என் மலர்
தன்னுடன் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பை விஜயகுமாருக்கு வழங்கினார், எம்.ஜி.ஆர்.

"இளைய தலைமுறை'' படப்பிடிப்பின்போது 9 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த விஜயகுமாருக்கு தோள்பட்டை பிசகி, சில நாட்கள் ஓய்வில் இருந்தார். புதிய பட வாய்ப்பு கிடைத்து சத்யா ஸ்டூடியோ சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரில் எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.
தான் நேசிக்கும் எம்.ஜி.ஆர். எதிரில் வந்ததும் ஒரு கணம் செய்வதறியாது திகைத்து விட்டார், விஜயகுமார். "வணங்கிச் செல்வதா? வழி விடுவதா?'' என்று அவர் முடிவெடுத்து செயல்படுவதற்குள் எம்.ஜி.ஆரே அவரை நெருங்கி கைகளைப் பற்றிக்கொண்டு நலம் விசாரித்தார்.
இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-
"அண்ணன் எம்.ஜி.ஆர். நான் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் என் கைகளை பற்றிக்கொண்டு, "கை எப்படி இருக்கிறது விஜயகுமார்?'' என்று கேட்டதும் ஒரு கணம் திகைத்துப் போனேன். வார்த்தைகள் உடனடியாக வரவில்லை. இருந்தாலும் பதட்டத்தைத் தவிர்த்து, "பரவாயில்லை. வலி குறைந்து விட்டது'' என்று தெரிவித்தேன்.
அப்போதும் அவர் போய்விடவில்லை. "சினிமாவில் இந்த மாதிரி ரிஸ்க்கெல்லாம் எடுக்கக் கூடாது. எந்த வகை அதிரடி காட்சி என்றாலும் அதை ஒரிஜினல் மாதிரி வெளிப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.
அதன் பிறகு எந்த மாதிரி சிகிச்சைகள் தரப்பட்டன என்பது பற்றி கேட்டார். சொன்னேன். `பிஸியோதெரபி' சிகிச்சை மூலம், கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது பற்றியும் விவரித்தேன்.
பொறுமையாக கேட்டவர், "எனக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கிறது. இதற்கு நாட்டு மருந்து நல்ல பலன் தரும். மைலாப்பூர் கச்சேரி ரோட்டில் நாட்டு மருந்துக்கடை இருக்கிறது. அங்கே `கரியபவளம்' என்ற நாட்டு மருந்து கேட்டால் தருவார்கள். அதை உரசி, சதைப் பிடிப்பு இருக்கிற இடத்தில் போட்டால் தசைப்பிடிப்பில் ஏற்பட்டு இருக்கும் இறுக்கம் சரியாகி விடும். இன்றைக்கே வாங்கி போட்டுப் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுச் சென்றார்.
அவருக்கும் அன்றைய தினம் சத்யா ஸ்டூடியோவில்தான் படப்பிடிப்பு இருந்தது. அதனால் மதியம் `லஞ்ச் பிரேக்'கின்போது எனக்கு அழைப்பு விடுத்தார். நான் கொஞ்சம் தயக்கத்துடன் போய் சந்தித்தபோது, "என்னுடன் சாப்பிடுங்கள்'' என்று கூறினார். அந்த அன்பை தவிர்க்க முடியுமா? பாக்கியமாக எண்ணிக்கொண்டேன்.
ஒருவரை பிடித்துவிட்டால், அவர் விஷயத்தில் தனி அக்கறை செலுத்துவது எம்.ஜி.ஆருக்கு உரிய பண்பாடு என்று பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் விஷயத்திலும் பரிபூரணமாய் உணர்ந்தேன்.
டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் வி.டி.எல்.எஸ். என்ற படக்கம்பெனி "இன்று போல் என்றும் வாழ்க'' என்ற படத்தை தயாரித்தார்கள். எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகன். படம் தொடங்க இருந்த நேரத்தில், திடீரென ஒருநாள் அந்த கம்பெனியின் தயாரிப்பு நிர்வாகி என்னை சந்தித்தார். "இந்தப்படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். `சின்னவர்' உங்களை அவரது தங்கை கணவர் கேரக்டரில் போடச் சொன்னார்'' என்றார்.
எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. `சின்னவர்' என்றால் யார் என்று தெரியாததுதான் இதற்குக் காரணம். அப்புறம் தான் எம்.ஜி.ஆரை எல்லாரும் `சின்னவர்' என்றுதான் சொல்வார்கள் என்று சொன்னார்கள்.
(எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி `பெரியவர்' என்று அழைக்கப்பட்டார்)
அப்போது என் சம்பள விஷயம் பற்றி எதுவும் அந்த தயாரிப்பு நிர்வாகி பேசவில்லை. முதல் படத்தில் நான் வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய்தான். அதுவும் முதலில் 200. பிறகு 300. பிறகு ரிலீசுக்கு முந்தின நாள் 500 என்று கொடுத்தார்கள்.
பிறகு தொடர்ந்து படங்கள் வரவர, சம்பளமும் 5 ஆயிரம்,
7 ஆயிரம் என்று கூடியது. தொடர்ந்த வாய்ப்புகளில் 10 ஆயிரத் தில் நின்று கொண்டிருந்தது.
சிவாஜி சாருடன் நடித்த பிறகு 12 ஆயிரம் வாங்கினேன்.
எம்.ஜி.ஆர். பட தயாரிப்பு நிர்வாகி என்னிடம், "என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
பதிலுக்கு நான், "சம்பளம் இருக்கட்டும் சார்! எந்த தேதிகள் வேண்டும் என்று சொல்லுங்க. கால்ஷீட் போட்டுக்கலாம்'' என்றேன்.
நான் என் சம்பள விஷயம் சொல்லத் தயங்குகிறேன் என்பதை புரிந்து கொண்ட அந்த நிர்வாகி, "சரி! இப்ப பத்தாயிரம் ரூபாய் அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள். மற்றதை அப்புறம் பேசிக்கொள்ளலாம்'' என்று பணத்தை கொடுத்தார்.
எனக்கு அதிர்ச்சி. அட்வான்சே பத்தாயிரமா? அதுவரை நான் வாங்கிய மொத்த சம்பளமே கிட்டத்தட்ட இதே அளவில்தான்!
எனக்கு 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து என் சம்பளத்தை அதிகமாக்கியவரே அண்ணன் எம்.ஜி.ஆர்.தான்.
"இன்று போல் என்றும் வாழ்க'' படப்பிடிப்பில் அவரை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் அருகில் அழைத்தவர், பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். படப்பிடிப்பில் மற்ற எல்லாருமே 50 அடி தூரத்தில்தான் அவருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர் அ.தி.மு.க.வை தொடங்கியிருந்த நேரம். காங்கிரஸ் ஆதரவுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவும் தயாராக இருந்தார். அவர் "எம்.பி.'' தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்த 40 பேர், படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
அன்று மாலை `பாம்குரோவ்' ஓட்டலில் கட்சி பொதுக்குழுவை கூட்டியிருந்தார். "ஒருவேளை படப்பிடிப்பு முடிய நேரமாகி விட்டால் என்னை எதிர்பார்க்காதீர்கள். எனக்கு பதிலாக இந்த தம்பியை அனுப்பி வைக்கிறேன்'' என்று என்னை அவர்களிடம் சுட்டிக்காட்டிச் சொன்னார். அந்த அளவுக்கு அவர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்காக இதைச் சொன்னேன்.''
இவ்வாறு கூறினார், விஜயகுமார்.

சசிகலா அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து நடிகர் ஆனந்த்ராஜ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதை கீழே விரிவாக பார்ப்போம்.
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் இருந்து விலகி வந்த நடிகர் ஆனந்த்ராஜ், தற்போது தமிழக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, தமிழகத்தில் மறுபடியும் ஒரு ஜுரம் தொற்றுக் கொண்டுவிட்டது. அதிமுக ஏன் அவசரமாக இந்த முடிவை எடுத்தது? யாருக்காக இந்த அவசரம்? ஒரு தனி மனிதர் அரசியலில் முதலமைச்சர் ஆகலாம். ஆனால், யார் முதல்வராக வேண்டும் என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும்.
இன்று அம்மாவின் ஆன்மா சென்னை கடற்கரையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தொடர்ந்து சென்னை கடற்கரைக்கு சோதனை வந்துகொண்டுதான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, அம்மா நமக்காக ஏதோ சொல்ல வருவதுபோல் தெரிகிறது. ஜனநாயக முறைப்படி மக்கள் தேர்ந்தெடுத்து ஒருவரை முதலமைச்சராக கொண்டு வந்தால் அவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளலாம். நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஏன் இந்த அவரச முடிவு எடுக்கவேண்டும் என்று தெரியவில்லை.
இவ்வாறு தனது கருத்தை தெரிவித்தார்.

டேனியல் பாலாஜி மீண்டும் ஒரு படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. அந்த வாய்ப்பையெல்லாம் சரியாக பயன்படுத்தி, தற்போது முன்னணி நடிகர்கள் பலருக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பைரவா’ படத்தில் இவருடைய வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், அடுத்ததாக அரவிந்த்சாமி நடிக்கும் ‘வணங்காமுடி’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடிக்கவிருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘வணங்காமுடி’ படத்தில் நான் ஸ்டைலிஷ் வில்லனாக வருகிறேன். எனக்கு இந்த படத்தில் ஜோடி இருக்கிறார். என்னுடைய காட்சிகளை மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குவார்கள் என்று கூறியுள்ளார்.
இப்படத்தில் சாந்தினி, ரித்திகா சிங், அட்டக்கத்தி நந்திதா என்று மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ‘புதையல்’ படத்தை இயக்கிய செல்வா, இப்படத்தை இயக்குகிறார்.

விஜய் நடிக்கும் அட்லி படத்தில் இருந்து ஜோதிகா விலகியுள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என்பதை கீழே பார்ப்போம்.
‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய், அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்நிலையில், ஜோதிகா இப்படத்தில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக செய்தி ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் உலாவி வருகிறது. இதில் ஜோதிகா தனது கதாபாத்திரத்திற்கு வலு இல்லாததை அறிந்து, தனது கதாபாத்திரத்திற்கு சில மாறுதல்கள் தரும்படி இயக்குனரிடம் கேட்டதாகவும், அதற்கு இயக்குனர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இந்த காரணத்தினால் ஜோதிகா அந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிலும் ஜோதிகா கலந்துகொள்ளாததும் சினிமா வட்டாரங்களில் ஒருவித சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியாமலேயே இந்தமாதிரி சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இருப்பினும், இதுகுறித்து படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல், சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இப்படத்தை தயாரிக்கிறது.

அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிவரும் ‘விவேகம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கட்டுமஸ்தான உடம்புடன் அஜித் தோன்றிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த உற்சாகத்துடனேயே அஜித் பிறந்தநாளான மே 1-ந் தேதி இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஜுன் முதல் வாரத்தில் இப்படத்தின் ஆடியோவையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பைரவா’ படத்தின் குழுவினருக்கு விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள ‘பைரவா’ படம் வெற்றிநடை போட்டு வருகிறது. இரண்டு வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்படக்குழுவினருக்கு விஜய் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதாவது, ‘பைரவா’ வெற்றிக்கு வித்திட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் விஜய் தனது சொந்த செலவில் தங்க செயின் மற்றும் மோதிரம் பரிசளித்துள்ளார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லி இயக்கும் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா, வடிவேல், சத்யன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படமான ‘வனமகன்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
‘போகன்’ வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘வனமகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, வருகிற நாளை ‘வனமகன்’ டீசரை படக்குழுவினர் வெளியிடவிருக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதியில் முக்கியமான இடங்களில் படமாகி வருகிறது.
இப்படத்தில் ஜெயம் ரவி ரொம்பவும் ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக சாயிஷா சாய்கல் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் விஜய்யின் அப்பாவும், பிரபல தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் தயாரித்து வருகிறார்.

மலையாள சூப்பர் ஸ்டாரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாரும் பிரம்மாண்ட படம் ஒன்றில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் மோகன்லால். அதேபோல், பாலிவுட் உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் அமிதாப் பச்சன். இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாக சினிமா உலகில் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இவர்கள் இணையும் அந்த படமான மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்ரீகுமார் என்பவர் இயக்கப்போவதாகவும், இந்த படம் 3டி டெக்னாலஜியில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ‘ஒடியன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் மோகன்லாலுக்கு அப்பாவாக அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

“நடிகன் என்பதை விட, ஆன்மிகவாதியாக இருப்பதே எனக்கு பெருமை”, என்று 'தெய்வீக காதல்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
“நடிகன் என்பதை விட, ஆன்மிகவாதியாக இருப்பதே எனக்கு பெருமை”, என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
மறைந்த ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளுடன் வெளிவந்த ‘தி டிவைன் ரொமான்ஸ்’ என்ற ஆங்கில புத்தகம் தமிழில் ‘தெய்வீகக் காதல்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா ‘யோகதா சத்சங் சொசைட்டி ஆப் இந்தியா’ என்ற ஆன்மிக தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு ‘தெய்வீகக் காதல்’ நூலை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
“சிறு வயதிலேயே எனக்கு ஆன்மிக ஈடுபாடு இருந்தது. எனது அண்ணன் சத்யநாராயணன் ஆன்மிக கூட்டங்களுக்கு என்னை அழைத்து செல்வார். அப்போது ‘மனித ஜென்மம் பெரியது. அதை பாழாக்காதீர்கள் பைத்தியக்காரர்களே...’, என்ற பக்தி பாடலை கேட்டிருக்கிறேன். எத்தனையோ ஜென்மங்களை கடந்துதான் மனிதனாக பிறக்கிறோம். இந்த மனித வாழ்க்கையில் சம்சாரம், பணம், சுகம், புகழ், சந்தோஷம் போன்றவற்றில் மூழ்கி விடுகிறோம்.
இதில் நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? மரணத்துக்கு பிறகு என்ன? கடவுள் யார்? ஆத்மா என்றால் என்ன? என்ற கேள்விகள் வருவது அபூர்வம். ஒரு குரு கிடைப்பது அபூர்வம். அந்த குருவிடம் இருந்து போதனைகள் கிடைப்பதும் அபூர்வம்.
நான் ஒரு ஆன்மிகவாதி என்பதில் பெருமைப்படுகிறேன். இந்த வாழ்க்கை ஆண்டவன் கொடுத்த பிராப்தம். போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியங்கள் தான் என்னை ஆன்மிகத்தில் ஈடுபட வைத்தது. நான் பெரிய நடிகன் என்பதை விட ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் தான் பெருமை அடைகிறேன்.
நான் சம்பாதித்த பணம், புகழ், பெயர் எல்லாவற்றையும் ஒரு பக்கத்திலும், ஆன்மிகத்தை இன்னொரு பக்கத்திலும் வைத்துக்கொண்டு உனக்கு எது வேண்டும்? என்று கேட்டால், ‘ஆன்மிகம் தான் வேண்டும்’, என்பேன். அந்த அளவுக்கு அதில் ஒரு ‘பவர்’ இருக்கிறது.
ஒரு ராஜா தன்னிடம் இருந்த மந்திரிக்கு தேவையான வசதிகளை எல்லாம் செய்துகொடுத்து சந்தோஷமாக வைத்திருந்தான். அந்த மந்திரி ஒருநாள், ‘நிம்மதி தேடி இமயமலைக்கு செல்கிறேன்’, என்று ராஜாவிடம் சொல்லிவிட்டு போனான். சில வருடங்களுக்கு பிறகு மந்திரி சன்னியாசியாக அதே நாட்டுக்கு திரும்பி வந்து, ஒரு சிறிய குடிசையில் பாய், தட்டு சகிதங்களுடன் தங்கியிருந்தான்.
ராஜா நேரில் சென்று மந்திரியை பார்த்து, ‘நான் அளித்த வசதிகளை எல்லாம் விட்டுவிட்டு இப்படி கஷ்டப்படுகிறாயே?’, என்று கேட்டார். அதற்கு மந்திரி, ‘முன்பு நான் நின்று கொண்டிருந்தேன், நீங்கள் உட்கார்ந்திருந்தீர்கள். இப்போது நான் உட்கார்ந்திருக்கிறேன், நீங்கள் நிற்கிறீர்கள்’, என்றார். இது தான் ஆன்மிகத்தின் ‘பவர்’.
‘ரஜினிகாந்த் ஒவ்வொரு மத குருக்களின் பெயரை சொல்லி குழப்புகிறாரே...’, என்று மக்களும், ரசிகர்களும் நினைத்தது உண்டு. எனது முதல் குரு என் அண்ணன் சத்யநாராயணன். அவர் எனக்கு ஆன்மிக சிந்தனைகளை ஊட்டினார்.
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றேன். ராகவேந்திரரிடம் இருந்து பக்தியை கற்றேன். ரமண மகரிஷியிடம் இருந்து ‘நான் யார்?’, என்பதை எனக்குள்ளேயே தேட கற்றுக்கொண்டேன். தயானந்த சரஸ்வதியிடம் இருந்து சமூக பிரச்சினைகள், வேத நுணுக்கங்களை அறிந்தேன். சச்சிதானந்த சுவாமிகளும் எனக்கு குரு.
ஆன்மிக தேடல் எனக்கு தொடர்ந்து இருந்தது. 1978-ம் ஆண்டு நான் நடிகனானதும் விமான நிலையத்தில் பாபாஜியின் புத்தகத்தை பார்த்தேன். அப்போது அவர் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் அவர் பார்வை என்னை ஈர்த்தன. அந்த புத்தகத்தை வாங்கி படிக்காமலேயே வைத்திருந்தேன்.
20 வருடங்களுக்கு பிறகு ‘படையப்பா’ படத்தை முடித்ததும், ‘இனிமேல் சினிமாவில் நடிக்க வேண்டாம்’, என்று முடிவு செய்தேன். அப்போது சச்சிதானந்தர் அமெரிக்காவுக்கு என்னை அழைத்தார். பாபா புத்தகத்தையும் உடன் எடுத்துச்சென்றேன். ‘சினிமா சக்தி வாய்ந்தது. ஆயிரம் சுவாமிகள் சொல்லாத விஷயங்கள் சினிமா மூலம் மக்களை எளிதாக சென்று சேரும். ஆன்மிக விஷயங்களையும் சினிமாவில் சொல்லலாம்’, என்று அறிவுறுத்தினார்.
அப்போது பாபாஜியின் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். கீழே வைக்க முடியவில்லை. அதில் இருந்து ஒரு ஒளி வருவது போல தெரிந்தது. என் உடம்பு என்னவோ மாதிரி ஆனது. வியர்க்கவும் செய்தது. அந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. உடனடியாக என் மனதில் ‘பாபா’ படத்தின் கதை தயாரானது. அந்த கதையை நானே எழுதி, தயாரித்து படமாக்கினேன். வியாபார ரீதியில் அது நன்றாக போகாமல் நஷ்டம் ஏற்பட்டது. நஷ்டம் அடைந்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தேன்.
அந்த படம் வியாபார நோக்கில் எடுக்கப்பட்டது அல்ல. அதன் பிறகு ‘கிரியா யோகா’ கற்றேன். அது என் வாழ்க்கையையே மாற்றியது. ‘கிரியா யோகா’ சாதாரணமானது அல்ல. நமக்கு எது நல்லது? எது கெட்டது? என்று தெரியும். தியானம் சக்தி கொடுக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனாலும் அதை கேட்பது இல்லை.
இமயமலையில் ஏராளமான ஆன்மிக ரகசியங்கள் நிறைந்து கிடக்கிறது. பெரிய சித்தர்களும், யோகிகளும் இமயமலையில் பெற்ற அனுபவங்களை சாதாரண மக்களுக்கும் கொண்டு சேர்க்க நினைத்தார்கள். நமது உடலுக்குள் பல ‘மெக்கானிஷம்’ இருக்கிறது. முதுகெலும்பில் சக்கரங்கள் இருக்கின்றன.
மண், அக்னி, தண்ணீர், வாயு, சத்தம், ஆகாயம் போன்றவைகளில் உள்ள சக்திக்கும், உடம்புக்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். கிரியா பயிற்சி மூலம் அதை செய்ய முடியும். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைப்பது சந்தோஷமாக வாழத்தான். ஆனால் அந்த சந்தோஷம் கிடைக்கிறதா? விதை போடுவதற்கு முன் பூமியை பதப்படுத்த வேண்டும். அப்போது தான் பலன் கிடைக்கும்.
அதுபோல் கிரியா மூலம் உடம்பை சுத்தம் ஆக்கினால், கடவுள் விருந்தாளியாக நெஞ்சுக்குள் வருவார்.
ஆன்மிகவாதிகள் சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் கடவுளுக்கு நெருக்கம் ஆகலாம். ஒவ்வொருவரும் ஆத்மாவை உணர்ந்து பரமாத்மாவுடன் இணைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், யோகதா சத்சங்க அமைப்பின் பொதுச்செயலாளர் சுவாமி ஸ்மரணானந்த கிரி, பொருளாளர் சுவாமி சுத்தானந்த கிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

"பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஹீரோவாகி விட்ட நடிகர் விஜயகுமார், தொடர்ந்து வந்த வாய்ப்புகளில் `பிசி'யாகி விட்டார். அவர் நடிப்பில் ஒரே நாளில் 2 படங்கள் கூட பூஜை போடப்பட்டன.

பி.மாதவன் டைரக்ஷனில் சிவகுமாரும், விஜயகுமாரும் இரண்டு நாயகர்களாக நடித்த "பொண்ணுக்கு தங்க மனசு'' படம் 2-6-1973-ல் வெளிவந்து, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக ஓடியது. இதனால் பட அதிபர்களின் பார்வை புது நாயகன் விஜயகுமார் மீது திரும்பியது. டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்கிய "அவள் ஒரு தொடர்கதை'' படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அந்தப்படம் `வெள்ளி விழா' கொண்டாடியதில் விஜயகுமாரும் பிரபலம் ஆனார்.
டைரக்டர் பி.மாதவனும் அவர் இயக்கிய "சங்கர் சலீம் சைமன்'', "என் கேள்விக்கு என்ன பதில்'' என்று தொடர்ந்து விஜயகுமாரை நடிக்க வைத்தார். இதில் சிவாஜி - ஜெயலலிதாவை வைத்து அவர் இயக்கிய "பாட்டும் பரதமும்'' படமும் அடங்கும்.
விஜயகுமார் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய நேரத்தில், கமலஹாசனும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். சமகால ஹீரோ என்ற முறையில் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் நண்பர்களை ரொம்பவும் நெருக்கமாகியது.
அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-
"நடிக்கத் தொடங்கிய புதிதில், கமல் எனக்கு நண்பரானார். திறமை எங்கிருந்தாலும் அதை தேடிக் கண்டுபிடித்து பாராட்டும் குணம் அவருக்கு உண்டு.
படப்பிடிப்பில் ஏற்பட்ட எங்கள் நட்பு, நான் அவரது வீட்டுக்கு போய்வரும் அளவுக்கு வளர்ந்தது. காலையில் நானும் கமலும் வாக்கிங் போய்வருவோம். கமலின் அம்மா என்னிடம் மிகவும் அன்பு காட்டுவார்.
ஒரு முறை கமல் இரட்டைப்புலி நகம் கோர்த்த சங்கிலி அணிந்திருந்தார். அது அவருக்கு அழகாக இருந்தது. `எனக்கும் இது மாதிரி ஒன்று கிடைக்குமா?' என்று ஒரு ஆர்வத்தில் வாய்விட்டுக் கேட்டுவிட்டேன். இது கமலின் அம்மாவுக்கும் கேட்டுவிட்டது. உடனே அவர் கமலிடம், "தம்பிக்கும் இதுமாதிரி ஒண்ணு வாங்கிக் கொடுப்பா'' என்றார். தாய் சொல்லைத் தட்டாத கமலும் மறுநாளே புலி நகம் கோர்த்த தங்கச் சங்கிலி ஒன்றை வாங்கி என் கழுத்தில் போட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
கமலின் அண்ணன் சாருஹாசன் என்ன "மாப்பிள்ளை'' என்றே கூப்பிடுவார். அதனால் கமலுக்கும் நான் "மாப்பிள்ளை'' ஆனேன்.
டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது'' படத்தில் இரண்டு பேருக்குமே பெயர் வரக்கூடிய கேரக்டர்கள் அமைந்தன.
புதுமுகங்கள் நடித்த படங்கள், பெரும்பாலும் வித்தியாசமான கதைக் களத்தில் அமைந்திருந்ததால், ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது. தயாரிப்பாளர்களுக்கு லாபமும் வந்தன.
இதனால் புதிய தயாரிப்பாளர்கள் வரத் தொடங்கினார்கள். அப்போது நான் நடிக்கிற படங்களே ஒரு நாளைக்கு 2 படங்களுக்கு பூஜை என்கிற அளவுக்கு உயர்ந்தது.
இதற்காக, ஒருநாள் கமல் என்னிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டார். "மாப்ளே! இந்த மாதிரி தப்பு பண்ணாதீங்க'' என்றார்.
அவர் சொன்னதில் இருந்த நியாயம் புரிந்தது. அதன் பிறகு நல்ல கம்பெனியா என்று பார்த்து, படங்களை ஒப்புக்கொள்ளத்
தொடங்கினேன்.எத்தனையோ வருடங்கள் கடந்து போனாலும், இன்றைக்கும் என் நல்ல நண்பர் கமல்.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
தொடர்ந்து நடித்து வந்த படங்களில் விஜயகுமாருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் "தீபம்.''
நடிகர் பாலாஜி தயாரித்த இந்தப்படத்தில் சிவாஜியின் தம்பியாக நடித்தார் விஜயகுமார். கதைப்படி, விஜயகுமார் தனது தம்பி என்பது சிவாஜிக்கு தெரியாது. தம்பியை சுஜாதா காதலித்தது தெரியாமல், சுஜாதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவார் சிவாஜி. இந்த காதல் போராட்டத்தில், அண்ணன் - தம்பி பாசப் போராட்டமும் கலந்து கொண்டது. அதனால் படம் சூப்பர் ஹிட்.
இந்தப் படத்தில் நடிக்கும்போது, நடிகர் திலகம் சிவாஜியிடம் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது, விஜயகுமாருக்கு.
அதுபற்றி கூறுகிறார்:-
"சிவாஜி சாருடன் "பாட்டும் பரதமும்'' படத்தில் நடித்தபோது, நான் புதுமுகம். தவிரவும் என் போர்ஷனும் குறைவானது. ஆனால் `தீபம்' படத்தில் கிடைத்த வாய்ப்பு, அப்படிப்பட்டது அல்ல. அண்ணன் - தம்பிக்கான பாசப்பிணைப்புதான் கதை. அவர் அண்ணன்; நான் தம்பி. கதைப்படி அண்ணன் - தம்பி என்பது தெரியாமல் காட்சிகளில் ஒரு `கண்ணாமூச்சி' ஒளிந்திருக்கும். காட்சிகளும் நெகிழ்ச்சிïட்டுகிற விதத்தில்
அமைந்திருந்தன.இந்தப் படப்பிடிப்பின்போது சிவாஜி சார் என்னிடம் பிரியமாக பேசுவார். "என்னடா விஜயா'' என்றுதான் அழைப்பார்.
அப்போது நான் ஊரில் இருந்த மனைவியை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டேன். என்னிடம் லஞ்ச் பிரேக்கில் உரிமையுடன் "உங்க வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்திட்டு வாடா!'' என்பார். ஒரு முறை தயங்கித்தயங்கி அவரை எங்கள் வீட்டுக்கு அழைத்தபோது, உடனே என்னுடன் வந்துவிட்டார். அவர் வீட்டுக்கு என்னையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.
இப்படி நெருக்கமாகி விட்ட ஒருநாள் அவரிடம், நான் நடிக்க வருவதற்கு முன்னதாக கும்பகோணத்திற்கு நாடகத்தில் நடிக்க அவர் வந்தபோது மைல் கணக்கில் சைக்கிளில் வந்து மரத்தில் ஏறி நண்பர்களுடன் அவரைப் பார்த்து பிரமித்ததை சொன்னேன். ஒரு குழந்தை மாதிரி, ஆர்வத்துடன் நான் சொல்லி முடிக்கும்வரை கேட்டார். "நாடகத்தில் நடிக்க வந்தப்போ என்னைப் பார்க்க வந்த கூட்டம் பார்த்து நீ நடிக்க வந்திருக்கே. ஆனா நான் நடிக்க வந்த பின்னணியிலும் நாடகம்தானே இருக்கு விஜயா! வீரபாண்டிய கட்டபொம்மன் தெருக்கூத்து பார்த்தப்புறம்தானே எனக்கும் நடிக்க ஆசை துளிர் விட்டுச்சு'' என்றார்.
டைரக்டர் மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் சிவாஜி சார் நடித்த "இளைய தலைமுறை'' படத்தில் நானும் நடித்தேன். இந்தப் படத்தில் சிவாஜி சார் கல்லூரிப் பேராசிரியர். நான் கல்லூரி மாணவன். கதைப்படி அவருக்கும் எனக்கும் ஒரு `பாக்ஸிங்' காட்சி இருந்தது. வாகினி ஸ்டூடியோவில் இதற்கான காட்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்தார்கள்.
அந்த மேடை 9 அடி உயரத்தில் இருந்தது. சிவாஜி சார் பாக்ஸிங் மேடையில் ஏறியதும் என்னை அருகில் அழைத்தார். "டேய் விஜயா! நான் அடிச்சதும் நீ கீழே விழற சீனை "இப்ப எடுப்பாங்க. நான் அடிச்சதும் நீ கரெக்டா கீழே விழுந்துருவியா?'' என்று கேட்டார்.
அந்தக் காட்சி பற்றி எனக்கும் முன்னரே சொல்லியிருந்தார்கள். கீழே விழும்போது எந்த மாதிரி விழவேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார்கள். எனவே அந்த தைரியத்தில், "கரெக்டாக விழுந்திடுவேன் சார்'' என்றேன்.
கேமரா ஓடத்தொடங்கியது. சிவாஜி சார் பாக்ஸிங் உடையில் தயாராக இருந்தார். டைரக்டர் `ஸ்டார்ட்' சொன்னதும் என் முகத்தில் குத்துகிற மாதிரி நடித்தார். குத்து என் முகத்தில் விழுந்ததாக எடுத்துக்கொண்டு நான் 9 அடி உயர மேடையில் இருந்து கீழே விழவேண்டும்.
அப்படித்தான் விழுந்தேன். அனுபவமில்லாததாலும், ஆர்வக்கோளாறாலும் நான் விழப்போக, மேடையின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் என் கைகள் மாட்டிக்கொண்டு தோள்பட்டை இறங்கி விட்டது. வலியால் துடித்தேன்.
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டேன். மாவுக்கட்டு போட்டு அனுப்பினார்கள். கை சரியாகும் வரை வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயமாகி விட்டது. என்னைப் பார்த்த சிவாஜி சார், "என்னடா விஜயா! அவ்வளவு சொன்னேன். சரியா பண்ணியிருக்கக் கூடாதா?'' என்று கேட்டு வருத்தப்பட்டார்.''
- சிவாஜியின் அக்கறை கலந்த அன்பு பற்றி ஆச்சரியம் விலகாமல் சொல்லி முடித்தார், விஜயகுமார்.
இப்படி மாவுக்கட்டுடன் ஓய்வெடுத்து தோள் பட்டை சரியான நேரத்தில் ஒரு பட வாய்ப்பு தேடி வந்தது. நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயர் எடுக்கும் சொந்தப்படத்தில் நடிக்க அழைத்தார்கள்.
படப்பிடிப்புக்காக சத்யா ஸ்டூடியோ போனபோது எதிர்பாராத விதமாய் எம்.ஜி.ஆரை சந்தித்தார், விஜயகுமார்.

குளியல் தொட்டியில் கணவருடன் சேர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு சன்னிலியோன் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
இந்தி நடிகைகள் தங்களை விளம்பரப்படுத்துவதற்காகவும், மார்க்கெட் பிடிப்பதற்காகவும் விதம் விதமான யுக்திகளை பயன்படுத்துகிறார்கள்.
சமீபத்தில் இலியானா தண்ணீர் தொட்டியில் நிர்வாணமாக படுத்து போஸ் கொடுத்து இருந்தார். அதை இணையதளத்திலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
முன்பு ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் ஒரு நிலையான மார்க்கெட்டை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் சன்னி லியோன் அவரது கணவர் டேனியல் வெபருடன் குளிக்கும் தொட்டியில் படுத்து போஸ் கொடுத்து இருக்கிறார். அந்த படத்தை டுவிட்டரிலும் வெளியிட்டு பரவசம் அடைந்திருக்கிறார்.

சன்னி லியோன் எதைச் செய்தாலும் அதற்கு அவருடைய கணவர் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறார். அவரிடம் அனுமதி பெற்ற பிறகே படங்களில் நடிக்கிறார். பட ஒப்பந்தங்களில் கணவர் படித்து பார்த்த பிறகே கையொழுத்து போடுகிறார்.
அதை நிரூபிக்கும் வகையில் சன்னி லியோன் அவரது கணவருடன் குளியல் தொட்டியில் படுத்திருக்கும் படத்தையும் கணவர் ஒப்புதலை பெற்றே வெளியிட்டிருக்கிறார் என்று இந்திப்பட உலகில் பேசிக் கொள்கிறார்கள்.

தடைகளை தகர்த்தி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று விஷால் அணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்ட விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். முன்னதாக விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வருகிற மார்ச் 5-ந் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணி, கேயார் தலைமையில் ஒரு அணி, ஜே.கே.ரித்தீஷ் தலைமையில் ஒரு அணி, விஷால் தலைமையில் ஒரு அணி என நான்கு முனை போட்டிகள் நடைபெற உள்ளது.
விஷால் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்ததால், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது விஷால் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தளர்த்தப்பட்டுள்ளதால் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதற்காக அவரது அணியினருடன் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் பொருளாளர் பதவிக்கும் ஞானவேல்ராஜா செயலாளர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர்.
மனுதாக்கல் செய்த பிறகு விஷால் அளித்த பேட்டி,
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை 6 மாதத்தில் நிறைவேற்றுவோம் என்றார். இல்லையெனில் தங்களது பதவியை ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வோம் என்றார். தனது வேட்புமனுவில் குறைகள் கண்டுபிடித்து என்னை போட்டியிட விடாமல் யாரும் முயற்சி செய்தால் அந்த தடைகளை தூள்தூளாக்குவேன் என்றும் விஷால் கூறினார்.