என் மலர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளை விமர்சித்து பேட்டி அளித்ததாக, நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் சங்கம் குற்றம் சாட்டியது.
இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து விஷால் வருத்தம் தெரிவித்ததால் அவர் மீதான நடவடிக்கை பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விஷால் வருத்தம் தெரிவித்து மனுதாக்கல் செய்தார். ஆனால், மீண்டும் விஷால் விமர்சனம் செய்வதாகவும், அவரது வருத்தத்தை தயாரிப்பாளர் சங்க செயற்குழு ஏற்கவில்லை எனவும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் விஷால் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை சென்னை ஐகோர்ட்டுதலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், எம்.சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்தது. அப்போது கருத்து கூறிய நீதிபதிகள், “பேச்சுரிமை அனைவருக்கும் உள்ளது. பேசுபவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமா? எனவே, விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் கோர்ட்டே முடிவு எடுக்கும்” என்று அறிவித்தனர்.
கோர்ட்டின் உத்தரவை ஏற்று, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு பற்றி கோர்ட்டுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விஷயம் பிரம்மாண்ட இயக்குனரின் காதுகளுக்கு செல்ல, துரையம்மா நடிகையை வரவழைத்து, படம் வெளியாகி, ஓடி முடிக்கிற வரைக்கும் அந்த அமைப்பில் இருந்து விலகி இருக்குமாறு கட்டளையிட்டுள்ளாராம். நடிகையும் வேறு வழியில்லாமல் தற்போது அந்த அமைப்பில் இருந்து விலகுவதற்கான வேலைகளில் களமிறங்கியுள்ளாராம்.
இப்படத்தில் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும், சூரி, தம்பி ராமையா, கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசரை நாளை வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இப்படத்தை தயாரிப்பது குறித்து அட்லி கூறும்போது, நான் தயாரிக்கும் முதல் படமான 'சங்கிலி புங்கிலி கதவ தொற', முழுக்க முழுக்க குடும்பங்களை கவரக்கூடிய திரைப்படமாக இருக்கும். என்னை இயக்குநராக அறிமுகப்படுத்திய நிறுவனத்திற்கு ஒரு படத்தை தயாரிக்கிறேன் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கின்றது.
அதே சமயத்தில் தமிழ் திரையுலகிற்கு மேலும் ஒரு தரமான இயக்குநரை அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். நிச்சயமாக தரமான கதையம்சங்கள் நிறைந்த திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநராக ஹைக் விளங்குவார் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன் என்றார்.
இந்நிலையில், அடுத்ததாக இவர் நடித்துள்ள ‘எமன்’ படமும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடிக்கிறார். வருகிற பிப்ரவரி 24-ந் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.
‘எமன்’ படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் விஜய் ஆண்டனி, தன்னுடைய அடுத்த படத்துக்கு மறைந்த திமுக தலைவர் ‘அண்ணாத்துரை’யின் பெயரை தலைப்பாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ராதிகா சரத்குமார் தனது பேனரில் தயாரிக்கிறார். சீனு வாசன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
நடிகைகள் நயன்தாரா, ஸ்ரேயா, நமீதா, தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் விமான நிலையங்கள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ரசிகர்களின் தொல்லைகளில் சிக்கி இருக்கிறார்கள். இந்தி நடிகை தீபிகா படுகோனே ஒரு விழாவுக்கு வந்தபோது ரசிகர்கள் பிடியில் சிக்கி மீட்கப்பட்டார். கத்ரினா கயீப் கொல்கத்தா விழா நிகழ்ச்சியிலும் சோனம்கபூர் சினிமா தியேட்டரிலும் சோனாக்சி சின்ஹா கூட்டத்திலும் ரசிகர்களால் கசப்பான அனுபவங்களை சந்தித்துள்ளனர்.
இதற்காக பல நடிகைகள் தனியார் பாதுகாவலர்களை வேலைக்கு வைத்துள்ளனர். பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது இவர்களையும் அழைத்து செல்கிறார்கள். அதையும் தாண்டி ரசிகர்கள் அத்துமீறல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பல நடிகைகள் அவற்றை வெளியே சொல்வது இல்லை. சிலர் போலீசில் புகார் அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கின்றனர்.
நடிகை இலியானாவும் செக்ஸ் தொல்லையை சந்தித்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“பெண்களை பலர் பைத்தியக்காரத்தனமாகவும் கேவலமாகவும் பார்க்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். நான் சமூக வலைத்தளங்களில் ஈவ் டீசிங் உள்ளிட்ட செக்ஸ் தொல்லைகளை சந்தித்து நேரடியாகவே பாதிக்கப்பட்டேன். அடிக்கடி மோசமான பல தகவல்கள் எனது போனில் வந்தன. ஆபாசமாக பேசி குரல் பதிவுகளையும் அனுப்பினார்கள். இது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த தகவல் மற்றும் குரல்பதிவுகளை அழித்து விட்டேன். ஒரு பெண்ணாக இதை வெளியில் சொல்வதற்கு சங்கடமாக இருக்கிறது.
இக்கட்டான நேரத்தில் எனது பெற்றோர்கள் ஆறுதலாக இருந்தார்கள். அவர்களால் இந்த செக்ஸ் தொல்லைகளில் இருந்து மீள மனதை உறுதியாக்கிக் கொண்டேன். பெண்களை யாரும் கேவலமாக பார்க்க கூடாது.”
இவ்வாறு இலியானா கூறினார்.
நடிகைகளுக்கு 30 வயது ஆகிவிட்டால், உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டு போகிற இடமெல்லாம் நச்சரிக்க தொடங்கி விடுகிறார்கள். திருமணம் செய்து கொள்ளும் நடிகைகளுக்கு அதோடு சினிமாவும் முடிந்து விடுகிறது என்றும் பேசுகிறார்கள். இதனால்தான் சினிமாவையும் நடிப்பையும் நேசிக்கும் கதாநாயகிகள் திருமணம் என்ற பேச்சை எடுப்பதற்கே பயப்படுகிறார்கள்.
என்னிடமும் நிறைய பேர் திருமணத்துக்கு தயாராகி விட்டீர்களா? மாப்பிள்ளை முடிவாகி விட்டதா என்று விசாரித்தபடி இருக்கிறார்கள். திருமணத்துக்கும் நடிப்புக்கும் முடிச்சு போட்டு பேசுவது எனக்கு சுத்தமாக பிடிக்காது. 25 வயது ஆனதும் திருமணம் செய்து கொண்டு வேலைக்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் திருமணம் சாதாரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நடிகைகளுக்கு மட்டும் என்ன குறைச்சல்? திருமணம் ஆன நடிகைகள் மார்க்கெட் இல்லாமல் போய் விடுவார்கள் என்று வேறு விதமாக பேசுவது ஏன்?
நடிகைகளுக்கும் மற்ற பெண்களைப்போல் நடிப்பு ஒரு தொழில்தான். வேலைக்கு செல்வது மாதிரிதான் படப்பிடிப்புகளுக்கு வருகிறார்கள். திருமணம் ஆன பெண்கள் வேலைக்கு செல்லும்போது நடிகைகளும் திருமணம் செய்து கொண்டு நடிக்க வருவதில் என்ன தவறு இருக்கிறது. திருமணம் ஆன நடிகைகள் மார்க்கெட் இழந்து விடுவார்கள் என்று பேசுவதையும் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குவதையும் பார்க்கும் போது எனக்கு கோபமாக வருகிறது.
25 வயது ஆனதும் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் நடிகைகளும் தற்போது இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தை பெற்ற நடிகைகளும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம். எனது திருமணத்துக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. கதாநாயகியாக நான் ரொம்ப தூரம் போக வேண்டி இருக்கிறது. அதோடு மனதுக்கு பிடித்த பையனும் கிடைக்க வேண்டும்.”
இவ்வாறு காஜல் அகவர்வால் கூறினார்.
டைரக்டர் ஏ.பி.நாகராஜன் டைரக்ஷனில் ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த "கந்தன் கருணை'' படத்தில், வீரபாகு வாக சிவாஜி நடித்தார். முருகன் வேடத்தில் நடிக்க ஒரு புதுமுக இளைஞர் தேவைப்பட்டார். இந்த வேடத்துக்கு நடிகர் சிவகுமாரும், விஜயகுமாரும் முயற்சி
மேற்கொண்டார்கள்.அந்த அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-
"புராணப் படங்கள் என்றால் அது ஏ.பி.நாகராஜன் படம் என்றிருந்த நேரம் அது. என்னுடன் நாடகத்தில் நடித்த ஈ.ஆர்.சகாதேவன், டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் நண்பர். கந்தன் கருணை படத்தில் முருகனாக நடிக்க ஒரு புதுமுகம் தேடுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, எனக்காக சிபாரிசு செய்யும்படி ஈ.ஆர்.சகாதேவனிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் எனக்காக ஏ.பி.நாகராஜனிடம் பேசினார். "மேக்கப் டெஸ்ட் எடுப்போம். சாரதா ஸ்டூடியோவுக்கு நாளை மாலை வரச்சொல்லுங்க'' என்று ஏ.பி.நாகராஜன் சொல்லிவிட்டார்.
நான் சாரதா ஸ்டூடியோவுக்கு போனபோது, முருகன் வேடத்தில் நடிக்க "மேக்கப் டெஸ்ட்''டுக்கென இன்னொரு இளைஞரும் வந்திருந்தார். அவர் பெயர் சிவகுமார் என்றும் சிவாஜி சார் சிபாரிசில் அவர் வந்திருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன்.
சிவகுமாருக்கு முதலில் மேக்கப் போட்டார்கள். சிவாஜி சாரின் ஆஸ்தான மேக்கப் மேன் ரெங்கசாமிதான் சிவகுமாருக்கு `முருகன்' மேக்கப் போட்டார். அருகே நடிகர் அசோகன் இருந்தார். மேக்கப் போடுவது பற்றி, அக்கறையுடன் யோசனை சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒரு வழியாக சிவகுமாருக்கு மேக்கப் டெஸ்ட் முடிந்து, நான் அழைக்கப்பட்டேன்.
என் மார்பில் நிறைய முடி இருந்தது. கையில் ஒரு பிளேடை கொடுத்து, எல்லா முடியையும் மழிக்கச் சொன்னார்கள்! சில இடங் களில் பிளேடு பட்டு ரத்தம் வழியத் தொடங்கியது. எல் லாம் முடிந்து ரத்தம் கழுவி மேக்கப்புக்குஉட்கார்ந்தேன்.
மேக்கப் மேன் ரெங்கசாமி, எனக்கு அவசரம் அவசரமாக மேக்கப் போட்டு முடித்தார். "போகலாம்'' என்றார்.
அப்போது ஈ.ஆர்.சகா தேவன் அங்கு வந்தார். `மேக்கப் 'பில் என்னைப் பார்த்தவர் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரிந்தது. "யார் மேக்கப் போட்டது?'' என்று கேட்டார். நான் சொன்னதும் மேக்கப் மேனிடம் "என்ன இப்படி மேக்கப் போட்டு இருக்கிறீங்க?'' என்று கேட்டார். அவரோ, "டைம் ஆகிப் போச்சுங்க'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார்.
என்னையும் சிவகுமாரை யும் கம்பெனி காரில் மேக்கப் கோலத்தில் அழைத்துச் சென்றார்கள். அதுவரை நானும், சிவகுமாரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், காரில் போகும்போது சிவகுமார் என்னிடம், "நீங்க கேரளாவா?'' என்று கேட்டார்.
அவர் என்னை கேரளா என்று கேட்டதில், கொஞ்சம் அதிர்ச்சியாகி விட்டேன். "நான் தமிழ்நாடுதான். தமிழன். சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை'' என்று தமிழனாக என்னை வெளிப்படுத்திய அதே வேகத்தில், "நீங்க எந்த ஊருங்க?'' என்று அவரிடம் கேட்டேன்.
"நான் ஓவியக் கலையில் தேறி, ஓவியராக இருக்கிறேன். சொந்த ஊர் கோவை. அப்பா இல்லை. அம்மா மட்டும் இருக்கிறாங்க. சென்னையில் இப்ப இருக்கிறது ஒரு வாடகை வீட்டில்தான்'' என்றார்.
பதிலுக்கு நான், புரசைவாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.மேன்ஷனில் இருப்பதாக சொன்னேன்.
கம்பெனி வந்ததும் நாங்கள் காரில் இருந்து இறங்கினோம். மேக்கப் டெஸ்ட்டுக்காக நான் சைக்கிளில் வந்த மாதிரி சிவகுமாரும் சைக்கிளில் வந்திருந்தார். அன்றைக்கு தொடங்கிய அறிமுகம், அடுத்தடுத்த சந்திப்பில் எங்களை நண்பர்களாக்கியது. மேக்கப் டெஸ்ட் முடிவு அறிவிக்கப்படும் முன்பே, "முருகன் வேடம் இவருக்கே கிடைக்கட்டும்'' என்று நான் நினைக்கிற அளவுக்கு சிவகுமார் தனது அன்பான நட்பில் என்னைக் கவர்ந்து விட்டிருந்தார்.
அது 1966-ம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்த உறவினர் பிரம்மநாதன் அங்கு நடக்கும் ஒரு விழாவுக்காக அறிஞர் அண்ணாவை அழைத்துச் செல்ல `தேதி' கேட்டு வந்திருந்தார். அப்போது பக்தவச்சலம் முதல்-அமைச்சராக இருந்தார். அண்ணா அரசியலில் வளர்ந்து வந்த நேரம்.
தி.மு.க. அலுவலகம் அப்போது ராஜாஜி ஹாலில் இருந்தது. நாவலர் நெடுஞ்செழியன் மூலமாக அண்ணாவை சந்திக்க என் உறவினர் புறப்பட்டார். அப்போது என்னையும் உடன் அழைத்துச் சென்றார். அண்ணாவை சந்தித்து விட்டு ஆயிரம் விளக்கு வழியாக வந்தபோது, நாவலர் எங்களை கலைஞரிடம் அழைத்துப்போனார். அப்போது முரசொலி அலுவலகம் ஆயிரம் விளக்கில் இருந்தது. நள்ளிரவை நெருங்கி விட்ட 11-30 மணிக்கு கலைஞர் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தேன். என் உறவினரை நாவலர் அறிமுகப்படுத்தியதும், கலைஞரின் பார்வை இப்போது என் மீது இருந்தது. என் உறவினர் அவரிடம் "பையனுக்கு நடிப்பு ஆர்வம். இப்பக்கூட ஏ.பி.நாகராஜன் எடுக்கப்போகிற கந்தன் கருணை படத்தில் முருகன் வேஷத்துக்கு `மேக்கப்' டெஸ்ட் எடுத்திருக்கிறாங்க'' என்று சொல்லிவிட்டார்.
கலைஞர் கொஞ்சமும் தாமதிக்காமல் உடனே ஒரு காரியம் செய்தார். போனில் ஏ.பி.நாகராஜன் வீட்டுக்கு பேசினார். "ஏ.பி.என்! நான் மு.க. பேசுகிறேன். பட்டுக்கோட்டை சிவகுமார் (அப்போது என் பெயரும் சிவகுமார்தான்) நம்ம பையன். பார்த்து பண்ணுங்க'' என்றார். ஏ.பி.நாகராஜன் சொன்ன பதிலில் திருப்தியடைந்தவர், "நிச்சயம் கிடைக்கும்'' என்று சொன்னார். சந்தோஷமாய் அவரிடம்
விடைபெற்றோம்.ஆனால் முருகன் வேடம் கிடைத்தது சிவகுமாருக்குத் தான்.
இதில்கூட பெயர்க்குழப்பம் தான் பிரதானம். சினிமா வுக்காக நான் என் பெயரை `சிவகுமார்' என்று மாற்றிக் கொண்டிருந்தேன். என்னுடன் மேக்கப் டெஸ்ட் போட்டுக் கொண்டவரும் சிவகுமார்தான். இரண்டு சிவகுமாரில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அது "சிவகுமாருக்கு'' கிடைத்த வாய்ப்பே! இந்த வகையில் சிவகுமாருக்கு வாய்ப்பு கொடுக்கச் சொல்லி கலைஞர் போன் செய்தபடி, எங்கள் இருவரில் ஒரு சிவகுமாருக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
மேக்கப் டெஸ்ட் முடிவு எனக்கு தெரியவந்தபோதும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இதுவும் ஒரு காரணம்.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
முருகன் வேடம் கிடைக்காததால், விஜயகுமார் ஊருக்குத் திரும்பினார். விவ சாயம் அல்லது அப்பாவின் ரைஸ்மில் ஏதாவது ஒன்றை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அப்பாவும் "நடிக்க ஆசைப்பட்டே! ஒண்ணு ரெண்டு படத்தில் நடிச்சும் பார்த்திட்டே. சினிமா வை மறந்துட்டு, ஊரோடு இருந்துவிடு'' என்றார்.
ஊருக்கு வந்து அப்படியும் இப்படியுமாக 6 வருடம் ஓடிவிட்டது. இதற்கிடையே 1969-ம் ஆண்டில் முத்துக்கண்ணுவுடன் திருமணமும் நடந்து முடிந்து விட்டது.
சென்னையில் சினிமா வாய்ப்புக்காக முயன்ற நாட்களில் விஜயகுமாருக்கு மு.க.முத்து நண்பராகியிருந்தார். விஜயகுமார் சினிமாவே வேண்டாம் என்று ஊருக்கு வந்திருந்த நேரத்தில் மு.க.முத்து நடித்த "பிள்ளையோ பிள்ளை'' படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
இந்தப் படத்தை பார்த்ததும், தனது நண்பர்களில் ஒருவர் நடிகராகி விட்ட சந்தோஷம் விஜயகுமாருக்கு! அதோடு, `நாமும் சென்னைக்குப் போய், இன்னும் ஒரு தரம் முயன்று பார்த்தால் என்ன?' என்ற எண்ணமும் எழுந்தது. "திருமணமாகிவிட்டதே. இனி ஊரில் இருந்தால்தானே சரியாக இருக்கும்'' என்று மனதின் குறுக்கே ஓடிய கேள்வியை புறந்தள்ளினார். அப்பாவை சந்தித்தவர், "இன்னும் ஒரேயொரு தடவை மட்டும் சென்னைக்கு போய் நடிக்க முயற்சி செய்து பார்க்கட்டுமா?'' என்று கேட்டார்.
அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:
"மகன் இனி ஊரோடு செட்டிலாகி விடுவான். தொழிலில் நமக்கு உறுதுணையாக இருப்பான் என்று அப்பா நம்பினார். என் சினிமா ஆசை என்னை விட்டுப் போய் விட்டதை அறிந்த பிறகே திருமணமும் செய்து வைத்தார். இப்போது என் நண்பர் மு.க.முத்து நடிக்க வந்ததும் எனக்குள் இருந்த சினிமா ஆர்வம் பொங்கியெழுந்து விட்டதை புரிந்து கொண்டார். "ஒரு வருஷம் மட்டும் கடைசியாக முயற்சி செய்து பார்க்கிறேன். 365 நாள் வரையிலும் வாய்ப்பு கிடைக்காமல் போனால், மறுநாள் ஊரில் இருப்பேன். அதன் பிறகு `சினிமா' என்கிற வார்த்தையை கூட உங்களிடம் பேசமாட்டேன் என்றேன்.
அப்பா என்னை கூர்மையாக பார்த்தார். நேராக வீட்டுக்குள் போனவர் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். "நீ சென்னையில் இருக்கிற நாட்களில் பணப்பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது. அதற்காக இதை வைத்துக்கொள். சினிமாவுக்கு கடுமையாக முயற்சி பண்ணு. ஆனால் சொன்னபடி ஒரே வருஷம்தான். சினிமாவில் உன் முயற்சி வெற்றி பெற்றால் உன்னை விடவும் நான் அதிகம் சந்தோஷப்படுவேன்'' என்றபடி என்னை வழியனுப்பி வைத்தார்.''
இவ்வாறு கூறினார், விஜயகுமார்.
இதுகுறித்து சுப்பராம ரெட்டி தெரிவித்ததாவது, சிரஞ்சீவியின் ரீஎன்ட்ரி படமான `கைதி நம்பர் 150' படத்தை பார்த்தேன். அதன் பிறகே மீண்டும் படங்களை தயாரிக்கும் முடிவுக்கு வந்ததாக கூறினார். அதன்பின்னர் சிரஞ்சீவியை வைத்தே புதிய படம் தயாரிக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். சிரஞ்சீவியை வைத்து சிறந்த படத்தை த்ரிவிக்ரமால் மட்டுமே அளிக்க முடியும் என்பதால் த்ரிவிக்ரமுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய அவர் பேச்சுவார்த்தையில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் சிரஞ்சீவி, பவண் கல்யாண் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளதாக கூறினார்.
இப்படத்தை சுப்பராம ரெட்டியுடன் இணைந்து சி அஸ்வின் தத்தும் தயாரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். சிரஞ்சீவியும், பவண் கல்யாணும் இணைவதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 'விவேகம்' படம் மற்றும் அஜித் குறித்த ஸ்வாரஸ்யமான தகவல்களை கீழே பார்க்கலாம்.
1. `வேதாளம்' படத்தின் போது முட்டி மற்றும் தோள்பட்டை காயத்துடன் படப்பிடிப்பை தொடர்ந்த அஜித் வேதாளம் படம் ரிலீசாகும் நேரத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண்டார்.
2. பொதுவாக அறுவைசிகிச்சை செய்வதால் உடல் எடை அதிகரிக்கும். இந்நிலையில், 'விவேகம்' படத்திற்கு தயாரான அஜித் 'விவேகம்' பட போஸ்டரில் உள்ளபடி உடல்கட்டமைப்புக்கு வர 7 மாதங்களாக 5 முதல் 6 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை உடல்எடையை குறைத்துள்ளார்.
3. ஆங்கிலத்தில் V என ஆரம்பிக்கும் அஜித்தின் படத்தலைப்புகளில் 'விவேகம்' படமும் இணைந்துள்ளது. V என தொடங்கும் அஜித்தின் படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக வெளியாக உள்ள 'விவேகம்' படமும் V என்ற எழுத்துடன் தொடங்குவது சிறப்பு. `வான்மதி', `வாலி', `வில்லன்', `வரலாறு', `வீரம்', `வேதாளம்' உள்ளிட்டவை V என்ற தொடக்கத்தை உடைய மற்ற அஜித் படங்களாகும்.
4. அஜித்தின் 'விவேகம்' படப்பிடிப்பு குறித்த படங்களை ஆஸ்திரிய பத்திரிக்கை ஒன்று வெளியிட்டு அஜித்தை, ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வர்ஸ்டர் ஸ்டாலனுடன் ஒப்பிட்டுள்ளது. அதில் காரின்தியா(காரின்தியா என்பது இடத்தின் பெயர்) படப்பிடிப்பில் இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலன் என்று குறிப்பிட்டுள்ளது.
5. போஸ்டரின் பர்ஸ்ட் லுக்கில் 'விவேகம்' படத்தின் பெயர் ஸ்டாப் வாட்ச் எழுத்துருவில் உள்ளது. எனவே இப்படத்தில் நேரத்திற்கு முக்கிய பங்கு இருக்கும் என்று நம்பப்படுகிறது.
6. மேலும் 'விவேகம்' தலைப்பை கூர்ந்து நோக்கினால், அது ஒரு போன் நம்பரை வெளிப்படுத்துவதை கவனிக்கலாம். அதாவது, 'விவேகம்' என்பது, 9500912610 என்ற எண்ணை குறிப்பது போல் காட்டப்பட்டுள்ளது.
7. அஜித்-சிறுத்தை சிவா கூட்டணி மூன்றவது முறையாக 'விவேகம்' படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. `வேதாளம்' படத்திற்கு பின்னர் சிவா-அஜித்-அனிருத்-ரூபன் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளது இங்கே கவனிக்க வேண்டியது.
8. 'விவேகம்' படத்தின் மூலம் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் முதன்முறையாக அஜித்துடன் இணைகின்றனர். முன்னதாக சிவா இயக்கத்தில் `வேதாளம்' படத்தில் ஸ்ருதி ஹாசன் அஜித்துடன் நடித்திருந்தது குறிப்பித்தக்கது.
9. முதற்முறையாக யூசப் என்ற உடற்பயிற்சி இயக்குநரின் பெயர் படத்தின் போஸ்டரில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
10. 2010-ல் வெளியான `எந்திரன்' படத்தில் ஹிட்டான "பூம் பூம் ரோபோ டா" பாடலைப் பாடிய ஹிப் ஹாப் புகழ் யோகி பி 'விவேகம்' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்.
11. `கபாலி' படத்தை வாங்கிய ஜாஸ் சினிமாஸ் 'விவேகம்' படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
12. 'விவேகம்' படத்தில் அஜித் இரு வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு `வாலி', `பில்லா', `வில்லன்', `அட்டகாசம்', `சிட்டிசன்', `அசல்', `வரலாறு'(3 வேடங்கள்) உள்ளிட்ட படங்களில் அஜித் இரு வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
13. அனு வர்தன் 'விவேகம்' படத்திற்கு ஆடை வடிவமைத்து கொடுத்திருக்கிறாராம். இயக்குநர் விஷ்ணு வர்தனின் மனைவியான இவர் முன்னதாக `பில்லா', `ஆரம்பம்' படங்களுக்கும் ஆடை வடிமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் `பில்லா 2', `ஏகன்', `வேதாளம்' உள்ளிட்ட படங்களுக்கும் அனுவே ஆடை வடிவமைத்திருந்தார். மேலும் இந்தியில் ஷாருக்கான் ஹீரோவாகவும், அஜித் வில்லனாகவும் நடித்து வெளியான `அசோகா' படத்திற்கும் அனு வர்தனே ஆடை வடிவமைத்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
14. பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் 'விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதற்கு முன்பாக சூர்யாவுடன் இணைந்து `ரத்த சரித்திரம்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் இந்தி, தெலுங்கில் இரு பாகங்களாக வெளியானது. தமிழில் டப் செய்யப்பட்டது.
15. பல்கேரியாவில் உள்ள நு போயேனா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் 'விவேகம்' என்றாலும், முதல் இந்தியப் படம் என்ற பெயரை ஷாருக்கானின் `தில்வாலே' படம் பெற்றது. மேலும் `தி எக்ஸ்பேன்டபிள்ஸ் 2'(2012), `தி எக்ஸ்பேன்டபிள்ஸ் 3'(2014), `தி லெஜண்ட் ஆப் ஹெர்குலஸ்'(2014) மற்றும் `லண்டன் ஹேஸ் பாலன்' உள்ளிட்ட ஹாலிவுட்டின் பிரபலமான படங்கள் இதே ஸ்டூடியோவில் தான் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
16. அஜித் படங்கள் என்றாலே சண்டைக்காட்சிகள் ரசிக்க வைக்கும் நிலையில் இருக்கும். அதே போல் 'விவேகம்' படத்திலும் சண்டைக்காட்சிகள் வாய்ப்பிளக்கும் படி இருக்குமாம். அதில் ஒரு சண்டைக்காட்சி தண்ணீருக்குள் சண்டைபோடும்படி எடுக்கப்பட்டுள்ளதாம். மற்றொரு முக்கிய காட்சியில் டூப் ஏதும் இல்லாமல் 29 அடி உயரத்தில் இருந்து அஜித் குதிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
17. அஜித் படங்களிலேயே 'விவேகம்' படமே அதிக பொருட்செலவில் சுமார் ரூ.100 கோடியை தாண்டி தயாராகி வருகிறது.
18. ரம்ஜானை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. பொதுவாக அஜித் தான் நடிக்கும் படங்களை வியாழக்கிழமை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல், சிறுத்தை சிவாவும் தனது 3 படங்களையும் வியாழன் அன்றே ரிலீஸ் செய்வதை செண்டிமெண்டாக வைத்திருக்கிறார். ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை வருவதால் படத்தை ஒருநாள் முன்னதாக வியாழன் அன்று ஜுன் 22-ம் தேதியே ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஜுன் 22-ஆம் தேதி, சினிமாவில் அஜித்தின் சக போட்டியாளராக கருதப்படும் விஜய்யின் பிறந்தநாள் ஆகும். ஆகவே, அன்றைய தேதியில் படம் ரிலீஸ் ஆனால் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பெரிய கொண்டாட்ட நாளாக அது மாறும் என்பது மட்டும் உண்மை.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரஜினி தனது மாநில மற்றும் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் உரையாடியபடி ஒரு புகைப்படமும் வெளிவந்தது. இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விசாரித்ததில், அப்படி ஒரு சந்திப்பு நடைபெறவில்லை என்று கூறியுள்ளனர்.
ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளதாக வெளிவந்த புகைப்படமும், பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது என்றும் கூறுகின்றனர். எனவே, நேற்று முன்தினம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததாக வெளிவந்த செய்தி வெறும் வதந்தியே என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில், ஒருநாள் அரவிந்த்சாமி ஒரு நகைக்கடையின் முன் தனது காரை நிறுத்துகிறார். காரில் இருந்தபடியே நகைக்கடையின் உள்ளே இருக்கும் பையனை உற்றுப் பார்க்கிறார். அப்போது, அந்த பையன் நகைக்கடைக்குள் இருந்து பணத்தை கொண்டு வந்து இவரது காரில் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டு, உடனே மயங்கி விழுகிறான்.
இதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமண தேதி நெருங்கும் சமயத்தில், வழக்கம்போல், அரவிந்த்சாமி தனது காரை நரேன் வேலை பார்க்கும் வங்கியின் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவரை பார்க்கிறார். அப்போது, நரேன் வங்கி பணத்தை எடுத்துக் கொண்டுவந்து அரவிந்த் சாமியின் காரில் வைத்துவிட்டு மயங்கிப் போகிறார்.
ஆஸ்பத்திரியில் கண்விழித்துப் பார்க்கும்போது வங்கியில் இருந்த பணம் கொள்ளை போனதாக அறிந்து அதிர்ச்சியடைகிறார் நரேன். வங்கிப் பணம் கொள்ளை தொடர்பாக நரேனை போலீஸ் கைது செய்கிறது. இதையடுத்து, ஜெயம் ரவியை திருமணம் செய்ய ஹன்சிகா வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை பகைத்துக்கொண்டு ஜெயம் ரவியின் வீட்டுக்கே வருகிறார் ஹன்சிகா.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது அப்பா நிரபராதி என்பதை நிரூபிக்க ஜெயம் ரவி களத்தில் இறங்குகிறார். அதன்படி, இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அரவிந்த்சாமியை கண்டுபிடித்து விசாரிக்கிறார். விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, அரவிந்த் சாமி கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி, ஜெயம் ரவியின் உடம்பில் புகுந்து கொள்கிறார்.
அப்போதிலிருந்து, அரவிந்த் சாமி ஜெயம் ரவியாகவும், ஜெயம் ரவி, அரவிந்த் சாமியாகவும் மாறிவிடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயம் ரவி உருவத்தில் இருக்கும் அரவிந்த்சாமி ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார். அரவிந்த் சாமியின் குணாதிசயத்துடன் திரியும் ஜெயம் ரவியின் உடல், அதன்பிறகு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது. இதையெல்லாம், ஜெயம் ரவியின் குணாதிசயத்துடன் ஜெயிலுக்குள் இருக்கும் அரவிந்த்சாமி எப்படி முறியடித்தார்? என்பதே மீதிக்கதை.
ஜெயம் ரவிக்கு இந்த படத்தில் இரண்டு மாறுபட்ட நடிப்பினை வெளிப்படுத்தக்கூடிய அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் இவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் தனக்கு ஏற்ற தீனி கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், தனது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ரொமான்ஸ் காட்சிகளிலும் வழக்கம்போல் தனது அழகான நடிப்பால் கவர்கிறார்.
அரவிந்த்சாமி இன்னொரு ஹீரோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்தில் இவர் அறிமுகம் ஆகும் காட்சியையே வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், அழகிகளுடன் ஆடி, பாடும் காட்சிகளில் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். படத்தில் இவருடைய கதாபாத்திரமும் வலுவானதுதான். அதை புரிந்துகொண்டு தனக்குண்டான ஒவ்வொரு காட்சியிலும் தனக்கே உரித்தான ஸ்டைலான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஹன்சிகா வழக்கம்போல கதாநாயகியாக இல்லாமல், இப்படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தின் இறுதியில், கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்துள்ள காட்சி அனைவரையும் கவரும். நாசர், ஆடுகளம் நரேன், விடிவி கணேஷ், வருண், நாகேந்திர பிரசாத் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் மற்றவர்களின் உடம்பிற்குள் சென்று வருவதுபோன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தங்கள் கதாபாத்திரம் மட்டுமில்லாது, அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் போலவும் நடித்தே ஆகவேண்டும். அதை, அனைவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் லட்சுமண் ஏற்கெனவே ரோமியோ ஜுலியட் என்ற ஹிட் படத்தை கொடுத்தவர். இந்த முறை ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் 80-களுக்கு பிறகு இப்படியொரு படம் வெளிவந்திருக்கிறது. இரண்டாம் படத்திலேயே அகலக்கால் வைத்து விஷப் பரீட்சையில் இறங்கியிருக்கிறார். அது அவருக்கு கைகொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
இரு கதாபாத்திரங்களின் தன்மையை ஒரு நடிகரால் கொண்டு வருவது மாதிரியான கதையை உருவாக்கி, அதற்கேற்றவாறு பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். மேலும், விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கி படத்திற்கு முழு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில்தான் நடுவில் கொஞ்சம் படம் டல்லடிக்கிறது. இருப்பினும், இறுதியில் அனைவருக்கும் திருப்தி கொடுக்கும்படி முடித்திருப்பது சிறப்பு. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்ற அறிவிப்போடு முடித்திருப்பது ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கிய இமான், இப்படத்தில் கொஞ்சம் ஏமாற்றியிருக்கிறார். படத்தில் பாடல்கள் பெரிதளவில் ரசிக்க முடியாவிட்டாலும், பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்தின் வேகத்திற்கு இவரது பின்னணி இசையும் உதவியிருக்கிறது எனலாம். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா கண்கள் புகுந்து விளையாடியிருக்கிறது.
மொத்தத்தில் ‘போகன்’ வித்தைக்காரன்.








