என் மலர்
ரஜினியுடன் சந்திப்பு நடத்தவில்லை என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
ரஜினி தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து நலம் விசாரிப்பது, ஆலோசிப்பது வழக்கம். ரஜினிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும், தொடர் படப்பிடிப்பில் இருந்ததாலும் இந்த சந்திப்பு கடந்த சில வருடங்களாக இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரஜினி தனது மாநில மற்றும் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் உரையாடியபடி ஒரு புகைப்படமும் வெளிவந்தது. இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விசாரித்ததில், அப்படி ஒரு சந்திப்பு நடைபெறவில்லை என்று கூறியுள்ளனர்.
ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளதாக வெளிவந்த புகைப்படமும், பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது என்றும் கூறுகின்றனர். எனவே, நேற்று முன்தினம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததாக வெளிவந்த செய்தி வெறும் வதந்தியே என்றும் கூறுகின்றனர்.

சுந்தர்.சி இயக்கும் `சங்கமித்ரா' படத்தில் ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ள ரஜினி பட ஹரோயின்கள் யார் என்பதை கீழே பார்க்கலாம்.
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா'. வரலாற்றுக் கதையில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.
இப்படத்திற்காக ஆர்யா, ஜெயம் ரவி தங்களது உடல்எடையை அதிகரித்து வருகின்றனர். அதே நேரத்தில் குதிரை சவாரி, வாள் சண்டை உள்ளிட்டவற்றிக்கும் பயிற்சி எடுத்து வருகின்றனர். கடம்பன் படத்திற்காக 90 கிலோ வரை உடல் எடையை கூட்டியிருந்த ஆர்யா `சங்கமித்ரா'வுக்காக உடல் எடையை மேலும் அதிகரித்து வருகிறார்.
இப்படத்தில், ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். ரஜினிக்கு ஜோடியாக `கோச்சடையான்' படத்தில் நடித்த தீபிகா படுகோனே, `லிங்கா' படத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹாவை `சங்கமித்ரா' படத்தில் ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் எடுக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2017 பிற்பாதியில் தொடங்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். `பஜ்ரோ மஸ்தானி' பட புகழ் சுதீப் சட்டர்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
ஜெயம் ரவி - அரவிந்த்சாமி - ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘போகன்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜெயம் ரவி அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதே ஊரில், ராஜ பரம்பரையில் இருந்து வந்த வாரிசான அரவிந்த்சாமி, வாழும் வரை ஜாலியாகவும், ஆடம்பரமாகவும் வாழவேண்டும் என்ற குறிக்கோளோடு சொர்க்கலோக வாழ்க்கை வாழ்கிறார்.
இந்நிலையில், ஒருநாள் அரவிந்த்சாமி ஒரு நகைக்கடையின் முன் தனது காரை நிறுத்துகிறார். காரில் இருந்தபடியே நகைக்கடையின் உள்ளே இருக்கும் பையனை உற்றுப் பார்க்கிறார். அப்போது, அந்த பையன் நகைக்கடைக்குள் இருந்து பணத்தை கொண்டு வந்து இவரது காரில் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டு, உடனே மயங்கி விழுகிறான்.
இதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமண தேதி நெருங்கும் சமயத்தில், வழக்கம்போல், அரவிந்த்சாமி தனது காரை நரேன் வேலை பார்க்கும் வங்கியின் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவரை பார்க்கிறார். அப்போது, நரேன் வங்கி பணத்தை எடுத்துக் கொண்டுவந்து அரவிந்த் சாமியின் காரில் வைத்துவிட்டு மயங்கிப் போகிறார்.
ஆஸ்பத்திரியில் கண்விழித்துப் பார்க்கும்போது வங்கியில் இருந்த பணம் கொள்ளை போனதாக அறிந்து அதிர்ச்சியடைகிறார் நரேன். வங்கிப் பணம் கொள்ளை தொடர்பாக நரேனை போலீஸ் கைது செய்கிறது. இதையடுத்து, ஜெயம் ரவியை திருமணம் செய்ய ஹன்சிகா வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை பகைத்துக்கொண்டு ஜெயம் ரவியின் வீட்டுக்கே வருகிறார் ஹன்சிகா.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது அப்பா நிரபராதி என்பதை நிரூபிக்க ஜெயம் ரவி களத்தில் இறங்குகிறார். அதன்படி, இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அரவிந்த்சாமியை கண்டுபிடித்து விசாரிக்கிறார். விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, அரவிந்த் சாமி கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி, ஜெயம் ரவியின் உடம்பில் புகுந்து கொள்கிறார்.
அப்போதிலிருந்து, அரவிந்த் சாமி ஜெயம் ரவியாகவும், ஜெயம் ரவி, அரவிந்த் சாமியாகவும் மாறிவிடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயம் ரவி உருவத்தில் இருக்கும் அரவிந்த்சாமி ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார். அரவிந்த் சாமியின் குணாதிசயத்துடன் திரியும் ஜெயம் ரவியின் உடல், அதன்பிறகு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது. இதையெல்லாம், ஜெயம் ரவியின் குணாதிசயத்துடன் ஜெயிலுக்குள் இருக்கும் அரவிந்த்சாமி எப்படி முறியடித்தார்? என்பதே மீதிக்கதை.
ஜெயம் ரவிக்கு இந்த படத்தில் இரண்டு மாறுபட்ட நடிப்பினை வெளிப்படுத்தக்கூடிய அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் இவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் தனக்கு ஏற்ற தீனி கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், தனது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ரொமான்ஸ் காட்சிகளிலும் வழக்கம்போல் தனது அழகான நடிப்பால் கவர்கிறார்.
அரவிந்த்சாமி இன்னொரு ஹீரோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்தில் இவர் அறிமுகம் ஆகும் காட்சியையே வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், அழகிகளுடன் ஆடி, பாடும் காட்சிகளில் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். படத்தில் இவருடைய கதாபாத்திரமும் வலுவானதுதான். அதை புரிந்துகொண்டு தனக்குண்டான ஒவ்வொரு காட்சியிலும் தனக்கே உரித்தான ஸ்டைலான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஹன்சிகா வழக்கம்போல கதாநாயகியாக இல்லாமல், இப்படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தின் இறுதியில், கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்துள்ள காட்சி அனைவரையும் கவரும். நாசர், ஆடுகளம் நரேன், விடிவி கணேஷ், வருண், நாகேந்திர பிரசாத் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் மற்றவர்களின் உடம்பிற்குள் சென்று வருவதுபோன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தங்கள் கதாபாத்திரம் மட்டுமில்லாது, அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் போலவும் நடித்தே ஆகவேண்டும். அதை, அனைவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் லட்சுமண் ஏற்கெனவே ரோமியோ ஜுலியட் என்ற ஹிட் படத்தை கொடுத்தவர். இந்த முறை ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் 80-களுக்கு பிறகு இப்படியொரு படம் வெளிவந்திருக்கிறது. இரண்டாம் படத்திலேயே அகலக்கால் வைத்து விஷப் பரீட்சையில் இறங்கியிருக்கிறார். அது அவருக்கு கைகொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
இரு கதாபாத்திரங்களின் தன்மையை ஒரு நடிகரால் கொண்டு வருவது மாதிரியான கதையை உருவாக்கி, அதற்கேற்றவாறு பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். மேலும், விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கி படத்திற்கு முழு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில்தான் நடுவில் கொஞ்சம் படம் டல்லடிக்கிறது. இருப்பினும், இறுதியில் அனைவருக்கும் திருப்தி கொடுக்கும்படி முடித்திருப்பது சிறப்பு. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்ற அறிவிப்போடு முடித்திருப்பது ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கிய இமான், இப்படத்தில் கொஞ்சம் ஏமாற்றியிருக்கிறார். படத்தில் பாடல்கள் பெரிதளவில் ரசிக்க முடியாவிட்டாலும், பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்தின் வேகத்திற்கு இவரது பின்னணி இசையும் உதவியிருக்கிறது எனலாம். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா கண்கள் புகுந்து விளையாடியிருக்கிறது.
மொத்தத்தில் ‘போகன்’ வித்தைக்காரன்.

அஜித்தின் `விவேகம்' படம் விஜய் பிறந்தாநாளான ஜுன் 22-ஆம் தேதி ரிலீசாகுமா, அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா உள்ளிட்ட தகவலை அறிய முழு செய்தியை கீழே பார்க்கலாம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 57-வது படமாக உருவாகிவரும் 'விவேகம்' படத்தின் தலைப்பு, போஸ்டர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் இன்று வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், ‘விவேகம்’ படத்தின் டீசரை தமிழ் புத்தாண்டில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து ரம்ஜானை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. பொதுவாக அஜித் தான் நடிக்கும் படங்களை வியாழக்கிழமை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல், சிறுத்தை சிவாவும் தனது 3 படங்களையும் வியாழன் அன்றே ரிலீஸ் செய்வதை செண்டிமெண்டாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை வருவதால் படத்தை ஒருநாள் முன்னதாக வியாழன் அன்று ஜுன் 22-ம் தேதியே ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஜுன் 22-ஆம் தேதி, சினிமாவில் அஜித்தின் சக போட்டியாளராக கருதப்படும் விஜய்யின் பிறந்தநாள் ஆகும். ஆகவே, அன்றைய தேதியில் படம் ரிலீஸ் ஆனால் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பெரிய கொண்டாட்ட நாளாக அது மாறும் என்பது மட்டும் உண்மை.
இருப்பினும், இன்னும் ‘விவேகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அதுவரை அனைவரும் காத்திருக்கத்தான் வேண்டும். இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
எந்த தலைமையையும் ஏற்கவில்லை என்றும், கருணாநிதியை சந்தித்து முடிவை தெரிவிப்பேன் என்று பரபரப்பாக பேசி ராதாரவியின் முழு பேட்டியை கீழே பார்க்கலாம்.
தி.மு.கவில் முக்கிய பிரமுகராக இருந்த ராதா ரவி, கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து விலகினார்.
பின்னர் அன்றைய அ.தி.மு.க செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.கவில் சேர்ந்தார். தேர்தலின் போது அ.தி.மு.கவுக்கு தீவிர பிரசாரம் செய்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். தற்போது அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் அனைவரும் சந்தித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை ராதாரவி அவரது முடிவை தெரிவிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் இன்று பழனியில் நடந்த நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமணவிழாவில் ராதாரவி கலந்து கொண்டார் . மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-
தற்போது எந்த தலைமையும் எனக்கு இல்லை. விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்.
எனது சித்தப்பாவாக கருதும் தி.மு.க தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற்று குணமடைவார். அவரை சந்தித்து எனது முடிவை தெரிவிப்பேன்.
இவ்வாறு ராதாரவி கூறினார்.
அப்போது அங்கு இருந்த தி.மு.க நிர்வாகிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
ராதாரவியின் இந்த பேச்சின் மூலம் விரைவில் தி.மு.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோகன்லால், விஷால் இணைந்து நடிக்கும் படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘புலிமுருகன்’ படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்து மலையாள திரையுலகில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்நிலையில், மலையாள உலகில் பிரபல இயக்குனராக வலம் உன்னிகிருஷ்ணன் இயக்கும் புதிய படம் ஒன்றில் மோகன்லால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விஷாலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஹன்சிகா கைவசம் தமிழில் எந்தவொரு படங்களும் இல்லாத நிலையில், மலையாளத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என்று கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’, சல்மான் கான் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்-மகன் பாச போராட்டக் கதையாக உருவாகி வரும் ‘செவிலி’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
எம்.கே.எம்.பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘செவிலி’. இது தாயின் பாசத்திற்காக ஏங்கும் மகனுக்கும்-மகனின் பாசத்தை புரிந்து கொள்ளாத தாய்க்கும் நடக்கும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கிறது.
இந்த படத்தில் அரவிந்த் ரோஷன், கீர்த்தி ரெட்டி, நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘மைனா’ பூவிதா, நெல்லை சிவா, ஷகிலா, சிட்டிசன் மணி உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
“தாய் பூவிதாவின் அரவணைப்பும் பாசமும் கிடைக்காமல் ஏங்கி தவிக்கும் மகனாக அர்விந்த் ரோஷன் நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளார். மகனின் பாசத்தை உணராத தாய் நிலையை அறிந்து காதலிக்க தொடங்கும் கீர்த்தி ரெட்டி- தனது காதலுக்கு தடையாக காதலனே மாறியதை எண்ணி வேத னைப்படும் காட்சிகளில் அனைவரையும் உருக வைத்து இருக்கிறார்.
கேரளாவில் நாயகி கீர்த்திரெட்டி குளிக்கும் காட்சியில் நடிக்கும் போது மலைப்பாம்பிடமிருந்து உயிர் தப்பினார். படத்தில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும்” என்றார்.
இசை- வி.எம்.ஜீவன், பின்னணி இசை-சங்கர் ரங்கராஜன், பாடல்கள்- ப்ரியா, பிரபாகர், சண்டை- திரில்லர் எஸ்.ஆர்.முருகன், நடனம்-எஸ்ரா எடிசன், எடிட்டிங்- சுப்பிரமணி, தயாரிப்பு- கே.பீர்முகமது, எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம்- ஆர்.ஏ. ஆனந்த்.
ஹீரோ அவதாரம் எடுத்துவிட்ட சந்தானம் தற்போது மீண்டும் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
எம்.ராஜேஷ் தன்னுடைய இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் இருந்து, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படம் வரைக்கும் சந்தானம் இல்லாமல் படமே எடுத்தது கிடையாது. அந்தளவுக்கு ராஜேஷின் படங்களில் சந்தானத்தின் காமெடி முக்கிய இடம்பெறும்.
ஆனால், ஒருகட்டத்தில் சந்தானம் ஹீரோவான பிறகு காமெடி வேடத்தில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். அதன்பிறகு, ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் சந்தானம் இல்லாமேலேயே உருவாகி வெளிவந்தது. படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
இந்நிலையில், ஹீரோவான சந்தானத்தை தன்னுடைய படத்திலும் ஹீரோவாகவே கொண்டு வந்து இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க ராஜேஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சந்தானத்தை சந்தித்து ராஜேஷ் அவருக்காக உருவாக்கப்பட்ட கதையை சொன்னாராம். கதை பிடித்துப்போய் இதில் நடிக்க சந்தானமும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இவர்கள் இணையும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சந்தானம் நடிப்பில் தற்போது ‘சர்வர் சுந்தரம்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘சக்க போடு போடு ராஜா’ ‘ஓடி ஓடி உழைக்கணும்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் முடிந்தபிறகு ராஜேஷ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய் - ப்ரணிதா இணைந்து நடித்துள்ள `எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தின் விமர்சனத்தை கீழே படிப்போம்.
சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் ஜெய், அதே கம்பெனியில் கூடவே பணிபுரியும் பிரணிதா மீது காதல் கொள்கிறார். அவளிடம் தனது காதலை சொல்வதற்கு முன்பே இரண்டு பேரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் கசமுசாவும் நடந்துவிடுகிறது. அதன்பின்னர், தனது காதலை அவளிடம் சொல்லி, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இந்நிலையில், ஒருநாள் பார்ட்டியில் வேறொருவருடன் பிரணிதா நெருக்கமாக இருப்பதை பார்க்கும் ஜெய், மனமுடைந்து அவளை பிரிந்து செல்கிறார். மிகவும் மன உளைச்சலில் இருக்கும் ஜெய், இதற்காக மனோதத்துவ நிபுணரான தம்பி ராமையாவிடம் செல்கிறார். ஆனால், தம்பி ராமையாவின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஜெய், ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார்.
தன்னுடைய தற்கொலை முடிவை நண்பர்களான காளி வெங்கட், கருணாகரன், நவீன் ஆகியோர்களிடம் சொல்கிறார் ஜெய். ஆனால், அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் ஜெய் தற்கொலை செய்துகொள்ளப்போவது உண்மைதான் என்பதை அறிந்து அவரை காப்பாற்ற மூவரும் புறப்படுகிறார்கள். அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
தற்கொலை முடிவுக்கு போன ஜெய், டிவியில் சந்தானத்தின் பேச்சை கேட்டு மனம் திருந்தி தற்கொலை முடிவை கைவிடுகிறார். அதன்பின்னர், தன்னை காப்பாற்ற புறப்பட்ட நண்பர்கள் பிரச்சினையில் மாட்டிக் கொண்டதை அறிந்து கொள்கிறார். அவர்களை ஜெய் எப்படி மீட்டார்? ப்ரணிதாவுடன் மீண்டும் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
ஜெய் வழக்கம்போல் தனது அலட்டல் இல்லாத நடிப்பில் ரசிக்க வைக்கிறார். தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு வரும் இவர், அதை செய்யாமல் சினிமா பாடல்களை கேட்டு அலப்பறை பண்ணும் இடங்களில் எல்லாம் கிளாப்ஸ் வாங்குகிறார். அதேபோல், தனக்கு உதவி செய்ய முன்வந்த தம்பிராமையாவை நடுஇரவில் இவர் செய்யும் டார்ச்சர்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன.
நாயகி ப்ரணிதாவுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. இருப்பினும், ஓரளவுக்கு கிளாமரில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். நண்பர்களாக வரும் காளி வெங்கட், கருணாகரன், நவீன் ஆகியோர் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார்கள். இருப்பினும், ஆங்காங்கே சில தொய்வுகள் இருக்கிறது.
மனோதத்துவ நிபுணராக வரும் தம்பி ராமையா தன் பங்குக்கு காமெடியில் கலக்கியிருக்கிறார். கருப்பு ராக்காக வரும் மொட்டை ராஜேந்திரன், டிவி தொகுப்பாளராக வரும் படவா கோபி ஆகியோரும் படத்தின் காமெடிக்கு உதவியிருக்கிறார்கள். சந்தானம் ஒரேயொரு காட்சியில் வந்தாலும், படத்தில் காதலர்களுக்கு நல்ல கருத்தை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், ஓவர் காமெடி படத்தை முழுமையாக ரசிக்க முடியாமல் செய்துவிட்டது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர், அதை எல்லை மீறாமல் கொடுத்திருந்தால் படத்தை கண்டிப்பாக ரசித்திருக்கலாம்.
சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் எல்லாம் கேட்பதற்கு அழகாக இருக்கிறது. அதை படமாக்கியவிதமும் அருமை. ‘கண்ணாடி பூவுக்கு வண்ணமில்லை’ என்ற பாடலை படமாக்கிய விதம், அந்த பாடலை வெகுவாக ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். மகேஷ் முத்துச்சுவாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா தனித்துவம் காண்பித்திருக்கிறது.
மொத்தத்தில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ காமெடி கலாட்டா.
விஜய் - அட்லி இணைந்துள்ள புதிய படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
விஜய் - அட்லி இணையும் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா, வடிவேல், சத்யன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும், இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படத்தொகுப்புக்கு ரூபன், கலைக்கு முத்துராஜ், சண்டைப்பயிற்சிக்கு அனல் அரசு, திரைக்கதைக்கு விஜயேந்திர பிரசாத் என பிரபல டெக்னீசியன்களும் கைகோர்த்துள்ள இப்படத்தில் தற்போது பிரபல ஆடை வடிவமைப்பாளரும் இணைந்துள்ளார்.
சமந்தா, காஜல் அகர்வால், ஹன்சிகா உள்ளிட்ட தமிழ் சினிமா நடிகைகளுக்கும், பாலிவுட்டில் பிரபலமான நடிகர், நடிகைகளுக்கும் ஆடை வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்ட நீரஜா கோனா என்பவர்தான் தற்போது இந்த படத்திற்கு ஆடை வடிவமைக்கும் பணிகளுக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
நீரஜா கோனா, நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழியுமாவார். விஜய் நடிக்கும் படத்துக்கு இவர் ஆடை வடிவமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் சார்பாக சிம்பு முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வருக்கு சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
ஜல்லிக்கட்டு ஆதராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான இளைஞர்களில் நடிகர் சிம்புவும் ஒருவர். அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்களுக்கு பக்கதுணையாக இருந்து, அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். சமீபத்தில்கூட ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையில் முடிந்தது குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்தார்.
அதேநேரத்தில், தமிழக அரசுக்கு மூன்று கோரிக்கைகளையும் முன் வைத்திருந்தார். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் விதத்தில் சட்டசபையில் தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தில் ஒரு புரட்சியாக உருவெடுத்து வெற்றியை ஈட்டியது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு தமிழன் என்ற முறையில் இந்தப் புரட்சியில் மக்களில் ஒருவனாக பங்கெடுத்ததில் பெருமிதம் கொள்கிறேன்.
அதேநேரத்தில், அறவழிப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் வன்முறை வெடித்தது துரதிருஷ்டமானது. அது தொடர்வாக தொடர்ந்து என் கவலையைப் பகிர்ந்து வந்ததுடன், இதுதொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிக மக்கள் சார்பாக மூன்று முக்கியக் கோரிக்கைகைளை முன் வைத்தேன்.
மீனவர்கள், மாணவர்கள் என பலரை கைது செய்துள்ளீர்கள். அத்தனை பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். வன்முறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைத்தே ஆகவேண்டும். இவ்வளவு நாள் அவர்கள்பட்ட கஷ்டத்துக்கு அரசாங்கமே ஒருநாளைத் தேர்வு செய்து நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு கிடைத்த வெற்றி. இன்றைக்கு சந்தோஷமாக ஜல்லிக்கட்டு நடத்தலாம் என சொல்லவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கைகள்.
இந்த நிலையில் சென்னை நடுக்குப்பத்தில் ரூ.10 லட்சத்தில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படும் என்றும் கைது செய்யப்பட்ட 14 மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களோடு கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வோம் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதனை வரவேற்பதுடன் தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்ததற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதியும் முதல்வருடன் ஆலோசித்த பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
மேலும், ஜல்லிக்கட்டு தொடர்வாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதும். நம் தமிழர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகப் பார்க்கிறேன்.
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் நடிக்கும 57-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பும் வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்..
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 57-வது படமாக உருவாகிவரும் படத்துக்கு சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு தலைப்புகளை வைத்து ரசிகர்கள் யூகங்களை கிளப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தலைப்பும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்ததால், இந்த படத்தின் தலைப்பின் முதல் எழுத்தும் ‘V’ என்ற ஆங்கில எழுத்து முதலில் வரும்படிதான் தலைப்பு இருக்கும் என்று ஆணித்தரமாக கூறப்பட்டது.
அப்படி கூறப்பட்ட தலைப்புகளில் ‘விவேகம்’ என்ற தலைப்பையே படக்குழுவினர் இறுதியாக முடிவு செய்து வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 2-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிடப்போவதாக அறிவித்தனர். அதன்படி, இன்று அதிகாலை 12 மணியளவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் எல்லோரும் நினைத்ததுபோல் ‘விவேகம்’ என்றே படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். மேலும், அஜித் தனது முரட்டு உடம்பை காட்டியபடி, மேல் சட்டை அணியாமல் ராணுவ பேண்ட் அணிந்து காட்சியளிக்கிறார்.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் இந்த போஸ்டருக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.