந்த காலில் சுதந்திரமாக இருக்கிறேன். எதற்கும் பயப்பட மாட்டேன். ஆண்கள் உள்பட யாராலும் என்னை தோற்கடிக்க முடியாது. குழந்தை பெற்று எடுப்பதை தவிர்த்து, வேறு எதற்கும் எனக்கு ஒரு ஆண் துணை தேவை இல்லை. எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.
அதற்காக ஒரு ஆணை நிச்சயம் தேர்ந்தெடுப்பேன். ஆனால் அந்த ஒருவர் கூட என்னைப் போலவே யோசிப்பவராகவும் என்னை உண்மையாக விரும்புபவராகவும் இருக்க வேண்டும். நம்பிக்கையானவராகவும் இருக்க வேண்டும். எனக்கு அவர் துரோகம் செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன். அந்த வாழ்க்கைத் துணைவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்.
திருமண வாழ்க்கையில் நம்பிக்கை என்பது முக்கியமானது. நம்பிக்கை துரோகத்தை எந்தவிதத்திலும் ஏற்க முடியாது. சினிமாவில் வெற்றி-தோல்வி பற்றி நான் கவலைப்படுவது இல்லை. தோல்வியை பார்த்து துவண்டு போக மாட்டேன். எனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடிக்கிறேன். பலனை பற்றி எந்த எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்வது இல்லை.
அதிர்ஷ்டவசமாக என்னை சுற்றிலும் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு மற்றவர்கள் தரும் உற்சாகம் என்பது பெரிய பலம். எனது நண்பர்கள் எப்போதும் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது எனக்கு எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.”
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.