என் மலர்
தடைகளை தகர்த்தி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று விஷால் அணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்ட விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். முன்னதாக விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வருகிற மார்ச் 5-ந் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணி, கேயார் தலைமையில் ஒரு அணி, ஜே.கே.ரித்தீஷ் தலைமையில் ஒரு அணி, விஷால் தலைமையில் ஒரு அணி என நான்கு முனை போட்டிகள் நடைபெற உள்ளது.
விஷால் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்ததால், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது விஷால் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தளர்த்தப்பட்டுள்ளதால் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதற்காக அவரது அணியினருடன் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் பொருளாளர் பதவிக்கும் ஞானவேல்ராஜா செயலாளர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர்.
மனுதாக்கல் செய்த பிறகு விஷால் அளித்த பேட்டி,
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை 6 மாதத்தில் நிறைவேற்றுவோம் என்றார். இல்லையெனில் தங்களது பதவியை ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வோம் என்றார். தனது வேட்புமனுவில் குறைகள் கண்டுபிடித்து என்னை போட்டியிட விடாமல் யாரும் முயற்சி செய்தால் அந்த தடைகளை தூள்தூளாக்குவேன் என்றும் விஷால் கூறினார்.

மிகவும் விரும்பப்படும் நடிகையாக தேர்வு செய்யப்பட்ட பிறகு பேட்டியளித்த சாய் பல்லவி நடிக்க முடியும் என்பது எனக்கே தெரியாது என்று கூறினார். அவரது முழு பேட்டியை கீழே பார்க்கலாம்.
‘பிரேமம்’ மலையாள படத்தில் நடித்து மூலம் பிரபலம் ஆனவர் சாய்பல்லவி. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கப்போவதாக கூறப்பட்ட இவர், முதன்முறையாக மாதவன் ஜோடியாக தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் ‘கொச்சிடைம்ஸ்’ பத்திரிகை 2016-ம் ஆண்டில் விரும்பப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றி ஆன்-லைனில் வாக்கெடுப்பு நடித்தியது. இதில் ரசிகர்களிடம் அதிக வாக்குபெற்ற நடிகை சாய்பல்லவி. நடிகர் சோவினோ தாமஸ்.
பந்தா இல்லாமல் எளிமையாக காட்சி அளிக்கும் இவரது தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது குறித்து சாய்பல்லவியிடம் கேட்ட போது....
“மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்திருக்கிறேன். நான் மிகவும் விரும்பப்படும் நடிகையா என்பது தெரியவில்லை. ஆனால் என்னை தேர்வு செய்த ரசிகர்கள் இனிமையானவர்கள்.
‘பிரேமம்’ படத்தில் நான் நடித்தேன். ஆனால், இதுவரை என்னால் நடிக்க முடியும் என்பது எனக்குகூட தெரியாது. இப்போதும் அதை நம்ப முடியவில்லை.
நான் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தினமும் தியானம் செய்கிறேன். உடல் எடை அதிகரிக்கும் போது அதை கட்டுப்படுத்த யோகா செய்கிறேன். நான் சுத்த சைவம். கடந்த 3 ஆண்டுகளில் எனக்கு காய்ச்சல் வந்ததே இல்லை. தியானம்தான் இதற்கு காரணம்” என்றார்.

தாத்தா வேடத்தில் நடித்து விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி பாரட்டுக்களை பெற்றுள்ளார். அதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
விஷால் குடும்பத்தில் அனைவருக்குமே சினிமாவுடன் ஏதேனும் ஒரு தொடர்பு இருந்து தான் வருகிறது. அவரது தந்தை ஜி.கே.ரெட்டி திரைப்படத் தயாரிப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரைத் தொடர்ந்து விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும் தொடக்கத்தில் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வந்தார். விக்ரம் கிருஷ்ணாவின் மனைவியான `திமிரு' பட புகழ் ஷ்ரியா ரெட்டி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், விஷாலின் தந்தையும் நடிப்பில் குதித்துள்ளார். தமிழில் மிஷ்கின் இயக்கிய படம் `பிசாசு'. இதன் கன்னட ரிமேக் `ரக்சாஷி'. இதில் தமிழில் ராதாரவி நடித்த வேடத்தில் விஷாலின் தந்தையும் பட தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி நடித்தார். இப்போது ஏ.வெங்கடேஷ் இயக்கி வரும் `நேத்ரா' படத்தில் ஜி.கே.ரெட்டி நடிக்கிறார். இதில் கதாநாயகியின் தாத்தாவாக நடிக்கிறார். தாத்தா & பேத்தி சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகளில் ஒரே டேக்கில் நடித்து அவர் பாராட்டு பெற்றுவருவதாக படக்குழுனர் தெரிவித்தனர்.
விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் `துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக `இரும்புத் திரை', `சண்டக்கோழி 2', மோகன்லாலுடன் இணைந்து மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

புதிய படங்களை இணையதளங்களில் வெளியிடுபவர்களை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடுமையாக சாடினார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி-மியா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் எமன். இப்படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எமன் படக்குழுவினருடன் சேர்ந்து தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விஜய் சேதுபதி, இயக்குநர் சசி, ரூபா மஞ்சரி, கிருத்திகா உதயநிதி, சார்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஞானவேல் ராஜா, தனஞ்செயன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனர் கே.இ.ஞானவேல் ராஜா பங்கேற்று பேசினார். அதில் அவர் கூறியதாவது,
புதிய முயற்சி மேற்கொண்டுள்ள எமன் படக்ழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஞானவேல் ராஜா, பின்னர் திருட்டு டிவிடி மற்றும் இணையதளங்களில் படங்களை பதிவேற்றுபவர்களை கடுமையான சாடினார். படம் ரிலீசான முதல் நாளே தயாரிப்பாளர்களிடம் சவால் விட்டு சிலர் படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு இணையதளங்களில் புதிய படங்களை வெளியிடுபவர்களை வெளிக்கொண்டுவர தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட முடிவுவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஞானவேல் ராஜா தயாரிப்பில் (சிங்கம் 3) சி3 படம் வரும் 9-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. எமன் படம் சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

ஒரு விஜய் விட்ட கதையை மற்றொரு விஜய் கைப்பற்றியுள்ளார். அது எந்த விஜய் என்பதை கீழே பார்க்கலாம்.
ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி-மியா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் எமன். இப்படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எமன் படக்குழுவினருடன் சேர்ந்து தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி, எமன் படத்தின் கதையை ஜீவா சங்கர் முதலில் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். அந்தநேரத்தில் எனது கைவசம் பல படங்கள் இருந்ததால் எமன் படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது, விஜய் ஆண்டனி அந்த கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி தற்போதும் ஒரு சிறப்பான கதையையே தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இந்த கதையை தேர்ந்தெடுத்த அவரது தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என்றும் விஜய் சேதுபதி கூறினார்.
இயக்குநர் சசி, ரூபா மஞ்சரி, கிருத்திகா உதயநிதி, சார்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஞானவேல் ராஜா, தனஞ்செயன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் நடிகர் தியாகராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்த தவலை தெரிவிக்கக் கோரி பிரதமருக்கு மீண்டும் உணர்ச்சிகரமான கடிதத்தை கவுதமி எழுதியுள்ளார். அதனை கீழே பார்க்கலாம்.
முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சையால் நடிகை கவுதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் தான் முன்னதாக அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த உண்மை தகவலை மக்களிடம் தாங்கள் தெரிவிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
ஜெயலலிதா இந்திய அரசியலில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர், மிகுந்த ஆளுமை திறன் கொண்டவர். அனைத்து துறைகளிலும் உள்ள பெண்களுக்கு உத்வேகமாக அமைந்தவர். தமிழ்நாடு அவரது தலைமையின் கீழ் பல்வேறு முன்னேற்றங்களையும், வளர்ச்சிகளையும் பெற்றது. அவர் ஒரு மறக்க முடியாத வலிமையான சக்தி கொண்டவர். எல்லா பிரச்சினைகளையும் விடா முயற்சியுடன் உறுதியாக இருந்து தீர்த்து வைத்தவர். அவர் எல்லா மக்களுக்கும் ஊக்க சக்தியாக திகழ்ந்தவர்.
அவருடைய மறைவு எல்லோருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்றது தொடர்பாக பல மர்மங்கள், பதில் அளிக்க முடியாத கேள்விகள் இருக்கின்றன.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரை கவனித்து கொள்ளும் உரிமை, அவரது உடல்நலம் பற்றிய விவரங்கள் போன்றவற்றுக்கு யார் பொறுப்பு என்று முடிவு எடுத்தது யார்? இது சம்பந்தமாக மக்களுக்கு யார் பதில் சொல்வது? இதுபோன்ற கேள்விகள் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்களுடைய கேள்விகளை உங்களுடைய கவனத்துக்கு நான் கொண்டு வருகிறேன்.
இந்தியாவின் அனைத்து குடிமகன்களுக்கும் தங்களது உரிமையை கேட்டு போராட உரிமை உள்ளது. அதேபோல் இந்த ரகசியங்களையும் அறிய அவனுக்கு உரிமை இருக்கிறது.
எனவே ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை தாங்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். சமூக வலைதளங்களின் மூலமும் மக்களை அவ்வப்போது சந்தித்து வரும் பிரதமர் மோடி அவர்களுக்கு, சமூக வலைதளம் மூலமாகவும், நேரிலும் கடிதத்தை அளித்தும் உண்மை நிலவரம் தெரியவில்லை. எனினும் பிரதமர் மீது முழு நம்பிக்கையுடன் இருப்பதாக கவுதமி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் இயல்புநிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம், வர்தா புயல், ஜல்லிக்கட்டு விவகாரம் உள்ளிட்ட காரணத்தால் தமிழகத்தில் தொடர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பிரதமர் மோடி தலையிட்டு தமிழக மக்களின் இன்னல்களை தீர்த்துவைக்க வேண்டும் என்றும் கவுதமி கோரிக்கை வைத்துள்ளார்.

`ஆரம்பம்' படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த ராணா அஜித் தன்னை மிரள வைப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் அஜித் ‘சிக்ஸ்பேக்’ உடல்கட்டுடன் காட்சி அளித்தார். இதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த போஸ்டரை பார்த்த ராகவா லாரன்ஸ் டுவிட்டரில், ‘அஜித் சாரின் இந்த உடல் அமைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது’ என்று கூறி இருக்கிறார். குஷ்பு அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் தான் அப்பவே சொன்னேனே தல தல தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகர் ராணா, ‘விவேகம்’ படத்தின் முதல் போஸ்டரை பார்த்துவிட்டு, ‘இதுதான் ஊக்கம். இதுதான் தூண்டுதல். உண்மையில் வியப்பளிக்கும் அற்பணிப்பு. அஜித் உண்மையான ராக் ஸ்டார்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி மகிழ்ந்துள்ளார்.

நிதின் சத்யா - பவர்ஸ்டார் - V.R.விநாயக் கூட்டணியில் உருவாகும் ‘சிரிக்க விடலாமா’..! படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
‘சிரிக்க விடலாமா’ ; உத்தரவு கேட்கும் பவர்ஸ்டார்..!
‘வேதாளம்’ படத்தில் அஜித் பேசும் பவர்புல் வசனம் தான் ‘தெறிக்க விடலாமா’.. சூப்பர்ஹிட்டான இந்த வசனத்தை காமெடிக்காக அப்படியே உல்டா பண்ணி ‘சிரிக்க விடலாமா’ என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது..
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் நிதின் சத்யா,பவர்ஸ்டார் சீனிவாசன் & V.R.விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..
இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஜெயக்குமார், இசையமைப்பாளராகவும் கூடவே நடிகராகவும் அறிமுகமாகிறார். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி பாடியிருப்பவரும் இவரே.
இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் V.B.காவியன். இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், 'ஆயுதபூஜை' சி.சிவகுமார் மற்றும் 'உன்னை கொடு என்னை தருவேன்' கவி காளிதாஸ் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஒளிப்பதிவை K.S.முத்து மனோகரன் மேற்கொள்ள, படத்தொகுப்பை கவனிக்கிறார் S.R.முத்துக்கொடப்பா.
பாடகர்கள்: வேல்முருகன், ஜெயக்குமார்
நடனம்: ரமேஷ் கமல், அக்சயா ஆனந்த்
கலை: ஏ.சி.சேகர்
தயாரிப்பு நிர்வாகி: மனோகரன்

`விஜய் 61' படத்தின் மூலம் விஜய் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார். அது என்ன சாதனை என்பதை கீழே பார்க்கலாம்.
விஜய் - அட்லி இணையும் `விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2-ம் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது. காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா, வடிவேல், சத்யன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும், இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படத்தொகுப்புக்கு ரூபன், கலைக்கு முத்துராஜ், சண்டைப்பயிற்சிக்கு அனல் அரசு, திரைக்கதைக்கு விஜயேந்திர பிரசாத் என பிரபல டெக்னீசியன்களும் கைகோர்த்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிப்பை தவிர்த்து விஜய்க்கு நடனம், பாடல் உள்ளிட்ட துறைகளிலும் ஆர்வம் இருப்பதால் அவரது படங்களிலேயே அவ்வப்போது பாடல்களையும் பாடி வருகிறார். முன்னணி இசையமைப்பாளர்களில் ஏ.ஆர். ரகுமான் இசையில் மட்டும் இன்னும் பாடாத நிலையில், `விஜய் 61' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு பாடும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி இசைப்பாளர்களின் இசையில் பாடிய ஒரே நடிகர் என்ற பெருமை விஜய்யை சேரும். விஜய் முன்னதாக இளையராஜா, தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத், டி.இமான், அனிருத், ஜி.வி.பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயண் உள்ளிட்டவர்களுன் இசையில் பாடியுள்ளதால் `விஜய் 61' குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.

"சினிமாவில் ஹீரோவாக, இன்னொரு முறை முயற்சி செய்கிறேன்'' என்று அப்பா விடம் கூறிவிட்டு சென்னைக்கு வந்த விஜயகுமார், தனியாக ஒரு அறை எடுத்து தங்கினார். 6 வருட இடைவெளியில் எஸ்.வி.எஸ்.குழுவினர் நாடகங்கள்நடத்துவது குறைந்து விட்டதால், நடிகை சந்திரகாந்தாவின் நாடகக் குழுவில் சேர்ந்தார். கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.
நாடகம் இல்லாத நாட் களில் மறுபடியும் சினிமா வாய்ப்புக்கு முயலுவார்.போகிற கம்பெனிகளில் எல்லாமே சொல்லி வைத்தது போல் `பார்க்கலாம்'என்பதே பதிலாக இருந்தது.
இப்படியே 11 மாதம் ஆகிவிட்டது. ஒரு மாதத்திற்குள் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஊருக்குப் போகவேண்டியதுதான். இதனால் கடைசி ஒரு மாதத்தில் வாய்ப்பு தேடும் முயற்சியை தீவிரமாக்கினார்.
அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-
"சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் சிவாஜி சார் நடித்த படத்தை மேட்னி ஷோ பார்க்கச் சென்றிருந்தேன். படம் முடிந்ததும், அறைக்குத் திரும்புவதற்காக சாந்தி தியேட்டரை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மாலை 6 மணி இருக்கும்.
திடீரென என்னையே கூர்மையாக பார்த்தபடி வந்த ஒருவர், "தம்பி, எங்கே இருக்கிறீங்க?'' என்று கேட்டார்.
சினிமாவுக்கு கதை எழுதும் கதாசிரியர் பாலமுருகன்தான் அவர். ஏற்கனவே வாய்ப்பு கேட்டுப் போனதில் அவரிடமும் நான் அறிமுக மாகியிருந்தேன். ரொம்பவும் அக்கறையாக என்னை விசாரிப்பார். என் முயற்சி நிச்சயம் வெற்றி தேடித்தரும் என்று மனதுக்குள் தன்னம் பிக்கை விதைப்பார்.அப்படிப்பட்டவர் என்னிடம் வந்து விசாரித்ததும் என் மனதிலும் கொஞ்சம் சந்தோஷம். "நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதோடுசினிமா வாய்ப் புக்கும் முயன்று கொண்டிருக் கிறேன்'' என்றேன்.
அவர் உடனே ரொம்பவே உரிமையுடன் "ஏன் தம்பி என்னை வந்து பார்க் காமல் இருந்தீர்கள்? டைரக்டர் பி.மாதவன் சார்புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். உங்கள் முகவரி தெரியாததால் உடனடியாக உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று'' என்றவர், "தம்பி! நாளைக்கு காலை 10 மணிக்கு தேனாம்பேட்டையில் இருக்கும் மாதவன் சார் கம்பெனிக்கு வந்திடுங்க'' என்று கேட்டுக் கொண்டார். முகவரியையும் கொடுத்தார்.
பாலமுருகன் சொன்னபடி மறுநாள் காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை ஆபீசுக்கு போனேன். அங்கே டைரக்டர் பி.மாதவன், கேமராமேன் பி.என்.சுந்தரம் ஆகியோர் இருந்தார்கள்.
நான் போயிருந்த நேரத்தில் கதாசிரியர் பாலமுருகனும் வந்துவிட்டார். நேராக என்னை டைரக்டர் பி.மாதவனிடம் அழைத்துச் சென்று, "சார்! நம்ம கதைக்கு 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோவுக்கு இவர் சரியா இருப்பார். சிவகுமார்னு பேரு'' என்றார்.
டைரக்டர் பி.மாதவன் என்னை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தார். பிறகு கேமராமேன் பி.என்.சுந்தரத்தை அழைத்தவர், "ஒரு டெஸ்ட் எடுத்திடுங்க'' என்றார்.
மறுநாளே டெஸ்ட்! ஏவி.எம். 6-வது மாடிக்கு வரச்சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள். முடிவு டைரக்டர் பி.மாதவனுக்கு திருப்தியாக இருந்ததால், "தம்பி! வசனம் பேசிக் காட்டுங்க'' என்றார். பேசிக்காட்டினேன்.
பிறகு, "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் சிவாஜி சார் நடிக்கும்போது பயன் படுத்திய உடைகளை எனக்கு தந்து நடிக்கச் சொன்னார்கள்.நான் நடிக்கும்போது, அதை படமாக்கினார்கள்.
அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் பி.மாதவன், "தம்பி! நம்ம படத்தில் நீங்க நடிக்கிறீங்க'' என்றார்.
"கந்தன் கருணை'' படத்தில் முருகன்வேடத்துக்காக எந்த சிவகுமாருடன் போட்டி ஏற்பட்டதோ, அதே சிவகுமாரும் நானும் இந்தப் படத்தில் இரட்டை நாயகர்கள். அந்தப்படம்தான் "பொண்ணுக்கு தங்க மனசு.''
"ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சார் சாதாரண கிராமத்து இளைஞன் ராமனாக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. நடிகராகும்போது அவருக்கு பெயர் விஜயகுமார். அதனால் அதுவரை சிவகுமாராக இருந்த எனக்கு `விஜயகுமார்' என்ற பெயரை சூட்டினார், டைரக்டர் பி.மாதவன்.
பஞ்சாட்சரம், சிவகுமாராகி பிறகு விஜயகுமாராக மாறியது இப்படித்தான்.''
இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.

கடந்த ஆண்டு தனுஷ் வாங்கியதை தற்போது அனிருத் வாங்கியுள்ளார். அனிருத் என்ன வாங்கினார் என்பதை கீழே பார்க்கலாம்.
பிரபலங்கள் அனைவரும் தங்களது தேவைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை பயன்படுத்தி வரும் வேளையில், ஒரு சிலர் கார்களின் மீது உள்ள அதீத விருப்பத்தால் பிரபல கார்களை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.
குறிப்பாக அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல கார் விரும்பிகள் விலைமதிப்புமிக்க கார்களையே வாங்குகின்றனர்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் ஃபோர்டு மஸ்டாங் காரை முதன்முறையாக வாங்கியவர் நடிகர் தனுஷ். ஏற்கனவே அவரிடம் ஆடி 8, ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ள நிலையில் கருப்பு நிற ஃபோர்டு மஸ்டாங்கை ரூ.70 லட்சம் கொடுத்து வாங்கினார்.
அவரைத் தொடர்ந்து இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் ஊதா நிறத்தில் ஃபோர்டு மஸ்டாங் காரையே வாங்கியுள்ளார். இந்தியாவில் ஃபோர்டு மஸ்டங்கை வாங்கிய முதல்நபர் பிரபல பாலிவுட் இயக்குநர் ரோகித் ஷெட்டி ஆவார்.

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவுக்கென ஒதுவுக்கப்பட்ட 100 கார்களும் விற்பனையானதால் இந்த வருடம் அதே காரை அனிருத்தும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கார் அதிகபட்சமாக 250 கி.மீ. வேகத்தில் செல்லும்.

`தேவி' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் பிரபுதேவா தனது அடுத்த படத்தில் பிரபல காமெடியெனுடன் மீண்டும் இணைய உள்ளார். அது யார் என்பதை கீழே பார்க்கலாம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா தமிழில் நடித்து வெளிவந்த ‘தேவி’ படம் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இதையடுத்து, தமிழில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் பிரபுதேவா. அந்த வரிசையில் தற்போது புதுமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கத்தில் `யங் மங் சங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சான் முக்கிய கதாபாத்தரத்தில் நடிக்க உள்ளார்.
பிரபுதேவாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 1970-80 காலகட்டத்தில் உள்ள கதையை மையமாக கொண்டு நகைச்சுவையுடன் எடுக்கப்பட உள்ள இப்படத்தில் பிரபுதேவாவுடன் ஆர்.ஜே.பாலாஜியும் நடிக்க உள்ளாராம். முன்னதாக தேவி படத்தில் பிரபுதேவா-ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடித்திருந்தனர்.
இப்படத்தை வாசன்ஸ் விஸ்யூவல் வென்சர் தலைப்பில் கே.எஸ்.ஸ்ரீனிவாசன். கே.எஸ்.சிவராமன் தயாரிக்க உள்ளனர்.
ஆர்.ஜே.பாலாஜி தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் `காற்றுவெளியடை', ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படம், சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்', ஜுவாவின் `கீ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.